Search This Blog

6.4.09

"கடவுள் சக்தி" சந்தி சிரிக்கும் நிகழ்வுகள்-கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி





கழுத்தை
அறுத்து கடவுளுக்கு தன்னையே பலியிட்ட இளைஞர்


மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தன் கழுத்தை அறுத்து, தன்னைத் தானே கடவுளுக்கு பலி யிட்டுக்கொண்டார்.

மத்திய பிரதேசம், பன்னா மாவட்டத்தில் அமைந்துள்ளது புரு ஷோத்தம்பூர் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த வர் கிருஷ்ணா குஷ்வா (18). இங்குள்ள கோவி லுக்கு முன்சென்ற இவர், தன் கழுத்தை அறுத்து தன்னைத்தானே கடவுளுக்கு பலியிட்டுக் கொண்டார்.

இளைஞர் தன்னையே பலியிட்ட தகவல் கிராமம் முழுவதும் பரவியது. உடன் ஏராளமான கிரா ம மக்கள் சம்பவ இடத் தில் கூடினர். அவர்கள், இளைஞர் மீண்டும் உயிர் பெறும் அதிசயம் நிகழும் என்ற நம்பிக்கையில், பக்தி பாடல்கள் பாடினர்.

இதுகுறித்து தகவல றிந்ததும், சம்பவ இடத்தில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். ஆனால், இளைஞரின் உடலை காவல்துறையிடம் ஒப்படைக்க கிரா மத்தினர் எதிர்ப்பு தெரி வித்தனர். எனவே நீண்ட நேரத்திற்குப் பிறகு, காவல்துறையினர் இளைஞர் கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர்.

இறந்து போன இளைஞர் கிருஷ்ணா, கடந்த ஒன்பது நாட்களாக தண்ணீர் கூட அருந்தா மல், கடுமையான நவ ராத்திரி விரதம் மேற் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தை சேர்ந் தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இளை ஞரின் கழுத்தில் காயத் திற்கான அடையாளம் இருந்தது. சம்பவ இடத் தில் இருந்து கதிர் அறுக் கும் அரிவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்றனர்

---------------------------------------------------------------------------

கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் படகு கவிழ்ந்து இறந்தனர்

உத்தர பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டம் பிஜால்பூர் என்ற இடத்தில், யமுனை நதியில் சென்று படகு கவிழ்ந்தது. இந்த விபத் தில் படகில் இருந்த பக் தர்கள் 15 பேர் இறந்தனர்.

அந்த படகில் இருந்த 40 பக்தர்கள் அக்கரை யில் உள்ள கோவிலுக்கு அவர்கள் சென்று கொண்டு இருந்தபோது நடு ஆற் றில் படகு கவிழ்ந்து விட்டது. இதில் 25 பக் தர்கள் ஆற்றில் நீந்தி கரையேறி விட்டனர். மற்றவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டார்கள். இறந்தவர்களின் உடல் களை தேடி வருகிறார்கள்.

-------------------------------------------------------------------------------------

சென்னை: கடலில் படகு கவிழ்ந்து
10 பேர் மூழ்கினார்கள்

சென்னை எண்ணூர் அருகே கடலில் படகு கவிழ்ந்து உல்லாச பய ணம் சென்ற 10 பேர் மூழ்கினார்கள். 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் நீந்தி கரை சேர்ந் தனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை எண்ணூர் அருகே உள்ள அன்னை சிவகாமி நகரில் பர்மா தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இங்கு அங்காள பரமேஸ் வரி அம்மன் கோவில் திருவிழா நேற்று நடந் தது. இந்த விழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக் கள் நேற்று காலையில் இருந்தே கூடினார்கள்.

நேற்று பிற்பகல் 230 மணி அளவில் 10 பேர் ஒரு பைபர் படகை வாடகைக்கு எடுத்துக் கொண்டு எர்ணாவூர் குப்பம் பகுதியில் இருந்து உல்லாச பயணம் மேற் கொண்டனர். அவர்கள் சென்ற பைபர் படகில் அதிகபட்சம் 5 பேர்தான் பயணம் செய்ய முடியும்.

ஆனால், 10 பேர் அந்த படகில் பயணம் சென்ற தால் படகு தாங்க வில்லை. சிறிது தூரம் சென்றதும் திடீரென்று கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. ராட்சத கடல் அலையில் சிக்கி படகு தலைகுப்புற கவிழ்ந்தது, படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கி தத் தளித்தார்கள். படகின் அடியில் சிக்கி ஆசைத்தம்பி, நாக ராஜ் ஆகியோர் பரிதாப மாக இறந்தனர். இமய வர்மன், ராஜசேகர், மணி மாறன் ஆகியோர் நீந்தி கரை சேர்ந்தனர். அதன் பிறகுதான் படகு கவிழ்ந்த சம்பவம் கரையில் இருந்த பொதுமக்களுக்கு தெரிய வந்தது. அனைவரும் பதறி துடித் தனர்.

உடனடியாக போலீ சுக்கும் கடலோர காவல் படையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதற்கிடையில், கடலில் பலியான 4 பேர்கள் தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கதி என்ன என்று உறுதியாகத் தெரியவில்லை.


--------------------- "விடுதலை" 6-4-2009

2 comments:

மாசிலா said...

இதபோன்ற மத்தியபிரதேசத்து மடையனுங்க பொழுதொட செத்துப்போவறதே மேல்.

தமிழ் ஓவியா said...

சரியாகச் சொன்னீர்கள் மாசிலா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.