Search This Blog

3.4.09

பெரியார் பற்றி ஆராய்ச்சி செய்யும் அமெரிக்கர்




தந்தை பெரியார் பற்றி ஆராய்ச்சி செய்யும்
அமெரிக்கர் மாத்யூ பாக்ஸ்டர்

தந்தைபெரியார், அம்பேத்கர், காந்திஜி ஆகியோரைப் பற்றிய ஆராயச்சிப் பணியில் அமெரிக்கர் ஒருவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து சென்னை வந்துள்ள பேராசிரியர் மேத்யூ பாக்ஸ்டர் சென்னை அடையாறில் உள்ள சென்னை வளர்ச்சிக் கல்வி நிறுவனத்தில் (மிட்ஸ்) பெரியார் - அம்பேத்கர், காந்திஜி ஆகியோரைப் பற்றிய ஆராய்ச்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள் ளார். இவர் தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆய்வுப் பணி குறித்து மேத்யூ கூறியதாவது:-

ஒருமுறை அமெரிக்காவில் இருந்து வந்திருந்த போது, மதுரைக்குப் போயிருந்தேன். பெரியார் பேருந்து நிலையம் பெயர்ப் பலகை பளிச்சென்று என் கண்ணில் தென்பட்டது. பெரியார் என்றால் என்ன? என்று தெரிந்தவர்களிடம் விவரம் கேட்டேன். அவர்கள் சொன்ன விவரங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

யாரும் உயர்ந்த சாதி அல்ல - தாழ்ந்த சாதி அல்ல; அனைவரும் ஒன்றுதான். எல்லோருக் கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அவரது உயர்ந்த சிந்தனைகளும், அவரது சமூகநீதி மற்றும் நாத்திகக் கருத்துகள் என்னைப்பெரிதும் கவர்ந்தன.

பெரியாரோடு சேர்ந்து சமூக மேம் பாட்டிற்காக பாடு பட்ட அம்பேத்கர், காந்திஜி ஆகியோர் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன் என மேத்யூ கூறியுள்ளார்.


இவர் மதுரையில் இருந்தபோது கழக நிகழ்ச்சிகள் பலவற்றில் கலந்து கொண்டார். குற்றாலம் பயிற்சி முகாமில் 2007 இல்நான்கு நாள்கள் கலந்து கொண்டு தமிழர் தலைவரிடம் சான்று பெற்றவர்.

சென்னை, பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவரிடம் கலந்துரையாடி விட்டு கலி போர்னியாவுக்குத் திரும்பினார் என்பது ஏனைய ஏடுகளில் வராத செய்திகள்.


------------------"விடுதலை"1-4-2009

0 comments: