Search This Blog

3.4.09

நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் தண்ணீர் குடிப்பதற்குக்கூடத் தனித் தனியாகப் பானை ஏன்?


9. தமிழர்களின் பாதுகாவலர் பெரியார்!




த்ந்தைப்பெரியார் அவர்களின் அரும்பெரும் எண்ணங்களை பற்றி இங்கே உரையாற்றிய தலைவர்கள் எல்லாம் உணர்ச்சித் ததும்ப பேசினார்கள். நான் நீதிபதி.

நீதிபதி என்றால் உணர்ச்சிவசப்படக்கூடாது. நீதிபதிக்கும் உணர்ச்சிக்கும வெகுதூரம். நீதிபதிகள் எப்போதும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் த்ந்தை பெரியார் அவர்களின் தொண்டைப் பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இப்போது உள்ள இளைஞர்கள், பெரும்பாலோருக்கும் அறுபது ஆண்டுகளுக்கு முன்னாலே நம்முடைய நாடு எப்படி இருந்தது? சமுதாயம் எப்படி இருந்தது; எந்த நிலையில் அவரது சிந்தனை, உழைப்பு இந்தச் சமுதாயத்திகுக் கிடைத்தது? அவருடைய உழைப்பால் நாடு எப்படிப்பட்ட உருமாற்றம் அடைந்திருக்கிறது என்பது தெரியும்.

பெரியார் அவர்கள் தோன்றிய காலத்தில் படிப்பதற்கு என்று ஒரு சாதி இருந்தது; வேலைக்கு என்று ஒரு சாதி இருந்தது; படித்தால் பாவம்; படிப்புச் சொல்லிக் கொடுத்தால் பாவம் என்று நீதி சொல்லப்பட்டிருந்த காலத்தில் தான் பெரியார் தோன்றினார்கள்.

படிப்பதற்கு என்று ஒரு சாதி இருந்த நிலைமையினால் அவர்கள் சமுதாயத்தில் உள்ள சலுகைகள், சவுகரியங்கள் எல்லாவற்றையும் அவர்கள் அனுபவித்தார்கள்.

அவர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருந்தது என்பதைக்கொண்டு அவர்கள் எங்கேயும் இருந்தார்கள்; எதிலும் இருந்தார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் பிரித்தே வைத்திருந்தார்கள்.

தஞ்சை கோர்ட்டில்…..

ஆற்றங்கரையில் - குளக்கரையில் எல்லாம் தனி இடம; பள்ளிக்கூடத்தில், மருத்துவமனையில் எல்லாம் மனித சாதியைத்தனித்தனியாக, உயர்ந்த சாதிக்கென்று ஒரு இடம்; மற்றவர்களுக்கெல்லாம் ஒரு இடம் என்பதாகப்பிரித்து வைத்திருந்தார்கள். 1943 -ஆம் வருடத்தில் தஞ்சையில் வழக்கறிஞர்களாக நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும் - அங்கே நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் தண்ணீர் குடிப்பதற்குக்கூடத் தனித் தனியாகப் பானை வைக்கப்பட்டிருந்தது.

எல்லா இடங்களிலும் மக்களை ஒன்றுசேர முடியாமல் பிரித்துத்தான் வைத்தார்கள்.

ஏன் எப்படி இந்தப் பகுபாடுகளையெல்லாம் பராமரித்து வந்தார்கள் என்றால், அதைப் பார்க்கின்ற ஒவ்வொரு நிமிடமும் தாம் மேல் சாதிக்காரர்கள் என்பதை நிரூபிக்கவும், நிலைநாட்டிக்கொள்ளவுமே அப்படி செய்துவந்தார்கள்
.

அந்த நிலைமையில்தன் பெரியார் வந்தார்க்க். அவர்கள் சமுதாயத்திற்குத்தொண்டாற்றத் துவங்கிய காலத்தில்நம்மில் பலர் பிறந்திருக்க மாட்டோம். நினைத்தாலே நடுங்கக்கூடிய பல செய்திகளைப் பெரியார் வர்கள் அந்தக்காலத்திலே சொன்னார்கள்.

எதிர்ப்பலைகள்


அன்றைக்கு அவர்கள் சொன்ன சாதி ஒழிப்பு, பெண்களுக்குச் சம உரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற காரியங்களை எல்லாம் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது.

முதல்முதலில் அறுபது ஆண்டு காலத்துக்கு முன்னால் அவர் அப்படிச் சொன்னபது அவர் கருத்தை யார் ஆதரித்தார்கள்? எல்லா இடங்களிலிருந்தும் எதிர்புத்தான் கிளம்பியது. பணக்காரர்கள் எதிர்த்தார்கள். படித்தவர்கள் எதிர்த்தார்கள். மேல் சாதிக்காரர்கள், மதவாதிகள் எதிர்த்தார்கள். மேலும், எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அந்த மக்களே அவரது கொள்கைகளை எதிர்க்கச் செய்தார்கள். இத்தனையும்தாண்டி அவரது கொள்கைகள், ஆரம்பத்தில்அவருக்குப்பின்னால்வந்த தொண்டர்கள் கூடி ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருந்தது. தொண்டர்கள் அவர்கள் பின்னால் செல்ல முடியவில்லை. அவற்றின் வேகத்தை அவர்களால் தாங்கமுடியவில்லை. பின்பற்ற முடியவில்லை. எத்தனையோ பேர் அவர் பின்னால் தொண்டர்களாச்சேர்ந்தவர்கள் கடைசிவரை அவர்களைத்தொடர்ந்து பின்பற்ற முடியாது சென்றுவிட்டார்கள். அந்த அனலின் வேகம் தாங்கமுடியாத்தாக இருந்தது.

தந்தைப்பெரியார் ஆயிரம் ஆண்டுக்கால அடிமைத்தனத்தை ஒழித்திடத் தன்னந்தனியே குரல் கொடுத்தார். அவரதுகுரல் நகர்களில் ஒலித்தது; கிராமங்களில் ஒலித்தது; நாட்டின் சந்து பொந்துகளிலெல்லாம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஓய்வறியா உழைப்பு ரகசியம்!

அந்தக்குரல் ஓயாதா? அடங்கிப்போகாதா? என்று ஏங்கியவர்கள் உண்டு. அவர்களால் முடியாதுபோது ஆட்களை வைத்து முயன்று பார்த்தார்கள்; ஆண்டவனை வேண்டினார்கள். முயற்சி செய்து பார்த்தவர்கள் தான் ஓய்ந்து போனார்களே தவிர, அவர் ஓயவில்லை. ஓய்வில்லாது உழைத்தார்; நோய்களோடு உழைத்தார்கள். அவருக்கு உடல்நோய்கள் பல இருந்தன. கடைசிவரை நோயால் அவதிப்பட்டவர் அவர்; அதையும் தாண்டிப் பெரிய மனநோய் அவருக்கு இருந்தது. அது என்ன நோய் என்றால், இந்தத்தமிழ்ச் சமுதாயம் சீரழிந்து கிடக்கிறதே என்ற கவலைதான் அவருக்குப்பெரிய மனநோயாக இருந்தது.

அப்படியிருந்தும் அவர் களைப்பில்லாது, ஓய்வில்லாது உழைத்தாரே எப்படி? அப்படி உழைக்கக்கூடிய ஆற்றல் எப்படி அவருக்கு வந்தது என்றால், அவர் அவளவு பெரிய ஆசையை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அந்தப் பேராசைதான் அவர் பட்ட கஷடங்கள் எல்லாவற்றையும் உதறி எறிந்து விட்டு இந்தச் சமுதாயத்துக்குகா இரவு பகல் பாராத அவரைப்பாடுபட வைத்தது; அவர் நினைப்பெல்லாம், வாழ வகை தெரியாமல் வாடுகின்ற இந்த மக்களை வாழ வைக்க வேண்டும் என்பதுதான்; அதில் சலிப்பே இல்லாது பாடுப்பட்டதற்கான காரணம், அவர் தனிப்பட்ட எந்தப்பிரதி பிரயோசனத்தையும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவேதான் அவருடைய அறுபதாண்டுக் காலப் பொதுவாழ்க்கையும் அவர் அயர்வே இல்லாது நிறைவு செய்தார்கள்.

வடநாட்டில்!

அவரது உழைப்பால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் அளவிட்டுச் சொல்லுமுடியாது. அந்த மாற்றங்கள் இங்கேயே இருக்கின்ற காரணத்தினால் அது பெரியதாகத்தோன்றாது. வெளியில் இருந்து பார்த்தால் தான் தெரியும். குறிப்பாக வட நாட்டில் இதுபோன்ற சாதி வேறுபாடு அற்ற, தீண்டாமையற்ற நிலைமையை, இங்கு இருப்பது போலக் காணமுடியாது. வடநாட்டில் நான் 15 ஆண்டுக்காலம் இருந்தவன். வடநாட்டிலும் நகரங்களில் பார்த்தால் அந்த மாற்றங்கள் தெரியாது. அங்கேயும் கிராமப்புறங்களில் சென்று பார்க்க வேண்டும். சாதி வித்தியாசம் தலைவிரிதாடுகின்ற நிலைமைதான் இன்னமும் அங்கே இருக்கின்றது.

வடநாட்டிலே இங்கே இருப்பதைப்போலவே தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் கல்வி வாய்ப்புப் பெற முடியாத உத்தியோக வாய்ப்பும் பெறமுடியாத நிலைதான் உள்ளது.

இன்னமும் இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைமை தான் உள்ளது.

சமுகத்தில் பாதுகாப்பு இல்லாதவர்களுக்குப்பாதுகாப்புக் கொடுக்கவே தலைவர் பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதி மூச்சுவரை வாழ்ந்தார்கள். அவர் தமிழர் சமுதாயத்திற்கு தலைவர் என்றால், தலைவர்களுக்கெல்லாம் இலக்கணம் தந்தைப் பெரியார் அவர்கள்.

‘தலை’ ஆகிவிட்டால்!

இந்தக் காலத்தில் தலை என்றால் ஒரு சாதாரண பஞ்சாயத்த நிலையில் உள்ளவர்கூடச சாதாரணமாக இருப்பது இல்லை சாதாரணமான வாழ்க்கை வாழ்வது என்பது இல்லை. சாதாரணமாகப்பார்க்கக்கூட முடியாது. முன்னடியே அப்பாயின்ட்மெண்ட் வாங்கித்தான் பார்க்க முடியும். ஆனால் தலைவர் பெரியார் அவர்களை எப்போதும் பார்க்கலாம்; எங்கேயும் பார்க்கலாம்.

லட்சாதிபதியின் மகனாப் பிறந்து, லட்சாதிபதியாக, பெரிய வியாபாரியாக இருந்தார்கள். கடைசிவரை எளிமையாகவே வாழ்ந்தார்கள். தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவர் தலைவர் பெரியார்.


சமீபத்தில் டெல்லி உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்த நீதிபதி ஒரு சொன்னார்; Court must be the instrument for social justice என்று
அதாவது நீதிமன்றங்கள் சமூக நீதியின் கருவியாக விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

நீதிமன்றங்கள் சமூக நீதியைச் சமநீதியாக வழங்க வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடுகின்றார்கள்.

வகுப்புவாரி உரிமை!

இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வி ஸ்தாபனங்களிலே, உத்தியோக வாய்ப்புகளிலே இட ஒதுக்கீடு -ரிசர்வேஷன் உண்டு என்று நியாயங்கள் நீதிமன்றங்களால் இன்றைக்கு ஏற்றுக்கொள்ளப் பட்டது. எத்தனை சதவிகிதம் என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர, ரிசர்வேஷன் வேண்டும் என்பதிலே இன்றைக்கு வேறு கருத்து இல்லை. 1950- ல் தான் பெரியார் அவர்கள் செய்த பெரிய முயற்சியின் காரணமாக இந்திய அரிசியல் சட்டம் திருத்தப்பட்டது. அந்த சட்டதிருத்தம் வருவதற்கு 25 ஆண்டுக் காலத்துக்குமுன்னாலேயே ‘வகுப்புவாரி உரிமை’ கேட்டு முழக்கமிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்தான்.

தந்தைப்பெரியார் அவர்கள் உழைப்பு ஒன்றினால்தான், கல்விக்கண் பெற்றார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் எந்த உத்தியோகத்தையும் எட்டிப்பிடித்திருக்கவே முடியாது. அவரது அயராத உழைப்பால் உத்தியோகம் பெற்ற தமிழர்கள் எவரும் அவரை நினைத்துப் பார்ப்பது கூட கிடையாது.

ஒரே தலைவர்!

உலகத்தில் எல்லா நாடுகளிலும் தலைவர்கள் உண்டு. அந்தத்தலைவர்களுக்கெல்லாம் இல்லாத தனிப்பெருமை தந்தை பெரியார் அவர்களுகு உண்டு. அது என்ன வென்றால்,

நன்றிகாட்டத் தெரியாத இந்தச் சமுதாயத்துக்காகக்கடைசி மூச்சுவரை வாழ்ந்திட்ட, பாடுபட்ட தலைவர் உலக வரலாற்றில் தந்தைப்பெரியார் ஒருவரேதான்.

அவருடைய உழைப்பால் பயனை அனுபவித்துக்கொண்டே அவரை உதாசீனப்படுத்தினார்கள். அந்த உதாசீனத்தையும் ஏற்ற்றக்கொண்டு, அதைப்பற்றிக் கவலைப்படாமல் அந்த மக்களுக்குஆகவே தன் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற தாய் உள்ளம் அவரிடம்தான் இருந்தது. அது எந்தத் தலைவரிடமும் காண முடியாத பெரும் குணம் ஆகும்.

சொன்னபடி வாழ்ந்தவர்!

நம்முடைய மக்களை ஒன்று சேரவிடாமல் செய்தது இந்தச் சாதி அமைப்புத்தான் என்பதை இன்றைக்கு 60 ஆண்டுக்காலத்துக்கு முன்னால் சொல்லி, சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒன்னதை நிறைவேற்றித் தானும் வாழ்ந்து தன்னுடைய தொண்டர்களையும் வாழ்ந்திடச் செய்தார்.

நம்முடைய தேசம் வள்ளைக்கார்ர்களிடம் இருந்து விடுதலை கண்டபோது, மத்த்தின்பெயரைச் சொல்லி இந்துக்களுக்கு இந்தியா என்றும், இஸ்லாமியருக்குப் பாகிஸ்தான் என்றும் நாட்டைப் பிரித்தார்கள். அதன் பின்னால் மொழிகளைச் சொல்லி மாகாணங்களாகப் பிரித்தார்கள். இருந்தாலும் இந்த நாட்டைச் சாதியைக் காண்பித்துச் சாதியின் பேரால்தான் அரசியல் நடதிக் கொண்டிருக்கிறார்கள். இங்குகூடப் பரவாயில்லை. வட நாட்டில்பச்சைத் சாதித் துவேஷம்தான்.

இங்கே சாதிப்பெயரை நம்முடைய பெயருக்குப்பின்னால் போட்டுக்கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு, அதுவும் பெரியார் அவர்கள் அறுபது ஆண்டுக்காலம் உழைத்து நாட்டில் ஒரு மாறுதலை ஏற்படுத்திய பின்னரே பெயருக்குப்பின் சாதிப்பெயர் போடுவதில்லை என்று விட்டுவிட்டோம்.

தேர்தலில்

ஆனால், தேர்தல் வந்துவிட்டடால் முதலில வெளியே வருவது சாதி உணர்ச்சிதான். சாதி உணர்ச்சி அடிப்படையில்தன் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். ஓட்டுக்கேட்பார்கள். தேர்தல் நடத்துவார்கள். இந்தச் சாதி உணர்ச்சி மறைந்தால்தான் நம்நாடு உருப்பட முடியும். தலைவர்பெரியார் முதலில் தம்முடைய பணியைத் துவக்கிய போது சாதி ஒழிப்பு மாநாடு ஒன்று நடத்தினார்கள். கலப்புத் திருமணங்களை நடத்திக்காட்டினார்கள்.

புத்த மதம்கூட இரண்டாயிரம் வருடத்திற்கு முன் தோன்றியது. புத்தர் சமதர்மக்கருத்துக்களைச் சொன்னார். இரண்டாயிரம் வருடத்துக்குப்பிறகு அந்தக் கருத்துக்களைச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அத்தோடு அந்தக்கொள்கை லட்சியத்திற்காகவே வாழ்ந்தும் காட்டியவர் அவர்தான்.

ஆரம்பத்தில் பெரியார் அவர்கள் கடவுளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லைச் சமத்துவ சமுதாயம் அமைந்திடச் சாதிகள் தடையாக இருக்கின்றன; ஆகவே சாதி ஒழிய வேண்டும் என்று சொன்னார்கள். சாதிக்குத்துணையாக மதம் இருந்த காரணத்தினால், மதம் ஒழிக என்று சொன்னார்கள்; உடனே, கடவுள் இல்லை என்று சொல்லி எல்லாவற்றுக்கும் ஆதாரமாக்க்கடவுளைக் காட்டினார்கள். கடவுளை ஒழித்தே ஆக வேண்டும் என்று சொன்னார்கள்-அதையே கடமையாக்க் கொண்டு உழைத்தார்கள்.

சிந்திக்க வைத்தவர்!

எல்லோரும் நினைக்கலாம். ஆனால், சிந்திக்கின்றவற்றை வெளியே சொல்லுவதற்குத் தைரியம் வேண்டும். நம்முடைய நாட்டில் சிந்திப்பதற்கே பயப்படுபவர்கள் உண்டு; அவர்களைச் சிந்திக்க வைத்தவர் பெரியார்.

இங்கே பத்திரிகைகளைப் பார்த்தால் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் நிற வேற்றுமையைக் கண்டிப்பார்கள்; ஆனால், இங்கே அந்தப்பத்திரிகை உருவாகின்ற மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் ஒருவரை ஒருவர் தீண்டக்கூடாது என்ற நிலைமையைக்கண்டிக்க முன்வரமாட்டார்கள்.

அந்தக் காலத்திலேயே பகுத்தறிவு வாழ்க்கை வாழ்ந்தால்தான் துன்பமில்லாது வாழமுடியும் என்று அறிவுரை வழங்கியவர் அவர்தான். மூட நம்பிக்கையற்ற வாழ்வு, பண்டிகை, மூடப் பழக்க வழக்கங்கள் இல்லாமலிருந்தால் தான் சிறப்பாக கடன் இல்லாது வாழமுடியும் என்றார்கள்.

இன்றைக்கு அரசாங்கம் ஏராளமாக்க கடன் நிவாரணச் சட்டங்கள் போட்டுக்கொண்டு ஏழைமக்களை வாழ வைக்க முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், ஏழை மக்களுக்கு ஏன் கடன் ஏறபடுகின்றது என்பதைச் சிந்தித்து, கடன் சுமையில்லாது அவர்களை வழ வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஏழை விவசாயி எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவனுடைய சம்பாத்தியத்தில் பெரும்பகுதி கல்யாணம், கருமாதி என்று செலவு செய்துவிட்டு, மேலும் கடன் வாங்கி அவதிக்கு ஆளாகிறார். அந்த நிலையை மாற்றத்தான் சிக்கனமான சீர்திருத்தத் திருமணத்தையும், பகுத்தறிவு வாழ்க்கையையும் அறிமுகப்படுத்தினார்கள். மூட நம்பிக்கையற்ற பகுத்தறிவு சமுதாயம் அமைந்திட வேண்டும்; அது தான் அவரது வாழ்நாள் தொண்டாக இருக்கிறது.

இன்றைக்கு சென்னையில் ஆயிரம் பெண்கள் கூடி மாநாடு நடத்தி, தங்களின் உரிமைக்காகத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். பெண்களிடத்திலே அப்படிப்பட்ட ஆர்வத்தையும் உரிமை உணர்வுகளையும் உண்டாக்கிவர் தந்தை பெரியார். இதுபோல இந்தியாவில் வேறே எங்கேயும் நடக்கும் என்று எதிர்ப்பார்க்க முடியாது.

பெரியார் அவர்கள் எந்த் துறையிலே கைவைத்தாலும் அதிலே தீவிரமாக உழைத்தார்கள். சமுதாயத்திலே பணம், பதவி, பெருமை புகழ் எதையும் எதிர்ப்பார்த்து அவர்கள் உழைக்கவில்லை. அவருடைய மக்ழ்ச்சி எல்லாம் தமிழர் சமுதாயத்தின் வாழ்கை மேம்பாட்டிலேதான் இருந்தது. அந்தக்காலத்திலே நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் உத்தியோகங்களைப் பெறுவதற்கு என்றே ஒரு வகுப்பார் இருந்தார்கள். அய்யா அவர்கள் முயற்சியால் எங்கேயாவது இருவருக்கு உத்தியோகம் நம்மவர்களுக்குக் கிடைக்கும். தமிழர்களுக்கு உத்தியோகம் கிடைக்கிற செய்தி கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைவார்கள். எப்படி என்றால், “சின்னப் பிள்ளைகள் தான் விரும்பிய பொம்மையைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடையுமே அதைப்போல நினைத்துப் பெருமைப் படுவார்கள். அந்த மகிழ்ச்சியானது இதுவரை வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததே என்ற அவர்களது எதிர்காலத்தைப்பற்றிய நினைவுதான்.

இன்றைக்கு பதவியிலே இருக்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், தந்தைப்பெரியார் அவர்களின் உழைப்பால் தான் உத்தியோகம் பெற்றவர்கள் ஆவார்கள். நாங்கள் எல்லாம் அவரால் வாழ்க்கை அடைந்தவர்கள்; நன்றியுணர்வால் பாதிக்கப்பட்டவர்கள்.

அய்யா அவர்கள் நம்முடைய சமுதாயம் வாழ்ந்திடத் தாம் வாழ்ந்து காட்டினார்கள். பொது வாழ்வில் ஈடுபடுவது சுலபமானகாரியம்அல்ல; ஆரம்பத்தில் மாலைகள் கிடைக்கும்; மரியதைகள் கிடைக்கும். ஆனால் மாலைகளையும் பாராட்டுதல்களையும் எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து, பொது வாழ்க்கையை வெறுத்து விடே விலகி ஓடி இருக்கிறார்கள். வெறுத்துப்போய் விடுவார்கள். சோதனைகளைத் தாங்கிக் கொள்ளுகின்ற மனப் பக்குவம் வேண்டும். ஆனால், எந்த வித அலுப்பு சலிப்பே இலாமல் பாடுபட்டு வாழ்ந்தார்கள அய்யா.

அது அய்யா அவர்கள் வாழ்வதற்கு வகையற்றுப்போனவர்கள் மேல் ஏற்பட்ட மனிதாபிமான உணர்வு மிக்க் கொண்ட தாயுள்ளம் அவரையும் வாழ வைத்து- அவர் வாழ்ந்ததின் மூலம் வாழ்விழந்த நாமும் வாழ்வுபெற்றோம்.

அவர் சிக்கனத்துக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து, சிறுகச்சிறுகச் சேர்ந்து, அவை இன்று அறக்கட்டளையாகிச்சமுதாயத்திற்குப் பலவேறு பயனுள்ள காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறது. கல்விச் சாலைகளாக இயங்குகின்றன மருத்துவமனையாக, ஆதரவற்றோரை அரவணைக்கும் இல்லங்களாக, பாதுகாப்பு இல்லங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.

மனிதாபிமான அறக்கட்டளை!

பொதுவாக அறக்கட்டளைகள் என்றாலே வருமானவரியிலிருந்து சலுகை பெறுவதற்காக அமைக்கப்படுவது போலத்தான் இருக்கும். ஆனால், பெரியார் அவர்கள் வருமானத்தைப் பற்றியே கவலைப்படாதபோது வருமான வரியைப்பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்? அவரது வாழ்க்கை எப்படி மனிதாபிமானத்தை வைத்தே நிறைந்ததோ, அதுபோல அவரது அக்கட்டளைகளும் மனிதாபிமானத்தையே அடிப்படையாக்கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அவரது சிலையை இங்கே திறந்து வைப்பதிலே நான்பெருமைப்படுகிறேன். இந்தச் சிலை இதுபோன்ற பொது இடத்தில் பஸ் நிலையித்தலே திறக்கப்படுவது மிகப்பெருமையுடையது ஆகும்.

அதைப் பார்க்கிறபோது சாதி இல்லாத சமத்துவ சமுதாயம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அவரது கொள்கைகள், கோட்பாடுகளைத் திரும்பத் திரும்பச் சிந்திக்கப் பின்பற்ற பயன்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் உண்மையாக வாழ வேண்டும்; நாணயமாக வாழவேண்டும்; எளிமையாக வேண்டம்; சுயநலம் கருதாது, பிறர் நலம்பற்றிச் சமுதாய நன்மைக்காக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை, உறுதியை ஒவ்வொருவரும் பெற வேண்டும்
என்று கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

-----------------------8-9-79 அன்று திருவையறு காமராஜ் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியார் அவர்களின் உருவச்சிலையை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு வேணுகோபால் அவர்கள் திறந்து வைத்தபோது ஆற்றிய உரை.

4 comments:

Unknown said...

//ஆற்றங்கரையில் - குளக்கரையில் எல்லாம் தனி இடம; பள்ளிக்கூடத்தில், மருத்துவமனையில் எல்லாம் மனித சாதியைத்தனித்தனியாக, உயர்ந்த சாதிக்கென்று ஒரு இடம்; மற்றவர்களுக்கெல்லாம் ஒரு இடம் என்பதாகப்பிரித்து வைத்திருந்தார்கள். 1943 -ஆம் வருடத்தில் தஞ்சையில் வழக்கறிஞர்களாக நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்குத் தெரியும் - அங்கே நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் தண்ணீர் குடிப்பதற்குக்கூடத் தனித் தனியாகப் பானை வைக்கப்பட்டிருந்தது.

எல்லா இடங்களிலும் மக்களை ஒன்றுசேர முடியாமல் பிரித்துத்தான் வைத்தார்கள்.

ஏன் எப்படி இந்தப் பகுபாடுகளையெல்லாம் பராமரித்து வந்தார்கள் என்றால், அதைப் பார்க்கின்ற ஒவ்வொரு நிமிடமும் தாம் மேல் சாதிக்காரர்கள் என்பதை நிரூபிக்கவும், நிலைநாட்டிக்கொள்ளவுமே அப்படி செய்துவந்தார்கள்.

அந்த நிலைமையில்தன் பெரியார் வந்தார்க்க். அவர்கள் சமுதாயத்திற்குத்தொண்டாற்றத் துவங்கிய காலத்தில்நம்மில் பலர் பிறந்திருக்க மாட்டோம்.//

இன்று பெரியாரைப் பற்றி குறைகூறுவோர்கள் இதற்கு முன் இருந்த கொடுமைகளை அறியாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
அறிந்திருந்தால் பெரியாரை குறைகூற மாட்டார்கள்.

இதெல்லாம் அறிந்தும் குறை கூறுபவர்கள் அயோக்கியர்கள்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திருநாவு.

மாசிலா said...

மரபுகள் உடைப்போம்,
சமதத்துவ புதியதோர்
உலகம் படைப்போம்!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாசிலா