
ஜெயலலிதாவின் உண்ணாவிரத நாடகம்
சமீபத்தில் முதன் முதலாக ஈழப் பிரச்சினையை எடுத்து 23.9.2008 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள் நாங்கள். சகோதரர் தொல் திருமாவளவன், சுப. வீரபாண்டியன்கூட எங்களுடன் கலந்து கொண்டு கைதானார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்த பொழுது உண்ணாவிரத கொள்கை எங்களுக்கு ஏற்புடையதல்ல. நாம் போராடி வெற்றி பெற வேண்டுமே தவிர இப்படி உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்கள் நாங்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும்கூட ஈழப் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள். அந்த அம்மையாரிடமிருந்து ஆள் வருவார், வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் அல்லவா? கம்யூனிஸ்டு கட்சித் தோழர்கள்.
அப்படிப்பட்ட தோழர்கள்தான் இன்றைக்கு அந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.
சென்னையில் விடுதலைப்புலிகளினுடைய ஆயுதங்களை எம்.ஜி.ஆர். அரசு பறித்ததற்காக பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்த பொழுது போர்களத்திலே நின்று போராடக் கூடிய நீங்கள் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்று சொல்லி விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பழச்சாறு கொடுத்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்தவன் நான்.
எனவே ஈழத் தமிழர்களுக்காக முரண்பட்ட எண்ணமுடைய - கொள்கையுடைய ஜெயலலிதா அவர்களின் உண்ணாவிரத நாடகத்தை தமிழ் மக்கள் கண்டு ஏமாற மாட்டார்கள்.
----------------4.4.2009 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து --"விடுதலை"-5-4-2009


2 comments:
//ஈழத் தமிழர்களுக்காக முரண்பட்ட எண்ணமுடைய - கொள்கையுடைய ஜெயலலிதா அவர்களின் உண்ணாவிரத நாடகத்தை தமிழ் மக்கள் கண்டு ஏமாற மாட்டார்கள்.//
மக்கள் ஏமாற மாட்டார்கள். காம்ரேடுகளும், கருப்புத்துண்டும் [வை.கோ], மஞ்ச சட்டையும்[ராம்தாஸ்] ஏமாந்து விட்டதே.
சீட்டுக்காக கூட்டணி அமைத்து சோரம் போய் விட்டதே.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment