Search This Blog

28.10.09

மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?

மரகதலிங்கம்

நேற்று மாலை ஏடுகளில் ஒரு பரபரப்பான செய்தி.

50 கோடி ரூபாய் மதிப்புள்ள திருத்துறைப்பூண்டி மருந்தீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான மரகதலிங்கம் கைப்பற்றப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி.

இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாம். இந்த மரகதலிங்கத்தை இந்திரனே பூஜித்து வந்தானாம். (இடையில் விட்டுவிட்டானோ!)

லிங்கம் என்றால் ஆண் குறி! அது மரகதத்தில் செய்யப்பட்டதாம்! ஆகா, எப்படிப்பட்ட பக்தி!

இன்னும் இந்த மரகதலிங்கத்துக்கு என்ன கூடுதல் விசேஷம்? (கதை அளப்புக்கு என்ன பஞ்சமா?).

அந்த மரகதலிங்கத்தை முசுகுண்ட சக்ரவர்த்தியிடம் கொடுத்து ஏழு பிரசித்திப் பெற்ற கோயில்களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருமாறு இந்திரன் கூறினானாம்.

இதன் பொருள் என்ன? இந்த மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளது என்பதுதானே இதன் அய்தீகம்.

இவ்வளவு சக்தி வாய்ந்த அதுவும் தேவர்களின் தலைவனான இந்திரனே வழிபட்டு வந்த லிங்கத்தை கொள்ளையர்கள் எப்படி திருடியிருக்க முடியும்?

அப்படி திருடியிருக்கிறார்கள் என்றால் இந்த லிங்கங்கள் தெய்வ சக்தி வாய்ந்தவை என்பதெல்லாம் அசல் டூப்பாக இருக்கவேண்டும். இரண்டில் ஒன்றுதானே உண்மையாக இருக்கவேண்டும்.

நம் முன் நிற்கும் கேள்விகள் இரண்டே இரண்டுதான். மரகதலிங்கத்துக்குத் மகாசக்தி உண்டென்றால், அதனைத் திருடிச் செல்ல முடியுமா? அதனைத் திருடியிருக்கிறார்கள் என்பதிலிருந்து லிங்கத்துக்குச் சக்தியாவது, புடலங்காயாவது என்பதை மரியாதையாக, நாணயமாக ஒப்புக்கொள்ள வேண்டுமா இல்லையா?

இந்த சிவலிங்கத் திருடர்களைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி யார் தெரியுமா? காதர் பாஷா.

இது என்ன அநியாயம்? சிவலிங்கத் திருட்டை ஒரு சாயபு கண்டுபிடிக்கலாமா? என்று அக்ரகாரத்தார் அலறக்கூடும்.

இது கருணாநிதி சதி என்று இந்து முன்னணி ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் கூக்குரல் போட்டாலும் போடுவார்கள் யார் கண்டது?

கடவுளையே கண்டுபிடித்துக் கொடுக்க மனிதர்கள் (காவல்துறையினர்)தான் தேவைப்படுகிறார்கள்.

கடவுளை மற, மனிதனை நினை! என்ற பெரியார் வாக்கு பலித்ததா இல்லையா?

--------------- மயிலாடன் அவர்கள் 27-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

7 comments:

Unknown said...

//மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?"
//

athanal than athu kidaithirukkirathu

Dhanagopal said...

Pls do not say and do not think God have no power. God knows everything. God has a mass power.

Pls put your trust in God misfortune will you pass.

Best regards,
Jai Dhanagopal
Singapore

samarasam said...

எல்லா மதத்திலும் இப்படி கல் மீதான நம்பிக்கைகள் உள்ளன அவைகளைப்பற்றி ஏதும் எழுதுங்களேன்

Unknown said...

irukkum oviya. ungalukku en kavalai

வஜ்ரா said...

//
சுயமரியாதை இயக்கத்தின் இன்னொரு பல்டியையும் சொன்னால்தான் இந்தப் பகுதி நிறைவடையும்.

ஹிந்து ஆலயங்களில் நுழைவதற்கு தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை உண்டு என்ற கொள்கையோடு நடத்தப்பட்டது ஆலய நுழைவுப் போராட்டம். இதைக் காந்தியவாதிகளே முன்னின்று நடத்தினர். வைக்கத்தில் ஆலயம் இருந்த தெருவில் நுழைவதற்கான போராட்டத்தில் அந்தச் சமயத்தில் காங்கிரசில் இருந்த ஈ.வெ.ராவும் சிறை சென்றார். அதற்குப் பிறகு காங்கிரஸ் பிராமணர்களின் கோட்டையாக மாறிவிட்டது என்று குற்றம் சாட்டிவிட்டு தேசிய இயக்கத்தில் இருந்து அவர் வெளியேறினார். அரசாங்கத்தின் அடிப்பொடியான நீதிக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்.

’அடடா, இதெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லும் வாசகர்கள் ஒரு நிமிடம் பொறுமையாக இருக்கவேண்டும்.

1935ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் நின்றார். அவரை எதிர்த்து சனாதனக் கட்சியின் சார்பாக நின்றார் ராஜாபகதூர் எம்.கே. கிருஷ்ணமாசாரி. தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையக்கூடாது என்பது சனாதனக் கட்சியின் கொள்கை.

இந்தத் தொகுதியில் ஈ.வெ.ரா. சனாதனக் கட்சி வேட்பாளர் ராஜாபகதூர் எம்.கே.கிருஷ்ணமாசாரியை ஆதரித்தார். டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் அமோக வெற்றி பெற்றார்.

அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயங்களில் நுழையக் கூடாது என்று சொன்னவரை ஈ.வெ.ரா ஆதரித்தார். நுழைய வேண்டும் என்று சொன்னவரை எதிர்த்தார் என்பதைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

//

தமிழ் இந்துவில் வெளியான கட்டுரையிலிருந்து.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அனைத்து நண்பர்களுக்கும்

நம்பி said...

//jaisankar jaganathan said...

//மரகத லிங்கத்துக்கு அரும்பெரும் சக்தி உள்ளதா?"
//

athanal than athu kidaithirukkirathu
October 28, 2009 8:44 PM //

அப்போ? திருட்டுப்போனது...? திருடும் போதே திருடனை தாக்காதது...அது இன்னும் பண்க்காரன் வீட்டு படுக்கை அறையை அலங்கரித்துக் கொண்டிருப்பது...? ஏற்கனவே பல மரகத லிங்கங்கள் காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது...? இது வீட்டில் இருந்தால் செல்வம் கொழிக்கும் என்று ஆன்மீகப்போர்வையில் நம்பி கொண்டு இந்த திருட்டை மேலும் மேலும் செய்வது...?

உடனே அவன் ஆன்மீக வாதி இல்லை...என்ற கருத்தை வைக்க கூடாது. நீ என்ன இதையெல்லாம் தீர்மானிக்கும் குழுவை சேர்ந்தவனா..தனி அதிகாரம் பெற்றவரா? என்ன..? பதிலுக்கு அவன் உன்னை பார்த்து நீ ஆன்மீக வாதி இல்லை என்று சொல்லப்போகிறான்...?



பகுத்தறிவுவாதிகள் ஒரே போடு! நோ கடவுள்...நோ சாமி...நோ பூதம்...

இதில எது சிறந்தது..?

''புள்ளாரை'' திருடி வைச்சாத்தான் நல்லது என்று திட்டம் தீட்டிகொடுத்தது நீ தானே...?

அதன் மூலம் திருட்டு நல்லது என்று சொல்லிக்கொடுத்தவன் நீதானே...ஏன் இந்த போக்கத்த வேலை...ஏன்? ஆன்மீகம் என்ற பெயரில் இந்த சமுதாய விரோத பாடம்?

எவனுமே ஆன்மீகவாதி இல்லை...? அப்படி இருந்தால் எதற்கு? அட்வர்ட்டைஸ்மென்ட் பண்ணி கொண்டிருக்கவேண்டும்...? யாருக்காக பண்ணவேண்டும்...? உனக்கு பயம் இருக்குதா..? நம்பிக்கோ...அடுத்தவனை பயமுறுத்தாதே...? நான் நம்புற நீயும் நம்பு என்று சொல்லாதே...? எதையும் திணிக்காதே...? ஆதாரம் இருந்தா தெரிவி...

மரகதலிங்கத்துக்கு சக்தியிருந்தால் இந்த பிதற்றலை கூட மாற்றியிருக்கும்..தடுத்திருக்கும்..?

'' ஒரு வேலை அதற்கு சக்தியிருந்தால் இப்படி கூட சொல்லியிருக்கும் ''எழவு எடுத்த கூட்டமே நான் சொல்லாததை எல்லாம் நீங்களே இப்படி சொல்லி புருடா விட்டு மக்களை ஏமாற்றி என்னை இழிவு படுத்தறீங்க.. என்று வாய் விட்டு கதறி இருக்கும்'' உடனே இதறகு ஆப்போசிட்டா சொல்லக்கூடாது..அதை தான் ''திருட்டை தடுத்திருக்கும்'' என்று வைத்தாகிவிட்டது.