Search This Blog

2.10.09

காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்தது குற்றமே!


மனித உரிமை

(1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்களின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக விருந்த ஆர்.எம் வீரப்பன் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்கள் போப்பாண்டவரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியாரை நாங்கள் சந்திப்பது எப்படிக் குற்றமாகும்? என்று பேசியதற்கு தமிழ்நாடு திட்டக் குழுவின் துணைத் தலைவராக அப்பொழுது இருந்த தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள் ஆனந்தவிகடன் இதழில் (11.10.1981 பக் 11) மறுப்புக் கூறி எழுதியிருந்தார். அது இங்கே தரப்படுகிறது.)


பொன்னால் பொறிக்க வேண்டிய செயல்

பேரறிஞர் அண்ணா போப்பான்டவரைச் சந்தித்து இந்திய அரசியல் வரலாற்றில் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்ச்சி.

எவராக இருந்தாலும் அவரவருக்கு உரிய மரியாதை அளிப்பது பேரறிஞர் அண்ணாவின் இயல்புகளில் ஒன்று.

கோவா, டையூ, டாமன் ஆன பகுதிகளில் அந்தப் பகுதி மக்கள்மீது ஆதிக்கம் செலுத்திவந்த போர்த்துகீசிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உரிமைப் போர் தொடுத்திருந்த நேரம் அது. அந்தப் போராட்டத்திற்குத் தலைவன் திரு ரானடே. போர்த்துக்கல் அரசு ரானடேயைக் கைது செய்து தங்கள் நாட்டுக்கே கொண்டு சென்று அங்கேயே சிறை வைத்துவிட்டன.

போர்த்துக்கீசியர் இந்தியாவைவிட்டுச் சென்ற பிறகும், கோவா விடுதலை பெற்ற பிறகும் ரானடே விடுதலை செய்யப்படவில்லை. இந்திய அரசு செய்த முயற்சிகள் அனைத்தும் வீணாயின. அப்போதுதான் அண்ணா போப்பாண்டவரைச் சந்தித்தார்.

போர்த்துக்கல் நாடு கத்தோலிக்க நாடு. கத்தோலிக்க நாடுகள் போப் ஆண்டவர் கட்டளைக்குக் கட்டுப்படுபவை.

போப்பாண்டவர் வழியாகப் போர்த்துக்கல் நாட்டு அரசுக்குச் சொல்லி திரு. ரானடேயை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் அண்ணாவின் நோக்கம்.

அதனால்தான் அவர் வாடிகனுக்குச் சென்று போப்பாண்டவரைச் சந்தித்துத் தன் வேண்டுகோளையும் அவரிடம் தெரிவித்தார். அவரும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு போர்த்துக்கல் அரசுக்குச் சொல்லி ரானடேக்கு விடுதலை வாங்கித் தந்தார். அண்ணா இறந்த பிறகுதான் ரானடே விடுதலை செய்யப்பட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

இது பிரெஞ்சு நாட்டு எழுத்தாளன் எமிலி ஜோலாவை எனக்கு நினைவுபடுத்துகிறது.

------------------------------- டி.கே. சீனிவாசன்

******************************************************************************

ஆரியருடன் வாழ இசையோம்

கிளியும் குயிலும் மாடப்புறாவும் மயினாவும் ஒரே சோலையில் உல்லாசமாக வாழும்; ஆனால், வல்லூறு வட்டமிடக்கண்டால் அதுவும் நம்மைப் போல ஒரு பட்சிதானே என்று கருதாது. வட்டமிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதறிந்து அதுபோலவே திராவிடப் பெருங்குடி மக்கள் தம்மில் சிற்பல வேறுபாடு கொண்டோராக இருப்பினும் ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால், தமது சுயமரியாதையைச் சூறையிடும் ஆரியருடன் வாழ இசையார்.


------------ அண்ணா-சீறும் சில்லரைகள்," திராவிடநாடு" தலையங்கம் 28.6.1942

************************** *******************************************************

அண்ணாவின் நூற்றாண்டு விழா சிந்தனை மலர்கள்

.‘... I belong to the Dravidian Stock. I am proud to call myself a Dravidian. That does not mean that I am against a Bengali or a Maharashtrian or a Gujarati. As Robert Burns has stated, ‘A man is a man for all that.’ I say that I belong to the Dravidian Stock and that is only because I consider that the Dravidians have got something concrete, something distinct, something different to offer to the nation at large.’

Dr. Anna in Rajya Sabha , April, 1962.

நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன். இதற்குப் பொருள் நான் ஒரு வங்காளிக்கோ அல்லது மராட்டியனுக்கோ அல்லது குஜராத்திக்கோ, எதிரானவன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல என்னவாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான் திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித்தன்மை பெற்றதும், வித்யாசமானதுமான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கான ஒரே காரணமாகும்.

--------------மாநிலங்கள் அவையில் அண்ணா பேச்சு (1962, ஏப்ரல்)

0 comments: