ஆன்மிகம்
முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் மானுட யாத்திரை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூலினை ஊரன் அடிகள் வெளியிட்டார்.
அவர் உரையாற்றுகையில், கவிஞர் குலோத்துங்கனின் (வா.செ. குழந்தைசாமி அவர்கள் இந்தப் பெயரில் கவிதை எழுவது வழமை). மானுட யாத்திரை நூல் 21 ஆம் நூற்றாண்டின் சர்வ தரிசன சங்கரகம். இந்நூலில் நான் எழுதிய அணிந்துரையில் இவர்தான் மானுடம் பாட வந்த மகாகவி என எழுதியிருந்தேன். அதை எடுத்துவிட்டதாகக் கடிதம் எழுதினார்.
கடவுளின் பெருமை அவருக்குத் தெரியாது. அதேபோல குலோத்துங்கனின் பெருமை அவருக்குத் தெரியாது என்று ஊரன் அடிகள் அந்நூல் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டார்.
ஏற்புரை வழங்கிய டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் பின்வருமாறு கூறினார்.
சமயம் எல்லோரும் அறிந்த விஷயம். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியில் சைவ சித்தாந்த தமிழ் அகராதியில் இல்லாத சொல் ஆன்மிகம். கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகே இச்சொல் அகராதியில் இடம்பெற்றுள்ளது.
(புராணங்களின் அகராதி எனக் கருதப்படும் அபிதான சிந்தாமணியிலும், கலைக்களஞ்சியத்திலும்கூட இந்தச் சொல் காணப்படவில்லை என்பது கூடுதல் தகவலாகும்).
அறவழியில் வாழ்வு தேடும் அனைத்தும் ஆன்மிகம். அறிவு, உணர்வு ஆகிய இரு சக்கரங்கள் மூலம் நடப்பதுதான் மனித வாழ்வு.
கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல. இந்த உலகம் படைக்கப்பட்டது. ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு. உலகம் தானாகவே இயங்குகிறது என்றால், கடவுள் இல்லை என்று டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் விடையளித்துள்ளார்.
(தினமலர், 3.10.2009).
கடவுளின் பெருமை வா.செ.கு. அவர்களுக்குத் தெரியாது என்று ஊரன் அடிகள் கூறியிருப்பதிலிருந்து, வா.செ.கு. அவர்களைப்பற்றி ஊரன் அடிகள் ஏற்கெனவே சரியாகவே அறிந்து வைத்திருக்கிறார் என்பது வெளிப்படை.
ஒன்றை தமக்கே உரித்தான வகையில் வா.செ.கு. அவர்கள் பதில் அளித்துள்ளார். அதில் வழிந்தோடும் நயம் அறிவு ரீதியாக இரசிக்கத் தகுந்ததாகும்.
இந்த உலகம் படைக்கப்பட்டது, ஏதோ ஒரு சக்தியால் இயக்கப்படுகிறது என நிரூபிக்கப்பட்டால், கடவுள் உண்டு என்று கூறலாம் என்பது வா.செ.கு. கூறிய கருத்தாகும். நிரூபிக்கப்பட்டால்.... ஆக இதுவரை அவ்வாறு நிரூபிக்கப்படவில்லை என்பதால், கடவுள் ஒன்று இல்லை என்பதை நயமாகக் கூறிவிட்டாரே. மேலும் கடவுள் மறுப்பு பயங்கரமானதல்ல என்பதையும் தெளிவுபடுத்திவிட்டாரே. இந்த விஞ்ஞான வாசகத்தை வரவேற்கிறோம்!
உரிய நேரத்தில் உரிய இடத்தில் பட்டுக் கத்தரித்ததுபோல, மிக நயமாகக் கருத்தறிவித்த செயல் பாராட்டத்தக்கதாகும்.
--------------------- மயிலாடன் அவர்கள் 6-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
1 comments:
ஒப்பு கொள்ளுகிறேன்!
அதே போல் எல்லா மதத்தையும், கடவுளையும் மறுப்பதே நல்ல நாத்திகனுக்கு அழகு என்று நினைக்கிறேன்!
Post a Comment