Search This Blog

9.10.09

பெரியாருடைய கொள்கையை பரப்புவதுதான் எங்கள் இலட்சியம்


பார்ப்பனிய கொடுமை-ஆதிக்கத்தை
வெளியுலகத்திற்கு கொண்டுவர வேண்டும்
சென்னை நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

பார்ப்பனிய கொடுமையின் ஆதிக்கத்தை வெளியுலகத்திற்குக் கொண்டு சென்று வெளிப்படுத்த வேண்டும் என்று நேற்று நடைபெற்ற இரு புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறினார்.

மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 8.10.2009 அன்று இரவு 7 மணிக்கு அன்னை மணியம்மையார் அரங்கத்தில் இரு நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநில ப.க.பொதுச்செயலாளர் வீ.குமரேசன்

இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்ற பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர், இந்நூல் வெளியீட்டு விழாவின் சிறப்பு எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதன் நோக்கங்களையும் கூறி நூலின் சாராம்சங்களை சுருக்கமாகக் கூறினார்.

பிரேமானந்த் படத்திறப்பு

அடுத்து கோவையில் இயற்கை எய்திய சீரிய பகுத்தறிவாளரான பிரேமானந்த் படத்தை வெளிமாநில பகுத்தறிவாளர்களான நரேந்திரநாயக், கலாநாதன் ஆகியோரை மேடைக்கு அழைத்து அவர்களது முன்னிலையில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து நின்று பிரேமானந்த் அவர்கள் மறைவிற்கு இரு நிமிடங்கள் மவுனம் காத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்த மறைந்த பிரோமானந்த் அவர்களைப் பற்றிய வாழ்க்கை குறிப்பு பிரின்ஸ் என்னாரெசு படித்தார்.

வசந்தா கந்தசாமி
எழுதிய நூல்

அடுத்து கணிதக் கோட்பாட்டுடன் மய்ய அரசு உயர்கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு ஓர் ஆய்வு என்ற நூலை எழுதிய நூலாசிரியர் முனைவர் வசந்தா கந்தசாமி, ப்ளோரின் ஸ்மாரன்டேக் கே.கந்தசாமி ஆகியோரைப் பற்றிய குறிப்பு சிறப்புகளை மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் வா.நேரு படித்தார்.

கல்பனா சாவ்லா விருது பெற்றவர்

அம்மையார் வசந்தா கந்தசாமி தமிழ்நாடு அரசால் கல்பனா சாவ்லா விருது பெற்றவர். 44 நூல்களை எழுதியிருக்கின்றார். சென்னை அய்.அய்.டியில் அக்கிரகாரத்தின் ஆதிக்கத்தை, அக்கிரமத்தை தனி மனித பெண்ணாக நின்று யாருடைய துணையும் இல்லாமல் போராடிக் கொண்டு வருகின்ற வீரமங்கை என்பதை விளக்கினார்.

அடுத்து கழக மகளிரணியைச் சேர்ந்த சொற்பொழிவாளர் வீராங்கனை ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அவர்களின் வாழ்க்கை குறிப்பை புதுவை மாநில திக துணை தலைவர் நடராஜன் படித்தார்.

ஜே.இ.எல் பிரியகுமார் உரை

தொடர்ந்து தமிழ்நாடு கணிதவியல் மன்ற பேராசிரியர் முனைவர் ஜே.இ.எல்.பிரியகுமார், வசந்தா கந்தசாமி அவர்கள் எழுதிய நூலைப் பற்றி மிக விரிவாகப் பேசி விளக்கினார். கலக மொழியில் எழுதிய முதல் கணித அறிவியல் நூல் இது. இந்த நூலில் எஃப். அய்.ஆரை பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்கள் போட்டுள்ளார். இதன் மீது சார்ஜ் ஷீட்டை நமது தமிழர் தலைவர் அவர்கள் தான் போட வேண்டும். இந்த நூலை தமிழர் தலைவர் அவர்கள் இன்றைக்கு வெளியிட தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு காணிக்கையாக்குகின்றோம்.

நம்முடைய வீரமணி அய்யா அவர்கள் மட்டும் இல்லையென்றால் வசந்தா கந்தசாமி அம்மையார் அவர்களை ஒடுக்கி அழித்திருப்பார்கள் உயர் ஜாதி அக்கிரகார ஆதிக்கக் கூட்டத்தினர். அய்யா அவர்கள் கொடுத்த துணிச்சல்தான்அம்மையார் அவர்கள் தனித்த ஒருவராக நின்று சேலை கட்டிய பெரியாராக சென்னை அய்.அய்.டி வளாகத்தில் சுதந்திராமாக துணிச்சலாக வலம் வர முடிந்தது. பார்ப்பனர்களுக்கு இந்த அம்மையாரைப் பார்த்தால் அவர்களுடைய கண்கள் உறுத்திக்கொண்டிருந்தது.

தமிழர் தலைவர் வெளியிடுவது பொருத்தம்


தமிழர் மானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக சுயமரியாதை என்ற ஆடை செய்த தறி யார் என்றால் அவர்தான் பெரியார். எனவே இத்தகைய அரும்பெரும் சிறப்பு மிகுந்த நூலை நம்முடைய தமிழர் தலைவர் வெளியிடுவது சாலப் பொருத்தமாகும். 5 சதவிகிதம் சிந்திக்கிறார்கள். அய்.அய்.டி. போன்ற நிறுவனங்களில் இருக்கின்ற பார்ப்பன உயர்ஜாதிக் கூட்டம் சிந்திப்பவர்கள் என தங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். 85 சதவிகித மக்கள் நம்முடைய மக்கள் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். வேதத்தில் கணக்கில்லை

பழுக்க காய்ச்சிய இரும்பு நெருப்புக்கு விமர்சனம் ஆவதைப் போல, படைப்பின் ஆக்கமும் விமர்சனமாக இருக்க வேண்டும். எவராலும் மறுக்க முடியாத இந்த ஆய்வுகள் அமைந்திருக்கிறது. தமிழ் மக்களுக்காக இவைகளைத் தந்திருக்கின்றார்கள். 43 நூல்களை அவர்கள் எழுதியிருக்கின்றார். வேதிக் மேதமேடிக்ஸ் என்பதில் எந்தக் கணக்கும் இல்லை என்பதை இதுவரை 2,40,680 பேருக்கு மேல் நெட்டில் இவருடைய கட்டுரையை படித்திருக்கின்றார்கள்.

இடஒதுக்கீட்டின் ஆழத்தை அகலத்தை இந்த நூலில் விரிவாக எடுத்துக் சொல்லியிருக்கின்றார். உயர்ஜாதியின்ர் முகத்திரையைக் கிழிப்பதாக இந்த நூல் அமைந்திருக்கிறது. உலகத்தில் ஆபத்தான இருவர்

இந்த உலகத்தில் மிகவும் ஆபத்தானவர்கள் ஒருவர் யூதர்கள். மற்றொருவர் பார்ப்பனர்கள் என்பதை மிகத் தெளிவாக முடிந்த முடிவாக கருத்தாழத்துடன் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் வாழுகிற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றார். இந்த மக்களுக்கு முகவரி தந்தை பெரியார் என்பதை காட்டியிருக்கின்றார்.

கணிதத்தை மக்கள் மொழியாக்கியிருக்கின்றார். டெல்லி எய்ம்ஸில் உள்ள வேணுகோபால் பார்ப்பனருக்கும் அன்றைய மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் என்ற சூத்திரருக்கும் ஏற்பட்ட போராட்டத்தை விளக்கியிருக்கிறார்.

மாம்பல பார்ப்பானும் - எய்ம்ஸ் வேணுகோபாலும்

மாம்பலத்தில் ஒரு இண்டு இடுக்கில் மூத்திரம் பொழிகின்ற இடத்தில் இருக்கின்ற கீரைக்காரரிடம் கீரை வாங்கிய வெங்கட்ராமன் என்ற பாப்பனரும் டெல்லி எஸ்ம்ஸ் வேணுகோபால் சொல்லுகின்ற கருத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்.

3 நிமிடத்தில் டி.வியில் காட்டிய கொடுமையான செய்தி

என்.டி.டி.வி என்று ஒரு தொலைக்காட்சி இருக்கிறது. இடஒதுக்கீட்டிற்கு எதிரான செய்தியை, எய்ம்ஸ் நிறுவனத்தில் இடஒதுக்கீடு பிரச்சினை போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் 3நிமிடத்தில் அவர்களுக்கு வேண்டியவர்களைப் பேட்டி எடுத்து, இடஒதுக்கீடு தேவையா? இல்லையா? என்பதை நூறு கோடி மக்கள் வாழுகின்ற மக்களில் 70 சதவிகிதம் மக்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தையே கட்டவிழ்த்து விட்டார்கள் என்றால், அவர்களு-டைய பிரச்சாரத் தந்திரத்தை நம்முடைய மக்களால் அவ்வளவு சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாது. தந்தை பெரியார் எடுத்த முயற்சியால், அண்ணா அவர்கள் எடுத்த முயற்சியால், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சியால், அய்யா வீரமணி அவர்கள் எடுத்த முயற்சியால் இடஒதுக்கீடு இன்றைக்கு நிலைத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நூல் வெளியீடு

அடுத்து நூல் வெளியீட்டு விழாத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்களுக்கு ப.க தலை-வர்.நேரு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

பேராசிரியர் வசந்தா கந்தசாமி, விஞ்ஞானி கந்தசாமி தம்பதியினர் எழுதிய கணித கோட்பாட்டுடன் மய்ய அரசு உயர் கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு ஓர் ஆய்வு என்ற நூலை திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக முனைவர் கமலக்கண்ணன் முதல் படியை அனைவருடைய கரவொலிக்கிடையே பெற்றுக்கொண்டார்.

அடுத்து முனைவர்கள் வசந்தா கந்தசாமி தம்பதியினர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு மலர்க்கொத்தினை அனைவருடைய கரவொலிக்கிடையே வழங்கினார்.

அடுத்ததாக கழக வீராங்கனை ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அவர்கள் எழுதிய மகளிர் மாட்சி என்ற நூலை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வெளியிட வரியியல் வல்லுநர் எஸ்.ராஜரத்தினம் அனைவருடைய கரவொலிக்கிடையே பெற்றுக்கொண்டார்.

இரு நூல்களை யாத்த முனைவர் வசந்தா கந்தசாமி, விஞ்ஞானி கந்தசாமி, கழக மகளிரணியைச் சேர்ந்த ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் ஆகியோருக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தார்.

முனைவர் பிரியகுமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார்.

தமிழர் தலைவர் உரை

அடுத்து திராவிடர் கழக தலைவர் தமிழர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

மிகுந்த மகிழ்ச்சியோடும், சிறப்போடும் நடைபெறக் கூடிய இந்த விழாவினை பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

ஆற்றல் மிகுந்த பேராசிரியர் முனைவர் வசந்தா கந்தசாமி அம்மையார் அவர்கள், ஒரு ஒரு பெண் போராளியாக இருந்து சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலட்சியத்திற்காக பல தொல்லைகளை ஏற்றவர்

வசந்தா அம்மையார் அவர்களும், கந்தசாமி அவர்களும் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லாமல் சமூகநீதியை காக்க போராடிக்கொண்டிருக்கின்றவர்கள். இதனால் அவர்களுக்குப் பல வகையிலும் இழப்புகள் ஏற்பட்டது. பல தொல்லைகள் வந்தது.

எதையுமே பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக அவர்கள் தொடர்ந்து உறுதியோடு பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே போல நமது கழக மகளிரணியைச் சார்ந்த சகோதரியார் ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அவர்கள் விடுதலையில் அவர்கள் எழுதிய கட்டுரைகளை எல்லாம் நூலாகத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார்கள். இந்த நூலை மிக அருமையாகத் தயாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரியகுமார் பேச்சு

இங்கே வசந்தா கந்தசாமி அவர்கள் எழுதிய நூலை நம்முடைய பேராசிரியர் முனைவர் பிரியகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக அதைப்பற்றி விளக்கினார்கள். என்னைப் போன்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அவர் பேசிய பேச்சைக் கேட்ட பொழுது, அவருடைய பேச்சை கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கிறது; அந்த அளவுக்குச் சிறப்பாகப் பேசினார்.

நல்ல பேச்சாளர்

பெரியார் திடலுக்கு நல்ல ஒரு பேச்சாளரைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். நமது வாசகர் வட்டத் தோழர்கள் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அவர் நமது வாசகர் வட்டத்தில் வந்து உரையாற்றலாம். பிரியகுமார் பெரியார் திடலுக்கு பிரியமான குமாராக ஆனார்.

எனக்குத் தந்தி மாதிரிதான் பட்டது

வசந்தா கந்தசாமி அவர்கள் எழுதிய நூலைப் படிக்கும் பொழுது எனக்குப் புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவர் எழுதியுள்ள ஆங்கிலக் குறிப்புகளைப் படித்து ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். இந்த நூலை இன்னும் எளிமைப்படுத்திக் கொண்டு வரவேண்டும்.

நம்முடைய நாட்டில் (பூ) நூலை ஒழிப்பதற்கு இது போன்ற நூல்கள் தான் தேவைப்படுகின்றன. வசந்தா கந்தசாமி அவர்களுடைய நூல் கட் கட, கட் கட என்று தந்தி அடிப்பதைப் போலத்தான் தெரிந்து கொள்ள முடிந்தது. இது கணித மொழி. ஆனால் மிகச் சிறந்த ஆழமான நூல் என்பதை மேலோட்டமாக அதன் கருத்தோட்டத்திலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

பார்ப்பன ஆதிக்கத்தை உலக வெளிச்சத்திற்கு

இப்படிப்பட்ட நூல்கள் மூலமாக பார்ப்பன ஆதிக்க ஆக்கிரமங்களை எல்லாம் வெளி உலகத்திற்குக் கொண்டு போக வேண்டும்.

வசந்தா கந்தசாமி அவர்கள் எதிர் நீச்சல் அடித்தே வாழ்ந்து கொண்டிருக்கின்றவர். அவர் ஒரு தனி மனித யுத்தமே நடத்திக்கொண்டிருக்கின்றார். பிறரிடம் உதவி கேட்கக் கூடாது என்று கூட தயங்கக் கூடியவர்கள் அவர்கள்.

பெரியர் கல்வி நிறுவனங்களில் வாங்குவோம்

எங்களுடைய பெரியார் கல்வி நிறுவனங்களிலே அவர்களுடைய நூல்களை வாங்கி வைப்போம். பிரியகுமார் அவர்களும் இங்கே சொன்னார். தந்தை பெரியார் சொல்லாத கருத்துகளே இல்லை தந்தை பெரியார் சொல்லுவார், காஷ்மீரில் இருக்கின்ற பார்ப்பானுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் இருக்கின்ற பார்ப்பனருக்கு நெறிகட்டும் என்று.

இங்கே நமது மகளிரணி குடும்பத்தைச் சார்ந்த ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அவர்கள் எழுதிய நூலை வெளியிட கேட்டபொழுது அதை மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டேன். அவரும், அவரது கணவரும் தந்தை பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர்.

டார்பிடோ ஏ.பி.-ஜனார்த்தனம் அவர்கள்தான் என்னை தந்தை பெரியார் அவர்களிடம் முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர்.

இந்த இடத்தில் பாராட்டாமல் விட்டுவிட்டால்

ஜனார்த்தனம் அவர்கள் அரசியல் கட்சிக்கு சிறிது காலம் சென்றாலும் ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் அவர்கள் தனது தந்தையார் காலத்திலிருந்து எந்த இடத்தில் தொடங்கினாரோ, அதே இடத்திலே தனது பொதுப்பணியை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர். எந்த நிலையிலும் அவர் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் இந்த இடத்தில் அவரைப் பாராட்டிச் சொல்லாமல் விட்டு விட்டால் வேறு இடத்திலும் எனக்கு வாய்ப்பு கிடைக்காது.

நல்ல புட்சிகரமான கருத்துகளை தெரிவித்திருக்கின்றார்.

எல்லா இடங்களிலும் இந்த இரு நூல்களும் பரவ வேண்டும். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்கள். அடுத்து மாநில ப.க துணை தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் எழுதிய நூலில் பெண்ணிய புரட்சிகள் எப்படி வெடித்துள்ளன என்பதை ஆதாரத்தோடு விளக்கினார்.

ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் ஏற்புரை

அடுத்து ஏ.பி.ஜே மனோரஞ்சிதம் ஏற்புரையாற்றினார். இந்த நூல் வெளியீட்டு ஊக்கம் கொடுத்த தமிழர் தலைவர் மற்றும் கழகப் பொருளாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒவ்வொன்றையும் தாம் தமிழர் தலைவரிடம் அனுமதி வாங்கி எழுதியதை நினைவு கூர்ந்தார். வாழும் திராவிட இயக்க வீராங்கனைகளைப் பற்றி அடுத்து தான் வெளியிடும் நூலை தமிழர் தலைவர் அவர்கள் வெளியிட அன்பு வேண்டுகோளை விடுத்தார்.

கந்தசாமி ஏற்புரை

அடுத்து முனைவர் வசந்தா (தனது வாழ்விணையர் சார்பிலும்) முனைவர் விஞ்ஞானி கந்தசாமி அவர்கள் ஏற்புரையாற்றினார். கருப்புச்சட்டை தான் எங்களுக்குப் பாதுகாப்பு. எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி, வானொலிப் பெட்டி கிடையாது. எழுதுவது படிப்பது தான் எங்கள் வேலை. எனது துணைவியாருக்கு கை, கால் அமுக்கி விடுவதை பெருமையாகக் கருதுபவன். நான் விஞ்ஞானியாக இருந்தாலும் எங்கள் வீட்டில் பாத்திரங்களை அவ்வளவு சுத்தமாகக் கழுவுபவன். எனது வாழ்விணையர் வசந்தா அவர்கள் எனது துணைமணிகளை துவைத்துப் போடுவார். என் இணையரை மகள்களை நான் இதுவரை வாடி, போடி என்றெல்லாம் கூப்பிட்டதில்லை. அம்மா என்று தான் அழைப்பது வழக்கம். பணம் ஓரளவுக்கு இருக்கிறது. வீட்டில் வேலைக்காரர்களை வைத்ததில்லை. இரண்டு பெண் மக்கள் எங்களுக்கு. அவர்களைப் புலிப் போத்துகளாக வளர்த்திருக்கிறோம். ஆசிரியர் அய்யா தான் எங்களுக்குப் பாதுகாப்பு. பார்ப்பனர் ஆதிக்க ஒழிப்பு பெரியாருடைய கொள்கையை பரப்புவதுதான் எங்கள் இலட்சியம். அடுத்த புத்தகம் வசந்தா அம்மையார் எழுதுவது அகதிகள் கொடுமையும், ராஜபக்சே ஆணவம் என்பதைப் பற்றித்தான்.

நாங்கள் சம்பாதித்த ஒரு பகுதி தொகையை தமிழர் தலைவரிடம் அளித்து அவர் விருப்பப்படி நமது திராவிடர் கழக முதியோர்கள் தங்குவதற்கு ஒரு முதியோர் இல்லத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கருதுகின்றோம். அது எப்போது என்பதை பிறகு தெரிவிப்போம். அடுத்து 50ஆவது புத்தக வெளியீட்டை சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று கருதுகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் 43 நூல்களை மிகச்சிறப்பாக தட்டச்சு செய்த வசந்தா கந்தசாமி அவர்களின் இளைய மகள் (மூத்தமகள் அமெரிக்காவில் இருக்கிறார்) இளந்தென்றலுக்கு விழாக்குழு சார்பாக சால்வை அணிவித்து பாராட்டப்பட்டது.

சென்னை மாவட்ட ப.க செயலாளர் சி.செங்குட்டுவன் நன்றி கூறினார்.


--------------------"விடுதலை" 9-10-2009

1 comments:

ரமேஷ் கார்த்திகேயன் said...

//தந்தை பெரியார் எடுத்த முயற்சியால், அண்ணா அவர்கள் எடுத்த முயற்சியால், முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் எடுத்த முயற்சியால், அய்யா வீரமணி


"அய்யா வீரமணி" தமிழ் நாட்டிற்கு இவர்என்ன செய்தார் ??????????????

பெரியாரின் சிந்தனைகளை காசாக்க முற்சிதார் இதை தவிர வேற ஒன்றும் சாதிக்காத