பொருளாதாரத்தில் அல்ல
சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகளைப் போக்கி, சமுதாயத்தைச் சீர்திருத்தும் பெரும்பணியைத் திராவிடர் கழகம் செய்து வருகிறது. அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும் பொருட்டு, திராவிடர் கழகம் சமுதாயம் முழுவதையும் சீர்திருத்தி வெற்றிக் கொடியை நாட்டும்போது, அரசாங்கம் வகுப்புவாரி முறையைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்படாது. வகுப்புகளுக்கு ஏற்ற நீதி கிடைத்து, சமுதாயம் உயர் நிலையடையத் திராவிடர் கழகத்தின் தொண்டும், அரசாங்கத்தின் அணைப்பும் நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. எனவே தான், நாட்டிலுள்ள ஜாதிப் பாகுபாடுகள் அனைத்தும் ஒழிந்து, மக்கள்அனைவரும் சமுதாயத்துறையில் (பொருளாதாரத் துறையில் அல்ல) ஒன்றே குலம் என்ற நிலை ஏற்படும் வரையில், இந்த வகுப்புவாரி முறை _ அதாவது வகுப்புக்கு ஏற்ற நீதி வழங்கப்பட வேண்டுமென்ற ஏற்பாடு இருந்தே தீர வேண்டுமென்று வற்புறுத்துகிறோம்.
----------------- அண்ணா - திராவிட நாடு 12.6.1949
************************************************************************
திமுகவின் முக்கிய குறிக்கோள்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முக்கிய குறிக்கோள்கள் யாவை?
பதில்:
1. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அமைத்தல்.
2. மாநிலங்களுக்கு மேலும் கூடுதலான சுயாட்சி உரிமை பெறுதல்.
3. சிறுபான்மை வகுப்பினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் சரிசமவிகிதப் பிரதிநிதித்துவ முறைக்காகப் பாடுபடுதல்.
4. ஜனநாயக சோஷலிசம் அடைதல்.
5. ஜாதியை ஒழித்தல்.
கேள்வி:
திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை வழியல்லாது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ற திட்டங்களின் அடிப்படையில் எப்பொழுதும் இயங்கும் ஒரு அமைப்பாக விளங்குகிறதே அன்றி எந்தவொரு நிலையான கோட்பாடும் கொண்ட அமைப்பல்ல என்று நான் எண்ணுவது சரியான கருத்தா?
பதில்::
உங்களுடைய எண்ணம் தவறானது. கூட்டாட்சி முறை மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை, சமதர்மக் குறிக்கோள் இவைகள் கோட்பாடுகள் அல்லவா?
--------------------இல்லஸ்ட்ரேட் வீக்லி ஆங்கில ஏட்டில் 26.9.1965 அன்று அறிஞர் அண்ணா பேட்டி
**************************************************************************************
போட்டிக் கழகமல்ல!
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது; திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதையில்தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான். திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல் மோதுதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத்துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டு ஏதாதிபத்தியத்தினின்றும் விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.
-------------- அண்ணா -ஒட்டுமாஞ்செடி என்ற சொற்பொழிவு நூலில்
2 comments:
பெரியார் நெஞ்சில் தைத்த முள் - இன்னும் எடுக்கப்படவே இல்லை. அண்ணா நூற்றாண்டில் தமிழர் சமுதாயத்தின் மீதான சூத்திர இழிவு தொடருகிறது. ஆனால், பெரியார் ஆட்சி நடப்பதாக கி.வீரமணி தம்பட்டம் அடிக்கிறார். தி.மு.க. ஆட்சி உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு எடுத்து, முடிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ, தெரியாது!
பெரியார் நெஞ்சில் தைத்த முள் - இன்னும் எடுக்கப்படவே இல்லை. அண்ணா நூற்றாண்டில் தமிழர் சமுதாயத்தின் மீதான சூத்திர இழிவு தொடருகிறது. ஆனால், பெரியார் ஆட்சி நடப்பதாக கி.வீரமணி தம்பட்டம் அடிக்கிறார். தி.மு.க. ஆட்சி உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு எடுத்து, முடிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகாலம் ஆகுமோ, தெரியாது!
Post a Comment