Search This Blog
5.4.09
பார்ப்பான் நமக்கு எதற்காகத் தேவை?
நெய்பவன் நமது மானத்தைக் காப்பாற்றுபவன் வண்ணானில்லாவிட்டால் துணி வெள்ளை உடுத்த முடியாது. உணவுக்கு உழுபவன் தேவை. ஆனால் பார்ப்பான் நமக்கு எதற்காகத் தேவை? நல்ல காற்றிலே சயரோகக் கிருமிகள் கலந்துள்ளதைப் போல இந்தச் (எலும்புருக்கி) சமூதாயத்தில் பார்ப்பான் கலந்துள்ளான். பார்ப்பான் குஷ்டநோய் மாதிரி சமூதாத்தில் இருக்கிறான். பார்ப்பானால் நாட்டுக்கு என்ன நன்மை இதற்காகத்தான் பார்ப்பான் இருக்கிறான், இன்ன பலன் அவன் மூலம் ஏற்படுகிறது என்று யாராவது எடுத்துக் காட்டட்டுமே பார்க்கலாம்!
------------------தந்தைபெரியார் -"விடுதலை" 19-10-1958
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//பார்ப்பானால் நாட்டுக்கு என்ன நன்மை //
எனக்கும் இந்த கேள்வி உண்டு.
பார்ப்பனர்கள் விளக்குவார்களா?
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா
இது தேவை இது தேவையில்லை என்பதைக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
எல்லா மதங்களிலும் இறைவனைப் பூஜை செய்பவர் என ஒரு பிரிவினர் உண்டு. கிறித்துவப் பாதிரியார்கள், இஸ்லாமிய முல்லாக்கள் எனச் சொல்லலாம்.
இறை நம்பிக்கை ஊடையவர்கள் இவர்களிடம் சென்று அர்ச்சனையோ, பாவ மன்னிப்போ, துவாவோ செய்து கொள்ளலாம்.
இல்லாதவர்கள் தூற்றலாம்.
பார்ப்பனர்கள் (அந்தக் காலத்தில்)படித்தவர்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது ஒரு ராஜாஜியைத்தான் பொது ஆளுனராகச் செய்தனர். தன் சுய நலத்திற்காக இந்துக் கடவுள்களை மட்டும் தூற்றிய பெரியாரை அல்ல.
(அவர் மட்டும் ஏசுவை நம்புபவன் காடுமிராண்டி என்றோ, அல்லாவை நம்புபவன் அயோக்கியன் என்றோ சொல்லியிருந்தால் அடுத்த வருடமே ஒரு ஃபட்வா போட்டு அவரைத் தூக்கியிருப்பார்கள்). இப்போது ஒன்றும் குறைந்து விட வில்லை. தமிழ் ஒவியாவை 'அல்லாவை நம்புபவன் அயோக்கியன்' என்று ஒரு பதிவு போடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இந்து மதம் பல்லாயிரக்கணக்காண வருடங்களுக்கு முன்பே பெரியாரின் முன்னோடிகளான சார்வாகர்களை சந்திதிருக்கிறது. அப்போதே அழியாத இந்து மதமா ஒரு பெரியாரின் அவதூறுகளால் அழியப் போகிறது?
//இது தேவை இது தேவையில்லை என்பதைக் கூற யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.//
பயனற்றவைகளை வைத்துக் கொண்டிருப்பது தேவை இல்லாத செயல். பார்ப்பனர்களால் எதாவது பயனுண்டா? அதைத்தான் பெரியார் கேட்கிறார்.
இன்பா போன்ற தோழர்களும் பார்ப்பனர்களால் எதுவும் நன்மை இருந்தால் சொல்லுங்கள் கேட்டு கேட்டுள்ளார்.
ஆனால் ரங்குடு ஆகிய நீங்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறீர்கள். பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.
அனால் பதில் சொல்லியுள்ளீர்கள் (அதுவும் தவறாக)
பார்ப்பனர்களுக்கு இரட்டை நாக்கு என்று அண்னா சொல்வார் அதை உறுதிப் படுத்துவது போல் இருக்கிரது உங்கள் பதில்.
//பார்ப்பனர்கள் (அந்தக் காலத்தில்)படித்தவர்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது ஒரு ராஜாஜியைத்தான் பொது ஆளுனராகச் செய்தனர். தன் சுய நலத்திற்காக இந்துக் கடவுள்களை மட்டும் தூற்றிய பெரியாரை அல்ல.//
அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்ட உங்களுக்கு கோடி நன்றி.
பார்ப்பனரல்லாதாரை எங்கு படிக்க விட்டீர்கள். நீங்க பெருமைப்பட்டுக் கொள்ளும் குல்லுகப்பட்டர் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து பார்ப்பனரல்லாதவர்களைப் படிக்க விடாமல் செய்ததை பெரியார் தான் த்டுத்து அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தார். அதற்கு காமராஜர் உத்வி செய்தார்.
காரணம் பெரியார்- காரியம் காமராஜர் என்ற புது மொழி பிறந்தது இதனால்தான் என்ற வரலாறு ரங்குடுக்கு தெரியுமா?
//(அவர் மட்டும் ஏசுவை நம்புபவன் காட்டுமிராண்டி என்றோ, அல்லாவை நம்புபவன் அயோக்கியன் என்றோ சொல்லியிருந்தால் அடுத்த வருடமே ஒரு ஃபட்வா போட்டு அவரைத் தூக்கியிருப்பார்கள்). இப்போது ஒன்றும் குறைந்து விட வில்லை. தமிழ் ஒவியாவை 'அல்லாவை நம்புபவன் அயோக்கியன்' என்று ஒரு பதிவு போடச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
அனைத்து மதக்கடவுளையும் தான் பெரியார் விமர்சித்துள்ளார்.
தமிழ் ஓவியாவும் இந்த வலைப்பக்கத்தில் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து பெரியார் பேசிய எழுதிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
இதையெல்லாம் அறிந்து கோள்ளாமல்
அரைகுரையாக பின்னூட்டம் போடுது சரியல்ல ரங்குடு.
பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள் என்று ஒரு சிலர் கூறி பார்ப்பனர்களுக்கு வால் பிடித்து வருகிரார்கள்.
இன்னும் பார்ப்பனர்கள் திருந்த வில்லை என்பதற்கு ரங்குடுவே சாட்சி என்பதை அந்த வாலாட்டிகள் தெரிந்து கொள்ளட்டும்.
நாங்கள் எப்போது கருப்புச்சட்டையை அணிந்தோமோ அன்றே எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது ரங்குடு.
இப்போதும் கேட்கிறோம் பார்ப்பனர்களால் என்ன நன்மை என்பதை சொல்லுங்கள்.
//பயனற்றவைகளை வைத்துக் கொண்டிருப்பது தேவை இல்லாத செயல்.
பார்ப்பனர்களால் எதாவது பயனுண்டா? அதைத்தான் பெரியார் கேட்கிறார்.//
நானும் 'பெரியாரால் நாட்டுக்கு என்ன பயன், வெங்காயம்' என்று கேட்டு விடலாம்.
அறிஞர் அண்ணாவும் இன்ன பிறரும் 'மூதறிஞர்' என அறியப்பட்டவர் ராஜாஜி.
பிராமணரால் என்ன பயன் என்று கேட்பதும் அண்ணாவால் என்ன பயன் என்று
கேட்பதும் ஒன்றுதான். அவ்வாறு கேட்பவர்களுக்கும் இரட்டை நாக்குதான்.
//இன்பா போன்ற தோழர்களும் பார்ப்பனர்களால் எதுவும் நன்மை இருந்தால் சொல்லுங்கள் கேட்டு கேட்டுள்ளார்.//
இன்பாவுக்கும் இதே பதில் தான்.
//ஆனால் ரங்குடு ஆகிய நீங்கள் யாருக்கும் அதிகாரம் இல்லை என்கிறீர்கள். பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்கள்.
அனால் பதில் சொல்லியுள்ளீர்கள் (அதுவும் தவறாக)//
உங்கள் தவறான அணுகு முறையைச் சுட்டிக்காட்டவே பதில். நீங்கள் எதோ உங்கள் வீட்டு சாமான் தேவையா இல்லையா என்பது போல்
பிராமணர்களால் என்ன பயன் என்று கேட்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னேன். அதைத் திரித்து இரட்டை நாக்கு என்று
சொல்லும் உங்கள் வாக்கு சாதுர்யத்தை என்னென்பது?
//பார்ப்பனர்களுக்கு இரட்டை நாக்கு என்று அண்னா சொல்வார் அதை உறுதிப் படுத்துவது போல் இருக்கிரது உங்கள் பதில்.//
'மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம்' என்றெல்லாம் பொருளாதாரத்துக்கு முரண்பாடான வாக்குறுதிகளை வீசி ஆட்சியைப் பிடித்த பின்
பல்டி அடித்த அண்ணாவுக்கும் அவர்களது தம்பியருக்கும் எத்தனை நாக்கு? படிப்பறிவில்லாத தமிழர்களை மேலும் மூடர்களாக்கிய
பெருமை இவர்களையே சேரும்.
அண்ணா அதைச் சொன்னார், பெரியார் இதைச் சொன்னார் என்று சொல்வதை விட்டு நீங்களும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றப்
பாருங்கள்.
//அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்கள் என்ற உண்மையை ஒப்புக் கொண்ட உங்களுக்கு கோடி நன்றி.//
வார்த்தைகளைத் திரிக்காதீர். ராஜாஜி படித்தவர், பெரியார் படிக்க வில்லை என்று தான் சொன்னேன். ஒரு வேளை பெரியார்
படித்திருந்தாலும், ராஜாஜி அளவுக்குப் படிக்க வில்லை. பெரியார் படிக்காததற்காக ராஜாஜியைக் குறை கூறினால் அந்த
அறியாமையை என்னவென்பது?
//பார்ப்பனரல்லாதாரை எங்கு படிக்க விட்டீர்கள். நீங்க பெருமைப்பட்டுக் கொள்ளும் குல்லுகப்பட்டர் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தைக்
கொண்டு வந்து பார்ப்பனரல்லாதவர்களைப் படிக்க விடாமல் செய்ததை பெரியார் தான் த்டுத்து அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தார்.
அதற்கு காமராஜர் உத்வி செய்தார்.//
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று. அறிவறிந்து
ஆள்வினை இன்மைப் பழி - திருக்குறள்.
நான் ராஜாஜியின் கல்வித்திட்டத்தில் 5ம் வகுப்பு வரை பயின்றேன். காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிக்கல்வி. பிறகு எங்கள் இஷ்டம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ராஜாஜி நம்பினார். மேலும் இந்தியா தொழில் மயமாகாத நிலையில், மக்கள் ஏதாவது ஒரு தொழிலைக்
கற்றால் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் என்று நம்பினார். அவர் ஒன்றும் பிராமணர்கள் மதியம் கோவிலில் மணிதான் அடிக்க வேண்டும், சலவை
செய்பவர் மகன் மதியானம் துணிதான் துவைக்க வேண்டும் என்று ஆணையிடவில்லையே? நானும் மதியம் எந்தக் கோவிலிலும் மணி அடிக்க வில்லை.
நன்றாகப் பொழுதைக் கழித்தேன்.
பிறகு பெரியார் / காமராசர் கல்வித்திட்டம் வந்து அதிலும் படித்தேன். மதிய உணவுத் திட்டமும் வந்தது. படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் காலை, மதியம்
இரண்டு வேளையும் படித்தனர். (பிராமணர், பிராமணரல்லாதோர் இருவரும் அடக்கம்). படிப்பில் விருப்பமில்லதவர் காலை பள்ளிக்கு வந்து மதிய
உணவு உண்ட பின் வீட்டிற்குச் சென்றனர். என்னுடன் படித்தவர் பலர் என்னை விட உயர்ந்த நிலையில் உள்ளனர்.
நிறையப் பேர் படிக்க வில்லை. இதற்காக காமராசரைக் குறை கூற முடியுமா?
//காரணம் பெரியார்- காரியம் காமராஜர் என்ற புது மொழி பிறந்தது இதனால்தான் என்ற வரலாறு ரங்குடுக்கு தெரியுமா?//
ஆனால் அடுத்த சில வருடங்களிலேயே பெரியார் தி.மு.க வை ஆதரித்து கட்சி மாறும் பட்சியாக மாறியதும் வரலாறு.
பெரியார் சொற்படி தான் 'படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்று ஆணவமாக்ப் பேசி காமராசர் படு தோல்வி அடைந்தாரோ?
இன்று வரை தி.க, தி.மு.க வின் அடி வருடியாகவே இருப்பது தான் சோகம்.
//அனைத்து மதக்கடவுளையும் தான் பெரியார் விமர்சித்துள்ளார்.//
இப்போதும் ஒன்றும் குறைந்து விட வில்லை. பெரியார் கிறித்துவ, இஸ்லாமியக் கடவுளர்களைத் தாக்கி (அயோக்கியன், காட்டுமிராண்டி என்ற
வார்த்தைகள் கொண்ட) பதிவுகளின் இணைப்பை வெளியிடவும்.
//தமிழ் ஓவியாவும் இந்த வலைப்பக்கத்தில் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து பெரியார் பேசிய எழுதிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.//
பதிவு கூட வேண்டாம். ஒரு பின்னூட்டமாவது இடுங்கள் பார்க்கலாம்.
//பார்ப்பனர்கள் திருந்தி விட்டார்கள் என்று ஒரு சிலர் கூறி பார்ப்பனர்களுக்கு வால் பிடித்து வருகிரார்கள்.//
உங்கள் கண்ணில் கோளாறை வைத்துக் கொண்டு மற்றவர்களைக் குறை கூறுவது சரியல்ல.
//இன்னும் பார்ப்பனர்கள் திருந்த வில்லை என்பதற்கு ரங்குடுவே சாட்சி என்பதை அந்த வாலாட்டிகள் தெரிந்து கொள்ளட்டும்.//
நான் படித்ததெல்லாம்:
'கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சைப் புகினும் கற்கை நன்றே'
'எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடி கற்றோரை மேல் வருக என்ப'
'ஈஸ்வர அல்லா தேரோ நாம், சப்கோ சன்மதி தே பகவான்'
இவற்றை எழுதியவர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்லர்.
யார் மீதும் காழ்ப்புணர்ச்சி எனக்கு இல்லை.
நான் படித்தது: மஹாத்மா காந்தி பாட சாலை, விழுப்புரம்.
//நாங்கள் எப்போது கருப்புச்சட்டையை அணிந்தோமோ அன்றே எங்களுக்கு உயிர் பயம் போய்விட்டது ரங்குடு.//
எல்லோருக்கும் இருப்பது ஒரு உயிர்தான். அதை எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்வது உங்கள் விருப்பம்.
எல்லோர் உயிரும் அப்படித்தான்.
//இப்போதும் கேட்கிறோம் பார்ப்பனர்களால் என்ன நன்மை என்பதை சொல்லுங்கள்.//
உங்கள் ஒருவரால் என்ன நன்மையோ அதே நன்மைதான் எல்லாராலும். அறிந்து கொள்வதும் வசை பாடுவதும்
உங்கள் விருப்பம்.
உங்கள் பதிவுகளை யாரும் படிக்கிறார்களா என்றே எனக்கு சந்தேகம். இந்த முறை சில பின்னூட்டங்களைப் பார்த்து விட்டேன். எனவே
படிக்க நேர்ந்தது. இனியும் படிப்பேனா என்பது ஐயமே.
//நானும் 'பெரியாரால் நாட்டுக்கு என்ன பயன், வெங்காயம்' என்று கேட்டு விடலாம். //
நன்றாக கேளுங்கள் ரங்குடு. விளக்கம் சொல்கிறோம்.
இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு காரணம் பெரியார்தான்.
இரயிநிலையங்களில் பிராமணாள் சாப்பிடும் இடம்- இதராள் சாப்பிடும் இடம் என்ற நிலை போனதற்கு காரணம் பெரியார் தான்.
இது போல் அடுக்கிக் கொண்டே போகலாம்.
பெரியாரால் பல நன்மைகள் அடைந்துள்ளார்கள் (பட்டியல் விரிவாக வெளிக் கொண்டுவர முயற்சி செய்கிரேன்)
////தமிழ் ஓவியாவும் இந்த வலைப்பக்கத்தில் கிறித்துவ, இஸ்லாமிய மதங்களை விமர்சித்து பெரியார் பேசிய எழுதிய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.//
பதிவு கூட வேண்டாம். ஒரு பின்னூட்டமாவது இடுங்கள் பார்க்கலாம்.//
பதிவுகள் பல் இந்த வலைப்பக்கத்தில் உள்லது என்று சுட்டிக்காட்டிய பிறகும் பின்னூட்டமாவது இடச் சொல்லி உசுப்பேத்திவிடுவது பார்ப்பனர்களின் சாம, தான, பேத தண்ட புத்தியல்லாமல் வேறு என்ன?
ஒரு முறை இந்த வலைப்பக்கத்தை முழுவதுமாக படித்து தெரிந்து கொள்ளவும்.
பார்ப்பனர்கள் திருந்த வில்லை என்பதை மீண்டும் ரங்குடு உறுதி செய்துள்ளார்.
//இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி, பதவிகளில் அமர்ந்திருப்பதற்கு காரணம் பெரியார்தான்.//
அந்தக் கல்விச் சாலைகளில் கல்வியறிவு அளித்தது முதலில் பிராமணர்கள் தான். நான் முன்பே கூறிய படி எண்ணிறந்த தமிழ் நூல்களை பதிப்பித்தவர் - தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமி நாதர்.
இந்தியர்களின் கணிதத்திறமையை உலகுக்கு உணர்த்திய - சி.வி.இராமானுஜம்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடிய - சுப்ரமணிய பாரதியார்
இயற்பியலில் நோபல் பரிசு வாங்கிய - சி.வி.ராமன் , சு.சந்திர சேகர்
பட்டியல் நீண்டது. இவர்களால் என்ன உபயோகம் என்று கேட்கும் உங்களை என்ன என்பது?
'எக்குடி பிறப்பினும், யாவரே ஆயினும், அக்குடி கற்றோரை மேல் வருக என்ப' - படித்தவர்கள் மேலே
வருகிறார்கள்.
ஐயா பெரியவரே, தாழ்த்தப் பட்ட மற்றும் மலை சாதியினருக்கு முறையே 15%,, 7.5% இட ஒதுக்கீடு செய்தது இந்திய அரசியல் சாசனம். இதில் பெரியார் ஒன்றும் செய்து விட வில்லை.
//இரயிநிலையங்களில் பிராமணாள் சாப்பிடும் இடம்- இதராள் சாப்பிடும் இடம் என்ற நிலை போனதற்கு காரணம் பெரியார் தான்.
இது போல் அடுக்கிக் கொண்டே போகலாம்.//
பிராமணர்கள் தீண்டாமையை விட்டு பல யுகங்கள் ஆனாலும், பெரியாராலும், அவரது வழித்தோன்றல்களாலும் இன்னும்
ஒரு கீழ வெண்மணியையோ, ஒரு மண்டைக்காடு சம்பவத்தையோ நிறுத்த முடியவில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம்
பார்ப்பன வசவு ஒன்றுதான். இத்தனைக்கும் பிராமணர்கள் இதில் சம்பந்தப் படவே இல்லை. இன்று நீங்கள் எதிர்க்க வேண்டியதெல்லாம், பா.ம.க ராமதாசு வி.சி. திருமாவளவன் மீது காட்டும் ஜாதி வெறியை, தென் மாவட்ட தேவர்கள்
கீழ் வகுப்பினர் மீது காட்டும் ஜாதி வெறியை. தினசரி பத்திரிக்கைகள் படிக்கிறீர்களா இல்லை பழைய விடுதலை நாளிதழ்களையே இன்னும் படித்து முடிக்க வில்லையா என்று தான் கேள்வி.
அப்படித்தான் என்றால், 'ராஜாஜி தான் எல்லா இந்துக்களையும் ஆலயங்களுக்குள்ளே அனுமதிக்க வகை செய்தார்.' போன்ற செய்திகளை விடுதலை இதழ் இருட்டடிப்பு செய்து விட்டது போலும்.
ராஜாஜி பொது வாழ்வில் மட்டுமல்லாது தனி வாழ்விலும் (பெரியாரைப் போல 2 கலியாணம் செய்யாமல்) தூய்மையாக
இருந்தார். பெரியாரின் சிஷ்ய கோடி கருணாநிதி தான் 'குறளோவியத்தை' எழுதி விட்டு, 2 கலியாணம் செய்து கொண்டார்.
//பெரியாரால் பல நன்மைகள் அடைந்துள்ளார்கள் (பட்டியல் விரிவாக வெளிக் கொண்டுவர முயற்சி செய்கிரேன்)
//பதிவுகள் பல் இந்த வலைப்பக்கத்தில் உள்லது என்று சுட்டிக்காட்டிய பிறகும் பின்னூட்டமாவது இடச் சொல்லி உசுப்பேத்திவிடுவது பார்ப்பனர்களின் சாம, தான, பேத தண்ட புத்தியல்லாமல் வேறு என்ன?//
இல்லை, எதோ உயிர் பயம் போய் விட்டது என்று தாங்கள் எழுதியதைப் பார்த்தேன். அதுதான் பின்னூட்டம் இடச் சொன்னேன். வேண்டாம். விட்டு விடுங்கள். உங்களது அறிவுக்கூர்மை யாருக்கும் வராது. நீங்கள் மிகவும் பாதுகாப்பாக வசை பாடலாம்.
1970ம் ஆண்டு சேலத்தில் இராமரின் படங்களை செருப்பால் அடித்து புரட்சி செய்தவர் பெரியார். அதே போல் மற்ற மதக் கடவுளரையும் செருப்பால் அடித்து தனது நாத்திகக் ள்கையை நிலை நாட்டியிருந்தால் அவர் உண்மையிலேயே 'பெரியார்' என்று நினைத்திருப்பேன். ஆனால் 'பெரியார்' என்பது அவரது ஊரின் பெயர் மட்டும் தான் என்பது
பலருக்குத்தெரியாது.
ரங்குடு எழுப்பிய கேள்விகள் அத்துனைக்கும் ஏற்கனவே பலராலும் பல்முறை பதில் அளிக்கப்பட்டு விட்டது. ஏன் தமிழ் ஓவியா வலைப்பதிவில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம் பதில் உள்ளது.ஒரு முறை படித்துப் பார்க்கட்டும்.
//1970ம் ஆண்டு சேலத்தில் இராமரின் படங்களை செருப்பால் அடித்து புரட்சி செய்தவர் பெரியார். அதே போல் மற்ற மதக் கடவுளரையும் செருப்பால் அடித்து தனது நாத்திகக் கொள்கையை நிலை நாட்டியிருந்தால் அவர் உண்மையிலேயே 'பெரியார்' என்று நினைத்திருப்பேன்.//
தூண்டி விட்டு கலவர உண்டாக்க வேண்ட்ம் என்பதிலேயே குரியாக இருக்கிரார் குல்லுகப்பட்டர் பரப்பரயைச் சேர்ந்த ரங்குடு.
சேலத்தில் ஊர்வலம் போகுபோது பெரியார் மேல் செருப்பு வீசினர் பார்ப்பனக்கும்பலைசேர்ந்தவர்கல். பெரியார் மீது வீசிய செருப்பை எடுத்து
எதிர் வினையாக ராமன் படத்தை செருப்பால் அடித்தார் ஒரு தோழர்.
இந்தச் ச்ய்தி கூட விரிவாக இந்த வலைப்பதிவில் உள்ளது. படியுங்கள் ரங்குடு.
உங்கள் பார்ப்பனிய தூண்டிவிடுதலுகு பழியாக மாட்டோம்.
மேலே குறிப்பிட்ட பார்ப்பனர்கள் பற்ரியெல்லாம் விரிவாக நூல் வந்து விட்டது, பாரதி பித்தலாட்டம், உ.வே.சா என்ற பார்ப்பன தா(த்)தா, வின் திருட்டு வேலைகள் எல்லாம் அம்பலமாகி சந்தி சிரித்த வரலாறு களை எல்லாம் தோண்டி எடுத்து பதிவு செய்ய வேண்டிய சூழலை உருவாக்கி விட்டீர்கள். த்ட்டச்சு செய்ய ஆள் மட்டும் கிடைத்தால் உங்கள் வண்ட வாளங்கள் அத்தனையும் அம்பலமாகிவிடும் . தட்டச்சு செய்ய தோழர் உதவுவதாகக் கூறியிருக்கிரார். விரைவில் பார்ப்பனர்களின் உன்மை முகம் கிழிந்து தொங்கும்.
//நான் முன்பே கூறிய படி எண்ணிறந்த தமிழ் நூல்களை பதிப்பித்தவர் - தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமி நாதர்.
இந்தியர்களின் கணிதத்திறமையை உலகுக்கு உணர்த்திய - சி.வி.இராமானுஜம்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடிய - சுப்ரமணிய பாரதியார்
இயற்பியலில் நோபல் பரிசு வாங்கிய - சி.வி.ராமன் , சு.சந்திர சேகர்
பட்டியல் நீண்டது. இவர்களால் என்ன உபயோகம் என்று கேட்கும் உங்களை என்ன என்பது?//
ரங்குடு சொல்லிய பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன என்பதைப் பாரீர் .இது மட்டுமல்லாது பார்ப்பனர்களின் உண்மை முகம் வாய்ப்புக் கிடைக்கும் போது கிழிதெறியப்படும். இப்போதைக்கு உ.வே. சா உள்ளிட்ட ஒரு சில பார்ப்பனர்களின் யோக்கியதையைப் பாரீர்.
'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழரா
உ.வே.சா. என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரை, தமிழ்த் தாத்தா என்றும் சுவடிகள் காத்த சுரங்கம் என்று உச்சி மீது வைத்து கொண்டாட தமிழகம் தயங்கியதே இல்லை. ஆனால் இப்பெரியவரின் மறுபக்கம் நம்மை திடுக்கிட வைக்கிறது. தமிழ், தமிழர் என்ற போர்வையில் தமிழ் இனமே வஞ்சிக்கப்பட்ட நடைமுறை நிகழ்வுகளைப் படிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகளை சென்னை ஆனந்தபோதினி அச்சகத்தில் அச்சடிப்பது வழக்கம். இதன் உரிமையாளர் முனிசாமி முதலியார். நிர்வாகப் பொறுப்பு - ஜீவா என்று புனை பெயரில் அழைக்கப்பட்ட நாரண துரைக்கண்ணனிடம் இருந்தது. நாரண துரைக்கண்ணன் கள் இறக்கும் மரபில் பிறந்தாலும் தமிழை விரும்பிக் கற்றார். மறைமலை அடிகள், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், திரு.வி.க. சீனி வேங்கடசாமி, பா.வே.மாணிக்கம், கா.நமச்சிவாயம் போன்ற அறிஞர் பெருமக்களிடம் உறவாடி தமிழ் பயின்றார்.
பிரசண்ட விகடன் என்ற இதழை ஆனந்த போதினி அச்சகத்தில் அச்சிட்டு, ஆசிரியராக இருந்து வெளியிட்டார். சிறுகதை, நாவல், நாடகங்கள், படைப்பதில் வல்லவர். இவரது உயிரோவியம் என்ற நாவல் அந்தக் காலத்தில் 60,000 படிகள் விற்று சாதனை படைத்தது. அடுப்பூதும் பெண்களுக்கு படிக்கும் பழக்கம் இவரால் ஏற்பட்டது; கல்கிக்கும் இவர் முந்தியவர்.
உ.வே.சா.வின் கையெழுத்துப் படிகள் என்றும் வழக்கம்போல் ஆனந்த போதினி அச்சகத்திற்கு அச்சுக் கோர்க்கப் போனது. அதில் இருந்த பாடலில் பிழைகண்ட நாரண துரைக்கண்ணன் அதைத்திருத்தியே அச்சடித்தார். தவறை காலதாமமாக உணர்ந்த உ.வே.சா. தன் உதவியாளர் இராசகோபால் அய்யங்காரை விரைந்து அனுப்பி, பிழை திருத்தி அச்சேற்றும்படி அனுப்பி வைத்தார். அதற்கு முன்பே படிகள் அச்சாகி விட்டன. ஆனால் பிழை திருத்தப்பட்டது கண்டு வியந்து போய் உதவியாளர் அய்யங்கார், நாரண துரைக்கண்ணனின் தமிழறிவை வெகுவாகப் பாராட்டியதுடன், அவர் சம்மதித்தால், உ.வே.சா.விடம் மேலும் தமிழ்ப்பாடம் பயின்று, அறிவை பட்டை தீட்ட ஏற்பாடு செய்வதாய் சொல்லிச் சென்றார்.
அதற்கு உ.வே.சா. ஒப்புதல் தரவில்லை. அதற்கு உ.வே.சா. சொன்ன காரணம் நம்மை சிலிர்க்கவும் வீறு கொண்டு எழவும் செய்கிறது.
நான் சூத்திரனுக்கு தமிழ் கற்பிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.
ஆனால் அவர் தமிழ் கற்றது மட்டும் கும்பகோணத்தில் இருந்த திருசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் தான்.
இன்னொரு நிகழ்வு. திருவாவடுதுறை ஆதீனம் - சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தி நிதி உதவி செய்தார். ஆண்டு தோறும் வித்வான் படிப்பில் முதன்மையாகத் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் ஆயிரம் பரிசளிப்பதே அந்தத் திட்டத்தின் நோக்கம்.
1930இல் தெ.பொ.மீ. என்ற மீனாட்சி சுந்தரம் (பின்னை நாளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் - ஓய்வு பெற்றபின் மேலமருவத்தூரில் ஆன்மிகப் பணி) முதலாவதாக தேறி இருக்க, அவரை ஒதுக்கி விட்டு தனக்கு நெருக்கமான மாணவன் கி.வா.ஜ என்ற ஜகன்நாதனுக்கு அப்பரிசை தந்தார்.
தமிழ்ப் பற்றாளராக இருப்பதைவிட தன் இனப் பற்றாளராக பார்ப்பனர் இருந்தனர் என்பதற்கு பல நடப்புகள் உண்டு.
செந்தமிழ்ச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், சத்தியமூர்த்தி அய்யர் அவர்களும் அமராவதி (ஆந்திரம்) சிறையில் ஆங்கில அரசால் சிறைப்பட்ட போது, ம.பொ.சி. சிறையில் கம்ப இராமாயண வகுப்பு எடுப்பது பொழுதுபோக்கு. சத்தியமூர்த்தி அய்யரும் சொற்பொழிவை கேட்டார். ஆனால் இடையிடையே எழுந்து கம்பனை விட வால்மீகியே உயர்வு என வாதிப்பாராம். ம.பொ.சி. கம்பனே பண்பானவன், உன்னதமான படைப்பாளி எனப் பல சான்றுகள் கூறி, சத்தியமூர்த்தியின் வாயை அடைப்பாராம். இதைத் தாங்க முடியாமல், சத்தியமூர்த்தி ஒரு கட்டடத்தில் கை கலக்கவே முனைந்தாராம்.
பெரும்பான்மையோர் ம.பொ.சி பக்கம் என்பதால் அடங்கிப் போவாராம். இதெல்லாம் இனப் பற்றுக்கு எடுத்துக்காட்டு.
புதுவைக் குயில் பாவேந்தர் சிறக்கப் பாடியுள்ளார்:
வீட்டிலே தூத்தம் என்பார். வெளியிலே தண்ணீர் என்பார் பிழைப்புக்காக.
உன் போல் கிள்ளாய்!
அடடா! வைர வரிகள்; ஒவ்வொரு எழுத்தும் கோடி பெறும் அண்ணாவே சொன்னாரே - தமிழ் பேசுவோரெல்லாம் தமிழராக முடியாது!
- சந்தனத் தேவன்
உண்மை மார்ச் 1-15 2009
இன்னும் வரும் ரங்குடு. உங்களின் சுயரூபம் அமபலப்படுத்தப்படும்.
//நான் ராஜாஜியின் கல்வித்திட்டத்தில் 5ம் வகுப்பு வரை பயின்றேன். காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிக்கல்வி. பிறகு எங்கள் இஷ்டம்.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று ராஜாஜி நம்பினார். மேலும் இந்தியா தொழில் மயமாகாத நிலையில், மக்கள் ஏதாவது ஒரு தொழிலைக்
கற்றால் அவர்கள் வாழ்க்கைக்கு உதவும் என்று நம்பினார். அவர் ஒன்றும் பிராமணர்கள் மதியம் கோவிலில் மணிதான் அடிக்க வேண்டும், சலவை
செய்பவர் மகன் மதியானம் துணிதான் துவைக்க வேண்டும் என்று ஆணையிடவில்லையே? நானும் மதியம் எந்தக் கோவிலிலும் மணி அடிக்க வில்லை.
நன்றாகப் பொழுதைக் கழித்தேன்.//
பார்ப்பனர்களுக்கு ஒரு வேலையும் இருக்காது அதனால் கோவிலில் மணிஅடிக்காமல் பொழுதைக் கழித்துள்லாஎ ரங்குடு. ஆனால் பாரப்பனரல்லாத பிள்ளைகளின் நிலை என்ன?
உண்மை இதழில் செங்கோ எழுதிய வரலாற்றைப் படியுங்கள் உண்மை புரியும்.
"குலக்கல்வித் திட்டம்
குலக்கல்வித் திட்டம் எனப்படும் புதிய கல்வித் திட்டத்தை ராஜகோபாலாச்சாரியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது 1953இல் கொண்டு வந்தார். அதன்படி பாதி நேரம் படிப்பு. மீதே நேரம் தொழில் செய்தல் என்ற பெயரில் மாணவர்களின் தந்தை, பாட்டன் செய்த தொழிலைச் செய்தல். அந்த முறையில் பார்ப்பனர் அல்லாதாருக்காவது ஒரு தொழில் இருக்கும். பார்ப்பனருக்கு? அந்தப் பிள்ளைகள் இருவேளையும் படிக்கும்.
இந்தப் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி சட்டமன்றத்தில் கூறி, விவாதித்து, முடிவெடுத்துச் செய்தாரா என்றால், கிடையாது! தானாகவே உத்தரவு போட்டு-விட்டார். பலத்த எதிர்ப்பு பலதரப்பிலும்!
தந்தை பெரியார் மிகப் பெரிய கிளர்ச்சியைச் செய்தார். கத்தி வைத்துக் கொள்ளுங்கள், நான் சொல்லும் போது குத்தவேண்டும் என்றார். பெட்ரோலும் தீப்பந்தமும் வைத்துக் கொள்ளுங்கள், நான் சொல்லும்போது கொளுத்த வேண்டும் என்றார். ஆச்சாரியார் பயந்து பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போனார்.
அந்த நேரத்தில் தந்தை பெரியாரைக் கேள்வி கேட்டார் ஒரு பார்ப்பனப் பெரியவர். ராஜாஜி பார்ப்பனர் என்ற காரணத்திற்காகத்தானே நீங்கள் அவர் கொண்டு வந்த நல்ல கல்வித் திட்டத்தை எதிர்த்தீர்கள்?
தந்தை பெரியார் சிரித்துக்கொண்டே சொன்னார், ஆச்சாரியாரின் கல்வித் திட்டத்தை நான் மட்டும் எதிர்த்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வேன். எந்த மாணவர்-களுக்காகக் கொண்டு வந்தாரோ அந்த மாணவர்களின் பெற்றோர்களே எதிர்த்தார்கள். பள்ளிக்கூட ஆசிரியர்களும் எதிர்த்தார்கள். எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டும் அல்ல, ஆச்சாரியாரின் கட்சிக்காரர்களே எதிர்த்தார்கள்.
இன்றைக்கு (1957இல்) ஆச்சாரியாருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் முத்துராமலிங்கத் தேவரே கூட சட்டசபையில் எதிர்த்துப் பேசினாரே! இப்படிப்பட்ட கல்வித் திட்டத்தை அமல் நடத்துவதற்கு ஆச்சாரியாரின் அகந்தை, ஆணவம்தான் காரணம் என்றே பேசினார். ஆச்சாரியார் அதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா என்று பெரியார் கேட்டு விட்டுப் பதில் சொன்னார்.
சங்கரரும் புத்தரும் மற்றவர்களைக் கலந்து ஆலோசித்துத்தான் நல்ல விஷயங்களை போதனை செய்தார்களா என்று ஆச்சாரியார் பேசினார். உடனே ஆவேசமாகப் பேசிய தேவர், புத்தரையும் சங்கரரையும் தன்னுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு ஆச்சாரியாருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்டார். உண்மை இப்படியிருக்கையில், பார்ப்பன துவேசத்தினால் நான் எதிர்த்தேன் என்று சொல்வது எப்படி முறையாகும் என்று பெரியார் பார்ப்பனப் பெரியவரைக் கேட்டார்.
அவர் பதில் பேசாமல் வேறு ஒரு சங்கதியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய்விட்டார்.
இப்படித்தான் உண்மை தெரியாத பல பேர்கள் தந்தை பெரியாரைப் பற்றிப் பலவிதமாகப் பேத்தி வருகிறார்கள்.
- செங்கோ"
ரங்குடு இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?.
பார்ப்பன்ர்களுக்கு முன் புத்தியும் இல்லை பின் புத்தியும் இல்லை குயுக்திப் புத்தி தான் உண்டு என்பது எவ்வளவு பெரிய உண்மை.
Post a Comment