பொதுவாகவே தமிழர்கள், தமிழ் என்ற சொற்களைக் கேட்டாலே பார்ப்பனர்களுக்குக் கடும் வெறுப்பும், எதிர்ப்பும் ஏற்படும்.
அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் என்றால் அவை இரட்டிப்பு மடங்காவதைத் தமிழர்கள் உணரவேண்டும்.
பார்ப்பன ஊடகங்கள், குறிப்பாக இந்து, துக்ளக் போன்றவை கக்கும் நஞ்சு அவாள் மொழியில் சொல்லவேண்டும் என்றால் ஆலகால விஷமாகும்.
இலங்கையில் தமிழர்கள் ஈவு இரக்கமற்ற வகையிலும், யுத்த நெறிகளுக்கு மாறாகவும் இலங்கை இராணுவம் மேற்கொண்ட மனிதப் படுகொலையைத் தொடர்ந்து, அத்தீவின் அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என்ற போர்க் குரல் உலகில் பல நாடுகளிலிருந்தும் வெடித்துக் கிளம்பியது.
காலந்தாழ்ந்த நிலையில் அய்.நா. இதுபற்றி விசாரணை நடத்திட மூவர் கொண்ட ஒரு குழுவினை நியமித்தது.
இந்தக் குழுவின் நியமனத்தை எதிர்த்து இலங்கை அமைச்சர் உண்ணாவிரதம் இருந்தார். கொழும்பில் உள்ள அய்.நா. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள அய்.நா. தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டதோடு, அங்குள்ள அலுவலகத்தையும் மூடும் நடவடிக்கையை அய்.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எடுத்தார்.
ஆனால், இதுபற்றி இவ்வார துக்ளக் (21.7.2010) ஏட்டில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தைப் படிப்போருக்கு சீ... இப்படியும் சில மனிதர்களா? மனிதநேயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர்கள் இன்னும் இருக்கிறார்களே! என்றுதான் எண்ணத் தோன்றும்.
இலங்கையில் நடந்ததைவிட சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லையா? பெரிய நாடுகள் என்றால் ஒதுங்கிக் கொள்வது; இலங்கை போன்ற சிறிய நாடுகள் என்றால் அதிகாரத்தைக் காட்டுவது என்றால் அய்.நா.வின் நடவடிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்கும்? என்று கேள்வி கேட்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.
இலங்கை அரசு மனித உரிமையை மீறியிருக்கிறது என்பதை சோவாலேயே மறுக்க முடியவில்லை. இவருக்கு உண்மையிலேயே மனித உரிமைகள்மீது அக்கறை இருந்திருக்குமேயானால், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறப்பட்டபோது அதனைக் கண்டித்ததுண்டா? விசாரணை நடத்துமாறு அய்.நா.வை வலியுறுத்தித் தலையங்கம்தான் தீட்டியதுண்டா?
பொதுவாகப் பார்ப்பனர்கள் தங்கள் இனத்தைத் தவிர வேறு எங்கு அநீதி நடந்தாலும் அதனை வரவேற்கவே செய்யும் பாசிச மனப்பான்மையைக் கொண்டவர்கள்தானே!
இலங்கையைவிட சீனா போன்ற நாடுகளில் மனித உரிமைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்று தலையங்கத்தின் முற்பகுதியில் குறிப்பிட்ட திருவாளர் சோ தலையங்கத்தின் பிற்பகுதியில் ஈழத் தமிழர்களை சிங்கள அரசு படுகொலை செய்ததற்கான நியாயங்களைத் திணிக்கிறார்.
விடுதலைப்புலிகள் பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தியதால் வேறு வழியின்றி இலங்கை இராணுவம் அவர்களைப் படுகொலை செய்ய நேர்ந்ததாகக் கூறுகிறார்.
இவர் கூற்றில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இலங்கை இராணுவமே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி, அங்கே வந்துவிடவேண்டும் என்று அறிவித்த நிலையில், அங்கு வந்த மக்களையும் ஒட்டுமொத்தமாகக் கொன்று தீர்த்தார்களே அதற்கு என்ன நியாயத்தை வைத்துள்ளார்?
முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வசதிகளையே செய்து கொடுக்காமல் அவதியுறச் செய்ததே இலங்கை அரசு அதற்கு என்ன காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லப் போகிறார்?
இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே நேரில் பார்த்து முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்ணீர் வடித்ததற்கு எந்த கெட்ட நோக்கத்தினை துக்ளக் வட்டாரம் திணிக்கத் திட்டமிட்டுள்ளது?
தமிழின இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கோரக் காட்சிகளை லண்டன் தொலைக்காட்சி ஒளிபரப்பியதே பார்ப்பனக் கூட்டத்திற்குப் பால் பாயாசம் அருந்தியதுபோல் இருந்ததோ! இதற்குமேலும் பார்ப்பனர்கள்பற்றி தமிழர்கள் தெரிந்துகொள்ளா-விட்டால், அது பரிதாபப்பட வேண்டிய துக்க நிலையேயாகும்.
------------------- "விடுதலை” தலையங்கம் 16-7-2010
2 comments:
அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்களுக்கு சாதகமா கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யாதது மத்திய, மாநில அரசுகளே. பார்ப்பானை குற்ற சொல்வதில் என்ன இருக்கு. அவனை பத்தி தான் தெரியுமே. இங்க அகதி மூகாம்ல தடியடி நடந்தது தெரியாதா. அங்க முள்வேலி இங்க திறந்த வெளி சிறைச்சாலை. தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள சிறையில் வைச்சது பார்ப்பானா... ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க.
//Blogger நெருப்பு said...
அய்யா. நம் ஆட்சியாளர்களால் ஈழப்பிரச்சனையை தமிழர்களுக்கு சாதகமா கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யாதது மத்திய, மாநில அரசுகளே. பார்ப்பானை குற்ற சொல்வதில் என்ன இருக்கு. அவனை பத்தி தான் தெரியுமே. இங்க அகதி மூகாம்ல தடியடி நடந்தது தெரியாதா. அங்க முள்வேலி இங்க திறந்த வெளி சிறைச்சாலை. தமிழனுக்காக குரல் கொடுத்தவர்கள சிறையில் வைச்சது பார்ப்பானா... ஈழத்தமிழர்களுக்காக உண்மைல குரல் கொடுங்க. குரல் கொடுக்கிற மாதிரி நடிக்காதிங்க.
July 16, 2010 10:09 PM//
அதே மாதிரி இங்கவுள்ள மக்கள் படும் அவதிக்காக, துயரத்திற்காகவும் குரல் கொடுக்க ஆரம்பியுங்க...இல்ல குரல் கொடுக்கும் இங்குள்ளவரை தடுக்காதிங்க....இங்க இருக்கறவங்க எல்லாம்...நமக்கு சம்பந்தம் இல்லாதவங்க என்று நீங்க நினைக்கும் பொழுது அங்க இருக்கறவங்க நமக்கு சம்பந்தமில்லாதவங்க என்று இங்குள்ள மக்கள் நினைப்பதில் எந்த தவறும் இல்லை...அப்படித்தான் நினைக்கவேண்டும்.
முதல்ல அங்குள்ள மொத்த மக்களையும் ஒன்று திரட்டவாவது முயற்சி செய்யுங்க...அது எப்படி என்று தெரியலை என்றால் எகிப்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க....சும்மா எல்லோரையும் சாமான்யனையும், இங்குள்ளவனையும் இயக்க கண்ணாடி போட்டு பார்க்க சொல்லாதிங்க..எல்லா இயக்கங்களும் என்ன பண்ணுச்சுண்ணும் தெரியும்...என்ன குறைபாடுண்ணும் தெரியும்..ஆரம்பத்திலேயிருந்து எப்படி வந்தது என்றும் தெரியும்....அதுதான் இணையத்திலேயே ஆதாரப்பூர்வமாக இருக்குதே....
எங்க வயித்துவலிக்கு நீங்க மருந்து சாப்பிடமுடியாது..உங்க வயித்துவலிக்கு நாங்க மருந்து சாப்பிடமுடியாது. இது கூட ஆரிய கொள்கை தான் நான் உன்னைபத்தி கவலைப்படவே மாட்டேன், என்ன ஆனாலும், நீ என்னை பத்தி மட்டுமே கவலைப்பட்டுகொண்டிருக்கணும் என்று சொல்வது...
இங்குள்ளவர்கள் மக்கள் தொகைதான் அதிகம்...வாழவதற்காக வறுமையோடு போராடுபவர்களும் அதிகம். இங்குள்ள விவசாயிகள் நிலை பத்தி தெரிஞ்சுக்க...எத்தனை சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கும் கீழே இருக்காங்கறதை பத்தி தெரிஞ்சிக்க...நீ அங்க இருக்கறவங்களைப் பத்தியே தெரிஞ்சுக்கலை...தெரிஞ்சு போராடியிருந்தா எகிப்தல நடந்த புரட்சியில்ல நடந்திருக்கும்...அங்க எத்தனை சதவீத ஆதரவு சொல்லேன் பார்ப்போம்...
நீ முதல்ல இத தெரிஞ்சுக்க...சும்மா ஈழம்.....ஈழம் இது என்னவோ பேஷனாப் போயிடுச்சி...இதப்பத்தி பேசாதே...அதைப்பத்தி பேசாதே..எல்லோருக்கும் நீ கட்டளை இடறே...
ஈழத்திற்காக போராடிய போரட்டக்குழுக்களிடையே ஜாதி வெறி இருந்தது அதாவது தெரியுமா.? (இங்கிருக்கறவங்களுக்கு தெரியாது என்று நினைச்சிருப்ப...அதுவும் ஒருவகையில் சரிதான்...)..அப்புறம் என்ன ஈழக் குரல்...
அதை பத்தியெல்லாம் போய் இந்த இணையதளத்திலே போய்ப்பார்....
தமிழ் தேசிய ஆவணச் சுவடிகள்...
http://www.tamilarangam.net/index.php?view=category&id=328%3A2011-01-25-14-17-01&option=com_content&Itemid=85
Post a Comment