Search This Blog

24.7.10

பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 2


நான் பெரிய செல்வவான்,நல்ல செல்வாக்குள்ள வியாபாரி. எங்கள் ஈரோட்டைப் பொறுத்தவரை எல்லா கவுரப் பதவிகளையும் வைத்துக் கொண்டிருந்தவன். அதையெல்லாம் விட்டு எதற்காக இந்த வேலைக்கு வந்தேன் என்றால் நம் மக்கள் உழைப்பாளி மக்கள் -சூத்திரத் தன்மையோடு இழிநிலையில் இருக்கிறார்களே, இதை மாற்றி நம்மாலானதைச் செய்யலாம் என்று கருதித்தான் இதில் இறங்கினேன்.

என் சொத்துக்கள் பூராவையும் இயக்கத்திற்கே எழுதி வைத்து விட்டேன். இப்போது எனக்கு ஒரு காசு சொத்து கிடையாது.என்னை நம்பியே என் மீது உள்ள பற்றாலோ அன்பாலோ கழகத் தோழர்கள் என்னிடம் நிதி கொடுக்கின்றார்கள். அவற்றையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக செர்த்து வைக்கின்றேன். அப்படிச் சேர்த்த பணத்தை மக்களுக்குப் பயன்படும் படி ஏதாவது செய்ய வேண்டுமே என்று கருதி கல்லூரிக்கும் மருத்துவ மனைக்கும் கொடுத்தேன்.

----------------தந்தைபெரியார் - “விடுதலை” 15-8-1968

1 comments:

Senthilkumar said...

பெரியார் திராவிடர் கழகம் அனுப்பிய Notice க்கு பதில் இந்த பதிவா?