பூணூல் கொடுக்கு!
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் 16 அம்ச திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமான ஒன்று தமிழில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்பதாகும்.
சொன்னதைச் செய்வார் கலைஞர் என்பதற்கு அடையாளமாக சென்னை சாந்தோம் மாவட்ட தொழில்நுட்ப வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களில், தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பொ.பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணிக்கான ஆணையினை முதலமைச்சர் கலைஞர் வழங்கியுள்ளார்.
இது ஒரு தொடக்கம்தான், இனி மளமளவென்று இந்தத் திசையில் தமிழ்நாடு அரசு தன் கடமையினைச் செய்யும் என்பதில் அய்யமில்லை.
இந்த நேரத்தில் நம் இன எதிரிகளின் மனப்பான்மை எந்தக் கிறக்கத்தில் இருக்கிறது என்பதை முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டுமே!
23.6.2010 நாளிட்ட துக்ளக் இதழ் பக்கம் 23 இல் துர்வாசர் என்பவர் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்-ளார்.
தமிழை நீஷப் பாஷை என்று நாக்கை நீட்டிப் பேசும் கூட்டமாயிற்றே! சொறி பிடித்த கையும் இரும்பு பிடித்த கையும் சும்மா இருக்காதே! இதோ எழுதுகிறார்:
தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக் குக்கூட லாயக்காக மாட் டோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான், மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வி யில் விழுந்து விழுந்து படிக்கிறார்கள் என்று தன் பூணூல் கொடுக்கால் எழுதியுள்ளார்.
இன்னொரு இடத்திலோ தமிழ் சோறு போடாது என்று தமது சோற்றுத் துருத்தித் தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழ் மீது எவ்வளவு ஆத்திரமும், பகை உணர்ச்சியும் இருந்தால் இத்தகைய வார்த்தைகளைக் கையாண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வளவுக்கும் இவர்கள் தமிழால் பிழைப்பு நடத்துபவர்கள்தாம்.
இப்பொழுது தமிழில் படித்தவருக்கு முதல் ஆணையைப் பிறப்பித்துவிட்டாரே, முதல்வர் கலைஞர். எந்தச் சுவரில் போய் முட்டிக்கொள்வர் துர்வாசர்கள்?
இரண்டாம் உலகப் போர் நடந்தபோது இட்லர் வெற்றி பெறுவார் என்ற நிலையில் ஜெர்மன் மொழி படித்ததும், அதன் பின் ஜப்பான் வெற்றி பெறும் என்று பேச்சு அடிபட்டதும் ஜப்பான் மொழியைப் படித்ததும் இந்தப் பார்ப்பனர் கூட்டம்தானே! பார்ப்பனரான கல்கியே தமது அலை ஓசை நாவலில் இதனைக் குறிப்பிட்டுள்ளாரே! தங்களுக்கு என்று நாடும், மொழியும் இல்லாத லம்பாடிப் பார்ப்பனர்கள் சீர்கொண்ட செந்தமிழை நாக்கழுகப் பேசாதிருப்பரோ!
தமக்கு இல்லாதது தமிழர்களுக்கும் கிடைக்கக் கூடாது என்ற தாராள மனப்பான்மை இந்தத் தர்ப்பைப்புல் கூட்டத்துக்கு!
---------------------- மயிலாடன் அவர்கள் 10-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
1 comments:
elae poiththamizha, unnal vazhvathu kadinam.. thayillatha thamizhanum, naadillatha parppanum onnu.. arivil Kol..
Post a Comment