M.A.,L.T. உபாத்தியாரின் கடவுள் பாடம்
உபாத்தியாயர்:- பெட்டியை தச்சன் செய்தான், வீட்டை கொத்தன் கட்டினான், சாப்பாட்டை சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார். தெரியுமா?
மாணாக்கன்: - தெரிந்தது சார். ஆனால், ஒரு சந்தேகம் சார்.
உபாத்தியாயர்: - என்ன சொல்?
மாணாக்கன்:- அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?
உபாத்தியாயர்:- முட்டாள்! இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது? அவர் தானாகவே உண்டானார். இனிமேல் இப்படி யெல்லாம் கேட்காதே.
மாணாக்கன்:- ஏன் சார்? கேட்டால் என்ன சார்?
உபாத்தியாயர்:- அது! நிரம்பவும் பாவம்.
மாணாக்கன்:- பாவம் என்றால் என்ன சார்?
உபாத்தியாயர்:- சீ! வாயை மூடு. நீ அயோக்கியன், “குடிஅரசு” படிக்கிறாயோ? ஏறு பெஞ்சி மேல்.
------------------ தந்தைபெரியார் - “குடி அரசு” - 13.09.1931
2 comments:
பேரன்பு தோழர் !
உபாத்தியார் மட்டுமல்ல ... மதவாதிகளும் மனுவாதிகளும் கேள்வி கேட்பவர்களை தங்கள் அதிகாரத்தின் மூலம் பெஞ்சின் மீது ஏறச் சொல்லியே வாயை அடைத்து விடுகிறார்கள்...காலம் காலமாக தொடர்ந்து வருவது இந்த கொடுமை தான்!
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment