Search This Blog

23.7.10

பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம்



எங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்; பணம் தருகின்றார்கள் என்றால், மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார் பணம் வசூல் செய்கின்றார் என்றால், நாட்டில் எவ்வளவு முட்டாள் பசங்கள் இருக்கின்றார்கள் என்று கணக்குப் பார்க்கவே வசூலிக்கின்றார். ஆங்காங்கு உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் (அதிகாரிகளும்) பணம் வசூல் செய்கின்றனர்.

நம் பணக்கார மடையர்கள் எல்லாரும் "பாத காணிக்கை" என்றும், பிச்சை என்றும் அள்ளிக் கொடுத்துவிட்டு, அந்தப் பார்ப்பான் கால் கழுவிய தண்ணீரை மான, வெட்கம் இல்லாமல் வாங்கிக் குடிக்கின்றார்கள். இதன் மூலம் நாட்டில் எவ்வளவு மடையர்கள், முட்டாள்கள் இருக்கின்றார்கள் நம்முடைய பேச்சைக் கேட்க, என்று கணக்குப் பார்க்கின்றான்! அதன் மூலம் "நம் இனத்திற்குச் சீக்கிரத்தில் அழிவு என்பது இல்லை; நம்மை ஆதரிக்க இவ்வளவு மடையர்கள் இருக்கின்றார்கள்" என்று எண்ணித் திருப்தி அடைகின்றான்!

நான் பணம் வசூல் செய்கிறேன் என்றால், என்னுடைய சொந்தத்திற்கா? என்னுடைய பிள்ளை குட்டிகளுக்கா? நான் தான் எனக்கு உள்ள
சொத்தையும்கூட கழகத்துக்கு ஒப்பித்துப் போட்டுவிட்டு இப்படி ஊர் ஊராகச் சுற்றுகிறேனே!

பின் எதற்கு? இப்படி வசூல் செய்வதன் மூலம் நாட்டில் எத்தனை மக்களுக்குப் புத்தி வந்து உள்ளது என்று சென்சஸ் (மக்கள் தொகைக் கணக்கு) எடுக்கவேயாகும்.

---------------- - 16-01-1960- நாகப்பட்டினத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 25-01-1960

2 comments:

Unknown said...

மிகவும் அருமையா சொல்லி இருக்கிறார் அய்யா.வெல்வோம் துரோகத்தை ஆசிரியரின் தலைமையில் ...!!!

பரணீதரன் said...

/* நான் தான் எனக்கு உள்ள
சொத்தையும்கூட கழகத்துக்கு ஒப்பித்துப் போட்டுவிட்டு இப்படி ஊர் ஊராகச் சுற்றுகிறேனே! */

இதனை விட என்ன புண்ணாக்கு வேண்டும்.....தூ சாமி ன் துரோகம் முறியும்...நாள் வெகு தூரம் இல்லை. வெல்வோம் வெற்றி நடை போடுவோம் ......ஆசிரியரின் கையை பலப்படுத்துவோம்.