Search This Blog

8.7.10

கால் பந்தாட்டத்தில் கடவுளின் கை!


கடவுளின் கை!

மூட நம்பிக்கை எல்லாத் துறைகளிலுமே உண்டு என்கிறபோது விளையாட்டுப் போட்டிகளிலும் இல்லாமற் போய்விடுமா?

உலகக் கால்பந்து போட்டி என்னும் உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்லர் பொதுமக்களும் மெய்ம்மறந்து கிடக்கின்றனர்.

கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் எங்கெங்கெல்லாம் ஆட்சிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்களோ, அந்த நாடுகளில் மட்டுமே இடம்பெறக் கூடிய சோம்பேறி விளையாட்டாகும்.

ஒருவர் பந்து வீசுவார்; இன்னொருவர் அடிப்பார். மற்றொருவர் பந்தை விரட்டிக் கொண்டு ஓடுவார். எல்லைக்கோட்டருகில் நிற்பவர்களோ ஆட்டோகிராபில் கையொப்பம் போட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

கால் பந்தாட்டமோ, ஹாக்கியோ அத்தகையதல்ல ஒவ்வொரு நொடியிலும் இரு அணிகளைச் சேர்ந்த 22 பேர்களும் சுறுசுறுப்புடன் அதிவேகத்துடன், பரபரப்பாகத் தயார் நிலையில் இருந்து தீரவேண்டியவர்கள்.

ஆனால், மூட நம்பிக்கை மற்ற போட்டிகளில் முட்டி மோதுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் உண்டு. கானா அணிக்கும், உருகுவே அணிக்கும் நடைபெற்ற போட்டியின்போது கானா அணியைச் சேர்ந்த ஒருவர் அடித்த பந்து கோல் நோக்கிப் பறந்தது. அந்த நேரத்தில் உருகுவே நாட்டு அணியின் லூயிஸ் சாரஸ் என்பவர் அந்தப் பந்தைக் கோலுக்குள் போகாமல் கையால் தடுத்துவிட்டார் (கோல் கீப்பரைத் தவிர மற்றவர்கள் கையில் தடுத்தால் அது குற்றமாகும்). சாரஸ் செய்த குற்றத்துக்காக நடுவரால் சாரஸ் வெளியேற்றப்-பட்டார் என்றாலும், இதுகுறித்து சாரஸ் என்ன கூறினார் என்பதுதான் முக்கியமானதாகும்.

அந்தப் பந்தைக் கையால் நான் தடுத்தது குற்றம்தான். அப்படி செய்திராவிட்டால், அந்தப் பந்து எங்கள் கோலுக்குள் போயிருக்கும். நாங்கள் தோல்வி அடைந்திருப்போம் எனவே, அந்தப் பந்தை என் கைதான் தடுத்தது என்றாலும், அது என் கையல்ல கடவுளின் கை! அதுதான் தடுத்தது என்று சமாதானம் கூறினார்.

பொதுவாகத் தவறு செய்பவர்கள் அதற்கான பொறுப்பைத் தாங்கள் ஏற்காமல் கடவுளின்மீது பழி போடுவது பொறுப்பற்ற வாடிக்கைதான் அந்தக் குற்றத்தைத்தான் உருகுவே ஆட்டக்காரரான சாரசும் செய்துள்ளார்.

ஒரு கேள்வி கையால் பந்தைத் தடுத்தது குற்றம் என்பது அவருக்கே தெரியும். தெரிந்திருந்தும், பந்தை தடுத்தது கடவுள் கை என்றால், தவறுக்குத் துணை போகக்கூடியவர் கடவுள் என்று விளங்கவில்லையா? விளையாட்டாக இருந்தாலும் அதில் ஒழுக்கம் தேவையில்லையா?

சரி, அவர் கைதான் கடவுள் கையாயிற்றே அவர் ஏன் வெளியேற்றப்பட்டார் அவர் அணி அடுத்த போட்டியில் ஏன் தோற்றது? கடவுள் சக்தி அவ்வளவுதானா? அட, பரிதாபத்திற்குரிய கடவுளே, பக்தர்களே உங்களை நினைத்தால் கழிவிரக்கம்தான் ஏற்படுகிறது.

----------------- மயிலாடன் அவர்கள் 8-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

2 comments:

தர்ஷன் said...

86 இல் மரடோனவும் இவ்வாறு ஒரு கோல் அடித்து விட்டு இப்படித்தான் கடவுளை துணைக்கழைத்துக் கொண்டார்

மணிகண்டன் said...

பலநாட்களுக்கு பிறகு உடனடியாக மனம்விட்டு சிரிப்பை வரவழித்த கட்டுரை. இதையெல்லாம் கூட பத்திரிகையில் பிரசுரிப்பார்களா ?