' யாகம்'
யாகம் என்ற கலாச்சாரம் பார்ப்பனர்களுக்குச் சொந்தமானது. திராவிடர்களுக்கு எதிரானது. அதனால்தான் திராவிட வீரன் இரணியன், எங்கெங்கெல்லாம் யாகங்களை ஆரியர்கள் நடத்துகிறார்களோ அங்கங்கெல்லாம் சென்று அவற்றை அழிக்குமாறு தமது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி யாகங்கள் நடத்தப்படும் கோயில்கள் உள்பட தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
(பாகவதம் 7 ஆவது ஸ்கந்தம் 2 ஆவது அத்தியாயம்)
கவுதம புத்தரும் யாகத்தை எதிர்த்தார் யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலியிடுவதைக் கண்டித்தார்.
யாகத்தில் உயிர்களைக் கொன்று சொர்க்கத்திற்கு அனுப்புவது உண்மை யென்றால், உங்கள் தந்தைமார்களை யாகத் தீயில் போட்டு அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புவதுதானே? என்கிற அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.
ஆனாலும் பார்ப்பனர்கள் இடையிடையே அந்த யாகக் கலாச்சாரத்தை விடுவதாக இல்லை.
உலக சேமத்துக்காக யாகம் என்று நடத்துவார்கள்; மழை வேண்டி யாகம் என்று நடத்துவார்கள். இவர்கள் யாகம் நடத்தி எதுவும் நல்லது நடந்ததில்லை என்பது வெளிப்படை.
கருநாடக மாநிலத்தில் ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரங்கத் தொழிலில் கொள்ளை அடிக்கிறார்கள் என்கிற குற்றச்சாற்று நாலாதிசைகளிலும் இடியாக இறங்கிக் கொண்டு இருக்கிறது.
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள குற்றாலத்தில் யாகம் நடத்தி இருக்கிறார்கள்.
அந்த யாகத்தில் நேரிடையாகக் கலந்துகொள்ள ஜனார்த்தன ரெட்டியின் மனைவி வந்திருக்கிறார். ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் திரும்பிப் போயிருக்கிறார்.
இதுபோல்தான் ஆந்திராவில் சத்யம் கம்ப்யூட்டர் மோசடியில் சிக்கிக் கொண்ட ஆசாமி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பெரிய யாகம் நடத்தினார். விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று பெரிய யாகம் ஒன்றை சென்னை அண்ணா நகரில் நடத்தினார்கள். என்ன நடந்தது என்று எல்லோருக்குமே தெரியும்.
மோசடிக் குற்றங்களிலிருந்து தப்பிக்க, யாகம் நடத்துவதிலிருந்தே யாகத்தின் யோக்கியதை விளங்குகிறதா இல்லையா?
------------மயிலாடன் அவர்கள் 20-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
2 comments:
கலர், கலராகத் துண்டு அணிந்தால் , நினைத்தது நடக்கும்!
//Blogger ரம்மி said...
கலர், கலராகத் துண்டு அணிந்தால் , நினைத்தது நடக்கும்!
July 21, 2010 6:55 AM//
அப்ப கலர்கலரா பேன்ட் சட்டை போடுவது கூட இதற்குத்தானா.?..நாம போட்டா பேஷன்...நமக்கு பிடிக்காதவ (திராவிடன்) போட்டா எமோஷன்...இதுக்கு பேர் தான் ஆரியம்.
நல்ல வேளை வேட்டி சட்டைக்கு எதுவும் சொல்லமா விட்டாங்களே...
நாம வரிஏய்ப்பு செய்தா புத்திசாலித்தனம்...நமக்கு பிடிக்காதவ செய்தா ஊழல்...வருவாய் இழப்பு...
பார்ப்பனன் செய்தால் பூசி மெழுகல்,,,பாரப்பனரல்லாதவர் செய்தா மிகப்பெரிய பேரழிவு...ஹி ஹி இந்த பாரபட்சமான நடுநிலைமைத் தன்மையை பற்றித்தான் நாடே காரி துப்புதே...
Post a Comment