நாவலர் பாரதியார்
நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1876). இவர் சைவ மெய்யன்பர் என்றாலும், தமிழ், தமிழர் இனவுணர்வில் யாருக்கும் சளைத்தவர் அல்லர்.
1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணை வராக இருந்தவர்.
இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? ஓர் ஈரோட்டு ராமசாமி நாயக்கரும், ஒரு புலவரும் தானே? என்று அன்றைய சென்னை மாநில பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) சட்டப் பேரவை யில் கேலி செய்தபோது ஆமாம் இந்தியை எதிர்ப்பவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால், இந்தியை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்! என்று ஆச்சாரியாரின் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள்.
ஆச்சாரியார் சொன்ன அந்தப் புலவர் பெருமகன் வேறு யாருமல்லர் நாவலர் சோமசுந்தர பாரதியார்தான். அந்த அளவுக்கு நாவலர் பாரதியார் இந்தி எதிர்ப்புக் களத்தில் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.
கம்ப இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்ற விவாதப் போர் 1948 களில் நடந்தது. சென்னையில் அறிஞர் அண்ணாவோடு விவாதம் புரிந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை. சேலத்தில் அண்ணாவோடு மோதியவரோ இதே நாவலர் பாரதியார்தான் (14.3.1948).
அந்த விவாதத்தில்கூட தமது பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பதிவு செய்யத் தவறவில்லை நாவலர் பாரதியார் அவர்கள்.
என்னுடைய 14 வயதிலேயே எனக்குக் கல்யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல்லுகிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஓர் கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன்றதல்ல. என் னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண்மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது - கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள் என்று நாவலர் பாரதியார் கூறிய கருத்தும், தகவலும் கருத்தூன்றத் தக்கவையே!
நாவலர் பாரதியார் ஒரு முறை நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அது பார்ப்பனரால் நடத்தப்பட்டது. அய்யர் கூறிக் கொண்டிருந்த மந்திரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அவர் (சமஸ்கிருதமும், பாரதியாருக்குத் தெரியும்) திடீரென எழுந்து, ஓ, அய்யரே மந்திரத்தை நிறுத்து! என்றார்.
கூடியிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! அப்பொழுது நாவலர் சோமசுந்தர பாரதியார் சொன்னார்: இந்தப் புரோகிதன் கருமாதி மந்திரத்தை கல்யாண வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாரே பார்க்கலாம்.
கூடியிருந்தோர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நாவலர் பக்தர்தான் ஆனா லும், தமிழின உணர்வின் சின்னமாவார்!
--------------- மயிலாடன் அவர்கள் 27-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
3 comments:
Tamiloviya,
Do you think that any one will be benefited by reading your blog????
What is the use of discussing on useless things like people beliefs etc ??? What is the use of finding fault on Hindu epics and its characters.Instead you could publish article on common people real world problems etc.
D.K. is the useless party having no guts to contest alone. It always seeks alliance either from DMK or ADMK. I feel DK has no real motto other than making money from politcs.
If DK is really a non religous party, It should oppose all religions and its beliefs. But DK is always against Hindus only. Now started a little fight against christians too.
Does DK has real guts to oppose the religious beliefs against ISLAM?? There are lot of questionable things in ISLAM too like, Sunnath, Bigamy, and divore by saying talak, Hitting themselves on religous occasions etc.. Does DK has any guts to publish articles against that????
Stop publishing articles on useless things and try to publish articles on common man problems like Increase in cost of living etc.
DK need not criticise Islam as there are no supertitions..Only in Hindu religion, there are chets like Premananda and foolish supertitions. I agree that DK must attach supertitions instead of individual communities..(Like Brahmins)..
//Blogger Ivan Yaar said...
Tamiloviya,
Do you think that any one will be benefited by reading your blog????//
யாருப்பா இது...? பேரையே இப்படி போட்டு (இவன் யார்) புத்திசாலித்தனமா கேள்வி கேக்குது...
இந்த கேள்வி உனக்கே முட்டாள் தனமாக தெரியவில்லை...பெனிபிட் இல்லாமலா...பின்னூட்டம் இட்டிருக்கே...
படிச்சிட்டே இல்லை அப்புறம் என்ன? அது தான் நோக்கம்...(பெரியாரோட கூட்டத்தில் பேச்சை கேட்பதற்கு ஆன்மீகவாதிகளின் கூட்டம் தான் அதிகம் வரும்...அதுவும் தலையில முக்காடு போட்டு மறைத்து கொண்டு கூட்டத்தின் ஓரத்தில் நின்று பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்கள்..காலையிலே அவரை திட்டிய பெரும்பாலானவர்கள் தான் அந்த கூட்டத்தில் இருப்பார்கள்....அது தான் சக்சஸ்...
அய்யோ பார்ப்பு பார்ப்பு....முட்டாளுக்கு மூன்று இடத்திலே அசிங்கம் என்கிற மாதிரி...இது மாதிரி எல்லாம் வேற பின்னூட்டம் போடறாங்கப்பா...
Post a Comment