Search This Blog

25.2.10

தெய்வத்தின் குரலும் பெரியார் தந்த புத்தியும்!







"கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள்; மாநாட்டு மலரிலும் புகழ்வார்கள்;

தன்னைப் பிறர் பாராட்டுவதை - புகழ்வதைக் கேட்பதற்காகத்தான் மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி - இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது?"

என்று துக்ளக் ஆசிரியர் சோ - அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு - அவரது பத்திரிகையின் 41வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும்

‘சோ’ - தைரியசாலி

விலைக்கு வாங்க முடியாதவர்

என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!

இப்படிப்பட்ட புகழுரைகளை - பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே

ஆண்டுதோறும்

விழா எடுத்து

அதிலே

பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்!

அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்?

- திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,

- புராண, இதிகாசங்களிலுள்ள

மூடத்தனங்களைப் பரப்புவது

- ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் -

ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது

போன்ற சமூக விரோத - மக்கள் விரோத - பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது

என்பதைத் தவிர

வேறு என்ன சாதித்துவிட்டார்?

செம்மொழி மாநாட்டை அவர் கேலி செய்வது ஒன்றும் புதியதில்லை. சாதி வெறியரான அவர் - தனது சுயசாதி யினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் - தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அவர் போற்றி எழுதும் - திருநாவுக்கரசரோ, ஞானசம்பந்தரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனை எந்த மொழியில் போற்றிப் பாடினார்கள்? தமிழில்தானே? திருஞானசம்பந்தருக்கு பார்வதியே வந்து ஞானப்பால் ஊட்டினாரே; அந்த சிசு, பார்வதி ஊட்டிய பாலைக் குடித்து விட்டுப் பாடிய பாடல் எந்த மொழியில்? தமிழில்தானே? மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் தமிழ்தானே? சேக்கிழார் சுவாமிகள் - பெரியபுராணம் பாடினாரே - அதற்கு - ஈசனே தானே முதலடி யைப் பாடினார் - அதை உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் என்றுதானே - தமிழில் தானே அடியெடுத்துக் கொடுத்தான். திருஞானசம்பந்தர் - மதுரை கூன் பாண்டியனின் தீராத வயிற்று வலியையும் (சூலை நோய்) கூன் விழுந்த முதுகையும் போக்கினாரே - அதற்கு அவர் பாடிய "மந்திரமாவதும் நீறு; வானவர்மேலதும் நீறு" என்ற பதிகம் தமிழ்ப் பதிகம்தானே? திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) நூற்றுக் கணக்கான வருடங்களாக - திறக்க முடியாதபடி - அடைத்துக் கிடந்த ஆலயக் கதவை - தமிழில் பதிகம் பாடித்தானே அப்ப ரடிகள் - ஞானசம்பந் தருடன் இணைந்து திறந்து வைத்தார்! திருவெண்ணைநல்லூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தன்று இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபோது இறைவனின் விருப்பப்படி பாடிய பாடல் - "பித்தா பிறைசூடி" தமிழ்ப் பாடல்தானே? இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ -

தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம்- சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார். ஆனால் - மலேசியா - கோலாலம்பூரில் ஆரம்பித்து, சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலா லம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 8 முறை மாநாடு நடத்தப்பட்டிருக் கிறதே உலகத் தமிழ் மாநாடு? உலக முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகள் படித்தார்களே- அதனால் எல்லாம் தமிழ் வளரவில்லையா?

‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி? தமிழ்நாட்டு அரசியலை - வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரி கை நடத்தும் சோ - ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ - கலைஞர் - செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ - பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது? சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் - இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்? பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் - அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

-------------------- நன்றி:- ”முரசொலி”

7 comments:

Anonymous said...

arumai.
truthful post keep going.

bandhu said...

நீங்கள் சொல்வது சரி. வாரம் ஒரு பாராட்டு விழா எடுத்துக் கொள்பவரை விட வருடம் ஒரு பாராட்டு விழா எடுத்துக் கொள்பவர் எப்படி உயர்ந்தவராக இருக்க முடியும்?

vijay 50 movies said...

www.superstarvijay.blogspot.com இவ் இணையத்தள முகவரிக்கு உள் நுழைந்து விஜயின் 49 படங்களில் சிறந்த படங்களுக்கு வாக்களியுங்கள்
visit now www.superstarvijay.blogspot.com for vote vijay's best 50 movies

Unknown said...

உங்களை கருத்தைப் போலவே 100 சதவீதம் பார்ப்பன "சோ" இருப்பதாகவே இருக்கட்டும். அதற்காக திரு.கருணாநிதி நடத்தும் இந்த உலகச் செம்மொழி மாநாடு எதை சொல்லப் போகிறது. இதுவரை வளர்ந்த தமிழை எந்த உயரத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறது. அடிமையாக முள்வேலியில் வாழும் தமிழுறவுகளுக்கு விடியலை வங்கித் தரப் போகிறதா???

ராமகிருஷ்ணன் த said...

"கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள்; மாநாட்டு மலரிலும் புகழ்வார்கள்;

தன்னைப் பிறர் பாராட்டுவதை - புகழ்வதைக் கேட்பதற்காகத்தான் மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை.
Above is correct

Anonymous said...

varippannathil nadathum vizhavai kandikka yarukkum urimai undu.

நம்பி said...

PRAMA said...

varippannathil nadathum vizhavai kandikka yarukkum urimai undu.
February 28, 2010 9:50 AM

வரிப்பணத்தில் நடத்தும் விழாவை மக்கள் ஆதரிக்கவும் உரிமை உண்டு. வரிப்பணத்தில் இம்மாதிரி விழாக்களை நடத்துவதற்கு அரசுக்கும் உரிமை உண்டு.