Search This Blog

11.2.10

அம்மிக் குழவியை எடுத்து குத்திக் கொள்ளும் அக்கிரகார சோ



கேள்வி: தி.மு.க. அரசு அறிவித்த இலவசத் திட்டங்களில் தங்களுக்குப் பிடித்த திட்டம் எது?

பதில்: இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்கிற திட்டம் சிறப்பு வாய்ந்தது. என்றும் வாக்குறுதியாகவே இருக்கக் கூடியது. ஒரு வாக்குறுதி என்றால் அது நிலைத்து இருக்கவேண்டும். இந்த இலவசம் அப்படிப்பட்டது. வாழும் வள்ளுவர் மாதிரி, வாழும் வாக்குறுதி! அழிவே கிடையாது (துக்ளக், 17.2.2010).

இதுபோன்ற பார்ப்பனத்தனமான _ வறட்டுத்தனமான பதிலை திருவாளர் சோ ராமசாமி அய்யரைத் தவிர வேறு யாரால்தான் எழுத முடியும்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்று இன்றைக்குக்கூட முதல்வர் கலைஞர் அவர்கள் முரசொலியில் ஒரு பட்டியலை அளித்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

ஏழைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிதி உதவித் திட்டம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்

உழவர் சந்தை திட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

கூட்டுறவுக் கடன்கள் ரத்து

உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம்

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

என்று ஒரு பட்டியலை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அறிவு நாணயம் அடிமட்ட அளவுக்கு இருந்தால்கூட இவற்றையெல்லாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்பர்.

பார்ப்பன அம்மையாரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற அடங்கா ஆசை பிடரியைப் பிடித்துத் தள்ள இப்படி தத்துபித்து என்று எழுத ஆரம்பித்துள்ளார்.

மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் பஞ்சம, சூத்திர மக்களுக்குத்தானே! பெரியார் சமத்துவப்புரம் என்றால் இனிக்குமா இந்த இடிஅமீன் கூட்டத்துக்கு?

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்றால், அக்கிரகாரத்துக்கு அதனால் என்ன நன்மை?

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி ஏழை எளிய மக்களின் தலைவிதியை மாற்றலாமா?

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தலையிட்டுத், தலையிட்டு, அவர்களைத் தலைதூக்கி விட்டால் அவாளுக்குப் பிடிக்குமா?

மக்களின் ஆதரவு அமோகமாக தி.மு.க. ஆட்சியின் பக்கம் நாளும் வளர்ந்தால் அது ஜெயலலிதா அம்மையாருக்கு ஆபத்தாயிற்றே!

அதனால்தான் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறார் இந்த வடிகட்டின பார்ப்பனர்!

இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்ற திட்டம் சிறப்பு வாய்ந்தது; நிரந்தர வாக்குறுதியாக இருக்கும் என்று நக்கல் செய்கிறார்.

இந்தத் திட்டம் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற்றப்படக் கூடியதல்ல; அதேநேரத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது மறுக்க முடியுமா சோவால்?

அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் இந்தத் திட்டத்தைத் தவிர தி.மு.க. கொடுத்த மற்ற திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வேறு வழியின்றி திருவாளர் சோ ஒப்புக்கொண்டுள்ளார் என்பது உண்மை!

வறட்டுத்தனமாக எழுதுபவராலேயே தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மறைக்க முடியவில்லையே!

-------------------"விடுதலை” 11-2-2010

0 comments: