Search This Blog

10.2.10

கிறுக்குப் பிடித்த பார்ப்பான் கிழிக்கும் கோவணத் துணிகூட பீதாம்பரம்தான் போங்க!


சிண்டு பிடி!

மகாசிவராத்திரி எந்த மாதத்தில் கொண்டாடப்படவேண்டும் என்ற சர்ச்சை சாஸ்திரிகள் மத்தியில் குடுமிபிடிச் சண்டையாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் வெவ்வேறு வகையான தேதிகள். மகாசிவராத்திரி தை மாதத்தில் நடத்துவதா? மாசி மாதத்தில் நடத்துவதா? என்ற சர்ச்சை.

இது ஏதோ அகில உலகப் பிரச்சினை; இதனைத் தீர்த்தால்தான் நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கும்? பி.டி. கத்தரிக்காய் சம்பந்தமான சர்ச்சைக்கு முடிவு கட்டப்படும் அப்படித்தானே?

செம்மொழி ஆகிவிட்டதால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா? என்று கேலி செய்த தினமலர்தான் இந்தச் செய்தியையும் இரண்டு இடங்களில் சாங்கோ பாங்கமாக வெளியிட்டுள்ளது.

துக்ளக் ஆண்டு விழாவில் (14.1.2010) தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமாட்டேன். நாளைக்கு திடீ-ரென்று தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினால், ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று நக்கல் அடித்த திருவாளர் சோ ராமசாமி மகாசிவராத்திரி எந்த மாதத்தில், எந்தத் தேதியில் என்று சர்ச்சை வெடித்துள்ளதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

தமிழ் மாதம் என்று சொல்லப்பட்டு வந்த (பிரபவ, விபவ) ஆண்டுகளின் 60 சுற்றுக் குழப்பத்தால் ஏற்பட்ட மாதக் குழப்பம்தானே இந்தச் சர்ச்சைக்குக் காரணம்!

நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த பிள்ளைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்று சொல்வதும், தமிழ் ஆண்டுகள் என்று கூறப்படுவதில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே என்று வினா எழுப்பியதும் அதற்கு நேரிடையாகப் புத்தியைப் பயன்படுத்திப் பதில் சொல்ல முடியாத பார்ப்பனர் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கிறுக்குத்தனமாக உளறினர்.

பார்ப்பனப் பண்பாட்டு அசிங்கத்திலிருந்து தமிழர்கள் கரையேறக்கூடாது என்பதுதான் அவாளின் அந்தராத்மாவின் வெறி.

அதே கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது அவர்கள் வெட்டிய குழியில் இப்பொழுது அவர்களே குப்புற விழுந்து விழி பிதுங்குகிறார்களே இதைப்பற்றி விளக்கம் அளிப்பாரா சோ?

கிறுக்குப் பிடித்த பார்ப்பான் கிழிக்கும் கோவணத் துணிகூட அவாளைப் பொறுத்தவரை பீதாம்பரம்தான் போங்க!

--------------------- மயிலாடன் அவர்கள் 10-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: