கோயிலைக்கண்டவரும் கோபுரம்கண்டவரும்
தேவாதிதேவனைக் காணமுடியவில்லையே; ஏன்?
திருப்பதியில் இனி சாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் 15 மணி நேரம் என்று காத்திருக்கத் தேவையில்லையாம்!
50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய் சீக்கிர தரிசன டிக்கெட் போன்றவற்றை வாங்கினாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறதாம். 15 மணி நேரம் வரையில் நீண்ட கியூ வரிசையில் கால் கடுக்க நிற்கவேண்டியிருக்கிறதாம்.
இப்போது காலதாமதம் இல்லாமல் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வசதியாக நவீன டிக்கெட் முறை தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த நவீனக் கருவியின் பெயர் போட்டோ மெட்ரிக் ரீஎன்ட்ரி! இதனால் பக்தர்கள் விரைவில் தரிசனம் முடித்துத் திரும்பலாம் என்கிறார்கள்!
*********************************
எல்லாம் சரி; இத்தனை வருடங்களாக திருப்பதி சென்று நீண்ட கியூ வரிசையில் நின்றோ, விரைவு டிக்கெட் மூலமோ திருப்பதி வெங்கடா சலபதியை தரிசித்து வரும் - வருகிற, கோடானு கோடி பக்தர்களில் யாராவது ஒருவருக்காவது ஏழுமலையான் நேரில் வந்து காட்சி தந்தது உண்டா?
திருப்பதியில் பக்தர்களுக்கு தங்கமுலாம் பூசிய கதவுகள், தூண்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரிகின்றன! வாய்க்கு ருசியாக திருப்பதி லட்டு கிடைக்கிறது. ஆனால்
இதுவரை ஒரே ஒரு பக்தருக்குக் கூட ஏழுமலையானின் நேரடி தரிசனம் கிடைத்ததாகத் தகவல் இல்லையே? ஒரு பக்தரிடமாவது நேரில் வந்து பகவான், பக்தா, உன் பக்திக்கு மெச்சினேன் என்று திருவாய் மலர்ந்தருளவில்லையே; ஏன்?
--------------------நன்றி:- “முரசொலி” 2-2-2010
0 comments:
Post a Comment