வாயால் சிரிக்க முடியவில்லையே!
கேள்வி: இந்தியாவிலேயே அதிகம் எழுதியது கருணாநிதிதான் என்கிறாரே, அமைச்சர் துரைமுருகன் உண்மையா?
பதில்: கலைஞர் நிறைய எழுதியிருக்கிறார். அதுபற்றி சந்தேகத்திற்கு இடமில்லை. தினமும் முரசொலியில் உடன்பிறப்புக்குக் கடிதங்கள்; கேள்வி கேட்டு பதில்கள்; அறிக்கைகள், கவிதைகள், திரைக்கதை வசனங்கள், நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பிய உரை போன்ற நூல்கள்.... என்று ஒரு எழுத்து வெள்ளமே அவர் பேனாவிலிருந்து பாய்ந்து சென்றிருக்கிறது. ஆனால், முன்னாள் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன், கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. போன்ற சிலர் தங்கள் வாழ்நாளில் இதையும்விட அதிகமாக எழுதியவர்களாக இருந்தாலும் இருக்கலாம். (துக்ளக், 3.2.2010).
இதற்குப் பெயர்தான் பார்ப்பனப்பற்று மட்டுமல்ல, அதையும் தாண்டிய வெறி என்பது.
ஒரு தமிழர் அதிகமாக எழுதினார் என்றால், அதைவிட எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் எழுதியிருக்கிறார்கள் என்ற ஒரு வெறி பீறிட்டுக் கிளம்புவதைக் கவனிக்கவேண்டும்.
சரி... அதையாவது அவரால் அழுத்தமாகக் கூற முடிகிறதா?
அதிகமாக எழுதியவர்களாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைக்கிறாராம்.
எவ்வளவு பெரிய வழுக்கல்!
இருந்தாலும் இருக்கலாம் என்ற ஒரு பலகீனமான பதிலை அவரால் எழுத முடிகிறது என்றால், இதன் பொருள் பார்ப்பனப் பற்று என்ற ஆசை, வெட்கம் அறியாதது என்பதுதானே?
உறுதியாகத் தெரியாத ஒன்றை ஒரு பதிலாகச் சொல்பவர்தான் பார்ப்பனர்கள் வட்டாரத்தில் அறிவு ஜீவி! _ ஹி... ஹி... வாயால் சிரிக்க முடியவில்லையே!
----------------"விடுதலை” 1-2-2010
0 comments:
Post a Comment