Search This Blog

11.2.10

திராவிடர் கழகம் உண்மையான மக்கள் கழகம்


பிப்ரவரி -11

இந்த நாள் தமிழ் நாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சோகநாள். சேலம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்தக்கறை படிந்த கறுப்பு நாள்!

கைதி எண் அணிய மறுத்ததுதான் அவர்கள் செய்த ஒரே குற்றம்! அவர்கள் ஒன்றும் கிரிமினல் கைதிகள் அல்லர்! அரசியல் கைதிகள்தான். இதற்காக காக்கை, குருவிகளைச் சுடுவதுபோல் சுட்டுத் தீர்த்தனர். 17 பேர்கள் பிணமாக வீழ்ந்தனர். 5 பேர்கள் அடித்தே கொல்லப்பட்டார்கள். 105 கம்யூனிஸ்டுகள் படுகாயம் அடைந்தனர். ஆம், அந்த பிப்ரவரி 11 ரத்த நாள் என்று சேலம் சிறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்படவேண்டும்.

சிறைச்சாலைதான் பாதுகாப்புக்குரிய இடம். அங்கே ஆளவந்தார்கள் ரத்த வேட்டை நடத்தினார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

(1976 நெருக்கடி நிலை நேரத்திலும் மிசா கைதிகள் சென்னை மத்திய சிறையில் தமிழர் தலைவர் வீரமணி, தளபதி மு.க. ஸ்டாலின் முதலியோர் அடித்து நொறுக்கப்பட்டதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியதுதான். சென்னை சிறையில் சிட்டிபாபு என்ற தி.மு.க. தோழரும், மதுரை சிறையில் சாத்தூர் பாலகிருஷ்ணன் என்ற தி.மு.க. தோழரும் பலியானார்களே!)

சேலம் சிறையில் கம்யூனிஸ்டுத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அதனைக் கண்டித்துப் போர்க்கோலம் பூண்டது திராவிடர் கழகமே-தந்தை பெரியாரே -விடுதலை என்னும் போர்வாளே!

ஊரெங்கும் 144 தடையும், ஊர்வலத்திற்குத் தடையும், தொழிலாளர் வாய்களில் அடக்கு முறை துணி முடிச்சும் இல்லாதிருந்தால் சேலம் நிகழ்ச்சிக்கு நாள் தோறும் கண்டனம் சர மாரியாகக் கொட்டு வதைக் காண லாம். இன்று பேச்சு, மூச்சு இல்லை. தமிழ் நாட்டில் சுடுகாட்டு அமைதி நிலவிக்கொண்டி ருக்கிறது. நினைக்க நினைக்க நெஞ்சம் துடிக் கிறது என்று விடுதலை ரத்தக் கண்ணீர் வடித்தது (15.2.1950).

திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுகளுக்காக மிகவும் பாடுபட்டிருக்கிறது. நாம் அனைவரும் சர்க்காரின் அடக்கு முறைக்கு ஆளாகி சிறைச் சாலைகளில் அவதியுற்ற பொழுதும், நம் தோழர் கள் சிறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பொழு தும், இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் நம்மைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. ஆனால் தென்னாட்டின் திலகம், திராவிடத்தின் தந்தை பெரியாரும் விடுதலை பத்திரிகையும் மட்டிலும் நம்மைக் கைவிடாமல் காப்பாற்றியது. ஆகையால்தான் நாம் திராவிடர் கழகம் உண்மையான மக்கள் கழகம் என்பதை உணருகிறோம்.

-----------தோழர் எஸ்.ஏ.டாங்கே. -(பார்ப்பனக் கோட்டையான பம்பாய் மாதுங்காவில் ஆற்றிய உரை 16.11.1951).

வந்த பாதையை நினைப்போம்_ போகும் பாதையைத் தீர்மானிப்போம்!

----------------------------- மயிலாடன் அவர்கள் 11-2-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Hai said...

innum athe nilai neetikkirathu ena ennukireerkala.