Search This Blog

6.2.10

மதவாதிகளே பதில் சொல்லுங்கள்! -5


மதவாதிகளே, பதில் சொல்லுங்கள்!


தொடர்ச்சி...

சைத்தான்தான், யுத்தங்கள், பஞ்சங்கள், நோய்கள், பேரழிவுகள் போன்றவற்றிற்குக் காரணமாம். அப்பேர்ப்பட்ட சைத்தானை ஏன் கடவுள் கொல்லவில்லை? முடியாதோ? இதற்கு விடை யாரும் கூறவில்லை.

தன்னை வணங்குவதற்காக மனிதனைப் படைத்த அல்லா தன்னைத் தவிர வேறு எவரையும் தன்னால் படைக்கப்பட்ட மனிதன் வணங்கக்கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ள அல்லா,மனிதனை வணங்குமாறு ஏன் சைத்தானைக் கேட்டுக் கொண்டது?

நெருப்பிலிருந்து படைக்கப்பட்ட சைத்தான், யாரால் படைக்கப்பட்டது? அல்லாதான் படைத்தது என்றால், ஏன் படைத்தது? மனிதர்களையும் மற்ற உயிர்களையும் கொடுமைப்படுத்தும் சைத்தானையும் அல்லாதான் படைத்தது என்றால் அது எப்படி அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனும் என்ற அடைமொழிக்குப் பொருத்தமானது?

பூமியிலோ அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹீல் மஹ்பூள்) ஏட்டில் இல்லாமல் இல்லை; நிச்சயமாக அது அல்லாவுக்கு மிக எளிதானதேயாகும் என்று குர்ஆன் அத்தியாயம் 57 வசனம் 22 இல் உள்ளது. இயற்கை இடர்ப்பாடுகள் (பூகம்பம், சுனாமி, எரிமலை) மனிதருக்கு ஏற்படும் விபத்துகள் போன்றவை எல்லாமே அல்லா முன்னதாக எழுதிய ஏட்டில் உள்ளவாறே நடக்கின்றன என்றால் இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான கடவுள் எப்படி அருளாளன்? நிகரற்ற அன்புடையவன்?

சைத்தான் செய்கிறான் என்று கூறிவிட்டுப் பிறகு நான் எழுதி வைத்தபடியே நடக்கிறது எனக் கூறுவது முரண்பாடு அல்லவா? கடுகடுப்பான முன்கோபம் கொண்ட சர்வாதிகாரியை எப்படி அருளாளன், அன்பாளன் எனக் கூறலாம்?

கடவுள் மண்ணைத் தன் கைகளால் பிசைந்து, அந்தக் களிமண் கட்டியை இரு துண்டங்களாக்கி, ஒரு துண்டை நரகத்தில் போட்டு இரு நெருப்பாகட்டும் என்றதாம்; மற்றொரு துண்டை சொர்க்கத்தில் போட்டு அங்கே இருக்குமாறு செய்ததாம். ஆக, கடவுளுக்குக் கைகள் உண்டு என எழுதப்பட்டுள்ளது. உருவம் இல்லாத கடவுள் என்று எப்படிக் கூறப்படுகிறது?

எல்லா ஆலயங்களிலும், மதங்களும் கடவுளிடமிருந்து சிறப்பான தூது வந்தது என்றும், இவருடன் பேசியது என்றும் கூறப்படுகிறது. யூதர்களுக்கு மோசே. கிறித்துவர்களுக்கு யேசு. துருக்கியர்களுக்கு முகம்மது. எல்லாருக்கும் ஒரே மாதிரியாகக் கடவுளின் வழி கிடையாது. ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு நூலைத் தூக்கிப்பிடித்து, இது கடவுளே அருளியது, அதனுடைய சொற்கள் அடங்கியது என்கின்றன. மோசேயுடன் நேருக்கு நேர் கடவுள் பேசியது என்கிறார்கள். கர்த்தரின் உள்ளுணர்வால் அதன் வார்த்தைகள் அறியப்பட்டதாக கிறித்துவர்கள் கூறுகிறார்கள். சொர்க்கத்தில் இருந்து வந்த (தேவ) தூதன் மூலமாகக் கிடைத்த அல்லாவின் வார்த்தைகள் குர்ஆன் என்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் மற்றவற்றைக் குறைகூறி நம்ப மறுக்கின்றன. நான் அவை அனைத் தையும் நம்ப மறுக்கின்றேன் என்றார் தாமஸ் பெய்ன். (Thomas Paine - The Age of Reason)

அறிவு யுகம் (Age of Reason) எனப்படும் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெய்ன் தம் நூலில் கீழ்க்காணும் வாதத்தை முன் வைக்கிறார்....

ஒருவருக்கு ஒரு செய்தி கடவுளால் தெரிவிக்கப்பட்டது என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அந்த நபருக்கு மட்டுமே அருளப்பட்டது என்று ஆகும்; மற்றவர்களுக்கு அருளப்பட்டது என ஆகாது. இரண்டாம் நபருக்கு அவர் சொல்லி, இரண்டாம் நபர் வேறு ஒருவருக்குச் சொல்லி, மூன்றாம் நபர் நான்காம் நபருக்கு என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே போனால், முதல் நபருக்கு மட்டுமே அது அருளப்பட்டது என்றும் மற்றவர்களுக்கு அது செவிவழிச் செய்தி என்றுதான் ஆகும். எனவே அவர்கள் அதை நம்பவேண்டும் என்று கட்டாயமல்ல...

சொர்க்கத்தில் எழுதி வைக்கப்பட்டு தேவதூதர் ஒருவரால் (Angel) மகமதுக்குத் தெரிவிக்கப் பட்டதாகக் கூறப்படும் குர்ஆன் செவிவழிச் செய்தி என்ற வகையில் இரண்டாம் பட்ச செய்திதான். நான் எந்த தேவதூதனை யும் சந்திக்க வில்லை; ஆகையால் அதனை நம்பாமல் இருக்கும் உரிமை எனக்கு உண்டு.

இதை எப்படி மறுக்க முடியும்?

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் கடவுள், தனி நபருக்கு மட்டுமே (மோசே, யேசு, முகமது) காட்சி தந்துள்ளார்(?) உலகக் கோப்பை, கால்பந்தாட்டப் போட்டி நடக்கும் மைதானத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டம் முன்பாக கடவுள் தோன்றலாமே! இந்தக் கேள்வியை பாட்ரிசியா க்ரோன் என்பார் எழுதிய கட்டுரை ஒன்றில் (TLS 21.1.1994) குறிப்பிட்டு எழுப்பியுள்ளார்.

மூன்று மதத்தவர்களும் இதற்கு மறுமொழி கூறலாமே!


------------------------- தொடரும் .... சு. அறிவுக்கரசு அவர்கள் 6-2-2010 “விடுதலை” யில் எழுதியுள்ள கட்டுரை

11 comments:

Unknown said...

kadvul alagana kavithai
kadavul illatha manathil olukkam amarthal nallathu athuvay kadavul/
unnmaiyana mathavathiyai veda nathiganay nallavan .
in my personal experiance true man allways in nathigham' but 100% we are natures kids and nature is our care taker `balu

S said...

//முதல் நபருக்கு மட்டுமே அது அருளப்பட்டது என்றும் மற்றவர்களுக்கு அது செவிவழிச் செய்தி என்றுதான் ஆகும். எனவே அவர்கள் அதை நம்பவேண்டும் என்று கட்டாயமல்ல...

சொர்க்கத்தில் எழுதி வைக்கப்பட்டு தேவதூதர் ஒருவரால் (Angel) மகமதுக்குத் தெரிவிக்கப் பட்டதாகக் கூறப்படும் குர்ஆன் செவிவழிச் செய்தி என்ற வகையில் இரண்டாம் பட்ச செய்திதான். நான் எந்த தேவதூதனை யும் சந்திக்க வில்லை; ஆகையால் அதனை நம்பாமல் இருக்கும் உரிமை எனக்கு உண்டு.//

மறைவானவற்றை நம்புவதால் தான் மதங்களை நம்பிக்கை என்கிறார்கள்.
உங்களை நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது யார்? அது போலவே நம்பிக்கையாளர்களை நம்ப வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை? உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதற்கு?

கடவுள் இருக்கிறான் இல்லை என்று நிரூபிக்க யாராலும் முடியாது. கடவுள் இருக்கிறான் என்பது அவர்கள் நம்பிக்கை. இல்லை என்பது உங்கள் நம்பிக்கை. இதில் விவாதம் ஏன்? அவரவர் வழி அவருக்கு.

Unknown said...

முழுவதையும் படிக்க இதன் சுட்டி தர இயலுமா
mdsultan@eim.ae

Bala said...

மதங்கள் என்பதற்கு சரியான பெயர் மார்க்கங்கள்தான். மதங்களின் அமைப்பிலும் அதனை புரிந்து கொண்ட விதத்திலும் தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் கடவுள் பற்றி (உண்மையாக) புரிந்தவர்கள் மதங்களை நம்புவதில்லை.
தன்னால் புரிந்து கொள்ளமுடியாத ஒரு சக்தியை எளிய வகையில் உருவகப்படுத்துவதே கடவுள்.
சத்குரு கூறியது "ஒரு எறும்பின் பார்வையில் அதன் கடவுள் ஒரு பெரிய சக்தி வாய்ந்த எறும்பாகத்தான் இருக்கும். ஒரு மானின் கடவுள் அதன் பார்வையில் பெரிய மானாகத்தான் இருக்கும். அது போலே தான் மனிதனுக்கும். இது உருவகம் மட்டுமே."

We can define an object only in terms of Time and Space. Its proved that there is something lies beyond event horizon that do not have time and space".

இப்படி விவரிக்க முடியாத ஒன்றுக்கு கொடுக்கப்பட்ட பெயர்தான் கடவுள். இந்த வார்த்தைக்கு ஆண் பெண் மனிதன் விலங்கு கல் மண் என்று எந்த பொருளும் இல்லை. இவை அனைத்தையும் கடந்த ஒன்று, Since these are all subject to time and space.

Bala said...

நண்பரே
இந்த மூவரும் கடவுளைக்கண்டவர் இல்லை. கடவுளை உணர்ந்தவர்கள். கம்பி வழியாக மின்சாரம் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் மின்சாரத்தை கண்டவர் இல்லை. அதன் பலனை அடைந்தவரே அதிகம். மின்சாரத்தை உணர்ந்தவர்கள் (ஷாக் அடித்தவர்கள்) அதை மற்றவருக்கு எவ்வளவு விளக்கினாலும் அதை உணராமல் புரிந்து கொள்ள முடியாது. மேலும் இவர்கள் அனைவரும் தன்னை பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவில்லை. ஏன் எந்த ஆன்மீகவாதியும் கூற மாட்டார். அவர்கள் உண்மையை உணருங்கள் என்றுதான் சொன்னார்கள்
தவறாக எடுத்துக்கொள்ளதீர்கள் ஒரு பேச்சுக்கு சொல்கிறேன் சுயமரியாதை இயக்கத்தில் இருக்கும் ஒருவர் பெரியார் கொள்கைகளில் சிலவற்றை தவறாக பின்பற்றுவதை சமூகம் விமர்சனம் செய்தால் அதற்க்கு நீங்கள் அளிக்கும் பதில் "இவன் மாதிரி சில பேரால்தான் பெரியாருக்கு கேட்ட பெயர்". இதே மாதிரிதான். ஒரு சில (ஏன் பல) அரை வேக்காட்டு மதவாதிகளால் அந்த மதத்துக்கும் கடவுளுக்கும் நிந்தனை.

மேலும் பொதுவாக நாத்திகம் (மட்டுமல்ல எதை மறுத்தும்) பேசும் நண்பர்கள் அவ மரியாதையான, கடுமையான வார்த்தைகளை பயன் படுத்துகிறார்கள். என்னதான் உண்மையை எடுத்து உரைத்தாலும் அதை நயமாக சொன்னால்தான் சென்றடையும்.

//பக்தி என்பது போதையாயிற்றே!

//அம்மணமாக இருக்கும் வேப்பமரத்துக்கு மஞ்சள் பாவாடை ஒன்றைக் கட்டினார்.

மீண்டும் மன்னிக்கவும் பெரியார் அவர்களை ஒருமையில் அல்லது கீழ்த்தரமான வார்த்தையில் அழைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு கோபம் வரும். அனைத்தையும் பகுத்து அறிந்த உங்களுக்கே அப்படி என்றால் சாதாரண மக்களுக்கு தங்கள் கடவுள்களை பற்றிய அவமரியாதையை எப்படி தாங்க முடியும்?

நம்பி said...

Blogger Bala said...
//கம்பி வழியாக மின்சாரம் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் மின்சாரத்தை கண்டவர் இல்லை. அதன் பலனை அடைந்தவரே அதிகம். மின்சாரத்தை உணர்ந்தவர்கள் (ஷாக் அடித்தவர்கள்) அதை மற்றவருக்கு எவ்வளவு விளக்கினாலும் அதை உணராமல் புரிந்து கொள்ள முடியாது.//

மின்சாரத்தை அளக்கும் கருவியின் வழியாக செலுத்தினால் மின்னசாரம் செல்வதை பார்க்கமுடியும்...மின்னனு பழுபார்ப்பவரிடம் அந்த கருவி உள்ளது...ஒருவித குழல் கருவி அது...

அதன் ஒரு முனையில் மின்சார வயரை சொருகி அடுத்த முனைவழியாக மின்சாரத்தை பெறுவதாக வைத்து செலுத்தினால் மாறுதிசை மின்னோட்டமாக இருந்தால் வளைந்து வளைந்து செல்லும்...நேர்திசை மின்னோட்டமாக இருந்தால் நேராக (வளைவு கோடுகள் இல்லாமல்) மின்சாரம் செல்வதை காணலாம்.

வழக்கமாக இந்த மதசம்பந்தமான விஷயங்களுக்கு இம்மாதிரி எதையெல்லாம் பார்க்கமுடியாதோ அந்த வேதிப் பொருட்களை கொண்டு நம்பிக்கையாளர்கள் ஒப்பிட்டு கூறுவது வாடிக்கையான ஒன்று தான். (வழக்கமாக காற்றை பயன்படுத்திக் கூறுவார்கள்...இங்கு மின்சாரம் அவ்வளவு தான் வித்தியாசம்)

Blogger Bala said...
//பெரியார் அவர்களை ஒருமையில் அல்லது கீழ்த்தரமான வார்த்தையில் அழைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு கோபம் வரும். //

எந்த பெரியவரை சிறியவர்கள் மரியாதையில்லாமல் அழைத்தாலும் மனிதனுக்கு கோபம் வரத்தான் செய்யும். அதே போல் சிறியவர்களை இளக்காரமாக நினைத்து பொரியவர்கள் அழைத்தாலும் சிறுவர்களுக்கும் கோபம் வரும்.

ஆசிரியர் என்றாலும் மாணவனை மட்டம் தட்டிக்கொண்டேயிருந்தால் மாணவனுக்கும் ஆசிரியரின் மேல் கோபம் வரத்தான் செய்யும்.

எதிர்ப்பை காட்டத்தான் செய்வான். ஏனென்றால் அங்கே இழிவு இருக்கிறது.

அது போலத்தான் காலங்காலமாக ஒரு கூட்டத்தால் இழிவுகள் ஒரு பெரும்பான்மையான சமூகத்திற்கு இழிவுகளாக வைத்துக்கொண்டேயிருக்கிறது...அது தன் எதிர்ப்பை காட்டுகிறது.

இங்கு உயிருள்ள மனிதனுக்குத்தான் இழிவு..அதுதான் தடை செய்யப்பட்டது....உயிரற்றதற்கு இழிவுகள் இல்லை...

வீட்டில் கூட மரியாதையில்லாமல் யாராவது அழைத்தால் கூட வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

அடிக்கடி மட்டம் தட்டிக்கொண்டே வந்தால் சிறியவர்கள் கூட ஒரு கட்டத்தில் கோபப்பட்டு எதிர்ப்பை காட்டத்தான் செய்வார்கள். இது ஒரு அனிச்சை செயல்...


ஒருவர் கண்கிட்டே விரலை கொண்டுபோனால் தானாகவே அவருடைய கை வந்து உடனடியாக கண்ணை குத்துபவரின் கையை தட்டி விடும். இது ஒரு அனிச்சை செயல். அது போல் தான் எல்லா குணாதசியங்களும்...

சுயமரியாதைக்கு பங்கம் வருகின்றபொழுது அனிச்சை செயலாக மனிதன் தன் எதிர்ப்பை காட்டுவது இயல்பாக இயற்கை வழங்கப்பட்ட செயல். சட்டமும் இதை முழுமையாக அனுமதிக்கிறது.

இழிவு படுத்தும் போது எதிர்ப்பை காட்ட நாட்டின் சட்டமே ஒவ்வொருவருக்கும் அதிகாரம் வழங்கியுள்ளது.

உன் எழுத்தும் பேச்சும் ஒருவனை ஒன்றுமே செய்யவில்லை என்றால் அந்த எழுத்தும் பேச்சும் செத்ததிற்கு சமானம்...என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை கூறியது...அவருக்கு ஒரு மேல்நாட்டறிஞர் கூறியது.

அதைப் போலத்தான் இதுவும்...இது நொந்தவன் சொல்வது சற்று அல்ல நிறையவே நோகத்தான் செய்யும். என்ன செய்வது இழிவுகள் அப்படி. எதனால் இந்த இழிவுகள்?

இந்த பாழாய்ப்போன மதத்தினால். எப்படி மதம் வந்தது?

இந்த பாழாய்ப்போன கற்பனை கடவுள் எனும் கண்டுபிடிப்பால்...

இதை எவன் கண்டிபிடித்தது...?

எதற்காக கண்டுபிடித்தான்...?

அதனால் யார் யாருக்கு பாதிப்பு?...

எத்தனையோ கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு அதன் உறுப்பினர்களுக்கு...சமூகங்களுக்கு..

அவர்களுக்காக, அவர்களின் மேம்பாட்டிற்காக, சமத்துவத்திற்காக, இதை இப்படி இடித்து தான் சொல்லமுடியும்.

பாம்புக்கு பால் வார்ப்பதால் கொத்தாமல் இருக்குமா? கொத்தத்தான் செய்யும்.. கடவுள், மதம், பார்ப்பனீயம் எல்லாம் அப்படித்தான்.

அதனிடம் சாத்வீகம், சாம பேத தண்டம் எல்லாம் பார்க்க முடியாது. பார்த்தாலும் அது அடங்காது.

நம்பி said...

//சுயமரியாதை இயக்கத்தில் இருக்கும் ஒருவர் பெரியார் கொள்கைகளில் சிலவற்றை தவறாக பின்பற்றுவதை சமூகம் விமர்சனம் செய்தால் அதற்க்கு நீங்கள் அளிக்கும் பதில் "இவன் மாதிரி சில பேரால்தான் பெரியாருக்கு கேட்ட பெயர்".//

அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை...இதெல்லாம் கற்பனை கடவுள் பித்தலாட்டக்காரர்கள், பார்ப்பனர்கள் சொல்வது....

பின்பற்றினால் பின்பற்று இல்லாவிட்டால் ஓடு...யாருக்கு நஷ்டம்...? இப்படித்தான் கூறுவார்கள். இது தான் பகுத்தறிவாளர்கள். பகுத்தறிவு எவருடையை தனிமனித உரிமையிலும் தலையிடாது.

அது பாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கும். எவனும் இதை தடுக்க முடியாது.

//அனைத்தையும் பகுத்து அறிந்த உங்களுக்கே அப்படி என்றால் சாதாரண மக்களுக்கு தங்கள் கடவுள்களை பற்றிய அவமரியாதையை எப்படி தாங்க முடியும்?//

உயிரற்ற கற்பனை கடவுளுக்கே இந்த பச்சாதாபம் என்றால், பாவம் சாதாரண மனிதனுக்கு எவ்வளவு அவமானத்தை இந்த இந்து மதம் பண்ணிக்கொண்டிருக்கிறது...இழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது...அவன் வணங்கும் கடவுள் இந்த இழிவையெல்லாம் ஒரு நாள் துடைக்கும் என நம்பிக்கொண்டிருக்கின்றானே..அந்த மூடநம்பிக்கையை, ஏற்படுத்தியவனே அவனிடமிருந்து காசு வாங்கி கொண்டு அவனுக்கான இழிவை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டிருக்கிறானே!

அவனை தோலுரித்து காட்டினால் தானே!....இதெல்லாம் எதற்காக?....அவன் துயர் துடைப்பதற்காக...

அவன் மனம் எப்படி புண்படும்...?

என்றாவது நினைத்தது உண்டா?

நாம் என்ன கடவுளின் மொத்த குத்தகை தாரரா? இந்த அதிகாரத்தை இந்திய அரசியல் சட்டம் கொடுத்துள்ளதா? நீ யார்? கடவுளை வைத்து எம்மக்களை, எம் உறவுகளை ஏமாற்றுவது?

நீ யார்? கடவுளை வைத்து, மதத்தை வைத்து, மனிதனை ஜாதி பிரிப்பதற்கு...?

இதை தடுக்க சொல்லி கடவுள் அனுப்பியிருப்பார் என்று ஏன் நீ நம்பக்கூடாது...? அப்படியே நம்பு...உன் நம்பிக்கையின் பேராலே நம்பு. எல்லா கடவுளின் பேராலும் நம்பு.

எத்தனை அரசியல் தலைவர்களை சகட்டு மேனிக்கு தாக்குனியே! அவர்களின் தொண்டர்கள் மனம் எப்படி புண்படும்...? அதை மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளவில்லையே!

நம்பி said...

Blogger Bala said...

//"ஒரு எறும்பின் பார்வையில் அதன் கடவுள் ஒரு பெரிய சக்தி வாய்ந்த எறும்பாகத்தான் இருக்கும். ஒரு மானின் கடவுள் அதன் பார்வையில் பெரிய மானாகத்தான் இருக்கும். //

ஆமாம் பார்ப்பன இந்து மதம் கடவுளை மனிதனுக்காக மட்டும் உருவாக்கவில்லை...

விலங்குகளுக்கும் தான்...

ஒரு பாக்கடீரியாவின் பார்வையில் கடவுள் இன்னொரு பாக்டீரியாவாகத்தான் இருக்கும்.

ஒரு அமீபாவின் பார்வையில் கடவுள் இன்னொரு பெரிய அமீபாவாகத்தான் இருக்கும்.

ஒரு ஈசல் பூச்சியின் பார்வையில் கடவுள் இன்னொரு ஈசல் பூச்சியாகத்தான் இருக்கும்.

ஒரு கரப்பான் பூச்சியின் பார்வையில் கடவுள் இன்னொரு சக்திவாய்ந்த கரப்பான் பூச்சியாகத்தான் இருக்கும். அதுவும் கக்கூசில் இருக்கும்.

ஒரு நாக்குபூச்சியின் பார்வையில் கடவுள் இன்னொரு நாக்குபூச்சியாகத்தான் இருக்கும்.

ஒரு பன்றியின் பார்வையில் கடவுள் இன்னொரு மலம் தின்னும் பன்றியாகத்தான் இருக்கும். (அப்புறம் ஏன் அடித்து விரட்ட வேண்டும்)

ஒரு எலியின் பார்வையிலே கடவுள் இன்னொரு பெரிய எலியாகத்தான் இருக்கும்...(அப்பறம் ஏன்? புள்ளார் அது மேல உக்கார்ந்து இருக்கார்.)

ஒரு குரங்கின் பார்வையின் கடவுள் இன்னொரு பெரிய சக்தி வாய்ந்த குரங்காகத்தான் இருக்கும்.

ஒரு கழுதையின் பார்வையில் கடவுள் இன்னொரு சக்திவாய்ந்த கழுதையாகத்தான் இருக்கும்.

ஒரு தாவரத்தின் பார்வையில் (பார்வை இருக்கா..?) கடவுள் இன்னொரு சக்தி வாய்ந்த தாவரமாகத்தான் இருக்கும்.

சங்கரா மீனின் பார்வையில் கடவுள் இன்னொரு சங்கரா மீனாகத்தான் இருக்கும்...வஞ்சரம் மீனுக்கும் அப்படித்தான்.

ஒரு முருங்கை மரத்தின் பார்வையில் கடவுள் இன்னொரு முருங்கை மரமாகத்தான் இருக்கும். (வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது இதனால் தான்)

ஒரு பேயின் பார்வையில் (இதுக்கும் இருக்கா..?) கடவுள் இன்னொரு சக்திவாய்ந்த பேயாகத்தான் இருக்கும்.

நம்பி said...

//மறைவானவற்றை நம்புவதால் தான் மதங்களை நம்பிக்கை என்கிறார்கள்.
உங்களை நம்ப வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது யார்? அது போலவே நம்பிக்கையாளர்களை நம்ப வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை? உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எதற்கு?//

உங்களை நம்பசொல்லி யார் கட்டாயப்படுத்தினரோ? அவர்களே தான்?

அதனால் மூடநம்பிக்கையானவர்களை சுட்டிக்காட்டுகிறோம்...கடவுளை நம்ப சொல்லி கட்டாயப்படுத்துவது எப்படி உரிமையாக கருதுகிறீர்களோ? அதேப்போல கடவுளை நம்பாதீர்கள்! கடவுள் இல்லை என்று பிரச்சாரம் பண்ணுவது எங்கள் உரிமை...

இங்கு பிரச்சாரம் தான்...ஆனால் நம்ப சொல்லி "கட்டாயப்படுத்தப்படுகிறது".

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்...நம்பிக்கை திணிப்பு கட்டாயம்......நம்பாமை கடவுள் மறுப்பு...பகுத்தறிவு...அதை பிரச்சாரம் பண்ணுகிறோம். கட்டாயப்படுத்தவில்லை. இதை தடுக்க உங்களுக்கு யார்? உரிமை கொடுத்தது...?

மூடநம்பிக்கை வந்தவுடன் சர்வாதிகாரம் வந்து விட்டது..அதே கேள்வி தான் உங்களுக்கும்...

நீங்கள் வக்காலாத்து வாங்க கடவுள் என்ன உங்கள் வீட்டு சொத்தா? இதற்காக கடவுள் தானே கவலைப்படவேண்டும். மனிதர்கள் ஆன நீங்கள் எதற்கு கவலைப்படுவானேன்?

கடவுள் தனி அனுமதி கொடுத்திருக்கிறாரா? எங்கே அனுமதி...? இதற்கு கடவுள் அனுமதித்திருப்பார் என்றால் எதிர்ப்பதற்கும் கடவுள் அனுமதித்திருப்பார் என்று ஏன் நம்பக்கூடாது? காணாத்தையும், கேளாததையும் நம்புவது உங்கள் குணமாகிவிட்டபொழுது இதையும் நம்பலாமே...

நீங்கள் நம்பியத்ற்காக எதற்கு எல்லோரையும் நம்ப வைக்கவேண்டும்? நீங்கள் மட்டும் மூடநம்பிக்கையுடன் இருக்கவேண்டியது தானே..?

நம்பி said...

S said.

//கடவுள் இருக்கிறான் இல்லை என்று நிரூபிக்க யாராலும் முடியாது. கடவுள் இருக்கிறான் என்பது அவர்கள் நம்பிக்கை. இல்லை என்பது உங்கள் நம்பிக்கை. இதில் விவாதம் ஏன்? அவரவர் வழி அவருக்கு.

February 7, 2010 4:10 PM//

இல்லையென்று நிருபித்தாகிவிட்டதே..இருக்கிறான் என்று நீ தான் நிருபிக்கவேண்டும்.

நம்பி said...

Blogger S said...

//மறைவானவற்றை நம்புவதால் தான் மதங்களை நம்பிக்கை என்கிறார்கள். //

ஓ அப்படியா! மதங்களின் பேரால் பொய்யான விஷயங்கள் மறைந்திருப்பதை, மனிதன் உண்மை என்று நம்புவதால் அதை மூடநம்பிக்கை என்கிறோம்.