காட்டுமிராண்டி
மகாசிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவிந்தா, கோபாலா என்று கூச்சல் போட்டவாறு சிவன் கோயில்களை நோக்கிப் பக்தர்-கள் ஓடினார்களாம்.
பக்தியைப் பரப்பும் பல்வேறு யுக்திகளில் இதுவும் ஒன்று. ஒரே மாதிரியாக இருந்தால் அலுத்துப் போய்விடாதா?
ஒரு கோயிலில் ஓடி வணங்கவேண்டும்; இன்னொரு கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்யவேண்டும்; இன்னொரு கோயிலில் காவடி எடுத்துச் செல்லவேண்டும். மற்றொரு கோயிலில் அலகுக் குத்தி காவடி எடுக்கவேண்டும். வேறு சில கோயில்களில் மண்சோறு சாப்பிடவேண்டும். பெண்கள் வேப்பிலையை மட்டும் கட்டிக்-கொண்டு கடவுளைக் கும்பிடுவது ஒரு வகைக் கோயிலில்; சுத்தமாக உடம்பில் துணியேயில்லாமல் அம்மணமாகச் சென்று அம்மனைக் கும்பிடுவதும் உண்டு.
பெண்கள் குப்புறப்படுத்துக் கிடக்க பூசாரி ஆணி செருப்புக் காலோடு மிதித்துச் செல்வதும் உண்டு.
பக்தர்களின் தலைகளில் தேங்காய் உடைத்-துச் சிதறச் செய்வது இன்னொரு பக்கம்.
சேலம் அன்னதானப்பட்டியிலோ இன்னும் சிறப்போ சிறப்பு - செருப்போ செருப்பு; பக்தர்களை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடிக்கும் அடிமட்டப் பக்தி அங்கே!
காரமடையிலோ கேட்கவே வேண்டாம் பூசாரி வாழைப் பழத்தை வாயில் போட்டு மென்று துப்புவதை பக்தைத் தன் வாயால் கவ்வவேண்டும்.
இன்னும் சில ஊர்களில் தீக்குண்டம் இறங்கவேண்டும்.
மகாசிவராத்திரியின் இரண்டாம் நாளில் என்ன விசேஷம் தெரியுமா? சுடுகாட்டுக்குச் சென்று அங்குச் சிதறிக் கிடக்கும் எலும்புகளை வாயில் ரத்தம் சொட்டச் சொட்ட கடிக்கவேண்டும். சுடுகாட்டு எலும்புகளை மாலையாகக் கோத்துப் போட்டுக் கொள்ளவேண்டும்.
போதுமா, இன்னும் பட்டியல் வேண்டுமா?
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சொன்னது பொன்மொழி மட்டுமல்ல, அதற்கும் மேலானது என்பது இப்பொழுது விளங்கியிருக்கவேண்டுமே!
-------------- மயிலாடன் அவர்கள் 16-2-2010 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை
2 comments:
என்னக்கு ஒரு சந்தேகம் நான் ஒரு பெரியாரின் பகுத்தறிவுவலான். ஒரு பகுத்தறிவுவாலனுடைய உறைவினர் இறந்துவிட்டால் அவன் என்ன என்ன சடங்கு செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது எனக்கு இதில் நம்பிக்கை இல்லை நீங்கள் எனக்கு தெரியு படுத்தவேண்டும் please mail me nice.bad551@gmail.com
please delete before comment
Post a Comment