நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...
இந்த அளவுக்கு முடிவுக்கு வந்துள்ளர் அறிவியல் என்பது என்ன? எந்த ஒரு விசயம் பற்றியும் உற்று நோக்கி, ஆய்வு செய்து, அதன் முடிவுகளைச் சரி பார்த்து, பிழைகள் இருக்குமானால் அவற்றைத் திருத்தி மாற்றி அமைத்து முடிவுக்கு வருவது அறிவியல் முறை. சும்மா கடவுள் சொன்னது, கடவுள் என்னிடமே நேரில் சொன்னது, தூதன் மூலம் சொன்னது, அவன் மூலம் நான் தெரிந்துகொண்டது, அப்படித் தெரிந்து கொண்டதை நான்கைந்து பேர் ஆளுக்கு ஒரு விதமாக எழுதியதை நம்பிக்கொண்டு, அதனையே முழு உண்மை என்று பொருள் படும் வகையில் Gospel Truth என்றெல்லாம் சொற்களை உருவாக்கி வைத்துக் கொண்டு செப்பிடு வித்தை காட்டிடும் விவகாரம் அல்ல. எதையும் உன்னிப்பாக நோக்கி (Observation) ஆய்வு நடத்தி அதன் முடிவுகளான கருது கோள்களை (Hypothesis) வெளிப்படுத்தி,அவற்றைச் சோதித்து ஒருங்கிணைத்து மேம்படுத்தி, அறிவியலார் பலரின் ஆய்வுக்கும் ஆட்படுத்தி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முடிவுகள் என்றொரு நீண்ட நடைமுறையும் இலக்கணமும் கொண்டது அறிவியல் முறை.
பல்லாயிரக்கணக்கான கோடி ஆண்டுகளில் மாறுதல், வளர்ச்சி, பிரிதல், இணைதல், உருவாகுதல் என்ற பலபடி நிலைகளில் வளர்ச்சி பெற்ற இப் பேரண்டத்தையும் (Universal) உலகத்தையும் (World) சும்மா ஓரிரண்டு நாள்களில் உருவாக்கினார் என்ற கதை அறிவு, அறிவியல் எனும் உரைகல்லில் தேய்தால் தேய்ந்தே போய்விடுகிறது. நிலைத்து நிற்பதில்லையே!
வான்வெளி என்பது முட்டையின் ஒடு போல மூடிக் கொண்டிருப்பது போலக் கற்பனை செய்து கொண்டு, அதன் அடிப்படையில், வானத்தை எவ்வளவு கட்டுக்கோப்பாக அமைத்து அழகு செய்து வெடிப்புகளே இல்லாமல் வைத்திருக்கிறதாம் அல்லா! இம்மாதிரி குர்ஆன் (சூரா 50-6) கூறுகிறதே, அது உண்மை எனஅறிவியல் ஏற்கிறதா? இல்லையே! விண் வெளியில் எல்லையில்லாது போய்க் கொண்டே இருக்கும் காலத்தைக் கணக்கீடு செய்ய வருடம், மாதம் போதாது என்றுதானே ஒளி ஆண்டு கண்டுபிடித்துக் கணக்கிடுகிறார்கள் அறிவியலார். இந்நிலையில் மத நூலில் இப்படியொரு அபத்தம்!
அடுத்த வசனத்தில், பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளைஅமைத்துள்ளோம் என்று கடவுள் கூறிக் கொள்வதாக இருக்கிறது. பூமி உருண்டையாகஇருக்கும் உண்மை தெரியாமல் உளறிய வசனமாகத்தான் இது இருக்கும். தட்டையாக இருப்பதைத்தானே நீட்ட முடியும்? பூமி தட்டையாகவா இருக்கிறது?
பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் பதுங்கிக் கொண்டதாக இந்து மதக்கதை கூறுகிறது. அதே மாதிரியில் இசுலாமிலும் இருக்கிறது என்றால் மதங்களெல்லாம் ஒன்று போலத்தானே உள்ளன. மத மூடத்தனங்கள் அறிவியலின் வாயிலாக அம்பலப்படுத்தப்படுகின்றன.
இதனை மறைத்து விஞ்ஞானத்தை தெய்வ நிலைக்கு உயர்த்தி அதனை வாழ்த்தி வணங்கி வழிபடுமாறு மனிதனைத் தூண்டிவிட்டனர் மேல் நாட்டவர்கள் எனப் பொய்ப் பழி கூறி மதத்தைப் பாதுகாக்கிற பணியில் மதவாதிகள் ஈடுபடலாமா? அறிவியலே எல்லையற்றது; கடவுள்அல்ல என்பதை அன்றாட வாழ்க்கையிலேயே அனுபவித்துக் கொண்டே மதம், கடவுள் என்பதெல்லாம் ஏமாற்று வேலையல்லவா?
மிகுந்த பைத்தியக்காரத்தனமான வகையில் ஒரு வசனம் உள்ளது. இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி, சாயாமலிருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். (சூரா 21-31) என்கிறது. பூங்காக்களில் சிறார்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட சீசா பலகை போலவா உலகம் உள்ளது? மனிதர்கள் ஆடினால் சாய்ந்து விடுமாமே! இது அதனைத் தடுப்பதற்காக மலைகளை அமைத்ததாமே! உலகம் உருண்டை என்பதை மெகல்லன் எண்பித்துக் காட்டிய பிறகும் கூட, பழைய மூடக்கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் மத நூல்களை நம்பலாமா?
சிவன் -பார்வதி கல்யாணத்திற்காக மக்கள் அனைவரும் வட இந்தியா போய்விட்டதால் அப்பக்கம் அமிழ்ந்து, தென் இந்தியா உயர்ந்து விட்டதால், அதைச் சமன் செய்ய குள்ள முனி அகத்தியன் அனுப்பப்பட்டான் எனும் இந்து மதக் கதைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? மதவாதிகளே, பதில் கூறுங்கள்!
(தொடரும்)
---------------------13-2-2010 “விடுதலை” யில் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய கட்டுரை
6 comments:
// இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி, சாயாமலிருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். (சூரா 21-31) //
நாத்திகர்கள் அனைவரின் பிரச்சனையும் ஒன்றுபோல் தான் உள்ளது. அதாவது எதையும் அரைகுறையாக புரிந்துகொள்வது. இது இஸ்லாமியர்களுடன் நடந்த விவாதத்திலேயே வெளிப்பட்டது.
நீங்கள் குறிப்பிட்ட குரான் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுதான்.
குரான்: 23-31; பூமி அவர்களை சாய்த்து விடாது இருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.
தவறான மொழியாகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை அல்லது தனக்கு சாதகமாக திருத்திகொள்ளப்பட்ட வசனத்தின் அடிப்படையில் தன்னுடைய அறியாமையைத்தான் வெளிப்படுத்தும். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுத்தும், அசிங்கப்படுத்திகொண்டு நிற்கும்.
நீங்கள் சொல்வது என்ன இந்த வசனம் வியைந்து உரைப்பது என்ன? சிந்துத்து பாருங்கள். இருந்தால்.
// இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி, சாயாமலிருக்கும் பொருட்டு நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம். அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம். (சூரா 21-31) //
நாத்திகர்கள் அனைவரின் பிரச்சனையும் ஒன்றுபோல் தான் உள்ளது. அதாவது எதையும் அரைகுறையாக புரிந்துகொள்வது. இது இஸ்லாமியர்களுடன் நடந்த விவாதத்திலேயே வெளிப்பட்டது.
நீங்கள் குறிப்பிட்ட குரான் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுதான்.
குரான்: 23-31; பூமி அவர்களை சாய்த்து விடாது இருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.
தவறான மொழியாகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை அல்லது தனக்கு சாதகமாக திருத்திகொள்ளப்பட்ட வசனத்தின் அடிப்படையில் தன்னுடைய அறியாமையைத்தான் வெளிப்படுத்தும். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுத்தும், அசிங்கப்படுத்திகொண்டு நிற்கும்.
நீங்கள் சொல்வது என்ன இந்த வசனம் வியைந்து உறைப்பது என்ன? சிந்துத்து பாருங்கள். இருந்தால்.
பிஸ்மில்லாஹ் ஹிர்ஹ்மான் நிர்ரஹிம்
எல்லா புகழும் இறைவனுக்கே உரியது.
முதலில் முஸ்லிம் இது மாதிரி அபத்தமான கேள்விக்கு பதில் சொல்ல மாட்டார்கள்.
யார் அல்லவையும் அவன் தூதரையும் முழுமையாக ஏற்று கொண்டார்களோ அவர்களுக்குத்தான் இந்த QURAN. அவர்களுக்குத்தான் நேர் வழி காட்டுகிறது.
மற்றவர்களை ( ஏற்று கொள்ளாதவர்களை ) கட்டாயப்படுத்துவதில்லை .
இந்த பூமி உங்கள் கண்களுக்கு உருண்டையாக தெரியுதா? ( பூமி உருண்டை தான்).
QURAN சாதாரண மக்களுக்கு புரியும் படியாகத்தான் இறக்கி அருளப்பட்டது. பெரும் கவிக்கும் தத்துவ அறிவாளிகளுக்கு மேதைகளுக்கு மட்டும் புரியிற மாதிரி அருள படவில்லை
மலைகளை உடைப்பதால் பூமியில் நில நடுக்கம் வரும் என்பது தெரியுமா?. சும்மா எழுத பக்கம் கிடக்சா எது வேணா எழுதலாமா?
மனிதன் எப்படி உருவானான்?
பூமியில் உள்ள கோடிக்கணக்கான உயிரினம் பூச்சிகள் விலங்குகள் இன்னும் தெரியாத பல உயிர்கள் எப்படி தோன்றியது?.
UNIVERSAL எப்படி உருவானது? தானாகவா? இயற்கையாகவா? இயற்கை எப்படி உருவானது?
இதற்கு மேல் கேள்வி கேட்கிறேன் என்று Quran வாசகங்களை கிண்டல் பண்ணினால் உமக்கு மரியததை இல்லை. உமக்கு உண்மையாகவே சந்தேகம் இருந்தால் அந்த முறையில் நாகரிகத்துடன் கேள். contact MAKKAMASJID.COM

//நீங்கள் குறிப்பிட்ட குரான் வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பு இதுதான்.
குரான்: 23-31; பூமி அவர்களை சாய்த்து விடாது இருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.//
மொழி பெயர்ப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக தெரிவிக்கிறீர்கள்...சரி! எது சரியான மொழி பெயர்ப்பு என்பதற்கான வரையறைகள் உண்டா...? அதை இவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்ற மதநடுநிலை அமைப்புகள் உண்டா என்பதும் தெரியவில்லை.....?
இருப்பினும் மேலே குறிப்பிட்ட சரியான மொழிபெயர்ப்பும் மூடநம்பிக்கையைத்தானே வலியுறுத்துகிறது...இதில் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லையே...8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்திலேயே கான்டிடென்டல் டிரிப்ட் (கண்ட நகர்வு) என்று வந்து விடுகிறதே...கண்டங்கள் எப்படி இடம் பெயர்ந்தன...மலைகள் எப்படி தோன்றின என்பது பற்றியெல்லாம் ஆய்வுப்பூர்வமாக 1950 களிலியே கண்டுபிடித்துவிட்டனரே அதை ஆராய்ந்து விட்டு தான் ஆதாரங்களுடன் பாடநூலில் சேர்க்கப்பட்டுள்ளதே. அதைத்தானே அறிவுக்கரசு குறிப்பிடுகிறார்....அறிவியல் முறை என்று...
தாவரத்திற்கு உயிர் இல்லை என்பது கூடத்தான் பழமைவாத நம்பிக்கை அதை நம்பவேண்டும் என்ற அர்த்தம் இல்லையே....
நான் நம்புகிறேன் நீயும் நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை யாரும் எந்த மதமும் வலியுறுத்த முடியாதே...கடவுளும் தெரிவித்திருக்க முடியாது...அப்படி தெரிவிப்பவர் கடவுளாகவும் இருக்கமுடியாது...அதன்படி நடந்திருந்தால் கண்டுபிடிப்புகளே கிடையாது.
எல்லா மதத்திலேயும் மூடநம்பிக்கைகள் உண்டு. பழமைவதாங்கள் உண்டு. எப்படி? இல்லாமல் இருக்கும்? கண்டுபிடித்த காலம், நிலப்பரப்பு மக்கள், நாகரிகம் எல்லாமே வேறு...வேறு..ஆகையால் கண்டிப்பாக இருக்கும்.
கலிலியோ கூடத்தான் தன் டெலஸ்கோப் கண்டுபிடிப்பால்,,,சூரியனை மையமாகவைத்துதான், சுற்றித்தான் பிற கோள்கள் நகர்கின்றன என்ற கண்டுபிடிப்பை ஆதாரத்துடன் தன்னுடைய டெலஸ்கோப் கண்டுபிடிப்பு மூலம் ஆதரத்துடன் நிருபித்தார்..அதற்கு முன் இருந்த நம்பிக்கைகளையும் தகர்த்தார்...அவரை அன்றைய போப் பாண்டவர் பைபிலுக்கு எதிராக கருத்து கூறினார் என்று தண்டனையளித்து சிறையில் தள்ளினார்கள், பார்வையிழந்து தன்கண்டுபிடிப்பிற்காக துன்பபட்டார்...இன்று அதுதான் உண்மை.... அதனால் 1997 ஆம் ஆண்டு போப்பாண்டவர் மன்னிப்பு கேட்டார்... கலிலியோவுக்காக...
(மன்னிப்பு கேட்டதால் என்ன? கலிலியோ திரும்பியா வந்து விடப்போகிறார்....)
என்றைக்கும் எதுவும் கண்டுபிடிக்க கூடாது...நிருபிக்க கூடாது நிருபித்தாலும் நம்பக்கூடாது என்று குரானிலும், இதர சமய நூல்களிலும் கூறப்பட்டுள்ளதா?...அப்படி கூறினாலும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள எப்படி வற்புறுத்த முடியும்? அதுவே சர்வாதிகாரம் அல்லவா?
//பூமியில் உள்ள கோடிக்கணக்கான உயிரினம் பூச்சிகள் விலங்குகள் இன்னும் தெரியாத பல உயிர்கள் எப்படி தோன்றியது?.
UNIVERSAL எப்படி உருவானது? தானாகவா? இயற்கையாகவா? இயற்கை எப்படி உருவானது?
இதற்கு மேல் கேள்வி கேட்கிறேன் என்று Quran வாசகங்களை கிண்டல் பண்ணினால் உமக்கு மரியததை இல்லை. உமக்கு உண்மையாகவே சந்தேகம் இருந்தால் அந்த முறையில் நாகரிகத்துடன் கேள். //
இவையனைத்திற்கும் தொடக்கநிலை, மற்றும் நடுநிலைப்பள்ளி பாடங்களலேயே விளக்கமாக குறிப்பிட்ப்பட்டுள்ளதே...எல்லாமே இணையத்தில் தமிழ்நாட்டுப் பாடநூல்கழகம் சென்றால் தெளிவான விடை காணலாம்.
Post a Comment