Search This Blog

4.7.09

பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பார்ப்பனர்கள் செய்த கெடுதி குறைந்ததல்ல


பிராமணர்களைப் பார்த்த மக்கள் எல்லாரும் பிராமணர்களாகப் பார்க்கிறார்கள். பிராமணர்கள் என்றால் மற்றவனைத் தாழ்ந்தவன் என்றும் தொடக்கூடாதவன் முதலியவன் என்று எண்ணுவதுதான் என நினைக்கிறார்கள்.

உதாரணமாக ஒரு தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்கவரும் ஒரு பிராமண ஸ்திரீ குடத்தில் கொஞ்சம் தண்ணீரும் கையில் கொஞ்சம் புளியும் கொண்டு வருவதோடு முகத்தையும கோணிக்கொண்டு வருகிறாள். குழாயண்டை வரும்போதே நிலத்திலெல்லாம் தண்ணீர் தெளித்துக்கொண்டு குழாயின் மேலும் தண்ணீரைக் கொண்டு புளியால் குழாயை தேய்த்து கழுவியபிறகு தண்ணீர் பிடிக்கிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பிராமணரல்லாத இந்து ஸ்திரி தானும் அரைக்குடம் தண்ணீரும் கையில் ஒரு புளி உருண்டையும் கொண்டு முகத்தை இழுத்துக்-கொண்டு ஷ பிராமணிஸ்திரி செய்தது செய்தது போலவே செய்துவிட்டு தண்ணீர் பிடித்துக்கொண்டு போகிறாள். இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு மகமதிய ஸ்திரீயும், கிருஸ்தவ ஸ்திரீயும் அதுபோலவே வரும்பொழுதே முக்கால் குடம் தண்ணீரையும் முன்னையதிலும் பெரிய புளி உருண்டையையும் கொண்டு முகம் கோணிக்கொண்டு வருவதோடல்லாமல் வாயில் முணுமுணுத்துக்கொண்டே வந்து தெருவெல்லாம் தண்ணீர் தெளித்து குழாயையும் தேயத்தேய கழுவித் தண்ணீர்பிடித்துப் போகிறாள். பஞ்சம ஸ்திரீ அந்த வீதியில் இல்லாததால் அவர்கள் இதைப்பழக சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இப்படி ஒருவரைப் பார்த்து ஒருவர் பழகியே தீண்டாமையென்னும் தொத்துநோய் தேசம் முழுவதும் பரவிவருகிறது.

தீண்டாமை ஒழிய வேண்டும் என்று மகாத்மா காந்தியும் மற்றும் பல ஜீவகாருண்-ணிய முள்ளவர்களும் ஒரு பக்கம் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கும் போது பாலக்காடு முனிசிபல் பொது வீதியில் ஈழுவ சகோதரர்கள் நடக்கக்கூடாது என்று 144 உத்திரவு போட்டதும், (ஈழுவர்கள் என்பது சென்னை ஹைகோர்ட் ஜட்ஜ் ஸ்ரீமான். சி.கிருஷ்ணன் அவர்களுடைய ஜாதியார்தான்) எவ்வளவு அக்கிரமமாகும். இதை நாம் யார் பேரில் சொல்லுவது. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் எந்த விதத்தில் காரணமாவாகள்? பிராமண அரசாங்கத்தார் தானே இவ்வக்கிரமங்களுக்கும், கொடுமைக்கும், பாத்திரமாக வேண்டும். இந்த பிராமண அரசாங்கம் தொலைய வேண்டும். இந்த பிராமண தர்மம் தொலையவேண்டும் என்று பாடுபடுவதை விட மக்களுக்கு வேறு என்ன தேச சேவையிருக்கிறது? இதைவிட வேறு ஜீவகாருண்யம் என்ன இருக்கிறது? இதைவிட வேறு தர்மம் என்ன இருக்கிறது? இதை அறிந்துதான் தேசபந்து தாசர் என்னுடைய சுயராஜ்யம் பிராமண ஸ்திரீகளைப் பிடித்து தீண்டாதாருக்கு கொடுப்பதுதான் என்றார் போலும்! இதை அறிந்துதான் சர்.பி.சி.ரெ. அவர்கள் பிராமணர்களை எல்லாம் சாக்கில் போட்டுக்கட்டி வங்காளக்குடாக் கடலில் போடவேண்டும் என்று சொன்னார்கள் போலும்! சுவாமி விவேகாநந்தர் பிராமண மதம் இருக்கும்வரை இந்தியா அடிமைத்தனத்திலிருந்து மீளாது என்று சொன்னார் போலும்! மகாத்மா காந்தி - இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த கெடுதியைவிட பிராமணர்கள் செய்த கெடுதி குறைந்ததல்ல வென்று சொன்னார் போலும்! சுவாமி சிரத்தானந்தர் இந்த மதத்திற்கு நாசத்தை விளைவித்தவர்கள் பிராமணர்தான் என்று சொன்னார் போலும்! - இனி யார் இவர்களுக்கு நற்சாஷிப் பத்திரம் கொடுக்க வேண்டுமோ? தெரியவில்லை! இவர்கள் தான் சட்டசபைக்கும், மந்திரிவேலைக்கும், தாலுக்கா போர்டு, முனிசிபாலிட்டிக்கும், சர்க்கார் உத்தியோகங்-களுக்கும் போய் நமக்கு நன்மை செய்பவர்களாம்!

------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 22-11-1925

7 comments:

hayyram said...

ஒரு முனிவர் மீது ஒருவர் எச்சிலைத் துப்பி விடுகிறார். கோபத்தில் அந்த முனிவர் அவரைப் பார்த்து "அடேய் மூடனே! என்னை மதியாது என் மீது உமிழ்ந்து விட்டாய். நீ பன்றியாக மாறிப்போவாய் என உன்னை சபிக்கிறேன்" என்று சாபம் கொடுத்தார். சாபம் பெற்றவுடன் சந்நியாசியை உமிழ்ந்த மனிதருக்கு ஒரு பயம் வந்து விட்டது.

அவர் தன்னுடைய மூத்த புதல்வனைப் பார்த்து சொன்னார், "மகனே! நான் செய்த ஒரு தவறின் காரணமாக பன்றியாய் மாறும் சாபத்தை ஒரு முனிவர் எனக்கு அளித்து விட்டார். அதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். நான் பன்றியான உடனே காட்டுக்குச் சென்றுவிடுவேன். நான் எங்கே இருந்தாலும் நீ தேடி வந்து என்னைக் கொன்று விடு! அந்த உருவத்தில் என்னால் வாழ முடியாது" என்று கூறுகிறார்.

இவன் தன் அப்பாவை மனித ரூபத்தில் தெரியுமே தவிர‌ பன்றி ரூபத்தில் தெரியாதே! அதனால் தேடிக் கொண்டே இருந்தான்.

இப்படி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. கடைசியாக ஒரு குளத்தங்கரை அருகிலே போய் நின்று அப்பா என்று கூப்பிட்டான். உடனே ஒரு பன்றி வந்து நின்றது. பின்னாலேயே இன்னொரு பன்றியும் ஓடிவந்தது. இரண்டு மூன்று குட்டிகளும் வந்தன. பன்றி ரூபத்தில் இருந்த தந்தை கேட்டார் "மகனே வந்துவிட்டாயா?!" , "ஆமாம் தந்தையே, நீங்கள் பன்றியான உடனே உங்களைக் கொன்றுவிட என்னிடம் சொன்னீர்களே! அதனால் தான் காடெல்லாம் தேடி உங்களை இப்பொழுது கண்டுபிடித்திருக்கிறேன். உங்களது கோரிக்கையை நிறைவேற்ற இப்போது உங்களைக் கொல்லட்டுமா?" என்று கேட்டான் மகன்.

அதற்கு தந்தை அவசரமாக "வேண்டாம் மகனே! கொல்லாதே. நான் இங்கேயே வாழ்ந்து இந்த இடத்திற்க்கேற்ப்ப ஒரு துணையையும் சேர்த்து மூன்று குட்டிகளையும் பெற்றாகி விட்டது. இப்பொழுது இதுவே எனக்கு போதுமானதாகி விட்டது. அதனால் என்னை இங்கேயே விட்டுவிடு" என்றார். இந்தக் கதை மூலமாக உபநிஷத்தில் சொல்லப்படும் தர்மம் என்னவென்றால் எங்கே போய் இருக்கிறாயோ அதுவே போதுமானது என்று இருக்கும் இடத்திற்க்கேற்ப்ப வாழப்பழகிக்கொள்வது பலவித துன்பங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது என்பதாகும்.

"ரோம் நாட்டில் வாழும்போது ரோமானியனாக இரு" என்று ஆங்கிலத்தில் ஒரு வாசகம் சொல்வார்கள். இது தான் அது. சிலருக்கு தலையனை இல்லாமல் தூக்கம் வராது. யார் வீட்டுக்குப்போனாலும் படுக்கும் போது நல்ல தலையனை வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். உறவுக்கார‌ர்களிடம் ஒரு தலையனைக்காக முகம் சுளித்து சலித்துக் கொள்வார்கள். இப்படி இருக்கும் இடத்திற்க்கு தகுந்தார் போல் சின்ன சின்ன விஷயத்தைக் கூட மாற்றிக் கொள்ள மனம் இல்லாதவர்கள் யாருடனும் சகஜமாக ஒத்துப் போக மாட்டார்கள்.

இன்ன சுவையில் தான் சாப்பிடுவேன், இன்ன மாதிரி இடத்தில் தான் தங்குவேன் , இன்ன மாதிரி மனிதர்களைப் பார்த்தால் தான் சிரிப்பேன் என்று சின்னச் சின்ன விஷயங்களில் பல விதமாக மனிதர்கள் தங்களைத் தாங்களே ஒரு விலங்கில் பினைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் நிம்மதியாகவும் மன கட்டுப்பாடும் இல்லாமல் தவிப்பவர்களாக இருப்பார்கள்.

இது போன்ற மன விலங்குகளை உடைத்து எரிந்து விட்டு மிகவும் திறந்த மனதுடன் வாழ்பவர்கள் எப்போதும் நிம்மதியாக இருப்பார்கள். இதுவே உபநிஷத்தில் அழகான கதையின் மூலம் இந்து தர்மத்தில் விளக்கப்படுகிறது.

நம்மவர்கள் இந்து தர்மத்தை கேலிசெய்தும் பழித்தும் பேசிவரும் தருணத்தில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வெள்ளையர்கள் இந்து தர்மத்தைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து பல புத்தகங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் உண்மையாக ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? எங்கள் நாட்டிலே மத ரீதியாக சொல்லிக்கொடுக்கப்படாத சில‌ விஷயங்கள் இந்து தர்மத்திலே மிக அழகாகவும் மிக ஆழமாகவும் மனதில் பதியும் வகையில் சொல்லிக்கொடுக்கப்படுகிறது.

அதாவது, மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றும் நிம்மதி என்ற ஒரு விஷயத்தை இந்து தர்மம் அழகாக போதிக்கிறது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எங்கள் கலாச்சாரத்தின் காரணமாக இங்கே ஒவ்வொரு தனி மனிதரும் சுய நிம்மதி என்பதை வாழ்க்கையில் உணராமலே மரித்துப் போய் விடுகிறார்கள். இந்து வாக வாழும் ஒவ்வொருவரும் நிம்மதியாக வாழ்வது என்பதை மிக அருமையாக உணர்ந்து இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறார்கள்.

இப்படி நம்முடைய மனதை மிக எளிமையாகப் பக்குவப்படுத்த இந்து தர்மத்தைத் தவிர‌ வெறெதுவும் இருக்க முடியாது. மனிதன் ஒரு சாபத்தால் பன்றியாக முடியுமா என்று கருப்புச்சட்டை முட்டாளைப்போல் கேள்வி கேட்காமல் இந்தக் கதை சொல்லிக்கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதலே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்லிக் கொடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.

கபிலன் said...

ஹா ஹா....ஊரே சுதந்திர வேட்கையில் கொதித்தெழுந்து போராடின போது, உள்ளூர் அரசியல் நடத்தியவர் தான் ராமசாமி. சுதந்திர போராட்டத்திற்கும் ராமசாமிக்கும் சம்பந்தமே கிடையாது. ஆகையால் உங்களுக்கு வெள்ளையன் மேல் பாசம் இருக்கத் தானே செய்யும்!

தமிழ் ஓவியா said...

அய்யோ ராம் உன்னுடைய முட்டாள்தனம் வளரும் குழந்தைகளிடம் எடுபடாது. அவர்கள் பலமடங்கு முன்னேற்றத்துடன் சிந்திக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

//சுதந்திர போராட்டத்திற்கும் ராமசாமிக்கும் சம்பந்தமே கிடையாது//

பெரியாரைப் பற்றி அறைகுறையா தெரிந்து வைத்துக் கொண்டு எதையாவது மொக்கை போடுவதே கபிலனின் பாணி.

சுதந்திரப் போராட்டத்திற்கு பெரியாரின் பங்கை பல அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ளார்கள். அவைகளைப் படியுங்கள் கபிலன்.

அப்பாதுரை said...

பெரியார் சுதந்திரப் போராட்டத்தில் எந்த அளவுக்குக் கலந்து கொண்டார் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. (மதராஸ் நேசனலிஸ்ட் பார்ட்டி பற்றிய கன்னிமரா நூலக ஆவணங்களிலும் சென்னை ஆன்லைனிலும் படிக்கலாம்). வெள்ளைக்கார அடிமைத்தனத்தை விட பண்டையதும் நிரந்தரமானதாகவும் தோன்றும் கடவுள்-மத அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார் என்பதை மறக்கக் கூடாது. கடவுளை நம்பும் அடிமைத்தனத்தைத் தகர்ப்பதை விட்டு பார்ப்பனரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் பெரியாரின் இயக்கத்தினர் பாதை விலகிப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

நம்பி said...

Blogger hayyram said
// மனிதன் ஒரு சாபத்தால் பன்றியாக முடியுமா என்று கருப்புச்சட்டை முட்டாளைப்போல் கேள்வி கேட்காமல் இந்தக் கதை சொல்லிக்கொடுக்கும் ஆழ்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளுதலே உண்மையான பகுத்தறிவாகும். வளரும் குழந்தைகளுக்கு இது போன்ற கதைகளை சொல்லிக் கொடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் மிகவும் பக்குவமான மனிதர்களாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.
July 4, 2009 4:15 PM //

இந்த மாதிரி பன்றிக் கதைகளை கேட்டு வள்ர்ந்த பார்ப்பன ஊத்தையா..நீ? அதை இப்பவும் திராவிடக் குழந்தைகளுக்கு ஊத்தலாம் என்ற எண்ணமா? குழந்தைகளுக்கு இந்த மாதிரி கதைகளை சொன்னால், வாயால் மட்டும் சிரிக்காது...பட்டக்சாலும் சிரிக்கும். டர் டர்...இதை உன் ஊத்தை பரம்பரைக்கு அளந்து விடு...அதை அப்படியே ஒதுக்கிவிட்டால் போகுது...அதுவே இப்ப அப்படித்தான் சிரிக்குதுங்க இந்த கதைகளை கேட்டுட்டு...

கிக் பட்டாக்சி காட்டும்.

ஆழ்ந்த நோக்கமாமே....! ஊத்தைகள் இன்னும் எப்படி பித்தாலட்டம் பண்ணி கூத்தாடுது பார்...? இந்த பொழப்புக்கு.........

நம்பி said...

Blogger அப்பாதுரை said...

//கடவுள்-மத அடிமைத்தனத்தை ஒழிக்க முற்பட்டார் என்பதை மறக்கக் கூடாது. கடவுளை நம்பும் அடிமைத்தனத்தைத் தகர்ப்பதை விட்டு பார்ப்பனரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் பெரியாரின் இயக்கத்தினர் பாதை விலகிப் போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

July 5, 2009 5:06 AM//

ஒன்றைக்கூட சரியாப் படிக்கவில்லை....கடவுளை உருவாக்கியவனே பார்ப்பனன் தான்!..ஆரிய இந்து மதத்தை உருவாக்கியவனும் அவனே! திராவிட மக்களை அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆரியக்கடவுள் கற்பனைகள்.

அவன் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டது. சோம்பேறிதனத்திற்காக உருவாக்கப்பட்டது. பிடுங்கித்தின்பதற்காக உருவாக்கப்பட்டது.

அந்த கற்பனையிடம் அவனுக்கு துளி கூட பயமில்லை. இதெல்லாம் மத்தவனுக்குதான்.