Search This Blog

31.7.10

பிரேமானந்தா நித்யானந்தாக்களுக்கு முன்னோடி ஜெயேந்திர சரஸ்வதி

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!


காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4) 1987 இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன்.

7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.

திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000).

8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப்படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004)

நான் சட்டை செய்யவில்லையே!

ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி... ஹி....

ஜெயேந்திரரின் ஆபாசப் புழுதிகள்

சங்கரராமன் கடிதம்

(சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் சங்கரராமன் (கொலைசெய்யப்பட்டவர்) உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதத்தில் காணப்படும் ஜெயேந்திரரின் லீலைகள்.)

1.. ஆஸ்ரமஸ்விகரணம் ஆன சில மாதங்களிலேயே பிரதானமாக, வாநாகரம் மற்ற முகாம்கள் இவைகளில் நடந்த பால ஸ்திரி லீலைகள் (உப. நாகங்குடி வைத்தா)

2. வேதபுரி மூலம் தங்கத்திடம் வெள்ளி கேட்ட பிச்சை அதிக ஸ்வாரஸ்யமான அத்யாயம் (உப. தகவல் ஆதாரம்: நா. வைத்தா)

3. இளையாத்தங்குடியில் ஸ்ரீராமசாமி சர்மா சாட்சியாக கொட்டாயில் அடித்த கொட்டங்கள்.

4. கும்பகோணம் பட்டாபிக்கு பாங்க் விசுவநாதன் பார்யை விஜயாவுடன் நிர்வாண ஆலிங்கனம் செய்த கோலத்தில் திவ்ய தரிசனம் கொடுத்த விவரமான அத்தியாயம்பதிலுக்கு காமாக்ஷி கல்யாண மண்டபம்மடம் வாசலில் விஜயாவுடன் கடை கொடுத்த கருணை.

5. குண்டூர் காமாக்ஷி பீட மாமிக்கு பரமானுக்ரகம் செய்து வைத்த நிர்வாண நவாவர்ண வைபவம்.

6. தெனாலியில் நாகசதுர்த்தசி புண்ய காலத்தில் அதிகாலையில் (ஸ்ரீஸ்ரீபரமாசார்யாள் பூஜை செய்துகொண்டிருந்த சமயம்) ஆந்திர சுவாசினிகளுடன் சல்லாப சங்கமம் (பா.பேட்டை கண்ணன் நா.குடி வைத்தா இவர்களால் பந்தனம் செய்யப்பட்டது)

7. விஜயவாடாவில் திருவண்ணாமலை ராமு சாஸ்திரிகளுடன் ஓடியது மார்கழி மாதம் அதிகாலை இதுவரை வெளிவராத புதிய விஷமங்கள் (உ.ப.ப.பேட்டை குப்பு)

8. குருவாயூர் க்ஷேத்திரத்தில் வனஜாவுடன், குருநாதர் செய்த லீலா வினோதங்கள். தம்பிக்கும் பங்கு. (உ.ப.பாட்னா முரளி)

9. திருப்பதி மாமியுடன் தான் அனுபவித்து விட்டு, தாடி நடராஜனையும் அனுபவிக்குமாறு பரமானுக்கிரஹம் செய்த பிறகு அவனுக்கு கல்தா கொடுத்த அத்யாயம்(உப.ராமமூர்த்தி பாட்டு)

10. எத்திராஜ முதலியாரின் உபபத்னி ஸ்தானத்தில் இருந்த மைதிலியுடன் நடத்திய சரச சல்லாப லீலைகள் சரித்திரம்.

11. நட்சத்திரப் பேர் கொண்ட பத்திரிகை அம்மாவுடன் நடத்திய லீலைகள், அதனால் ஏற்பட்ட சிக்கல்கள், சரணாகதி, வாக்குவாதம், த்ரவ்ய நஷ்டம் ஆகிய விவரங்கள் அடங்கிய விசேஷ அத்யாயம்.

12. அனந்தா பிக்சர்ஸ் மாமியுடனும், ஆலங்காடு நவிசம்சாரத்துடனும் பெற்ற ஆனந்த லீலைகள் அத்யாயம் (உப.பாட்னா முரளி)

13. பான்பராக்கு தாண்டவ பத்தினியைத் தொடர்ந்து தற்பொழுதுகூட அருகில் வைத்துக் கொண்டு நடத்தி வரும் சரச சல்லாப அத்யாயம் (உப.தாம்பரம் பாபு)

14. புதுக்கோட்டை திவான் பயிஷ்கார் மாட்டுப்பெண் தாம்பரம் பேபி(எ) ஜெயலக்ஷ்மியுடன் அடித்த மோஹ லீலைகள் அத்யாயம் (உப.தா.பாக்கம் தியாகராஜர்)

15. கூடவே இருக்கும் தாம்பரம் சகோதரர்களின் சகோதரிக்கு விவாகம் செய்துவிட்டு அவள் புருஷனை அடையவிடாமல் ஜெயேந்திரரும் நட்ட காலனும் (திரிசூலம்) அனுபவித்த அத்யாயங்கள்.(உப.தாம்பரம் பாபு)

குறிப்பு: இதன் பலன் நட்ட காலன் தன் ஒரே பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டுத் தானும் போய்ச் சேர்ந்தான்.

16. காமகோடி லீலா உடனும் அவளால் அறிமுகம் செய்யப்பட்ட இளசுகளுடனும் விதவிதமான லீலா சரச சல்லாப அத்யாயம் (உப. திருவிடைமருதூர் சந்திரா, பெ. வாழ்ந்தான் மௌலி)

17. சேலம் சுந்தரானு அய்யர் பார்வையுடன் பலகாலமாக இன்னும் நடத்தி வரும் கோலாகல லீலைகள் (உப.பாட்னா முரளி)

18. பாங்க் விதவை சரோஜா அவள் பெண்களுடன் நடத்திய சரச சல்லாபம், பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து திவ்யானுக்ரஹம் செய்த அத்யாயம்(உப. பாட்னா முரளி)

மேலே குறிப்பிட்ட அத்யாயங்கள் தவிர,

1. விசேஷ அனுபந்தங்கள்

2. அந்தே வாசியின் பொண்பாடி லீலைகள் கோயில் ராமு குடும்பத்து ஸ்திரீகளுடன் தொடர்ந்து அடித்துவரும் கூத்துகள், ஸ்திரீகள் விடுதியில் நடைபெறும் விபசாரங்கள் ஆகிய விஷயங்களும் இணைப்புகளாக வெளிவரும். இதில் முக்கியப் பங்கு தம்பி ரகுவிற்கு.

குருநாதர் நடத்திய லீலைகள்பற்றி புகைப்படங்கள் ஆடியோ, வீடியோ கேசட் பதிவுகள் கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் இவைகளைக் கொடுத்துதவிய சென்னைராதா மற்றும் நா. குடி வைத்தா இவர்களுக்கும் என்னுடைய கிருத்ஞையை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வரப்போகும் அத்யாயங்களைத் தாங்கள் படிப்பதுடன் பிரதிகள் எடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்து குருநாதர்களின் மகத்துவங்களைப் பலரும் அறிய சகாயம் செய்து ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் அனுக்கிரஹத்தால் காமமோஹ விவகாரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு பரமஷேமத்தை அடைய பிரார்த்திக்கிறேன், ஈசுவரோரசஷது.

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் பீடத்தின் சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும், தொடர்ந்து திரவியங்களை அள்ளிக் கொடுத்தும், பீடாரோஹண விழாக்களிலும் பங்கு கொண்டு சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய துர்பாக்கியம்தான். இந்த பீடத்தின் அழிவுக்குச் செய்யும் கைங்கர்யமாகும். துணிச்சலுடன் இந்த காமாந்த பீடைகளை விரட்டி அடித்தால் மடம் உருப்பட்டு, நமக்கு நல்ல குரு கிடைப்பார்.

சோமசேகர கனபாடிகள்

ஜம்புகேசவர க்ஷேத்திரம் 6.9.2005 ஆதாரம்: (ஜெயேந்திரரின் ஆன்மீகமும், அரசியலும் எம்.ஆர் ரகுநாதன்)


------------------ மின்சாரம் அவர்கள் 31-7-2010 “விடுத்லை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை


திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா?

பித்தலாட்ட யானை போட்ட லத்தி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் கிராமத்தில் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். கேட்பார்க்கு மதியில்லாமல் போய் விட்டதால் ஆங்கே மூட நம்பிக்கை முந்திரிக் கொட்டையாகக் குதித்துத் துள்ளுகிறது.

குளத்தினுள் இருந்த காட்டாமணக்குச் செடியை வெட்டும்போது அங்கு வேலை பார்த்த பெண்கள் சாமி ஆடினார்களாம்.

நான் குடிகொண்டுள்ளேன் என்னை வெட்டாதே! என்று அந்தச் சாமியாடிப் பெண்கள் சத்தம் போட்டார்களாம். இந்த நிகழ்ச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.

வெட்கம் கெட்ட ஏடுகள் இதனைப் படம் போட்டு வேடிக்கை காட்டுகின்றன.

சாமி குடியிருக்க காட்டாமணக்குச் செடிதான் கிடைத்ததா? அப்படியே சாமி குடிகொண்டிருந்தால் அதனை வெட்டத்தான் முடியுமா?

வெட்ட முடிந்தது என்றால் அந்தச் சாமிக்குச் சக்தியும் இல்லை, வெண்டைக்காயும் இல்லை என்று நிரூபணம் ஆகவில்லையா?

இதன் பின்னணியில் ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் - அதுதான் அந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்கிற தந்திரம்.

அவ்வாறே ஆசாமிகள் ஆரம்பித்துவிட்டார்கள். 1001 விளக்குப் பூஜை போடப்பட்டுவிட்டதாம்.

ஊராட்சித் தலைவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் கனவில் சாமி வந்து தனக்குக் கோயில் கட்டச் சொன்னதாம்.

விஷயம் அங்கேதான் இருக்கிறது - சொல்லி வைத்த ஏற்பாடு - நாடகம்தான் இதன் பின்னணியில்!

மயிலாடுதுறை பக்கத்தில் கொல்லுமாங்குடியை யடுத்த பாப்பம்மாள் கோயில் என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு திருகுதாளம் நடந்தது.

பூமிக்கு வெளியில் கை தெரிந்ததாம். எனக்கு வளையல் போடு என்று அது சொன்னதாம். வளையல்காரர் வந்து வளையல் போட்டாராம். அவ்வளவுதான், ஆங்கே கோயில் கட்டவேண்டும் என்று ஆரம்பித்தார்கள்.

உடனே உண்டியல் வந்து விட்டது. வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது.

திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா? களத்தில் குதித்தார்கள் - பிரச்சாரப் புயலைக் கிளப் பினார்கள் மறியல் என்று அடுத்து அறிவித்தார்கள். அவ்வளவுதான் வளையல்கார மாரியம்மாள் கதை புஸ்வாணம் ஆகிவிட்டது.

1970 செப்டம்பரில் அய்யா, அண்ணா பிறந்த மாதத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தியாகராயர் நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் ஒரு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கினார்கள்.

தியாகராயர் நகரைச் சேர்ந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் அந்த வேலையைச் செய்தார்.

பூமியைப் பொத்துக் கொண்டு திடீரென்று பிள்ளையார் தோன்றினார் என்று கதை கட்டினார்கள். அப்படி சொன்ன சிறிது நேரத்திலேயே உண்டியல்கள் வந்தன - வசூல் வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

அந்த இடத்திலேயே பொதுக்கூட்டம் போட்டுப் பேச தந்தை பெரியார் அறிவிப்புக் கொடுத்தார்.

பிரச்சினை பேருரு எடுத்துவிடும் என்ற நிலையை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் உண்டியலைப் பறிமுதல் செய்தார். திடீர்ப் பிள்ளையார்பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

செல்வராஜ் என்ற காவல்துறை கான்ஸ்டபுளைப் பயன்படுத்தி அந்த சுப்பிரமணியம் பார்ப்பான் அந்த எத்து வேலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவோடு இரவாகக் குழியைத் தோண்டி அதில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, சுற்றிலும் பருத்திக் கொட்டையை நிரப்பி, பூமிக்கும் மேலே ஒரு துவாரத்தை ஏற்பாடு செய்து, தண்ணீரை அதன் வழியாக ஊற்றியவுடன் பருத்திக் கொட்டை உப்பி பிள்ளையார் பொம்மையைப் பூமிக்கு வெளியிலே கொண்டு வந்து பிதுக்கித் தள்ளிவிட்டது.

இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு என்ன தெரியுமா?

சுயம்பு - அது தானாகத் தோன்றும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்தப் பித்தலாட்டத்துக்கு வக்காலத்து வாங்கினார்.

ஆனந்தவிகடன் ஆம்! ஆம்! பிள்ளையார் தானாகத் தோன்றியது உண்மைதான் என்று ஒத்தும் ஊதியது.

சில நாள்களிலேயே சாயம் வெளுத்துவிட்டது.

அந்த இடத்தில், மசூதி கட்ட அனுமதியளிக்கப்பட்டு இருந்தது - அதனைத் தடுக்கவே இந்தத் திட்டம்; மதக் கலவரத்தை உண்டாக்குவது அதன் நோக்கம். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்கி இருக்குமே.

இப்பொழுது விழுப்புரம் பக்கத்தில் கிளம்பியிருக்கும் அக்கப்போரும், இதுபோன்ற பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்.

விரைவில் அதனை அம்பலப்படுத்துவோம்!

------------------- “விடுதலை”29-7-2010

30.7.10

அடே, வாருமய்யா துக்ளக் அய்யரே!


கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?

பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை! நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே! கலைஞர் ரெடி தமிழகம் ரெடி தமிழ் ரெடியா?

(துக்ளக், 4.8.2010, பக்கம் 15)

கொலை குற்றவாளியாக வேலூர் ஜெயிலில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளியே வந்து, கொஞ்சம்கூட வெட்கமின்றி ராஜ நடைபோட்டுக் கொண்டிருக்கும் ஒருவர் இவாளுக்கெல்லாம் லோகக்குரு- பவள விழா ஜெயந்தி கனஜோர்!

ஏடுகளில் பக்கம் பக்கமாக விளம்பரக் கந்தாயங்கள்! இது மட்டுமா?

காமத்தைத் துறந்தும் காமகோடியாக வாழ முடியும் என்று வரலாற்றில் நிரூபித்த ஒரே சாதனையாளர் என்பதற்காகவும்கூட விழா எடுக்கலாமே!

ஜெயேந்திரர் ரெடி பார்ப்பனர்கள் ரெடி ஆனால், தமிழகம் தாங்குமா என்பதுதான் கேள்வி???

-------------------- "விடுதலை” 30-7-2010

எலுமிச்சம் பழத்தை நசுக்கி வாகனம் புறப்பட்டால் விபத்து நடக்காதா?


மதச் சார்பின்மை படும் பாடு

இந்திய அரசியல் அமைப்புச் சாசனம் எடுத்த எடுப்பிலேயே தன்னை மதச்சார்பற்ற அரசு என்று பிரகடனப்படுத்தி விட்டது.

அத்தோடு நிற்கவில்லை; அடிப்படைக் கடமைகள் என்ற பகுதியில் (51ஏ) விஞ்ஞான அணுகுமுறை, மனிதாபிமானம், ஆராய்ச்சிக்கு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் எப்படியெல்லாம் நடந்துகொண்டு வருகிறார்கள் என்பது பெரிதும் வெட்கக்கேடானது.

சாதாரண மக்கள் மட்டுமல்லர்; விஞ்ஞானிகள் என்று கருதப்படக் கூடியவர்கள்கூட அவர்களின் படிப்புக்கும், பார்க்கும் உத்தியோகத்துக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல், பாமரத்தன்மைக்கும் கீழாக அருவருக்கத்தக்க வகையில், மூட நம்பிக்கைச் சேற்றை முகத்தில் அப்பிக் கொள்பவர்களாகக் காட்சி அளிக்கிறார்களே, இது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு!

கிழக்கு மண்டல இந்தியக் கடலோரக் காவல் படைக்கு வழங்கப்பட்டுள்ள சட்டக் சி.ஜி820 புதிய ஹெலிகாப்டரைக் கடலோர காவல் படைக் காவல்துறைத் தலைவர் (அய்.ஜி.) ஜெனரல் ராஜசேகர் மாலை அணிவித்துத் தொடங்கி வைத்தார். புதிய வாகனங்களுக்குப் பூஜை போடும்போது டயருக்கு அடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து நசுக்குவதுபோல ஹெலிகாப்டர் சக்கரத்தின்கீழ் எலுமிச்சம் பழங்கள் வைக்கப்பட்டு, விமானத்தை இழுத்து நசுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் இவர்கள் தெரிவிப்பது என்ன? எலுமிச்சம் பழத்தை நசுக்கி புதிய வாகனம் புறப்பட்டால் எந்தவித விபத்தும் நடக்காது என்றுதானே சொல்ல வருகிறார்கள்?

இதுவரை இவ்வாறு செய்து வந்துள்ளனரே விபத்துகள் நடக்காமல் இருந்தனவா? சாலை விபத்துகள் மட்டுமல்ல, விமான விபத்துகள்பற்றி நாள்தோறும் செய்திகள் வந்தவண்ணமாகத்தானே உள்ளன. விலை மதிக்கப்பட முடியாத மனித உயிர்கள் பலியாகின்றனவே இதற்கெல்லாம் என்ன சமாதானம்?

எலுமிச்சம் பழம் வைத்து நசுக்காத விமானங்கள் தான் விபத்துக்கு ஆளாகின என்று சொல்லப் போகிறார்களா?

இதைவிட இன்னொரு வெட்கக்கேடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) செயல்பாடுகள்.

புதிதாக ராதாகிருஷ்ணன் என்பவர் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறார். இவர் பதவியேற்றவுடன் அவசர அவசரமாக குருவாயூரப்பன் கோயிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை கொடுத்தார்.

அதன்பின் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி.பி3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. அதற்குமுன் இஸ்ரோவின் புதிய தலைவரான ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்? தமது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தார். ஜி.எஸ்.எல்.வி. பி3 ராக்கெட்டுக்கான திட்ட அறிக்கையை ஏழுமலையான் பாதத்தில் வைத்து வேண்டிக்கொண்டார்.

திருப்பதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்படுவதற்காக ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறினார்.

முடிவு என்ன? குறிப்பிட்ட தேதியில் ஏவப்பட்ட அந்த ராக்கெட் இஸ்ரோவின் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.

இதற்கு இஸ்ரோ தலைவர் என்ன சொன்னார்?

ராக்கெட்டின் கிரையோஜெனிக் எந்திரத்தில் தீப்பொறி ஏற்பட்டதா, இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. ராக்கெட் திசை மாறியதற்கான காரணம் ஓரிரு நாள்களில் கண்டு அறியப்படும் என்றுதான் சொன்னாரே தவிர, ஏழுமலையானைத் தரிசித்துப் பயன் இல்லை என்று அறிவு நாணயத்துடன் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை.

அந்த ராக்கெட் மற்றும் ஜிசாட்4 செயற்கைக்கோளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ.420 கோடியாகும். இதில் ராக்கெட்டின் மதிப்பு மட்டும் ரூ.170 கோடியாகும்.

மக்கள் பணம் இதுபோன்ற மதவாதிகளால் நட்டப்பட்டதற்கு யார் பொறுப்பு?

இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மைக்கு விரோதமாக நடந்துகொண்டது; போதுமான திறமையும், பொறுப்பும் இல்லாததால் ஏற்பட்ட நட்டம் இவைகளுக்காக சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதான் சரியான முடிவாக இருக்கமுடியும்.


---------------- “ விடுதலை” தலையங்கம் 29-7-2010

ஆடிமாத மூடநம்பிக்கைதோலுரிப்பு



ஆடி பதினெட்டாம் நாள். காவிரியாறு பாயும் ஜில்லாக்களிலுள்ள மக்கள் பலர் இன்றைய தினத்தை நோன்பு நாளெனக் கொண்டாடுகின்றனர். கொண்டா டப்படும் நோன்பின் கருத்தென்ன? இந்நோன்பால் திராவிட நாட்டு மக்கள் அடையும் பலன் என்ன? இந்நோன்பு திராவிட நாட்டவருக்கு உரியதுதானா? என்பவைகளைப் பற்றி மக்கள் சிறிதேனும் சிந்திப்பது கிடையாது.

எதனையும் ஆராய்ந்து உண்மையா பொய்யா? வேண்டப்படுவதா, அல்லவா? நமக்குரியதா, இல்லையா? என்பவற்றை எண்ணிப் பாராமல், பகுத்தறிவை இழந்து, எவர் சொன்னாலும், எதில் எழுதி வைத்திருந்தாலும் அவற்றை அப்படியே அனுஷ்டித்தல் என்னும் மூடக் கொள்கைக்குத் திராவிட மக்கள் ஆட்பட்டு விடும் கொடிய வழக்கம் இந்நாட்டில் வேரூன்றிவிட்ட படியால்தான், திராவிட மக்கள் மீளா அடிமைத் தனத்திலும், வறுமையிலும் சிக்கித் தப்ப வழிகாணாது தவித்து, மேலும் மேலும் இவ்வடிமைத்தனந்தான் சிறந்த தெனக் கூறி, அதிலேயே திளைத்துக் கிடக்கும் நிலைமையை அடைந்து விட்டனர்.

ஆடி பதினெட்டாம் நோன்புக்கு உட் கருத்து இருவகையாக வருணிக்கப்படுகிறது.

1. பாரதப்போர் நடந்தது இந்த ஆடி மாதத்தில் தானாம். ஆடி முதல் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை போர் நடந்து 18 ஆம் நாள் பாண்டவர் வெற்றி கொள்ளப்போர் முடிவுற்றதாம். இப்போரில் பாண்டவர் தரப்பில் தமிழ்நாட்டு மன்னன் ஒருவனும் சேர்ந்து, பாண்டவர் படைக்கு உணவுப் பஞ்சம் வராதிருக்கவும், உணவுப் பிரச்சினையால் பாண்டவர் படை பீதியுற்றுத் தோல்வியடைந்து விடா திருக்கவும் வேண்டிப் பெருஞ் சோறிட்டான் என வில்லிபாரதம் சான்று கூறுகின்றது. எனவே, தமிழ் மன்னன் சம்பந்தம் கொண்ட அந்த பாரதப்போர் பாஞ்சாலத்தில் 18 நாள் நடந்து முடிவில் பாண்டவருக்கு வெற்றியுடன் முடிந்த இந்நாள், இங்கே, காவிரியாற்றங்கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதாம்.

பாரதப்போர் நடந்தது, பஞ்சாபில். ஆனால் கொண்டாட்டம் காவிரியில். பஞ்சாபில் பாயும் பாஞ்சால நதியிலும் இக்கொண்டாட்டமில்லை; அதற்கருகே பாயும் கங்கையாற்றங்கரை களிலும் இக்கொண்டாட்டமில்லை. காவிரியில் மட்டும் வந்து முளைத்துக் கொண்டிருப்பதன் கருத்தென்ன?

2. இதற்குப் புலவர்கள் ஒரு கதை கூறுகின்றனர். தமிழ்நாட்டில் மும் முறை கடற்கோள் ஏற்பட்டதென்று ஆராய்ச்சியாளர் மொழிகின்றனர். இறுதிக் கடற்கோள் ஏற்படுமுன் குமரியாறு, பஃறுளியாறு என்பவைகள் இந்நாட்டில் இருந்ததாகவும் அவை கடற்கோளால் மறைந்து போன பின் னர்த் தமிழ்நாட்டின் நில முனைக்குக் குமரியாற்றின் ஞாபகார்த்தமாகக் குமரி முனை என்னும் பெயர் இடப் பட்டதாகவும், அக்கடற் கோள்களின் ஞாபகார்த்தமாகவே ஆடிப் பதினெட் டாம் பெருக்கில் நோன்பு அனுஷ்டிக் கப்படுகிறதென்றும் கூறப்படுகிறது.

இந்தக் கருத்தேனும் பொருத்த மாகவோ, பகுத்தறிவிற்கேற்றதாகவோ, மக்களுக்குப் பயன்படுவதாகவோ இருக்கிறதா என்று பார்த்தால் அது தான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஏதேனும் ஒரு பகுத்தறிவுக் கொவ்வாத காரியம் நாட்டில் நடைபெறுவதாயிருந் தால், அதனை ஏற்க மறுத்து, அது முட்டாள்தனமாகத் திராவிடத்தில் நுழைந்து விட்ட செயல் என வெளிப் படையாக எடுத்துரைத்து, அதனைக் கண்டித்து ஒழிக்கும் ஆண்மை நம் புலவர்களுள் பலருக்கு ஏற்படுவதில்லை. இத்தகைய செயல்களைப் பகுத்தறிவாளர்கள் கண்டித்து ஒழிக்க முற்படுங்கால், உடனே இப்புலவர்கள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தோடி வந்து, அதற்குப் புத்துரைகள், தெளிவு ரைகள், விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவை கூறி, சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்து வீசி, அச்செயல் திராவிட மக்களுடையதென நிலை நாட்டத் தாங்கள் இந்த பிரிட்டிஷ் ஆட்சியில் கற்ற விஞ்ஞான வித்தை களையெல்லாம் புகுத்தி, தங்கள் அறிவையும், காலத்தையும் பாழ் படுத்திக் கொண்டு பிற மக்கள் முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாக அமைந்துவிடுகின்றனர். பகுத்தறி வாளர்களான புலவர்கள் சிலர் ஆண்மையுடன் வெளி வந்து, இப் புலவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினால், அப்புலவர்களுக்குத் தங்களாலான இடுக்கண் களையெல்லாம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

போகட்டும்; ஆடி பதினெட்டாம் நோன்பு கொண்டாடப்படுவது பாரதப் போர் முடிவை ஒட்டியதாக இருந்தாலும் சரி; அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடற்கோள்களின் ஞாபகார்த்தமாக இருந்தாலும் சரி, இதனால் மக்கள் அடையும் பலன் என்னவென்றுதான் நாம் கேட்கிறோம்.

இந்த ஆடி பதினெட்டாம் நாளன்று காவிரியாற்றங்கரை நெடுக மக்கள் குழுமி, பகுத்தறிவுக்கு ஏற்கத்தகாத செயல்களைச் செய்து, மேலும் மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து போவதைத் தவிர, புலவர் கள் கூறும் கருத்தோ அன்றிப் பிறவோ அம்மக்களுக்குத் தெரியுமா? ஆடி நோன்பு வந்தால் ஏழுக் கன்னி கும்பிட்டு, மஞ்சள் நூல் கட்டிக் கொள் வதும், முளைகளை ஆற்றில் விடுவதும், ஆற்று மணற் பிள்ளையாருக்கு அரிசிப் படையலிடுவதும், அழுக்கேறி மூலை முடுக்குகளில் அடைந்து கிடக்கும் உதவாச் சாமான்களை எரித்து ஆற்றில் தள்ளுவதுமான செயல்களைத் தவிர்த்து வேறென்னதான் நடைபெறுகிறது? வருமானத்தைக் கருதிப் பார்த்தால் புது மாப்பிள்ளைகள் பாடு கொண்டாட்டமாயிருக்கலாம். அதைத் தவிர, அறிவுக்குப் பயன்படும் செயலோ, மக்களை உயர்த்தும் முறையோ, நாட்டுக்கு நலன் உண்டாக்கும் நாட்டமோ இதில் அறவே கிடையாதென்பது நன்கு புலனாகிறது.

இதற்குப் பதிலாக, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி நெருக்கத்தில் இடிபட்டும், உதைபட்டும், காதறுந்தும், மூக்கறுந்தும், நகைகளை இழந்தும் தவிக்கும் காட்சிகளும், புது வெள்ளத்தில் குளிப்பதால் உடல் நிலை கெட்டுப் பின்னர்ப் பலநாள்வரை மருந்தும் கையுமாகத் திரிவதும்தான் ஆண்டுதோறும் இதனால் ஏற்படும் கண்கண்ட பலனாக இருக்கிறது.

எனவே, இனியேனும் தமிழறிஞர்களும், மக்கள் நலனில் ஆர்வ மிக்காரும் முன் வந்து, வெற்றுரைகளை வீம்புக்கேனும் கூறிக் கொண்டிருத்தலை விட்டு, பகுத்தறிவாதிகளுடன் ஒன்றுபட்டு நின்று, இம் மூடத்தனமான செயல்களை அறவே நிறுத்தி விடுமாறு மக்களைத்
தூண்டித் திருத்தும் நற்றொண்டு புரியத் துணிவு கொள்வார்களா என்று கேட்கிறோம்.

திராவிட நாடு பெருமையுற்று, உன்னத நாகரிகமும், கலைச் சிறப்பும் கொண்டது என்ற தனிப் பெரும் பண்டைப் பண்பைப் பெற்று, உலக நாகரிக நாடுகளுள் இதுவும் ஒன்றென நிமிர்ந்து நிற்கவேண்டுமானால், இத்தகைய அறிவுக்கொவ்வாத மூடச் செயல்களுடைய விழாக்கள் அனைத்தும் தமிழ் நாட்டினின்று அறவே அகற்றப்பட வேண்டும். இதற்குச் சான்றுகள் காட்ட சங்க இலக்கியங்கள் தேவை யில்லை; வில்லி பாரதம் வேண்டியதில்லை. பகுத்தறிவுக் கண் கொண்டு, சிந்தனாசக்தியைச் சிறிதேனும் செலுத்தி ஆராய்ந்து முடிவுக்கு வந்தால் இத்தகைய நோன்புகள் திராவிட நாட்டிற்கு எள்ளத்துணையும் நலன் புரிபவை ஆகா என்பது தெள்ளிதிற் புலனாகும்.

------------------------- நன்றி:- “விடுதலை” 3.8.1943

29.7.10

பக்தியைப் பரப்ப இதோ ஒரு வழி!



லண்டனில் மகோற்சவ விழா நடைபெற்றது நியூயார்க்கில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது மஹாகணபதி ஹோமத்தடன் தொடங்கப்பட்டது என்றெல்லாம் பத்தி பத்தியாகச் செய்திகளை வெளியிடுகிறது ஒரு பார்ப்பன ஏடு.

நீங்கள் என்னதான் கரடியாகக் கத்தினாலும், இந்து மதத் தாக்கமும் பக்தியும் நாடு கடந்தும் சாங்கோ பாங்கமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்பதற்காகத்தான் இந்தத் தடபுடல் செய்திகள். இந்தப் பார்ப்பன ஏடுகள் இன்னொரு கைங்கர்யத்தையும் செய்யலாமே!

எங்கள் சிவபெருமான் யார் தெரியுமா? ரிஷி பத்தினிகளின் கற்பைச் சூறையாடிவன். அதனால் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகி, அவன் சிசுனம் அறுந்து விழுந்தது. அதனைப் பார்வதி தேவி தாங்கினாள். அதுதான் சிவலிங்கம் அந்த சிவனுக்குத்தான் இந்தக் கும்பாபிஷேகம்.

மஹாகணபதி யாகம் நியூயார்க்கில் நடக்கிறது. அதன் தாத்பரியம் என்ன தெரியுமா?

எங்கள் கணபதி இருக்கிறாரே அவர் எப்படிப் பிறந்தார் தெரியுமா? எங்கள் சக்திக் கடவுளான பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து பிறந்தவன் என்று பிரமாதமாக ஆதாரங்களைச் சுட்டிக் காட்டி சூட் விடலாமே!

காட்டில் ஆண் யானையும், பெண் யானையும் புணர்வதைப் பார்த்த எங்கள் சிவனும், பார்வதியும் காமவெறியெடுத்து, ஆண் யானையாகவும் பெண் யானையாகவும் உரு மாறிப் புணர்ந்ததால் உடனடியாகப் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைதான் இந்தப் பிள்ளையார்!

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

திருஞான சம்பந்த பார்ப்பனர் பாடிய இந்தத் தேவாரப் பாடல் (வலிவலம் கோவிலில்) பொறிக்கப் பட்டுள்ளதே! அதையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கி வெளியிட்டால் வெளிநாட்டுக்காரர்களும் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தின் யோக்கியதையை விசேஷமாகத் தெரிந்து கொள்வார்களே! பார்ப்பன ஏடுகள் பக்தி சிறப்பிதழ்களை வெளியிடும் பார்ப்பனியத்துக்குத் துணை போகும் ஏடுகளும் வெளியிடுமா?

------------------------------”விடுதலை” 25-7-2010

வெள்ளிக்கிழமை விளக்குவைத்த நேரம் நகையை வெளியில் கொடுக்கலாமா?


மூடநம்பிக்கை
வெள்ளிக்கிழமை விளக்குவைத்த நேரம்


நகை வியாபாரி:- அய்யா! தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கி வந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா? இல்லையா? என்பதை தெரிவித்துவிட்டால் வேறு ஒருவர் வேண்டும் என்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக் கொண்டிருக்கிறார் அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்து விடுங்கள்.

வைதீகர்:- செட்டியாரே அந்த நகை தேவையில்லை. வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குறுக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன். வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ள காசை எண்ணிப் பார்த்தார்கள். அதில் 68 காசுகள் இருந்தது. எட்டு எண்ணிக்கை கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி வருவதில்லை. அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி:- அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள். வேறு ஒருவர் காத்துக் கொண்டிருக்கின்றார்.

வைதீகர்:- ஆஹா, கொடுத்துவிடுவதில் எனக்கு ஆட்ஷேபனையில்லை. காலமே நேரத்தில் வாருங்கள், கொடுத்துவிடுகின்றேன்.

நகை வியாபாரி:- அவர் இன்று ராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர். ஆனதால் தயவு செய்து இப்பொழுது கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்:- செட்டியாரே, தாங்கள் என்ன நாஸ்தீகராய் இருக்கின்றீர்கள். வெள்ளிக்கிழமை, அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா? அது லக்ஷிமி அல்லவா?

நகை வியாபாரி:- என்ன அய்யா! வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டுவருகிறேன் என்று எடுத்துக் கொண்டு வந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால் வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம் என்கின்றீர்களே, இது என்ன ஒழுங்கு! ஊரார் நகைக்கு நாள் என்ன, நேரம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லையே.

வைதீகர்:- (தனக்குள்ளாகவே ‘இந்த இழவு நகையை நாம் ஏன் இந்த மனிதனிடம் வாங்கி வந்தோம்’ என்று நினைத்துக் கொண்டு) என் புத்தியை விளக்கு மாற்றால் புடைக்க வேண்டும், உம்ம கடைக்கு வந்ததே பிசகு. தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும் போதே மணி பத்தரை இருக்கும், நல்ல ராகு காலத்தில் எடுத்து வந்தேன். அது எப்படியானாலும் கலகமாய்த் தான் தீரும், எனக்கு புத்தி வந்தது. இனி இந்த மாதிரி செய்யமாட்டேன். தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி:- இது என்ன அய்யா தமாஷ் செய்கின்றீர்களா என்ன? உங்கள் நகையை யாராவது கேட்டால் நாள் கோள் எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்க ளுக்கு எவன் புத்தி சொல்லிக் கொடுத்தான். அவனைக் கூட்டிக் கொண்டு வாருங்கள். அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன். மரியாதையாய் நகையை கொடுங்கள் நேரமாகுது.

வைதீகர்:- நீங்கள் ‘குடி அரசு’ பத்திரிகை கட்சியை சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரங்களையும் கேலி செய்கின்றீர்களே, அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை, கெட்டது இல்லை. மேல் இல்லை, கீழ் இல்லை, கோவில் இல்லை, குளம் இல்லை, சாஸ்திரம் இல்லை, புராணம் இல்லை, பறையனும் பார்ப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாஸ்திகம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். நீங்களும் அதுபோல பேசுகின்றீர்களே.

நகைக்காரர்:- நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்து கொள்ளும், அதைப் பற்றி நமக்கு கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்து விடும் பவுன்விலை இறங்கப் போகிறது. இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும். வேறு ஒரு ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார். இனி தாமதம் செய்யாதீர் இருட்டு ஆகப் போகிறது, சீக்கிரம் எடுத்துக் கொண்டு வாரும்.

வைதீகர்:- (வீட்டிற்குள் போய் சம்சாரத்துடன் யோசிக்கின்றார்) என்ன, செட்டியார் நகை கேட்க்கின்றார்.

அம்மா: இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லக்ஷிமியை வீட்டைவிட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்:- எல்லாம் நான் சொல்லிப் பார்த்தாய்விட்டது. செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டு வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றார்.

அம்மா:- (பலமாய் சத்தம் போட்டுக் கொண்டு வெளியில் வருகிற போது பேசிக் கொண்டு வருவதாவது) செட்டியாருக்கு புத்தியில்லை. அவர் என்ன செட்டியா? மட்டியா? வீடுவாசல் வைத்து பிழைத்த மனிதனா? நாடோடி தடம் போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கிறான், நான் போய் கேட்கிறேன். என்ன செட்டியாரே உமக்கு புத்தியில்லை, இப்பொழுது தான் ஏதோ கொஞ்சம் ஓகோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்துவிட்டீர். நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய்விடு வீரா அல்லது வேறு ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் என்கிறீரே, அவன் கொள்ளையில் போய் விடுவானா? உமக்குத்தான் புத்தி இல்லா விட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்க வேண்டாமா? வெள்ளிக்கிழமை நகையைப் போய் கேட்கச் சொல்லலாமா என்கின்ற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச் சொல்லி இருக்கிறானே, அத்தனை அவசரம் என்ன?

இந்த சமயத்தில் மகன் வந்து விட்டான்.

மகன்:- என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்? இவர் யார்?

தாயார்: இவரா? இவர் ஒரு நகை வியாபாரியாம். இவர் தலையில் நெருப்பைக் கொட்ட! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசு மாலையைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டுமாம். ரகளைக்கு நிற்கிறார்.

மகன்:- அதெல்லாம் இருக்கட்டும். ஜாஸ்தி பேசாதே? நமக்கு காசு மாலையேது? நம் வீட்டில் காசு மாலை இல்லையே. அப்பாதான் வாங்க வேண்டும் என்று நேத்து மத்தியானம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள்ளாகவா வந்துவிட்டது?

தாயார்: உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ! காலையில் கடைக்குப் போனார், இந்த செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது, அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கிவந்தார். நேற்று நினைக்கும்போதே ராகு காலம், இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போது ராகு காலமே - வழியில் வரும் போது பூனை குறுக்க போச்சுதாம்; அப்பொழுதே உங்கப்பா வேண்டா மென்று தலையை சுத்தியெறிந்துவிட்டு வரவேண்டாமா? அப்படிச் செய்யாமல் என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப் பார்த்தேன். காசு அறுபத்தி எட்டாயிருந்தது. உடனே தலையைச்சுற்றி எறிந்து விட்டேன். உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார். இப்ப வந்து செட்டியார் அவசரப்படறார்; யாரோ வேறே கிராக்கி காத்துக் கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்: ஐயய்யோ! இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாய் இருக்குது. குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது; வெள்ளியாவது, சனியாவது, ராகாவது, கேதாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டு வந்து பெட்டியில் வைத்து பூட்டிக் கொண்டு வெள்ளியுஞ் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது. பேசாமல் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்துவிடு; இல்லாவிட்டால் பெட்டியை உடைத்து விடுவேன் தெரியுமா?

அதற்குள் அப்பா வந்துவிட்டார்.

அப்பா:- என்னடா பயலே பலே அதிகப் பிரசங்கியாய்ப் போய்விட்டே. நான் அப்போதே உன்னை - ‘குடி அரசு’ பத்திரிகையைப் படிக்க வேண்டாம், கெட்டுப்போவாய் என்று சொன்னேனா இல்லையா? அதுபோலவே படித்து கெட்டு குட்டிச்சுவராய் போய் விட்டாயல்லவா? கர்மம்! கர்மம்! இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து ஊரிலுள்ள சிறு பிள்ளைகளையெல்லாம் நாஸ்திகனாக்கி விட்டது.

மகன்:- ‘வெகு நன்றாயிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியை பிடுங்கிக் கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

பிறகு புருஷனும் பெண்ஜாதியும் ராகுகாலத்தில் அந்த செட்டி இடம் நகை வாங்கிவந்ததே பிசகான காரியம். இதுவும் வரும், இன்னமும் எவ்வளவோ கெடுதியும் வரும். என்னை அடிக்க வேண்டு.................லே.

-------------------- சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய உரையாடல் - ”குடி அரசு” - 08.01.1928

28.7.10

சிவனைவிட திருமால் பெரிய கடவுளா?


கொசுவுக்குப் பிறந்தன யானைக் குட்டிகள்!

ஆன்மிக இணைப்புகள் என்று நாளேடுகள் ஒவ்வொரு வாரமும் மூடக் குப்பைகளை வாரிக் கொட்டுகின்றன. வியாபாரப் போட்டி என்பதைத் தவிர வேறு ஒன்றும் இதில் இல்லை யார் அதிகமாகப் பொய்ப் புளுகுவது - யார் ஆபாசமாகக் கயிறு திரிப்பது என்பதில்தான் போட்டா போட்டி.

பக்தி என்னும் சகதிக்குள் மூச்சு முட்டக் கிடக்கும் படித்த படிக்காத பாமர மக்களோ இருக்கவே இருக்கிறார்கள் - இந்தக் கசுமாலங்களைக் காசு கொடுத்து வாங்குவதற்கு.

இவர்கள் அள்ளிவிடும் கதைகள்பற்றி விவரம் அறிந்த சைவர்களோ - அல்லது வைணவர்களோ ஏற்பார்களா என்பது வேறு கதை.

சைவ வைணவ சண்டை என்பது சாதாரண மானதல்ல; வைணவத்துக்குள்ளும், வடகலை, தென்கலை சண்டைதான் சாதாரணமா?

இதோ ஒரு தகவல்: ஆன்மிகச் சிறப்பிதழிலிருந்து...

திருமால் பெற்ற சக்கரம்

முற்காலத்தில் சிவபெருமான் சலந்தரன் என்ற அசுரனை சக்கரத்தால் வதைத்தார். அந்தச் சக்கராயுதத்தை பெற திருமால் விரும்பினார். இதற்காக அவர் திருவீழிமிழலையை அடைந்து பெருமானை வழிபட்டு வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.

ஒருநாள் சிவபெருமான் அருளால் ஒரு பூ குறைந்தது. தாமரை மலருக்குப் பதிலாகத் தனது வலது கண்ணைப் பறித்து சிவனின் திருவடியில் சமர்ப்பித்தார்.

இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் திருமால் முன் தோன்றி சலந்தரனை வதைத்த சக்கரபடையை வழங்கினார். பின்னர் திருமால் சிலகாலம் அங்கே தங்கி வழிபட்டு இருந்தார். தன் பெயரால் ஒரு தீர்த்தமும் உண்டாக்கினார். அந்தத் தீர்த்தம் இப்போது விஷ்ணு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இதுதான் ஆன்மிக இதழின் சரடு!

சிவபெருமானை திருமால் - அதாவது மகா விஷ்ணு வணங்கினார் தினமும் அர்ச்சனை செய்தார்; சிவனின் திருவடியில் பெருமாள் தனது கண்ணைப் பறித்துச் சமர்ப்பித்தார் என்று அளந்து கொட்டியுள்ளார்களே - இதனை அகோபில மடத்து வைணவத் தலைவர் ஏற்றுக்கொள்வாரா?

திருவரங்கம் கோயில் கட்ட காஞ்சி சங்கராச்சாரி யார் பண உதவி செய்துள்ளாரே சிவன் கோயில் திருப்பணிகளுக்கு நீங்கள் நிதி உதவி செய்வீர்களா? என்று அகோபில மடத்து அதிபரான ஜீயரான அழகிய சிங்கரிடம் கேட்டபோது அவர் என்ன சொன்னார்?

நான் சிவன் கோயில்களுக்குச் செய்ய மாட்டேன். ஏன்னு கேட்டா... ஸ்ரீமத் நாராய ணன்தான் எல்லா தெய்வங்களுக்கும் மேற்பட்ட தெய்வம்னு என்னோட சித்தாந்தம். பிரம்மாவை நாராயணன் தன் நாபியிலிருந்து படைத்தான். அந்த பிரம்மா சங்கரனைப் படைத்தான் என்று கதை இருக்கு. அதுபடி பார்த்தா சங்கரனுக்கு நாராயணன் பாட்டன் ஆகிறார். பிரம்மா பிள்ளை ஆகணும். அவங்களும் தெய்வம்தான். தபஸ் பண்ணி அந்த பிரம்மா அந்தப் பதவிக்கு வந்தாலும், அதேபோல சிவன் எத்தனையோ யாகம் பண்ணி, கடைசியிலே தானும் நெருப்பிலே குதித்துச் சக்தி பெற்றார்னு சாஸ்திரம் இருக்கு. இவங்கள்ளாம் புண்ணியம் பண்ணி, தபஸ் பண்ணி தெய்வத் தன்மைக்கு உயர்ந்த வர்கள். ஆனால், நாராயணன் எப்போதும் உள்ளவர். பாக்கிப் பேருக்கு பலன் கொடுக்கிறவர். அவரை வழிபடற நாங்கள் வேறு தெய்வத்தை வழிபடமாட்டோம். நாராயணனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டு மோட்சத்துக்குப் போக வழி செய்து கொண்ட வர்கள், நான்தான் தெய்வம் என்று சொல்லிக் கொள்கிற வேறு தெய்வத்தை வணங்கக் கூடாது. அப்படி எங்களுக்குச் சட்டம் இருக்கு. ஏன்னா அங்கே போனா புத்தி கெட்டுப் போகும்... அதனாலே சிவன்கோயில் திருப் பணிக்கு பணம் இருந்தாலும் தரமாட்டேன்...

(கல்கி, 11.4.1982)

அகோபில மட ஜீயர் கூறுவதிலிருந்து என்ன தெரிகிறது?

சிவனைவிட நாராயணன் (திருமால்) தான் பெரிய கடவுள் என்கிறார் ஜீயர்.

நாம் எடுத்துக்காட்டும் ஆன்மிக இதழ் என்ன கூறுகிறது? சிவன் காலில் தன் கண்ணைப் பிடுங்கி சமர்ப்பித்தான் நாராயணன் என்கிறது.

இதில் எது உண்மை? ஒருக்கால் ஆன்மிக இதழில் அளந்து கொட்டியவர் சங்கராச்சாரியாரின் சிஷ்யராக இருப்பாரோ!

நம்புகிறவன் மடையனாக இருக்கும் பட்சத்தில் கொசுவுக்கு நான்கு யானைக் குட்டிகள் பிறந்தன அதற்கு நான்தான் பிரசவம் பார்த்தேன் என்று எழுதமாட்டார்களா?

---------------------- நன்றி:- “விடுதலை” 28-7-2010

வள்ளலார் மீது திணிக்கப்படும் மூடத்தனம்

அற்புதமா?

வடலூர் வள்ளலார் என்று பெருமதிப்போடும், அன்போடும் போற்றப்படும் இராமலிங்க அடிகள் தொடக்கத்தில் மூடநம்பிக்கைப் பள்ளத்தில் விழுந்தவர்தான். சிறுதெய்வ வழிபாட்டுக் குழியில் சாய்ந்தவர்தான்.

ஆனாலும் ஆறாம் திரு முறை எழுதிய காலத்தில் அவர் தெளிவு பெற்றார். ஆரியத்தின் வேத, ஆகம, வருணக் கொள்ளிகளை அடையாளம் கண்டார். சாடு சாடு என்று சாடினார்.

தமது வாழ்வின் முதற் பகுதி குறித்து பிற்காலத்தில் அவர் எழுதி இருக்கும் முத்துகள் அவர் பகுத்தறிவு ஒளி பெற்றார் என்பதற்கான சான்றுப் பத்திரமாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய் வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார் கள்... இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, கடைசியாக வள் ளலார் சொல்லுகிறார். அப்பொழுது எனக்கு அற்ப அறிவுதான் இருந்தது - அதனால் நம்பினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் திட்ட மிட்டு அவரைத் தீர்த்துக் கட்டினார்கள். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார்,

வள்ளலார் காலத்தில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டின் என்பவர் , புராணம், சாத்திரம் முதலிய வற்றை வடலூர் இராமலிங் கனார் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூடக் கிடைக்காத வண்ணம் எரித்து விட்ட னர் என்றும் கூறுகிறார்.

உண்மையெல்லாம் இவ்வாறு இருக்க, ஆன்மீக மலர் என்று வெளியிடும் தமிழ்நாட்டு ஏடுகள் சிறிது சிறிதாக இராமலிங்கனார் மீது அற்புதங்களைத் திணித்து, அவரை பார்ப்பனிய வைதீகக் குட்டைக்குள் தள்ளப் பார்ப்பது வெட்கக்கேடு!

கூனன் நிமிர்ந்த அதிசயம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுக்கதை வெளி யிடப்பட்டுள்ளது. வடலூரில் தைப் பூச விழா நடந்ததாகவும், அதில் அதிர் வேட்டு வெடித்த கூனன் ஒருவன் காயம்பட்டுக் கருகி வீழ்ந்ததாகவும், நீ எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று வட லூரார் சொன்னதும், கூனன் முதுகு நிமிர்ந்து புத்தொளி பரவி எழுந்ததாகவும் ஆன் மிக இதழ் கதை விட்டுள்ளது.

எந்த மூடத்தனத்தை வள்ளலார் எதிர்த்தாரோ, அந்த மூடத்தனத்தையே அவர்மீது திணிக்கும் சில்லறைத் தனத்தை எண்ணிப் பார்ப்பீர்!

----------------- மயிலாடன் அவர்கள் 28-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பஞ்சாங்கத்தில், சோதிடத்தில் இடம் உண்டா?



சூரியன் அருகே வால் நட்சத்திர வடிவத்தில் புதிய கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இதனைக் கண்டுபிடித்தனர். ஒசிரிஸ் என்று அதற்குப் பெயர் சூட்டப்பட்டது. பூமியிலிருந்து 153 ஒளி ஆண்டு தூரத்தில் இது உள்ளதாம்.

அதெல்லாம் சரி, இன்னும் பஞ்சாங்கத்திலும், ஜோதிடத்திலும் நவக் கிரகங்களுக்கு மட்டும் பலன் சொல்லிக் கொண்டு திரிகிறார்களே - இப்படி புதிது புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கிரகங்களுக்கு என்ன பலனோ!

இதில் விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதை ஒன்று உண்டு. உண்மையான கிரகமான பூமிக்கு ஜோதிடத்தில் இடம் இல்லை. பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு இடம் உண்டாம். ஹி... ஹி...

அதைவிட ஒரு தமாஷ் என்ன தெரியுமா? சூரியன் ஒரு நட்சத்திரம்தான்; ஆனால், ஜோதிடத்தில் சூரியன் கிரகமாம்.

இன்னொரு சுவையான தகவலும் உண்டு.

யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் உண்டே பஞ்சாங்கக்காரர்களுக்கு இவையெல்லாம் தெரியாத காரணத்தால், இவற்றுக்கு ஜோதிடத்தில் பலன் சொல்லப்படவில்லை.

மேலும், ஒரு வயிறு வெடிக்கும் சிரிப்பு!

ஜோதிடத்தில் ராகு, கேது என்று இரண்டு கிரகங்களைச் சொல்லுகிறார்களே - அப்படி எந்தக் கிரகமும் கிடையவே கிடையாது என்று காது செவிடாகும் வகையில் விஞ்ஞானிகள் அடி கொடுக்கிறார்கள்.

இதற்கு மேலும் ஜோதிட நம்பிக்கையா? நம்புபவர்களை எதைக் கொண்டு சாற்ற?

---------------------நன்றி:- “விடுதலை” 27-7-2010

27.7.10

பார்ப்பனர்கள் சண்டாளர்களா?


நாவலர் பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1876). இவர் சைவ மெய்யன்பர் என்றாலும், தமிழ், தமிழர் இனவுணர்வில் யாருக்கும் சளைத்தவர் அல்லர்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணை வராக இருந்தவர்.

இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? ஓர் ஈரோட்டு ராமசாமி நாயக்கரும், ஒரு புலவரும் தானே? என்று அன்றைய சென்னை மாநில பிரதமர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) சட்டப் பேரவை யில் கேலி செய்தபோது ஆமாம் இந்தியை எதிர்ப்பவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால், இந்தியை ஆதரிப்பவர் நீங்கள் ஒருவர் மட்டும்தான்! என்று ஆச்சாரியாரின் முகத்துக்கு முகம் பதிலடி கொடுத்தார் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள்.

ஆச்சாரியார் சொன்ன அந்தப் புலவர் பெருமகன் வேறு யாருமல்லர் நாவலர் சோமசுந்தர பாரதியார்தான். அந்த அளவுக்கு நாவலர் பாரதியார் இந்தி எதிர்ப்புக் களத்தில் தளகர்த்தராகத் திகழ்ந்தார்.

கம்ப இராமாயணத்தைக் கொளுத்தவேண்டும் என்ற விவாதப் போர் 1948 களில் நடந்தது. சென்னையில் அறிஞர் அண்ணாவோடு விவாதம் புரிந்தவர் ரா.பி. சேதுப்பிள்ளை. சேலத்தில் அண்ணாவோடு மோதியவரோ இதே நாவலர் பாரதியார்தான் (14.3.1948).

அந்த விவாதத்தில்கூட தமது பார்ப்பன எதிர்ப்புணர்வைப் பதிவு செய்யத் தவறவில்லை நாவலர் பாரதியார் அவர்கள்.

என்னுடைய 14 வயதிலேயே எனக்குக் கல்யாணம் நடந்தபோது நேரிட்டதைச் சொல்லுகிறேன். எட்டையபுர சமஸ்தானத்தில் ஓர் கிராமத்திலே நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சி உள்ளவன். நல்ல சைவன். இப்போது இருக்கும் சைவம் போன்றதல்ல. என் னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண்மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள். அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது - கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள். திருநெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன்னார்கள் என்று நாவலர் பாரதியார் கூறிய கருத்தும், தகவலும் கருத்தூன்றத் தக்கவையே!

நாவலர் பாரதியார் ஒரு முறை நண்பர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்றிருந்தார். அது பார்ப்பனரால் நடத்தப்பட்டது. அய்யர் கூறிக் கொண்டிருந்த மந்திரங்களைக் கவனித்துக் கொண்டிருந்த அவர் (சமஸ்கிருதமும், பாரதியாருக்குத் தெரியும்) திடீரென எழுந்து, ஓ, அய்யரே மந்திரத்தை நிறுத்து! என்றார்.

கூடியிருந்தவர்களுக்கு ஒரே திகைப்பு! அப்பொழுது நாவலர் சோமசுந்தர பாரதியார் சொன்னார்: இந்தப் புரோகிதன் கருமாதி மந்திரத்தை கல்யாண வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னாரே பார்க்கலாம்.

கூடியிருந்தோர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நாவலர் பக்தர்தான் ஆனா லும், தமிழின உணர்வின் சின்னமாவார்!

--------------- மயிலாடன் அவர்கள் 27-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ஆரிய அலங்கோலம் பாரீர்!

இன்று நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த நாள் (1876)
அதனை ஒட்டிய வரலாற்றுப் பொன்னேடு இங்கே
(24.5.1942 நாளிட்ட அண்ணாவின் திராவிட நாடு இதழிலிருந்து)

சோமசுந்தர பாரதியார்

திருக்கழுக்குன்றத்தில் நடந்தேறிய ஜஸ்டிஸ் மாநாட்டில், தலைமைதாங்கிய பேரன்பர் சோமசுந்தர பாரதியார் தமிழரின் தற்கால நிலை, முற்காலச் சிறப்பு, ஆரிய இயல்பு ஆகியவைபற்றி ஆராய்ச்சிமிக்க ஆற்றலுரை செய்தார்.

பாஞ்சாலி ஓர் கன்னி! கனி என்று குளிர்ச்சியாற் குளறினான் அர்ஜுனன். பகிர்ந்துகொள்வீர் என்றாள் மாதா. பாஞ்சாலி அய்வருக்கும் பெண்டானாள். ஆரிய அலங்கோலம் பாரீர்!

ஆரிய இராமனோ, சீதையைத் தேடச் சென்ற அனுமனிடம், அடையாளத்துக்காகக் கூறிய வர்ணனையில், சொல்லவும் கூசும் வர்ணனைகளைக் கூறுகிறான். ஆபாசத்தை அறிமின்!

காலச்சிறையில் கிடந்துழன்று ஆரியக் கற்பனைக்குப் புலமை மெருகிட்டான் கம்பன்! பித்தனென்பேன் அவனை.

இத்தன்மையான கற்பனைகள் தமிழருக்கு, பண்டை நாள்களிற் கிடையாது. ஆரியம் வந்தே அதனையும் கெடுத்தது.

ஆரியர்களின் கடவுளின் இலட்சணத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணனுக்கு எத்தனை மனைவிமார்? அத்தைமீதும் ஆசைகொண்டான். அதுமட்டுமா? கூட்டங் கூட்டமாகக் கோபிகைகளைக் கூடினான். இவர் கடவுள்!

சுயமரியாதைக்காரர்களைத் திட்டுகிறார்களே வைதீகர்கள், இத்தகைய கடவுட் கதைகளை வைத்துக் கொண்டிருக்கக் கூச்சம் இல்லையா! இதுவா மதம்! மதம் என்றால் திமிர் என்பதே பொருள். தமிழன் கண்டது நெறி. அந்த நெறியினின்றும் வழுவினான், தமிழன் இன்று வதைகிறான்.

தமிழனின் வாணிபம் ரோம் வரை பரவியிருந்தது. தமிழனின் வீரம் வங்கம், கலிங்கம், இமயம் வரை பரவிற்று. பழங்காலச் சங்க நூற்களிலே இவைகளைக் காணலாம். பிறகு வெளிவந்த நூற்கள், இடைச்செருகலும், ஆரியக்கலப்பும் கொண்டவை. அவைகளை நான் மதிப்பதில்லை. தமிழனின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக வள்ளுவன் வழங்கிய குறள் போதுமே. குறளின் குணமறியின், குனியாது வாழுங் குணம் பெறுவர் தமிழர்.

விதி, விதி என்ற வீண்பேச்சு தமிழருக்குக் கிடையாது. தமிழன் சொன்னான், முயற்சியுடன் காரியத்தைச் செய்யத் தொடங்கினால், கச்சையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆண்டவன் ஓடோடிவருவார் என்று! ஊழ் என்ன செய்யும் என்று கேட்டான் தமிழன்! முயன்றால், ஊழைப் பின்னால் தள்ளிவிட்டு, நாம் முன்னேற முடியும் என்று கூறினான் தமிழன். அத்தகைய இனம் இன்று ஏங்கிக்கிடக்கிறது, ஜாதி என்ற சொல்லைக் கேட்டறியாத தமிழரிடையே இன்று எண்ணற்ற ஜாதிகள் காணப்படுகின்றன. நானும் காங்கிரசிலே பன்னெடுங்காலம் இருந்தேன். பணி பல ஆற்றினேன். என்றைய தினம், ஆரிய அமைச்சர், எனது தமிழ் மொழியிலே கை வைத்தாரோ, அன்றே நான் காங்கிரசைத் துறந்தேன்.

இந்த மடத்தனம் மிகுந்த நாட்டிலே, மதபோதனை செய்தால் தான் தலைவனாக முடியுமென்பதைத் தெரிந்துகொண்டுதான், காந்தியார் மகாத்மா பட்டம் புனைந்துகொண்டார். மகாத்மாவானால், மலைமீதேறித் தவங்கிடக்கட்டுமே! மகாத்மாவுக்கு அரசியலிலே, என்ன வேலை?

நீதிக்கட்சியினை பலப்படுத்தி, நமது நாட்டு ஆட்சி நம்மவருக்கு இருக்கும்படியான நிலைமையை உண்டாக்க வேண்டும். தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும்

பேரன்பர் பாரதியாரின் விரிவான சொற்பொழிவு, மக்களின் மனதைக் கொள்ளைகொண்டது. சீர்திருத்தக் கருத்துகளுக்கும், புத்துலக அமைப்புக்கும் ஒத்த கொள்கைகள் பண்டைத் தமிழ் நூற்களில் இருப்பதை, பாரதியார் பலப்பல மேற்கோள்களுடன் எடுத்துரைத்தது கேட்டுத் தமிழர் இன்புற்றனர். அஜானபாகுவான பாரதியார், முறுக்கிவிடப்பட்ட மீசையும், முறுவலும் துலங்க, ஆரிய ஆபாசத்தைப் புட்டுக்காட்டி, அட சனியனே! என்ற ஆலாபனத்தை அடிக்கடி நடத்தியது, கேட்டு ரசிக்கமுடியுமே தவிர, ஏட்டில் எழுதி விளக்க முடியாது. நகைச்சுவை ததும்ப, பொருட்சுவை பொலிவுற, உறுதியும் உத்வேகமும் மிளிர, பாரதியார் தமது பேருரையையாற்றினார்.

ஆம்! மிக வேகமான பேச்சு! அழகான ஆற்றலுரை! ஆனால் அடிக்கடி நிகழ்வதில்லையே என்று மக்கள் எண்ணினர்.

அவர்களின் குறைதீர, பேரன்பர் பாரதியார், இனி அடிக்கடி தமிழருக்கு விருந்தூட்டி, வீரம் செறிந்த நாட்டின் வேதனை தீர்க்க, அறப்போரை நடத்த முன் வருவாராக!

பெரியார்

திருக்கழுக்குன்றம் மாநாட்டைத் திறந்து வைக்க, பெரியார் ஈ.வெ.ரா. வந்திருந்தார். வெப்பத்தை நீக்கிடும் தென்றல்போல், தமிழரிடை பெரியார் இருக்கிறார். அவருடைய அரிய உரையிலே அன்று, புலவர்களும் புதுமையும் என்பது பற்றிய விளக்கம் அழகுற இருந்தது.

நமது புலவர்கள், பெரும்பாலும் வறுமையில் வாடிக்கிடந்தனர். வாழ்க்கைக்கு வழிதேடவே அவர்கள் பாடுபடவேண்டி இருந்தது. ஆகவே அவர்கள் புராணச் சேற்றிலேயே கவிச்செந்தாமரையை விளைவித்தனர். ஆரியரின் அடிமைகளாகவே இருந்து வந்தனர். நல்ல புலவர் என்றால், திருவிளையாடற் புராணத்துக்கு விரிவுரையோ, பெரிய புராணத்துக்குக் கருத்துரையோ எழுதியவராக இருப்பார். மேனாட்டிலே புலவர்கள், இப்படி, மதத்தைக் கட்டிக்கொண்டு அழுவதில்லை. புராணத்திலே புரளுவதில்லை. அவர்களின் புலமை, புத்துலக அமைப்புக்கு உதவிற்று.

தோழர் பாரதியார், இத்தகைய, மேனாட்டுப் புலவர் போன்ற தன்மையுடையவர். அவர், தைரியமாக, மனதிற் பட்டதை எடுத்துரைப்பவர். புராண ஆபாசங்களைக் கண்டிப்பவர். அத்தகையவரை, மாநாட்டுக்குத் தலைமை வகிக்க இசையச் செய்த மாநாட்டு நிருவாகிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

தமிழர்கள் ஆரிய ஆட்சியில் இருந்து பட்டுவரும் அவதிகள் அனேகம். அவை போகவே நீதிக்கட்சி பாடுபடுகிறது. திராவிடநாடு தனிநாடாக அமைந்தால், நமக்கு இந்தக் கஷ்டங்கள் இருக்காது. பிரிவினைக் கொள்கையை, பிரிட்டிஷாரும் ஒப்புக்கொண்டு விட்டனர். ஆச்சாரியாரும் இப்போது பாகிஸ்தானை ஆதரித்துவிட்டார்.

சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானை ஆதரித்து நிறைவேற்றிய தீர்மானத்தைப் பற்றி, நான் கொண்டுள்ள கருத்தை விளக்கி, ஏற்கெனவே ஒரு அறிக்கை, ஆங்கிலத்திலும் தமிழலும் வெளியிட்டேன். அதைத் தோழர்கள் பார்த்திருப்பீர்கள்.

நமது நாட்டுப் பிரச்சினையான, பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் போராட்டத்தைப் பற்றி, ஆச்சாரியார், வாய் திறவாமல், பாகிஸ்தானைப் பற்றி மட்டும் பேசி, முஸ்லீம்களைச் சரிப்படுத்தலாம் என்று கருதுகிறார். அது பலிக்காது.

திராவிட நாட்டுப் பிரிவினைக்கு, ஆதரவு பலமாகிக் கொண்டே வருகிறது. எதிர்பார்க்காத இடங்களிலிருந்தும் ஆதரவு கிடைத்த வண்ணம் இருக்கிறது. சர்.ஸ்டாபோர்டு கிரிப்சிடம் இதனை நாங்கள் வலியுறுத்திக் கூறினோம்.

தோழர் முத்துரங்க முதலியார், என்னைக் காங்கிரசுக்கு வந்துசேர்ந்து, திருத்தும்படி கூப்பிடுகிறார், ஒரு அறிக்கை வெளியிட்டு, காங்கிரசிலிருந்து பார்த்துவிட்டுத்தானே நான் வெளிவந்தேன். மறுபடி வருவது என்னத்திற்கு? தமிழ்நாட்டுக் காங்கிரசையே நாங்கள் கைப்பற்றினாலும், எவனாவது ஒரு ஆரியன் அகில இந்தியக் காங்கிரசைச் சரிப்படுத்திக் கொள்வான். தமிழ்நாடு காங்கிரஸ் கலைக்கப்பட்டு விட்டது என்றும், இன்ன அய்யர், ஸ்பெஷல் ஆபீசராக நியமிக்கப்பட்டு விட்டார் என்றும், மேலே இருந்து உத்திரவு வரும். இதைப்போல முன்பொரு தடவை டாக்டர் வரதராஜுலு நாயுடுவுக்கு நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் தனியாகப் பிரியட்டும். அகில இந்தியக் காங்கிரசுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது. அத்தகைய நிலைமை உண்டானால், நாங்கள் காங்கிரசில் சேர்ந்து, ஆச்சாரியாரைக்கூட எங்கள் இஷ்டம்போல் நடக்கச் செய்யமுடியும்.

பெரியாரின் சொற்பொழிவுக்கு, வியாக்யானம் தேவையா! நுணுக்கமான அரசியல் கருத்துகளையும், பெரியார், மிக எளியமுறையில் விளக்கினார். ஏற்கெனவே ஒரு முறை திருக்கழுக்குன்றம் வந்த பெரியார், மழை காரணமாக அதிக நேரம் பேசமுடியாது போய்விட்டதால் திருக்குழுக்குன்றம் மக்கள் கவலை கொண்டிருந்தனர். மாநாட்டன்று அவர்களின் மனமகிழ பெரியார் பேசினார்.

மாநாட்டில், ஆச்சாரியாரின் திட்டம், பதவி ஏற்கும் மற்றோர் சூழ்ச்சி. திராவிட நாட்டுப் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாமுன்னம் ஆச்சாரியார் அமைக்க விரும்பும் தேசீய சர்க்காரில் ஜஸ்டிஸ் கட்சி சேரக் கூடாது என்ற தீர்மானமும், திராவிட நாட்டுப் பிரிவினைக் கொள்கை ஜஸ்டிஸ் கட்சியின் மூலாதாரக் கொள்கையாக்கப்பட வேண்டுமென்று, ஜஸ்டிஸ் கட்சிக்கு இம்மாநாடு சிபார்சு செய்கிறது என்ற தீர்மானமும், நிறைவேற்றப்பட்டபோது, விசேஷ ஆர்வம் இருந்தது.

மாநாட்டுப் பந்தலில், ஆச்சாரியார், ஜனாப் ஜின்னாவுக்குச் சலாமிட்டு நிற்பது படந்தீட்டப்பட்டு, மாட்டப்பட்டிருந்தது. மக்கள் அதனை மிகவும் ரசித்தனர்.

-----------------------நன்றி:- “விடுதலை” 27-7-2010

26.7.10

பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 4



பெரியார் சொத்து யாருக்கு

நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
  
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே? 
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.  
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது 
  
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!
  
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
 சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
 
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி

பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!


நாம் வணங்கும் கடவுள்கள்

நாம் கடவுளை வணங்குகின்றோம் என்றாலும் பல கடவுள்களை வணங்குகின்றோம்.

இவற்றுள் உயர் கடவுள்கள் மூன்று, அவர்கள் சிவன், விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) ஆவார்கள். இம்மூவருள் இருவரையே சிறந்தவர்கள் ஆகக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்கள் சிவன் விஷ்ணு என்பவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவர்களேயானாலும் இவ்விருவர்களும் பல உருவங்களையும் பல பிறவிகளையும் பல பெயர்களையும் கொண்டவர்கள் ஆவார்கள்.

அதோடு கூடவே பல தனிப்பட்ட செயல்களைக் கொண்டு அவற்றிற்கு ஏற்ற உருவங்களைக் கொண்டவர்கள்.

இவ்விரு கடவுள்களும் அவை சம்பந்தப்பட்ட ஆதாரங்களின்படி ஒருவரோடொருவர் போட்டி, பொறாமை, ஒருவரைவிட ஒருவர் பெரியவர் என்கின்ற அகம்பாவமான கருத்துக் கொண்ட விரோதபாவம் உடையவர்களாகவே இருந்து இருக்கிறார்கள். அவை மாத்திரம் அல்லாமல் இவர்களைக் கடவுள் என்று சொல்லும்படியான லட்சணத்திற்குச் சிறிதும் பொருத்தமில்லாததான பல எதிரிகளைக் கொண்டு எதிரிகளோடு போர் புரிந்தும் பலரைக் கொன்றும் பல ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்தவர்களாகவும் ஆதாரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவர்களது வாழ்வும் ஒரு சாதாரண மனித வாழ்வாகவே இருந்து வருவதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது.

இப்படிப்பட்ட நிலையிலேயேதான் நமது நாட்டில் இருந்து வருகின்ற பல்லாயிரக்கணக்கான கோயில்களில் அமைத்திருக்கும் கடவுள் தன்மைக்கு ஏற்ற இலட்சணத்தோடு கூடியதாக ஒரு கோயிலாவது அமைக்கவே இல்லை.

ஆகவே, நாம் வணங்கும் இப்படிப்பட்ட கடவுள்கள் சிறு தெய்வங்களா? துஷ்டதேவதைகளா? அல்லது உண்மையான தெய்வங்களா என்பது விளக்கப்பட வேண்டியதாகிறது.

இன்றைய காலம் விஞ்ஞானக் காலம் என்பதோடு அறிவு ஆராய்ச்சிக் காலமாகும். மக்கள் சமுதாயத்திற்கு ஒரு கடவுள் இருக்கவேண்டியது அவசியம் என்ற தத்துவத்திற்கு ஏற்பக் கடவுள் உணர்ச்சியை மக்களுக்குள் ஏற்படும்படிச் செய்ய வேண்டியது இன்றியமையாதது என்றால் இன்றைய மனித நிலைமைக்கு ஏற்றபடி அதை மக்களுக்கும் பழக்கினால் ஒழிய மற்றப்படி அந்தந்தத் தத்துவம் நிறைவேறுவதோ பயன்படுவதோ, எளிதான காரியமாகாது என்பதே எனது கருத்து.

இது சமய ஆச்சாரியர்களால் அவசியம் கவனிக்கவேண்டிய காரியமாகும். அப்படிக்கில்லாமல் மேற்கண்ட மாதிரியான கடவுள் தன்மைகளுக்குத் தத்துவார்த்தங்கள் சொல்வதும், சமயச் சம்பிரதாயங்களை வலியுறுத்துவதுமான காரியங்களில் பயத்தைக் கொண்டும், பேராசையைக் கொண்டும் பெரும்பான்மையான மக்களை மேற்கண்ட கடவுள் தன்மைகளை ஏற்க, நம்பச் செய்வது என்பது கஷ்ட சாத்தியமான கரியமாகவே முடியும் என்று கருதவேண்டி இருக்கின்றது.

இது ஒரு புறம் இருக்கக் கோயில்களில் கடவுள் பூசனைகளில் இருகுறைபாடுகள் மக்களுக்குப் பெரும் மானக்கேடான காரியமாக இருந்து வருகின்றது.

அவை: ஒன்று கடவுள் பூசைகளின் போது சொல்லப்படும் தோத்திரச் சொற்களைத் தமிழில் சொல்லாமல் நாட்டுக்கும், நாட்டு மொழிக்கும் சம்பந்தமில்லாத சமஸ்கிருத மொழியில் சொல்வது.

எந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயரந்தவனாக இருக்கின்றான்?
ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்ததிலோ மேம்பட்டவன் என்று
யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா?

மற்றொன்று:- வழிபடுகின்றவர்களைக் கடவுள் இருக்கும் அறைக்குள் சென்று வழிபட அனுமதிக்காமல் வெளியில் நின்றே வழிபட வேண்டும் என்று சொல்லி இழிவுபடுத்துவது.

பின்னையதானது முன்னையதைவிட மிகவும் சிந்திக்க வேண்டிய காரியமாகும். ஏனெனில், பின்னையது அதாவது கடவுள் இருக்கும் அறைக்குள் வழிபடுபவர் பக்தர் செல்லக்கூடாது என்று தடைவிதித்திருப்பது வெறும் பிறவியைக் காரணமாய் வைத்துத் (ஜாதி காரணமாய்) தடுப்பதைத் தவிர வேறு காரணம் ஒன்றும் இருப்பதாகக் கொள்ளமுடியவில்லை.

ஏனெனில், பூசாரிக்கும் பக்தனுக்கும் உள்ள பேதம் என்னவென்று பார்த்தால் பிறவியை ஜாதியைத் தவிர எதுவும் தடையாக இருக்கவில்லை. எந்த விதத்தில் பூசாரி பக்தனைவிட உயர்ந்தவனாக இருக்கின்றான்? ஒழுக்கத்திலோ, நாணயத்திலோ, உடல் சுத்தத்திலோ மேம்பட்டவன் என்று யாராவது எந்தப் பூசாரியையாவது குறிப்பிட்டுச் சொல்லமுடியுமா? அன்றியும் இந்தப் பழக்கம் வடநாட்டுக் கோயில்கள் பலவற்றில் இல்லாமல் இருக்கின்றதையும் கண்டுவந்திருக்கின்றேன்.

நாம் மக்களுள் பிறவியால் உயர்வுதாழ்வு இல்லை என்பதையும் இருப்பதாகக் காணப்படுவதை ஒழிக்க வேண்டுமென்பதையும் கொள்கையாகக் கொண்டவர்கள் என்பதோடு, பலர் கடவுளுக்கு முன்னால் மக்கள் யாவரும் சமம் என்கிற கொள்கை உடையவர்களாகவும் இருக்கின்றோம். இந்த நிலையில் பிறவி உயர்வு, தாழ்வு (ஜாதி) முறையைக் காப்பாற்றவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற காரியமான கோயிலில் கடவுள் அறைக்குள் ஒரு ஜாதி மக்கள் போகக்கூடாது என்று தடுத்து வைத்திருப்பதை எதற்காகப் பொறுத்துக் கொண்டு நாங்கள் கீழ் பிறவி (ஜாதி) மக்கள் என்று தங்களை ஆக்கிக் கொண்டு இருப்பது என்பது அதுவும் இன்றைய நிலையில் இருப்பது என்பதைச் சிறிது சிந்தித்தாலும் அது ஒரு மாபெரும் மானக்கேடான விஷயமாகவே எனக்குக் காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினையினை நான் வலியுறுத்துவதில் இதில் கடவுள் உண்டா இல்லையா என்கிற பிரச்சினை சிறிதும் சம்பந்தப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன். அது ஒவ்வொரு மக்களுடைய சொந்த விஷயம். ஆனால், மானக்கேடு என்பது எல்லா மக்களையும் பொறுத்த விஷயமாகும்.

இந்த நிலையில் பக்தர்கள் கோயிலுக்குப்போவது என்பதை நான் தடுக்க ஆசைப்படவில்லை. ஆனால், கடவுளை வணங்கக் கோயிலுக்குப் போவதாலேயே தன்னுடைய பிறவியை இழி பிறவியாக ஆக்கிக் கொள்ளத் துணிகின்றானே என்பதைப்பற்றித்தான் நான் கவலைப்படுகின்றேன்.

கடவுளைக் கும்பிட வணங்க பிரார்த்திக்கக் கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் என்ன? அவர் அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு ஏன் வணக்கம் பிரார்த்தனை செய்யக் கூடாது? உருவக் கடவுள் வேண்டுமென்றாலும்கூட அதையும் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமே! நீ கடவுள் அறைக்குள் வந்தால் கடவுளுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடும்: தீட்டுக்கழிக்கும் காரியம் செய்யாவிட்டால் கடவுள் சக்தி போய்விடும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கோயிலுக்கு ஏன் போக வேண்டும்? அப்படிப் போகின்றவன் மானம் இல்லை; ஈன உணர்ச்சி இல்லை; நான் ஈனப்பிறவி இழிமகன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; கீழ்மகனாக. மான மற்றவனாக இருக்கச் சம்மதிக்கிறேன் என்ற துணிவு கொண்டவனாவான் என்பதைத் தவிர வேறு என்ன கருத்தைக் கொண்டவனாவான்?

பழி என்றால் மானக்கேடு என்றால் இழிவு என்றால் உயிர் விடவும் வேண்டும் என்ற நீதிக்கு ஆளாக வேண்டிய தமிழ் மகன் வலியப்போய் இழிவையும் பழியையும், மானக்கேட்டையும் சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான் என்றால் இதற்குச் சமயத்தின் பேரிலும் கடவுளின் பேரிலும் சாக்குச் சொல்வதென்றால் அது எப்படி அறிவுடைமையாகும்?

இதைப் பக்தர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

-------------------தந்தை பெரியார் "தமிழகம்" பொங்கல் மலர்

அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக!


பக்தி இலக்கியம்

பக்தி இலக்கியங்கள் ஆற்றிய பங்கு சமீப காலங்களில் மறுக்கப்பட்டு, மறைக் கப்பட்டு வருகிறது என்று மூக்கால் அழுதிருக்கிறார் பா.ஜக.வின் முன்னாள் தமிழகத் தலைவர் திருவாளர் இல.கணேசன் அய்யர்வாள்.

முதலில் ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லித் தீர வேண்டும். பக்தி இலக்கி யங்கள் தமிழில் உண்டு என்று பெருமை பேசும் அவர், அந்தப் பக்தி தெய்வத் தமிழ் கோவில் குடமுழுக்குச் செய்யும்போது பயன்படுத்தப் படக்கூடாது என்று சவுண்டிப் பார்ப்பானிலிருந்து சங்கராச்சாரியார் வரை அடம் பிடிக்கிறார்களே அதற்கு என்ன பதில்?

கரூரையடுத்த திருமுக் கூடலில் உள்ள மணி முத்தீசுவரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்ற காரணத்துக்காக தோஷமாகி விட்டது என்ற கோவிலை மூன்று நாள் இழுத்துச் சாத்தி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் சாங்கோ பாங்கமாகச் செய்த பிறகுதானே மீண்டும் கோவிலைத் திறந்தார்கள்? காஞ்சீபுரம் சங்கராச்சாரி யாரும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரே! பக்தி வளர்த்த தமிழைப் பற்றி அப்பொழுது இல.கணேசன்கள் திருவாய் மலராதது ஏனோ?

சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடினார் ஓதுவார் ஆறுமுகசாமி என்பதற்காக, அவரை தீட் சிதப் பார்ப்பனர்கள் அடித்து உதைத்தார்களே அப்பொழுது ஏன் சமயம் வளர்த்த தமிழுக்காக வக்காலத்து வாங்கி வஸ்தாத்து செய்ய வில்லை இல.கணேசன்?

சமயம் எனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மதத்திலிருந்து தமிழைப் பிரித்துவிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். ஆனால் பார்ப்பனர்கள் என்ன சொல்லுகிறார்கள்? தமிழில் தான் பக்தி சொட்டு சொட்டு என்று சொட்டுகிறது சமயம்தான் தமிழை வளர்த்தது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே கோவில்களில் வழிபாட்டுக்குரிய மொழியாகத் தமிழ் இருக்கக் கூடாது என்பதிலும் குட முழுக்குகள் தமிழில் நடத்தப்படக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறார்களே!

சமயம் தமிழை வளர்த்தது என்பதற்கு ஓர் உதாரணம் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்று போதாதா?

மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்

திண்ணகத் திருவால வாயருள் பெண்ணகத்தெழில் சாக்கியர் பேயமண்

பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!

மதுரையில் கோவில் கொண்ட எம்பெருமானே! பவுத்தர், சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக! என்பது தான் பக்தி வளர்த்த தமிழா? எது தமிழுக்கு நோயோ அதையேதான் பெருமையாகக் கூறும் பார்ப்பனர் களின் போக்கிரித்தனத் தைக் கவனிக்கவும்.

-------------------- மயிலாடன் அவர்கள் 25-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

விஜயன் மற்றும் சோ மீது நடவடிக்கை உண்டா?



விஜயன், விஜயன் என்ற ஒரு வழக்குரைஞர் இருக்கிறார். அவரின் வேலை என்ன தெரியுமா?

சமூக நீதி இடஒதுக்கீடு என்கிற வார்த்தையைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒவ்வாமை (Alargy) என்னும் கிருமி அவரின் ஒவ்வொரு வியர்வைத் துவாரத் திலும் புகுந்து அவரை ஆட்டம் போடச் செய்துவிடும். தானாகவே பேசிக் கொள்வார் சட்டப் புத்தகங்களையெல்லாம் அலமாரியி லிருந்து உருட்டி விடுவார்.

நீதிமன்றத்துக்குச் சென்று ஏதாவது சேட்டை செய்யாவிட்டால், அவரைப் பீடித்த ஒவ்வாமை நோய் அவரை உண்டு இல்லை என்று பார்த்து விடும்.

பார்ப்பனர் அல்லாத அதே நேரத்தில் உயர்ஜாதி மட்டத்தைச் சேர்ந்த இவருக்கு இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர் என்பதால், காதில் பூ சுற்றி ஆடுடா ராமா ஆடு! போடுடா ராமா போடு தோப்புக் கரணம்! என்று பார்ப்பன ஊடகங்கள் விளம்பரக் கோல் எடுத்து ஆட்டும். அவாள் எதிர் பார்ப்புகளுக்குக் கொஞ்சமும் துரோகம் செய்யாமல் குதியாட்டம் போடுவார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தயாரித்துக் கொடுத்த (31சி பிரிவின்கீழ்) சட்டம் அதன் காரணமாக தமிழ் நாட்டில் 69 விழுக்காடு பாதுகாப்பு உறுதிபட்ட நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றவர் இட ஒதுக்கீடு ஒவ்வாமை நோய்க்காரரான இந்த விஜயன்.

1994 முதல் ஒவ்வொரு ஆண்டும் உச்சநீதிமன்றத் திற்குப் படை எடுத்துச் சென்ற இந்தத் திருவாளரின் மண்டையில் இந்த முறை உச்ச நீதிமன்றம் ஆழமாகக் குட்டு வைத்துவிட்டது. ஆடிப்போய்விட்டார் மனிதர். ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லாவிட்டால் அவரின் வீரப் பிரதாபம் என்னாவது!

சூ காட்ட இருக்கவே இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர். விபீடணர்களுக்குப் பூ சூட்டி மேடை கொடுப்பதற்காகவே துக்ளக் இதழை நடத்திக் கொண்டி ருப்பவர் ஆயிற்றே!

இந்த வார துக்ளக்கில் (28-7-2010) திருவாளர் விஜயன் சும்மா பிளந்து தள்ளியிருக்கிறார்.

சமூக நீதிக்கு எதிராக நீதிமன்றங்கள் தீர்ப்பை வழங்கினால், ஆணை பிறப்பித்தால், திராவிடர் கழகம் அதன் தலைவர் போர்க்கொடி தூக்குவதுண்டு இன்னும் சில நேரங்களில் தீர்ப்புகளையே எதிர்த்து தீயிட்டுக் கொளுத்தி சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு சாம்பலை அனுப்புவது எல்லாம் கழகத்துக்குச் சர்வ சாதாரணம். அதற்காக சிறை சென்றதும் உண்டு.

அப்பொழுதெல்லாம் இந்த விஜயன் வகையறாக்களும், சோ ராமசாமி வட்டாரங்களும் எப்படியெல்லாம் தீப்பொறி பறக்க கட்டுரைகளைத் தீட்டுவார்கள் தெரியுமா?

நீதிமன்ற ஆணைகளை விமர்சிப்பதா? நீதிமன்ற தீர்ப்புகளைக் கொளுத்துவதா? இவர்களுக்குச் சட்டம் தெரியுமா? இவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று தரைக்கும் வானத்துக்கும் தாவிக் குதிப்பார்கள்.

இப்பொழுது நிலைமை என்ன தெரியுமா? இந்த வார துக்ளக்கில் திருவாளர் விஜயன் தமது எழுது கோலை வால(ள)கச் சுழற்றித் தீர்த்திருக்கிறார்.

நீதிபதிகளைச் சாடு சாடு என்று சாடுகிறார்.

மறு ஆய்வு செய்ய தமிழக அரசு வேண்டுகோள் வைத்து, அந்த விஷமத்தனமான வேண்டுகோளின் அபத்தத்தை உணராது. அல்லது அறிந்தோ, அறியாமலோ, உச்ச நீதிமன்றம் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில், எந்த ஒரு தீர்ப்பும் கூறாமல், வழக்கையே தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் முடிவுக்கு (மறுபரிசீலனைக்கு) விட்டுவிட்டது. அதற்கு ஒரு வருட காலம் நிர்ணயமாக அளித்துள்ளது.

17 வருடங்கள் நிலுவையில் இருந்த ஒரு முக்கியமான பிரச்சினைக்கு ஒரு வழியாக எந்தத் தீர்ப்பும் சொல்லாமல், மீண்டும் வழக்கை திருப்பி அனுப்பியதன் மூலம், பிரச்னை அதன் முதல் கட்டத்திற்கே வந்து சேர்ந்தது. மீண்டும் நீதிமன்ற பரிசீலனைக்கு எடுத்துச் சென்றால், இன்னும் எத்தனை வருடங்கள் இந்த நிலையற்ற நிலை தொடருமோ? சீர்வாய் கூறியது போல், தீர்ப்பளிக்கத் தயங்கும் நீதிபதிகள் தாங்கள் ஏற்கும் பதவிப் பிரமாணத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறார்கள் என்றே அர்த்தம். முடிவெடுக்க வேண் டியவர்கள் முடங்கிக் கிடந்தால், நீதியும், தர்மமும் கண்ணைக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

இதன் மூலம் வழக்குரைஞர் விஜயன் என்ன சொல்லுகிறார்?

நீதிபதிகள் பதவிப் பிரமாணத்திற்கு முரணாக அதாவது சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார்கள். முடிவெடுக்கவேண்டிய நீதிபதிகள் முடங்கிக் கிடக்கிறார்கள் நீதியும், தர்மமும் கண்களைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான் அதாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூவரும் (தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், சுதந்திரகுமார் ஆகிய மூவரும்) நீதிக்குப் புறம்பாக நடந்துகொண்டு விட்டனர். தர்மத்துக்கு விரோதமாகச் செயல்பட்டுள்ளனர் என்று குற்றஞ் சாற்றியுள்ளனர்.

கடைசியாக நீதிமன்றத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை என்று 5 குற்றப்பத்திரிகைகளையும் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் மீது படித்திருக்கிறார்.


--------------------------------------------------------------------------------------------------------------

நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம்
அவர்களைச் சாடும் விஜயன்

17 வருடம் காத்திருந்ததற்குப் பிறகும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் அடிப்படை உரிமை பிரச்சினையை ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்த்து வைக்காமல் மீண்டும் அரசியல்வாதிகள் கையில் (பிற்படுத்தப்பட்டோர் கமிஷனின் தலைவர் முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் கூட அரசியல்வாதிதான், பா.ம.க.வினை ஆதரிப்பவர்) கொடுத்துவிட்டது . வழக்குரைஞர் விஜயன் இவ்வாறு துக்ளக்கில் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைச் சிறுமைப் படுத்தியதோடு அல்லாமல், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களை பா.ம.க.வைச் சேர்ந்தவர் என்று முத்திரை குத்தியுள்ளார்.

இது நீதிபதியின் அந்தரங்கத்தைக் கொச்சைப் படுத்துவதாகும். இதன் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி நடவடிக்கை எடுக்கலாமே!
-------------------------------------------------------------------------------------------------

சோ மீதும் நடவடிக்கை உண்டா?

கேள்வி: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது பற்றி?

பதில்: தனது முந்தைய தீர்ப்பை ஒட்டி இப்போது தீர்ப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் தயக்கம் காட்டியிருக்கிறது. நீதிமன்றம் தனது பொறுப்பை பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் பக்கம் தள்ளி விட்டிருக்கிறது. வக்கீல் விஜயன் சொல்வது போல, இது இப்போதைக்கு பொறுப்பைத் தட்டிக் கழிக்கிற வேலையாகத்தான் இருக்கிறது. வேண்டாத வாதங்களுக்கும், மேலும் குழப்பத்திற்கும்தான் இது வழி செய்யும்.

துக்ளக் 2872010 பக்கம் 10

சோவும் என்ன எழுதுகிறார் உச்சநீதி மன்ற நீதிபதிகள் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை தட்டிக் கழித்துள்ளனர். குழப்பத்திற்கு இடம் கொடுத்து விட்டனர் என்று வெளிப்படையாக நீதிபதிகள் மீது பழி சுமத்தியிருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்.

-----------------------------------------------------------------------------------------

தீர்ப்புகளை எதிர்த்து திராவிடர் கழகம் செயல் பட்டால் கழகத் தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது சிறைக்கும் அனுப்பப்படுகின்றனர்.

வழக்குரைஞர் விஜயனோ, நீதிபதிகளை பொறுப் பற்றவர்கள் என்றும், நீதி தவறியவர்கள் என்றும், தர்மத்துக்கு விரோதமானவர்கள் என்றும் மிக வெளிப் படையாக எழுதியுள்ளாரே இவர்மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?

நீதிபதிகளைக் குற்றவாளிகள் போல சித்திரிக்கப்பட்ட கட்டுரையை வெளியிட்ட துக்ளக்கின் மீதும் அதன் ஆசிரியர் சோ மீதும் என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசம்?

சட்டம் எல்லோருக்கும் பொது என்றால், திராவிடர் கழகத்திற்கு ஒரு நீதி இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கு இன்னொரு நீதி என்று இருக்க முடியாதே!

அரசு என்ன செய்யப்போகிறது? நீதித் துறை என்ன செய்யப் போகிறது?

எங்கே பார்ப்போம் !


-------------------- "விடுதலை” 25-7-2010


25.7.10

இராமாவதாரத்திற்குக் காரணம் என்ன தெரியுமா?

திராவிட மக்களை இழிவுபடுத்தும்
புராணங்கள் ஒழிக்கப்படவேண்டும்!

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித் தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும், நம் கலாச்சாரத்தை மறந்து ஆரிய கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய இழி மக்களாக, சூத்திரர்கள், பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டு மென்றால் மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலை பெற்றவராவோம்.

மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய, முழுப் போராட்டமாகவோ, முடிவான போராட்டமாகவோ ஆகிவிடாது. சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியில் மேம்பாடும், வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடாது. மேலும் இவ்விழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல், சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும் அதாவது வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரா முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும், தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தான்!

இவர்கள் எல்லோருமே இன்றில்லையானாலும், நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க, அதற்காக புரட்சி செய்ய ஒன்றுபடப் போவது நிச்சயம். எனவேதான் நாம் பல எதிர்ப்புகளுக்கிடையேயும் திராவிடர் கழகம் என்கிற பேராலேயே தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த ஆரியர் _ திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியரால் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்து கலாச்சாரத்திற்கு அதாவது ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.

எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிடர் கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. திடமான உறுதியுண்டு.

வெள்ளையனுடைய சுமார் 200 வருட கால ஆட்சியும், நமது அய்ந்து வருட கால பகுத்தறிவுப் பிரசாரமும், ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை, குறிப்பிட்டத்தக்க அளவுக்குக் குறைத்திருக்கின்றன. சமுதாய உயர்வு, தாழ்வுகள் இன்று அவ்வளவாக மக்கள் மனதைப் பீடித்து நிற்கவில்லை. முன்பெல்லாம் ஓர் உயர் ஜாதிக்காரனுக்கு ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு வயிறெல்லாம் வேதனைப்படும்.

இன்று அப்படிக்கில்லை. யார் கடையிலும் டீ சாப்பிடுவதும், யார் கையாலும் தண்ணீர் குடிப்பதும் சகஜமாகி விட்டது. இன்னார் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதே தனக்குப் பெருமை என்று இருந்தது போய், இப்போது தனக்கு அது மரியாதைக் குறைவு என்று நினைக்கும்படிக்கும் அருகிலுள்ளவரும் இன்னும் இந்தக் காட்டுமிராண்டி காலப் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவும் ஆன நிலை ஏற்பட்டிருக்கிறது. குருகுலப் போராட்டத்தின்போது பார்ப்பனர்களுக்கு தனி இடமும், தனி உணவும் இருக்க வேண்டும் என்று கிளர்ச்சி செய்தது போய், அவர்களே பெரும்பாலோர் இன்று ஜமபந்தி போஜனம் பற்றியும், சம உரிமை பற்றியும் பேச முன்வந்திருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா மாணவ உணவு விடுதிகளிலுமே ஒரே சமையல், ஒரே இடத்தில் எல்லோரும் சமமாய் உட்கார்ந்து சாப்பிடல் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண் கொள்வது கொடுப்பது என்பது தவிர்த்து மற்ற எல்லாவற்றிலுமே ஓர் அளவுக்காவது சமத்துவம் வந்திருக்கிறது. அதிலும் பார்ப்பனருக்கு சகிப்புத்தன்மை வந்து இருக்கிறது. மனு தர்மத்தைப் பற்றிப் பேசினால் எங்கு தம் நிலை இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாகிவிடுமோ என்று பார்ப்பனர்களே மனுதர்மத்தைப் பற்றிப் பேச அஞ்சும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடவுள் விஷயத்திலும் முன்போல் யாரும் பக்தி செலுத்துவதில்லை. அதுவும் கோயிலில் தாசிகள் ஒழிக்கப்பட்டுவிட்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் இருபாலிலும் வெகுவாகவே குறைந்துவிட்டது. தேர் திருவிழாக்களிலும் மக்கள் முன்போல் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. கடவுள் பக்தி குறையவே, கடவுளுக்குக் கோவில் கட்டுவதும், மானியம் கொடுப்பதும் குறைந்துபட்டு, பள்ளிக்கூடம் கட்டவும், ஆராய்ச்சிக் கல்லூரிகள் அமைக்கவும், ஆஸ்பத்திரி கட்டவும் பணம் உதவப்பட்டு வருகிறது.

என்றாலும் இவையே போதுமானதாகிவிடாது. இன்னும் புராணங்கள் மதிக்கப்பட்டு வருகின்றன. புராணப் பாத்திரங்களே நமக்குக் கடவுள்களாகவும், புராணக் கருத்துகளே நமக்கு மதக் கருத்துகளாகவும், பண்டிகை விரதங்களாகவும் இன்னும் இருந்து வருகின்றன. பழங்காலத்தில் சரித்திரத்துக்கு முந்திய காலத்தில் ஆரிய கலாச்சாரத்தை யார் யார் எதிர்த்தார்களோ, அவர்களை இழித்தும், பழித்தும் பேசி அவர்கள் ஒழிக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறும் கதைகளே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும். ஆரியத்தை எதிர்ப்பவன் இன்ன கதிக்குள்ளாவான் என்பதை எடுத்துக்காட்டி, மக்களைப் பயமுறுத்தி ஆரியத்தின் உயர்வில் நம்பிக்கை கொள்ளுமாறு செய்வதற்கென்றே எழுதப்பட்டனவாகும். அவைகள் ஆரியத்தை எதிர்த்தவர்கள் அத்தனை பேருமே நம்மவர்கள்; திராவிடர்கள். அவர்கள் அத்தனை பேருமே ஒழுக்க ஈனர்களாக, அயோக்கியர்களாக ஆரியத்தில் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத் திராவிடர்களை ஒழித்த எல்லாருமே நமக்கு கடவுளர்களாக ஆக்கப்பட்டு, அவற்றை நாம் இன்றும் தொழுது வருகிறோம். இராவணனை அழித்த இராமன் நமக்குத் தெய்வம். இராவணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் நமக்கு ஆழ்வார். இரண்யனை ஒழித்த நரசிம்மாவதாரம். நமக்குக் கடவுள், நரகாசுரன் ஒழிக்கப்பட்ட தினம், நமக்குப் புண்ணிய தினம். இப்படிப்பட்ட கதைகளே தான் நம் புராணங்கள். என்னே அறியாமை!

நம்மவரின் முன்னேற்றத்திற்காக, நம்மவரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட நம் மன்னர்கள் ஒழிக்கப்பட்ட தினங்களா நமக்குப் புண்யதினங்கள்? நம்மவரை வென்ற கதாபாத்திரங்களா நமக்குத் தெய்வங்கள்?

இவ்வறியாமையிலிருந்து நாம் என்றுதான் மீட்சி பெறுவது? மதம் என்றால் மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கத் தக்கதாக இருக்க வேண்டும்.

இஸ்லாம் மதத்தைப் போன்றோ, பவுத்த மதத்தைப் போன்றோ, கிறித்தவ மதத்தைப்போன்றோ நல்லொழுக்கத்திற்கான சில கோட்பாடுகளைக் கொண்டதாக நம் நீதியும், புராணங்களும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மதத்தை சிலர் ஏற்று நடப்பதில் ஆட்சேபணையில்லை. ஆனால், நாம் இன்று கடைப்பிடித்து வரும் மதம் அப்படிப்பட்ட மதம் அல்லவே.

உலகிலுள்ள மற்றவர்களெல்லாம் உருவமற்ற கடவுளை வணங்கும்போது, நம் கடவுளர்களுக்கு உருவங்கள் பலப்பல. அதற்கு பெண்டுகளும், சுற்றமும் ஏராளம். ஆடை, துணிமணி, சோறு, படையல் ஏராளம். அவற்றின் பேரால் பிழைத்துவரும் சோம்பேறிக் கூட்டங்கள் பல ஆயிரம். இவற்றில் நம் மடமைக்கு எல்லை காணவே முடியாதே?

புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல நீதி, நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள் நாலு பேருக்கு ஏதேனும் உதவி செய்து, உனக்கு அடிமையாக்கிக் கொள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இன்றும் பார்ப்பனர்கள் நன்மையடைந்து வருகிறார்கள். இராமன், இராவணனைக் கொன்றது விபீஷணன் உதவியால்; வாலியைக் கொன்றது சுக்ரீவன் உதவியால், விஷ்ணு இரண்யனைக் கொன்றது பிரகலாதன் உதவியால், இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரியும்.

எனவேதான் இன்றும் நம்மவர்கள்களான ஓட்டாண்டிகள் பலருக்கு தகர போணிகள், சிலருக்கு பதவிகள், உயர் உத்தியோகங்கள், லைசென்சு, பர்மிட்கள், தியாகி மான்யங்கள் கொடுத்து நம் மீது உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள்.

பணம், பதவி என்றால் மானங்கெட்ட மக்களுக்கு ஆசை ஊறத்தானே செய்யும்? சுலபத்தில் அந்நியருக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். அதனாலேயே ஆரியம் இன்னும் இந்நாட்டில் கொட்டம் அடிக்கிறது.

முஸ்லிம்கள் ஒரு சமுதாய மக்கள். அவர்களில் யாரேனும் ஒருத்தர் ஏதேனும் சொன்னால், இது நமது நன்மைக்கு உதவும் என்று தெரிந்தால், உடனே அவர்களில் பெரிதும் எல்லோரும் அதை ஏற்று ஒற்றுமையோடு அதைப் பின்பற்றுவார்கள். பார்ப்பனர்களும் அப்படித்தான். தன் சமுதாய நன்மைக்கான காரியம் ஏதேனும் சொல்லப்படுமானால், அதனை எல்லோருமே ஏற்று அதன்படி நடப்பார்கள். அதனால்தான் பார்ப்பனர் நினைத்தாலும், முஸ்லிம்கள் நினைத்தாலும் உடனுக்குடன் வெற்றி பெறும் காரியங்கள், நாம் நினைத்தாலும் அதற்காக அரும் முயற்சிகள் பல செய்தாலும், வெற்றி பெறாமல் இருந்து வருகின்றன.

நம்மவருக்குள் ஒற்றுமையில்லை. பொறாமை அதிகம். சுயநலமே நமக்கு பெரிதாய் இருந்து வருகிறது. சகோதரியை, தாயை, மகளை தாசியாக விட்டு வாழும் வாழ்க்கை இன்னமும் திராவிடரில்தான் உண்டு. எனவேதான் நாம் பலகாலமாகவே அந்நியருக்கு ஆட்பட்டுக்கிடக்கிறோம். நமக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும்.

ஒவ்வொருத்தனும் சமுதாய நலனையே பெரிதாகக் கொண்டு அந்நிய கலாச்சாரத்திலிருந்து, அந்நிய ஆதிக்கத்திருந்து விடுபட முயற்சி செய்தல் வேண்டும்.

தமிழர்கள்தான் ஆதி முதல் ஆரியத்தை வெறுத்தவர்கள் என்று பேர். ஆனால், அவர்கள்தான் இன்று ஆரியத்தை, ஆரியக் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முதன்மை பெற்றிருக்கிறார்கள். கம்பராமாயணம் நம்மை இழிவுபடுத்தும் நூல். அதில் வரும் இராமன் மகா கொடியவன். நாணயம் அற்றவன். அதில் வரும் இராமனின் சுற்றத்தார் மகா பித்தலாட்டக்காரர்கள் என்றெல்லாம் 25 வருடமாகக் கத்தி வருகிறோம். என்றாலும் நம்மவரே அதிலும் மகா மகா புத்திசாலிகளே, இராமாயண விழா, கம்பர் விழா நடத்துவதில் முனைந்திருக்கிறார்கள். அந்த இராமாயணத்தை யானை மீது வைத்துக்கொண்டு ஊர்வலம் வருகிறார்கள்.

இராமாவதாரத்திற்குக் காரணம் என்ன தெரியுமா? மகாவிஷ்ணு மகா அழகியான ஓர் அசுரனுடைய மனைவி மீது மோகம் கொண்டாராம். அவள் சம்மதிக்கவில்லையாம். அந்த அசுரனை சிவனைக் கொண்டு சாகடித்து அந்த உடலில் புகுந்து கொண்டு, அவளை அனுபவித்தாராம். அதை அவள் எப்படியோ தெரிந்து கொண்டு, நீ ஒரு மனிதனாகப் பிறந்து உன் மனைவியை இன்னொருத்தன் கொண்டு சென்று அனுபவிக்க, நீ வேதனைப்பட வேண்டும் என்று சபித்தாளாம். அந்த சாபத்தை அனுபவிக்கத்தான் விஷ்ணுவுக்கு இராமாவதாரம் ஏற்பட்டதாம். கடவுள் அவதாரம் ஆயிற்றே ஒழுங்காகவாவது அவதரிக்கக் கூடாதா? யாரோ தசரதனாம், அவனுக்கு 60,003 பேர் மனைவிகளாம். எங்காவது அடுக்குமா? இது தினத்திற்கு ஒரு மனைவி என்று முறை வைத்துக் கொண்டால்கூட, ஒரே மனைவியை இரண்டாம் முறை சந்திக்க 150 வருடங்களுக்கு மேல் ஆகிவிடுமே. அவர்கள் குடியிருக்க ஒரு பெரிய முனிசிபாலிடியே போதாதே! அவன் 60,000 வருடங்கள் அரசாண்டானாம். இருந்தும் ஒரு பிள்ளைகூட பிறக்கவில்லையாம். என்னே வெட்கக் கேடு? அதற்காக யாகம் செய்கிறார். தன் மனைவிகளை புரோகிதர்களிடம் ஒப்படைக்கிறார். அவர்கள் பிள்ளைகள் கொடுத்து அதற்கு கைம்மாறாக பொன் பெற்றுச் செல்கிறார்கள். இப்படிப்பட்ட காரியங்களாலா கடவுளானவர் அவதரிப்பது? கடவுளாக அவதரித்த அந்த இராமனின் யோக்கியதை எப்படிப்பட்டது தெரியுமா? பரதனுக்குரிய பட்டத்தை தான் அடைய தன் தகப்பனாரோடு சூழ்ச்சி செய்கிறான். பரதன் வருவதற்குள்ளாகவே பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று தகப்பன் கூறியதற்கே அவனோடு ஒத்துழைக்கிறான். அவன் மட்டுமல்ல, அவர்களின் குலகுருவான வசிஷ்டனும் உடன் ஒத்துழைக்கிறான். ஆகவே, திருமணத்தின் போதோ ஜப பட்டம் அவர்களுக்கு உரிமையாக்கப்பட்டதென்பதையும், தசரதன் அவளுடைய பிரதிநிதியாகவே அரசாண்டு வந்தான் என்பதையும் நன்றாக உணர்ந்தும்கூட, வசிஷ்டன் ஒத்துழைக்கிறான். போகட்டும். இராமன் காட்டிலிருந்து திரும்பி வந்து அரசாட்சி செய்கிறானே, அப்போதாவது ஒழுங்காக அரசாள்கிறானா? எவனோ ஒரு வண்ணான் எவனோடோ ஓடிப் போயிருந்த சீதையை இவன் அழைத்து வந்து விட்டான்; அவள் கர்ப்பவதியாகி இருக்கிறாள் என்று கேவலமாகப் பேசினான் என்பதற்காக தன் மனைவியின் கற்பில் சந்தேகம் கொண்டு உடனே கர்ப்பத்தோடு காட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறான்.

--------------------------------------------------------------
இந்த ஆரியர் திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியரால் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்து கலாச்சாரத்திற்கு அதாவது ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால் அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.

எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிடர் கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள். அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. திடமான உறுதியுண்டு.
------------------------------------------------------------

ஒரு மன்னன் நீதி செலுத்தும் முறையா இது? அதிலும் கடவுள் நடத்தும் நீதியா இது? எவனோ தெருவில் போகிறவன் குறை கூறினான் என்று தன் மனைவியைக் காட்டுக்கு அனுப்பக் கூடியவனும் எங்காவது நீதிமானாக ஆக முடியுமா? கடவுளாக முடியுமா? அவன் தம்பி அவளை பொய் சொல்லி ஏமாற்றி, நந்தவனத்திற்கென்று அழைத்துச் சென்று, காட்டில் தனியே விட்டு விடுகிறான். என்ன என்று அவள் கேட்டபோது, அண்ணன் அவள் மீது சந்தேகப்பட்டு, அப்படி காட்டில் விட்டு விட்டு வரும்படி சொல்லியதாகக் கூறி விடுகிறான். அவள், அப்படியா சங்கதி, இதே பார். நான் இப்போதே கர்ப்பவதியாகத்தான் இருக்கிறேன். அப்புறம் யாருக்கோ உண்டாயிருக்கிறேன் என்று சொல்லி விடப் போகிறார் என்று தன் வயிற்றைக் காட்டி, தன் கணவனிடம் அதைச் சொல்லும்படி கூறி அனுப்புகிறாள். என்னே கேவலம்? எத்தனை தடவை தான் இம்மாதிரியான தொல்லைக்குள்ளாவது? ஏ பூமாதேவி! நான் உன்னோடு கலந்து விடுகிறேன். கொஞ்சம் வழி விடு! என்று ஏதோ குழியில் விழுந்து சாகிறாள். கடைசி வரை சீதை தன்னை ஒரு பதிவிரதை என்று ஒப்புக் கொள்ளவே இல்லை. இராவணனிடமிருந்து சிறை மீட்டுச் சென்றபோதும், என் சரீரத்தைப் பற்றிக் கேட்காதே. என் மனம் இன்னொருத்தனை நாடவில்லை என்பதற்காகத்தான் செல்கிறாள். இராவணன் பராக்கிரம வீரன். அவனிடம் சிக்கிக் கொண்டு விட்டேன். நான் பெண். என்ன செய்ய முடியும்? என்று கூறினாள்.

தன் மனைவி மீது சந்தேகப்படுபவனும், மோசத்திலும், பித்தலாட்டத்திலும் கைதேர்ந்தவனும் ஆன இராமனா நமக்குக் கடவுள்? அவனுடைய அப்படிப்பட்ட மனைவியையா நம் தொழுவது?

பின்னாடியாவது யோக்கியனாக அரசாண்டிருக்கிறானா இந்த இராமன்? யாரோ ஒரு பார்ப்பனப்பிள்ளை இறந்துவிட்டது என்பதற்காக எங்கோ ஒரு காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் என்ற திராவிடனை வாளால் வெட்டிக் கொல்கிறான். இப்படியெல்லாம் நடந்திருக்குமென்று நாம் கருத முடியாது என்றாலும், இப்படிப்பட்ட ஆபாசமாய் கடவுள் கதை எழுதலாமா? மெய்யென்றாலும், நம்பலாமா? இந்தப்படியான கதையில் வரும் பாத்திரங்களும், நடப்பும் நமக்குக் கடவுளும், கடவுள் நீதியும் ஆகலாமா என்றுதான் சொல்கிறேன். இது அறிந்தும் ஏனோ நம் மக்களுக்கு புத்தி வரவில்லை. ஆரிய மோகம் இன்னும் அழிந்தபாடில்லை.

ஆகவே, தோழர்களே, இப்படிப்பட்ட மடமை, இழிவு நீங்கிய தமிழ்ப் பணியை வளர்ப்பதே, தமிழ்க் கலாச்சாரத்தை வளர்ப்பதே, உங்களது முக்கியக் கருத்தாகக் கொண்டு நீங்கள் பாடுபட வேண்டும். ஆரியக் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டாலொழிய நமக்கு நல்வாழ்வில்லை; முன்னேற்றமில்லை. நம் தமிழர்களுக்கும் ஆரிய கலாச்சாரத்துக்கு அடிமைப்பட்டு, ஆட்சி செலுத்தி கோயில், குளம், சத்திரம், வேத பாடசாலை கட்டிய வீணர்களே ஆவார்கள். நமக்கு இலக்கியங்கள் என்பவைகளும் பெரிதும் இப்படிப்பட்டவைதான். ஆதலால், எல்லாத் துறைகளிலும் ஆரிய ஆதிக்கம் அகல நீங்கள் பாடுபட வேண்டும் என்பதுதான் தமிழ் இளைஞர்களாகிய உங்களுக்கு எனது வேண்டுகோள். இதைவிட இந்நாட்டைப் பொறுத்தவரை வேறு முக்கிய பொதுநலத் தொண்டு நமக்கில்லை. எனவே இதில் ஊக்கம் காட்டுங்கள் என்று கூறி முடித்தார்.

24.1.1950இல்
சென்னை ராபின்சன்பார்க் கூட்டத்தில்
தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை (விடுதலை 26.1.1950)