
இந்தியாவை இலங்கை என்றைக்காவது மதித்ததுண்டா?
இன்று வரை ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்தாதது ஒன்றே போதுமே!
அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை இன்று வரை சிங்கள அரசு அமல்படுத்தவில்லை. ஏன் இன்று இதுவரை இந்திய அரசு ஒரு வார்த்தைக் கேட்டதுண்டா? அதை வலியுறுத்திச் செய்ய வற்புறுத்-தியதுண்டா? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்..
திருச்சியில் 23.6.2009 அன்று ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஜெயலலிதா பின்னாலே போகலாமா? நமக்குள்ளே ஒற்றுமை இல்லை. மக்களுக்குத் தெளிவு ஏற்பட வேண்டும். நம்முடைய எதிரி சிங்கள ராஜபக்சேவே தவிர இங்கிருக்கிறவர்கள் அல்லர். தேர்தல் நேரத்திலே ஜெயலலிதா அம்மையார் வேஷம் கட்டி ஆடி உச்சக்கட்டத்தில் சொன்னார், தமிழ் ஈழத்தையே பிரிப்பேன்; அதற்காக இராணுவத்தை அனுப்புவோம் என்றெல்லாம் சொன்னார்களே. இங்கிருந்து இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவதற்குத்தான் கொட நாட்டிலே திட்டம் தீட்டுகிறார்களா? கேள்வி கேட்க மாட்டார்களா?
கருமத்திற்குரியவன்
முன்னாலும் பேசியவர்கள் நாங்கள், பின்னாலும் பேசப் போகிறவர்கள் நாங்கள் (கைதட்டல்) காரணம் என்னவென்று சொன்னால், கருமத்திற்கு உரியவன் கடைசி வரையிலே இருப்பான்.
நாங்கள் அரசியலுக்காக, பதவிக்காக ஓட்டுக்காக, பவுசக்காக பேசக்கூடியவர்கள் அல்ல. எங்கள் இரத்தத்தில் ஊறியிருக்கிறது, உறைந்திருக்கிறது. இந்த உணர்ச்சியை யாராலும் எங்களிடத்திலேயிருந்து வெளியே கொண்டுவந்திருக்க முடியாது.
இன்றைக்கும்அடுத்த கட்டம் என்ன என்று சொல்லக்கூடிய நிலையிலே நாம் வேகமாக வந்திருக்கின்றோம்.
பிறந்திருக்கவே மாட்டார்கள்
இன்று நேற்று அல்ல; திடீரென்று நேற்று ஆரம்பித்து இன்றைக்குப் பேசக்கூடியவர்கள் அல்லர். உங்களுக்கு ஓர் உதாரணத்தைச் சொல்லுகின்றேன். இதே ராஜீவ் காந்தி _ ஜெயவர்த்தனே ஒப்பந்தம். இந்த புத்தகம் எப்பொழுது போடப்பட்டது?
எங்களை விமர்சிக்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும் இந்தப் பிரச்சினையைப் பற்றி நாங்கள் பேசுகிற காலத்திலே அவர்கள் பிறந்தது கூட கிடையாது. 1986லே அவர்கள் ஒப்பந்தம் போட்டார்கள். ராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே போட்ட ஒப்பந்தத்தை சிங்களவர்களால் நடத்த முடியாது. அது அரசியல் தீர்வு அல்ல என்று சொன்னோம். நாங்கள் சொன்னது இன்றைக்கு நடைமுறையிலே வந்ததா? இல்லையா? கிழக்கையும், வடக்கையும் இணைப்போம் என்று சொல்லியிருக்கின்றார்களே இணைத்திருக்கின்றார்களா? இல்லையே.
ஈழத்தமிழர்களுடைய உரிமைப் போர் 1948-லேயிருந்து 1996 வரையிலே புத்தகம் போட்டது நாங்கள்.
சிங்கள அரசும் தமிழக மீனவர்கள் படுகொலையும்
அந்தக்காலத்திலே எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே புத்தகம் போட்டவர்கள். அது மட்டுமல்ல ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள் என்பதை எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
1998இலே பதினாறு ஆண்டுகளுக்கு முன்னாலே அந்த அம்மையார் ஏதோ திடீரென்று ஈழப்பிரச்சினையைப் பற்றி ரொம்ப வேகமாகப் பேசினார். சில அரசியல் கட்சியினர் சில சீட்டு-களுக்காக அவர் பின்னாலே போகலாமா? நாங்கள் ஒன்றைச் சொன்னோம். தேர்தல் நேரத்திலே அந்த அம்மையாரை நம்பலாமா?
அதுவும் சில இடங்களுக்காக உங்களை எப்படி கவுரவப்படுத்தி அந்த இடங்களை கொடுத்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியாதா?
இப்பொழுது அதற்குள்ளே நான் போக விரும்பவில்லை.
தனிஈழத்தைக் கேட்டது செல்வா
பலபேர் பேசுகிறார்களே. தமிழ் ஈழம் என்பது பிரபாகரனால் முதன் முதலாக அறிவிக்கப்பட்ட பிரிவினைப் போர் அல்ல. பிரபாகரன் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாற்றியவன். வரலாற்-றினுடைய சுவடுகளைப் பார்க்கவேண்டும்.
தனி ஈழத்தினைக் கேட்டது தந்தை செல்வா.
செல்வா என்றால் யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். செல்வநாயகம் தந்தை பெரியாரைப் பார்த்தார்கள். கலைஞரைப் பார்த்தார்கள். அய்யா தந்தை பெரியார் அவர்கள் அழகாக ஒன்றைச் சொன்னார். அய்யா நீங்கள் எல்லாம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொன்ன நேரத்திலே, தந்தை பெரியார் உண்மையைப் பேசிப் பழக்கப்பட்ட தலைவர் என்ற காரணத்தினாலே அய்யா அவர்கள் பளிச்சென்று சொன்னார், செய்யலாம்; ஆனால் ஒன்று, ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவுவது?
இதுதான் பிரச்சினை என்று பச்சையாக, பகிரங்கமாக உண்மையைச் சொன்னார். இலங்கையில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ் மன்னர்களின் ஆளுகையிலே இருந்தது.
தனிநாடு கேட்க வேண்டிய அவசியமென்ன?
பிரிட்டிஷார் வருகைக்குப் பின்னர்தான் ஒரே இலங்கையாகியது. இது வரலாறு. 1948 இல் சுதந்திரம் வந்தது. இரண்டு தேசிய இனங்கள் கொண்டது இலங்கை. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்பு பெரும்பான்மையான சிங்களவர்கள், சிறுபான்மைத் தமிழர்களை நசுக்கத் தொடங்கினர்.
இலங்கை ஒரே நாடு; சிங்களம் தான் ஒரே ஆட்சி மொழி என்றனர். ஆகவே அதுவரையிலே பொறுத்துக்கொண்டிருந்தவர்கள், ஒரே நாடு என்று ஒப்புக்கொண்டிருந்தவர்கள் என்ன செய்தார்கள்? 1972 ஆம் ஆண்டு வரையிலே 25 ஆண்டுகள் வரை அவர்கள் தங்களுக்கென்று தனி நாடு கேட்கவில்லை. இந்த வரலாற்றை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர்கள் வேறு வழியில்லாத காரணத்தால் அந்த இனம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற காரணத்தால் தான் தங்களுக்கென்று தனி நாடு கேட்க வேண்டிய அவசியத்திற்கு வந்தார்கள்.
ஈழத்தந்தை செல்வா அவர்களும் அவரது தமிழரசு கட்சியும் மலையகத் தமிழர்களும் சேர்ந்து தமிழர்களுக்குத் தனி நாடு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
ஒரு நாட்டைப் பிரிக்க தேர்தல்
நண்பர்களே கவனிக்கவேண்டும். உலகத்திலேயே ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று அந்த நாட்டு மக்கள் தேர்தலிலே பிரச்சினையாக வைத்து வெற்றி பெற்ற முதல் வரலாறு ஈழ வரலாறு என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. அதிலே 19 பேர் போட்டியிட்டார்கள். 18 பேர் வென்றார்கள். இந்த வரலாறு பலருக்குத் தெரிய வேண்டும்.
அதற்காகத்தான் இதைச் சொல்லுகின்றோம். மொழி, இனம், நாடு இம்மூன்றும் அவர்களுடையது என்று அவர்கள் நினைத்த காரணத்தினாலே தான் தமிழ் ஈழம் என்ற அந்த குரல் கேட்க ஆரம்பித்தது.
பிரிவினை கேட்க முடியாது என்று சிங்களர்கள் சொன்னார்கள். உடனே ஆயுதத்தைத் தவிர வேறு வழியின்றி பிரபாகரன் தலைமையிலே விடுதலைப் புலிகள் அங்குத் தீவிரமாக இறங்கினார்கள்.
இங்கே மிகத் தெளிவாகச் சொன்னார்கள். பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? உலகத்-திலேயே இப்பொழுது இருக்கின்ற பெரிய கேள்வி.
பிரபாகரன் மறையவில்லை
ஆனால் ஒரே ஒரு வார்த்தையிலே இங்கு பேசிய சகோதரர்கள் சொன்னார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள் மறைவதேயில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் என்றைக்கும் வாழ்வார்கள். காரணம் அவர்கள் தனி நபர்கள் அல்லர் அது ஓர் உணர்வு; அது ஒரு சுதந்திர முழக்கம்; அது ஒரு இலட்சியதாகம்.
எனவே அவர்கள் மறைந்து விட்டார்கள் இறந்து விட்டார்கள் என்று யாரும் தப்புக் கணக்குப் போடக்கூடாது. அதனுடைய உணர்வுகள் இருக்கும்.
பிரபாகரன் மறையவில்லை. பிரபாகரனை இறந்து விட்டதாக ஒரு கற்பனை செய்து காட்டி-யிருக்கிறார்கள். எப்படி நடத்தினார்கள் என்பதை எல்லாம் நம்முடைய சகோதரர் தொல்.திருமாவளவன் சொன்னார்கள். அவ்வளவு ஆதாரத்தையும் நாங்களும் தயாரித்-திருக்கின்றோம் என்றெல்லாம் சொன்னார்கள். நீங்கள் ஆதாரத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை.
---------------------தொடரும் ...."விடுதலை" 1-7-2009


1 comments:
பதிவை படிக்காமலே (தேவை இல்லை என்று நினைத்ததால்) பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும்.
இந்தியா என்பது தமிழ் நாட்டிற்கும் பாகிஸ்தாநிர்க்கும் இடையே இருக்கும் நாடு. அந்த நாடை இலங்கை மதித்தால் என்ன மதிக்காவிட்டால் என்ன ??
முதலில் இந்தியா தமிழ் நாட்டை மதித்திருக்கிறதா? அப்புறம் என்ன மயித்துக்கு நாம அதுல இருக்கணும் ?
நீங்கள் இப்படி எழுவது குரங்கை விட்டுவிட்டு வாலை பிடிப்பது போல் உள்ளது.
Post a Comment