Search This Blog

4.7.09

பார்ப்பனர் தமிழரை வென்றது எப்படி? - 2




பிறப்பால் சிறப்பு:

பிரமாவே குலங்களைப் படைத்தார்; ஒவ்வொரு குலத்தாரும் தத்தம் தொழிலையே செய்தல் வேண்டும்; ஒருவன் தன் குலத்தை இப்பிறப்பில் மாற்ற முடியாது; குலங்கள் ஒன்றுக்கொன்று மேற்பட்டவை; எல்லாவற்றிலும் உயர்ந்தது பார்ப்பனக்குலம் என்பனபோன்ற கருத்துகளால், மேலோரான தமிழர் பற்பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆரிய வர்ண வொழுக்கம் தமிழ்நாட்டிற் புகுத்தப்பட்டது.

கடைக்கழகக் காலத்தில் வேரூன்றத் தொடங்கிய குலப்பிரிவினை வரவர வளர்ந்து 16ஆம் நூற்றாண்டில் முதிர்ந்துவிட்டது. பார்ப்பனர்க்கும் பிறகுலத்தார்க்கும் உள்ள தொடர்பு தீண்டாமை (untouchability), அண்டாமை (unapprochability), காணாமை (unsecability),என முத்திறப்பட்டு விட்டது. இப்போது தீண்டாமை என்று சொல்லப்படுவது, அக்காலத்துக் காணாமையாயிருந்ததே.


இடங்கிடைத்த அளவு தம்மை உயர்த்திக் கொள்வது ஆரிய வழக்கம். இதை, பார்ப்பனவுண்டிச்சாலைகளுள், சிலவற்றில் பார்ப்பனருக்குத் தனியிடம் வகுத்தலும், சிலவற்றில் இடமே தராது உண்டி மட்டும் விற்றலும், சிலவற்றில் தீட்டென்று உண்டியும் விற்காமையும் நோக்கியுணர்க.


முற்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த களவு மணமுறையாலும், இந்தியா முழுதும் வழங்கிய தன்மணப்பு (சுயம் வர) முறையினாலும், அர்ச்சுனன் பாண்டியன் மகளை மணந்ததினாலும், பாணர்க்குத் தமிழரசரிடமிருந்த மதிப்பினாலும், அந்தணரான அப்பூதியடிகள் திருநாவுக் கரசிற்குத் தம் இனத்தாருடன் செய்த சிறந்த விருந்தினாலும். பள்ளர், பள்ளியர் என்னும் வகுப்பார், மள்ளர், மழவர், உழவர், கடையர், காராளர், கருங்களமர் என்னும் பெயர்களுடன், பண்டை நூல்களில் இழிவின்றிக் குறிக்கப்படு வதினாலும், மக்களின் குலப்பெயர் இயற்பெயருடன் கூடி வழங்குவது மிக அருகியிருந்ததினாலும், சிற்றூர்களில் இன்றும் பார்ப்பனரல்லாத பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்ததில்லையென்று அறியலாம்.

பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரணவொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும்.

கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். ‘பார்ப்பானில் ஏழையுமில்லை பறையனில் பணக்காரனுமில்லை’ என்பது பழமொழி.


குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமா லியர், பவுத்தர், சமணர் என்னும் பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழாவில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினா லும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக்கோயில்கட்கும் இறையிலிவிட்டதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் மதப் பகையுமிருந்ததில்லையென்றறியலாம்.


9. வடநாட்டாரை உயர்த்தல்


இது பின்னர் விளக்கப்படும்.

10. வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல்

கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக,கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்பவும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்-குச் சிறந்த பிசிராந்தையும், உடம்பிறப்பன்பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழ்ப் பொதுமக்கட்கு மறைக்கப்பட்டுளர்.

தமிழரின் சிறந்த தன்மை

மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந்தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மையுரைத்தல், நுண்ணறிவு முதலியன தமிழர்க்குச் சிறந்த தன்மைகளாகும். தமிழர் நுண்ணறிவுடையரேனும், தம் உள்ளத்தில் கள்ளமின்மையால், வஞ்சகரை நம்பி எளிதில் ஏமாற்றப்படுபவராவார்.

----------------தொடரும்...

-----------------------மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய நூல்:- “ஒப்பியன் மொழி”, - பக்கம் 43-51

4 comments:

hayyram said...

அதே போல ராமசாமி எப்படியெல்லாம் குடித்துக் கூத்தடித்தான், விபச்சாரியின் வீட்டிலும் ஆடல் அழகிகளுடனும் கொட்டமடித்தார், அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் தான் அவன் தந்தை அவனுக்கு முதல் திருமணம் செய்து வைத்தார். அதை எல்லாம் கூட நல்ல விளக்கமாக எழுது. ஏன் இப்ப மட்டும் குலத்தொழில் இல்லாமலா இருக்கு. அரசியல் வாதி புள்ளை அடுத்த அரசியல் வாதியா இருக்கான். வக்கீல் புள்ள வக்கீல், டாக்டர் புள்ள டாக்டர் எல்லாரும் திரும்பி அதுக்குள்ள தானேடா போறீங்க. அப்பறம் அதை பார்ப்பான் சொல்லிவிட்டான் என்று ஏன் அங்கலாய்க்கிறாய். பார்ப்பனன் சொல்வது போல் நடப்பது இழுக்கு என்றால் கருணாநிதி தன் புள்ள ஸ்டாலினை கம்ப்யூட்டர் வேலைக்கு அனுப்ப வேண்டியது தானே. அவன் கிட்ட போய் கேளேன் ஏன் குலத்தொழில் வழக்குப் படி வாழ்கிறீர்கள் என்று. அட வெத்து வேட்டே . கணிப்பொறியில் உக்காந்து வலைப்பூவில் செய்தி அனுப்பும் வரையில் முன்னேறிவிட்டு இன்னும் நான் சூத்திரன் அவன் பார்ப்பனன் என்று பேசிக்கொண்டு திரிகிறாய். இது என்ன பகுத்தறிவோ.

தமிழ் ஓவியா said...

பெரியாருக்கு குடிப்பழக்கம் இல்லை என்பது மிகப் பெரிய உண்மை.

ஆனால் பார்ப்பனர்கள் குடிப்பதற்கு என்றே ஒருகடவுளை உருவாக்கியிருக்கிறார்கள் அவந்தான் சோமன்.

ராமனே ஒருகுடிகாரன் என்பதற்கான ஆதாரக் கட்டுரை இந்த வலைப்பூவில் உள்ளது. அதைப் படிக்க விரும்புவோர் தேடிப்பிடித்து படிக்க வேண்டுகிறேன்.

tamilan said...

நீங்கள் தமிழ் இல்லை போல் தெரிகிறது?

நீங்கள் ஒரு தெலுங்கா?

நம்பி said...

Blogger hayyram said...

//விபச்சாரியின் வீட்டிலும் ஆடல் அழகிகளுடனும் கொட்டமடித்தார், அவரது அட்டூழியம் தாங்க முடியாமல் தான் அவன் தந்தை அவனுக்கு முதல் திருமணம் செய்து வைத்தார்.//

ஆதங்கம் புரிகிறது..அதாவது...கோயில் இருக்கும் பொழுது எதற்கு இங்கு காசு செலவுபண்ணி செல்லவேண்டும் என்று அறிவுரை சொல்ல வருவது புரிகிறது...

கோயில் கருவறையில் அனைத்து வசதிகளுடன் இருக்கும் பொழுது..ஏன் தேடிப்போகவேண்டும்? இத்தனைக்கும் அங்கே அதிக பாதுகாப்பு, யாருக்கும் சந்தேகம் வராது என்று சொல்ல வருவதும் புரிகிறது...? கௌரமாக ரொம்ப காலமாக பார்ப்பனர்களான நாங்கள் பண்ணவில்லையா? வேண்டுமானால் செல் போனிலும் படம் எடுத்து வைத்துக்கொள்ளலாம்...அதற்குத்தானே பிராடு பண்ணி கோயில் கட்டிவைச்சிருக்கோம்...தீட்டு என்று ஒரு புரளியை கிளப்பி யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வைத்திருக்கோம் என்று சொல்லவருவதும் புரிகிறது.

பெரியார் காலத்தில் இதை அறிவிச்சிருக்கலாம். இப்பொழுது அறிவிச்சு என்ன ஆகப்போகிறது.