Search This Blog
2.7.09
கடவுளை உண்டாக்கியவர்கள் யார்? பக்தர்கள் சிந்திக்கவேண்டாமா?
சிற்பிகள்
சிற்பத்துக்குப் புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் எந்நேரமும் கேட்கும் உளிச் சத்தம் சமீப காலமாகக் குறைந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் சிற்பத் தொழிலில் சுமார் 1500 சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 300 விற்பனைக் கூடங்கள் உள்ளன. இப்பொழுது இந்தத் தொழில் முடங்கிப் போயிருக்கிறதாம். அதற்கான காரணங்களுள் ஒன்று கடவுள் விக்கிரகங்கள் செய்து தருமாறு வரும் ஆர்டர்கள் நின்று போய்விட்டதும் ஒன்றாம்.
இத்தகவலை தி சன்டே இந்தியன் (12.7.2009) இதழ் தெரிவித்துள்ளது.
மக்கள் மத்தியிலே பக்தி இறக்கை கட்டி பறக்கிறது என்று தன் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் மெய்யன்பர்கள் இந்தத் தகவலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்து, தினமணி ஏடுகள் கூட கோயில்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது என்ற செய்திகளைப் புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளன.
அப்படிப் போகிறவர்களில் பலரும் பக்திக்காகப் போவதில்லை. எதற்காகத்தான் போகிறார்களாம்?
வினா: நீங்க முன்ன பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?
புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணாவது? கோயிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனைச்சிக்கிறா. (துக்ளக், 1.6.1981, பக்கம் 32).
ஹிந்து மகா சமுத்திரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் துக்ளக் ஏடே தற்காலப் பக்தியைப் பற்றி இவ்வாறு பிரஸ்தாபிக்கிறது.
அப்படியிருக்கும்போது கடவுள் விக்ரகம் கேட்டு யார்தான் ஆர்டர் கொடுப்பார்கள்?
பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி கல்கி இதழுக்கு (11.6.2008) அளித்த பேட்டியில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்தார்.
ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படுறீங்க?
நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரனும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும்? அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே? எங்கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? என்று கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கடவுளை உண்டாக்கியவர்கள் நாங்கள்தான் _ சிற்பிகள்தான் என்று கூறிவிட்டாரா இல்லையா?
அந்தக் கடவுளை செய்த சிற்பிகளே வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள் என்கிறபோது, மற்றவர்களின் நிலை என்ன? பக்தர்கள் சிந்திக்கவேண்டாமா?
---------- மயிலாடன்அவர்கள் 1-7-2009 விடுதலையில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
எந்த ஒரு சின்ன கோவிலில் குடமுழுக்கு என்றால் லட்சோப லட்சம் மக்கள் திரள்கிறார்களே, எதற்கு?
திருப்பதியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே போயிருப்பதற்கு காரணம் என்ன ?
இன்றும் பிரபல ஆன்மீகவாதிகளின் உரைகளைக் கேட்க கூட்டம் கூடுகிறதே, எப்படி?
கல்லூரிக்கு படிக்க தான் போகிறோம், அங்கு அரட்டை அடிப்பதில்லையா, பெண்களைக் கிண்டல் செய்வதில்லையா? யாரோ ஓரிருவர் செய்யும் தவறுகளை பொதுவானதாக கூறுவது ஏற்புடையதாகாது...
உலக பொருளாதார மந்த நிலையின் காரணமாக, கோவிலுக்கு வரும் நங்கொடைகள் குறைந்து இருக்கிறது. இதனால் கோவில் சம்பந்தப்பட்ட வேலைப்பாடுகளும் குறைந்துள்ளதே இதற்கு காரணம்.
கோவிலுக்கு கூட்டமே வராது என்ற எண்ணத்தால் தான் ராமசாமி நாயக்கரின் சிலையை ஸ்ரீரங்கத்தில் நிறுவினீர்களா?
திராவிட கழகத்தில் ஆட்கள் குறைந்து கொண்டே வருகிறதே..இது போதாதா மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள?
சிறு கூட்டமாய் இருந்தாலும் கொள்கையில் உறுதி இருந்தால் எவளவு பெரிய கூட்டதையும் வென்று விடலாம் . பெரியார் சொல்வார் யாருமே இல்லை என்றாலும் நான் ஒருவனே நின்று போராடுவேன் என்று .திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சி அல்ல ஆட்களை பற்றி கவலை படுவதற்கு .கொள்கையில் உறுதி மட்டும் போதும் .
/*******************************
கோவிலுக்கு கூட்டமே வராது என்ற எண்ணத்தால் தான் ராமசாமி நாயக்கரின் சிலையை ஸ்ரீரங்கத்தில் நிறுவினீர்களா?
***************************************/
உங்களின் கணக்கு படி பார்த்தால் இன்று தமிழகத்தில் எல்லாம் கோவில்களின் முன்பும் பெரியார் சிலை இருக்க வேண்டுமே ?
ஸ்ரீரங்கத்தில் திறக்கவிருந்த சிலை சிமெண்ட் சிலை ...ஆனால் சில காலிகள் அந்த சிலையை சேத படுத்தியதால் அங்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது .நானும் அந்த திறப்பு விழாவிற்கு சென்றவன் .
பெரியாரின் சிலை உங்களிடம் என்ன வம்பா செய்தது அல்லது கோவிலிற்கு வருபவர்களை தடுத்ததா அதை சேத படுத்துவதற்கு ?
இதிலிருந்தே தெரிகிறதே பெரியார் எந்த அளவுக்கு பார்ப்பனியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறார் என்று .
எந்த நாத்திகனவாது வழிபாட்டு தளத்தை சேத படுத்தி இருக்கனா ? ஆனால் ராம் ராம் என்று சொல்லி பாபர் மசூதி இடித்து யார் ?அதில் முதல் குற்ற வாலி யார்? .
" ELANCHERAN said...
பெரியாரின் சிலை உங்களிடம் என்ன வம்பா செய்தது...."
சிலையை திறந்து அந்த சிலையை கை எடுத்து கும்பிடும் நவீன பகுத்தறிவாளிகள் ஆயிற்றே ! ஒரு வேளை நீங்கள் வணங்குவதோ, வணக்கம் சொல்வதோ ராமசாமிக்கு தெரியுமோ?
சிலை வைக்க எவ்வளவு இடம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வைப்பது, சும்மா இருந்த சங்கை ஊதுற மாதிரி...வேற எதுக்கும் இல்ல...4 பேரு உள்ள இயக்கத்துக்கு ஒரு விளம்பரம் தேவை தான்!
pagutharivu enbadhu ramasamy naikar kku silai vaipathu alla. Avarudaiya karuthukalai parappuvadhae agum. pavam pagutharivu
Blogger கபிலன் said...
//சிலையை திறந்து அந்த சிலையை கை எடுத்து கும்பிடும் நவீன பகுத்தறிவாளிகள் ஆயிற்றே ! ஒரு வேளை நீங்கள் வணங்குவதோ, வணக்கம் சொல்வதோ ராமசாமிக்கு தெரியுமோ?//
----------------------------------
ராமசாமிக்கு தெரியுதோ இல்லையோ? நவீன ஆசாமிக்கு தெரிகிறதே...! அதற்காகத்தான்.
தெரிந்ததால் தானே! அதை ஏளனம் செய்தாவது பின்னூட்டமாக வைத்தது. ஏளனம் செய்யும் பொழுதாவது அதன் கீழே இருக்கும் வாசகத்தை படிக்கும் என்ற நோக்கத்தில் தான்.
ஏளனம் செய்யும் பொழுதாவது இப்படி ஒருவர் இருந்தார் கடவுளை எதிர்த்தார் என்று நினைவு கூறவதற்குத்தான்.
வணங்குவது மரியாதை செலுத்துவதற்குத்தான்...அப்படி மரியாதை செலுத்தும் பொழுது ஆசாமிகள் (மக்கள்) பார்ப்பதற்குத்தான்.
உயிரோடு இருப்பவருக்கு சிலைகள் வைத்தால் செத்துவிடுவார் என்ற மூடநம்பிக்கையை போக்குவதற்கு தான். பெரியார் இருக்கும் பொழுதே இந்த சிலைகள் வைக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் காந்தி படம் வைக்கப்பட்டிருக்கிறது அது எதற்காக? இல்லாம் இம்மாதிரி அவரவர் கொள்கைகளை நினைவு கூறுவதற்குத்தான்.
வீட்டில் வாழ்ந்த மூதாதையர்களின் படங்கள் வைக்கப்படுகிறதே எதற்காக அவர்களை அடிக்கடி நினைவு கூறுவதற்குத்தான்.
----------------------------------
Blogger கபிலன் said...
//சிலை வைக்க எவ்வளவு இடம் இருந்தாலும் ஸ்ரீரங்கத்தில் அதுவும் கோவிலுக்கு அருகில் வைப்பது, சும்மா இருந்த சங்கை ஊதுற மாதிரி...வேற எதுக்கும் இல்ல...4 பேரு உள்ள இயக்கத்துக்கு ஒரு விளம்பரம் தேவை தான்!
July 3, 2009 3:06 PM//
--------------------------------
4 பேர் உள்ள இயக்கம் இருந்ததினால் தான் இன்று வரை நாடாளும் இயக்கங்களாக மாறியிருக்கிறது.....4 பேர் இயக்கம் இருப்பதினால் தான் மதவாத கூட்டத்திற்கு பேதி புடுங்கிக்கொள்கிறது...அய்யோ! இவனுங்களை ஒழிக்க முடியவில்லையே! என்று பார்ப்பன கூட்டம் தலையில் கைவைத்து காத்து கொண்டிருக்கிறது....இன்னும் எவன் தலையில் கைவைக்கலாம் என்று...?
******************************
எவ்வளவு இடம் இருந்தாலும் எல்லா இடமும் மக்களுக்கு சொந்தம் தான்...பார்ப்பனன் கற்பனைக்கு இடம் இருக்கும் பொழுது...வாழ்ந்த தலைவருக்கு சிலை வைப்பதை தடுப்பவன் எவன்...?
....கோயில் இருக்கும் திருவரங்கத்தில் என்ன அனைவரையுமா? உள்ளே விடுகிறார்கள்..கருவறைக்குள் உள்ளே செல்ல முடிகிறதா?....சரி தாய்க்குலத்திற்கு அனுமதி இருக்கிறதா....?.இல்லையே? கோயிலை உருவாக்கியவனுக்கே உள்ளே அனுமதி இல்லையே? திருவரங்க சிலையை தொட முடிகிறதா?
பெரியார் சிலை அங்கு இருந்தால் தான்...இதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த இழிவு நினைவுக்கு வரும்.
நம் இடத்தில் நாம் கட்டிய கோவிலுக்கே செல்ல விடாமல் தடுக்கும் வந்தேறி பார்ப்பன கூட்டத்தை பற்றி, அவன் பண்ணிய அயோக்கியத்தனங்கள் பற்றி, அடிக்கடி நினைவுக்கு வரும்.
பார்ப்பனன் செய்பவற்றுக்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு சொரணையற்று கிடப்பதை பற்றிய நினைவுகள் வரும்.
கற்சிலை கடவுளையும், பார்ப்பானையும் பல்லக்கில் தூக்கி கொண்டு போய் கிணற்றில் வீசியெறியாமல் அடிமையாக இருந்து கொண்டு சுமப்பது பற்றிய இழிவுகள் நினைவுக்கு வரும்.
தீண்டாமை பற்றிய நினைவுகள் வரும்.
இல்லையென்றால் மறந்து விடுவான். இப்பொழுது மறந்துவிட்டு பின்னூட்டம் இடுவது போல....
Post a Comment