Search This Blog
7.6.09
தமிழர்களே உங்களுக்குப் புத்தி இல்லையா!
தமிழ்நாடும், தமிழ் மக்களும் மனிதத் தன்மையாகிய சுயமரியாதையை இழந்து மிருகங் களிலும், பூச்சி புழுக்களிலும் கேவலமாய் வாழும் நிலைமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணங்களில் பார்ப்பன மதமாகிய இந்து மதமும், அம்மத ஆதாரங்களாகிய வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம் முதலிய ஆபாசப் புரட்டுகளே முக்கிய காரணமென்று வெகு நாளாகச் சொல்லி வருகிறோம். அதே விதங்களில் அறிவைக் கொண்டும் அனுபவங்களைக் கொண்டும் யாவருக்கும் நன்றாய் விளங்கும்படி விவரமாய் எழுதியும் வந்திருக்கின்றோம். இவற்றை மறுத்து இதுவரை யாரும் எவ்வித சமாதானமும் சொல்லாமல், மதம் போச்சு, நாஸ்திகமாச்சு, தெய்வம் போச்சு என்று பொய் அழுகை அழுகிறார்களேயல்லாமல் சற்றாவது கவனித்துப் பார்த்து இதற்கு என்ன செய்யவேண்டும், இனி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைப்ற்றி ஒரு சிறிதாவது கவலை கொள்ளாமல் இருப்பதுடன், செய்ய முயற்சிப்பவர்களையும் காலை வாரிவிட சூழ்ச்சிகள் நடந்த வண்ணமாகவும் எதிர்ப் பிரச்சாரங் கள் நடந்த வண்ணமாகவும் இருந்து வருகிறது./span>
அன்றியும், முன்னைவிட பார்ப்பன பிரச்சாரமும் பலமாய் நடந்து வருகின்றது. என்னே! தமிழர்களின் மானங்கெட்டத் தன்மை.
தமிழ் மக்களில் பலர் படித்தவர்கள் என்றும் பண்டிதர்களென்றும், வித்துவான்கள் என்றும், ஆராய்ச்சிக்காரர்கள் என்றும், சீர்திருத்தக்காரர்கள் என்றும் சொல்லிக்கொண்டு வெளியில் புறப்பட்டு புத்தகம் எழுதுவதன் மூலமும், புராண பிரசங்கமூலமும், பத்திரிகையின் மூலமும், தமிழ் பாஷையைப் பரப்புவதென்பதன் மூலமும் மற்றும் பல வழிகளில் பார்ப்பன மதப் பிரச்சாரங்களையே மேலும் மேலும் செய்கின்றார்களேயொழிய வேறு ஒரு காரிமும் செய்ய அறிவும், ஆற்றலும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த உபத்திரவம் போதாமல் இப்பொழுது சினிமாக்களும், நாடகக்காரர்களும், பாட்டுக்காரர்களும், உபநியாசக்காரர்களும் இப்பார்ப்பன பிரச்சாரத்தையே கைப்பற்றி தினமும் கோடிக் கணக்கான மக்களுக்குப் புராணப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அன்றியும் சமீப காலமாக நமது நாட்டில் உள்ள எல்லா பத்திரிகைகளும் அறிந்தோ, அறி யாமலோ இதே வேலையையே செய்து வருகின்றன. எந்த வாரப் பத்திரிகையின் முகப்பைப் பார்த்தாலும் ஆரியப் புராணப் புளுகுகளைப்பற்றி வியாக்கியானம் பண்ணுவதும், அதற்கு விசேஷ அர்த்தமும் தத்துவார்த்தம் சொல்லுவதும், எழுதி வைத்தவர்களைப்ப் புகழ்வதுமாகவே இருக்கின்றன. எந்தத் தினசரிப் பத்திரிகையைப் பார்த்தாலும் பார்ப்பன மதக் கொள்கைகளை பிரச்சாரம் செய்யத்தக்க வண்ணம் ஆரியக்கதை களையே விளக்கி வருகின்றது.
ஆனால், ஒவ்வொரு பத்திரிகையும் தன்னை சீர்திருத்தப் பத்திரிகையென்று சொல்லிக்கொண்டே தான் இந்தக் காரியம் செய்கின்றது என்பதைக் கவனிக்கும் போதாவது நமது மனம் பதறுகின்றது.
அன்றியும், இந்தக் கொடுமைக்கு இன்னது தான் பரிகாரம் என்பது நமக்கு விளங்கவில்லை. தேவஸ்தான மசோதா வந்த காலத்தில் கூட எல்லா பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும், பார்ப் பனர்களையும் பார்ப்பன பத்திரிகைகளையும் பின்பற்றி அம்மசோதாவினால் ஒரு காதொடிந்த பலனும் ஏற்படுவதற்கில்லாமல் செய்துவிட்டன. திராவிடன் ஒன்று மாத்திரம் தைரியமாய் உண்மையாய்ப் பிரச்சாரம் செய்து வந்தது. ஆனாலும், ஒரு பிரச்சினையாய்ப் பிரச்சாரம் செய்து வந்தது. ஆனாலும் ஒரு பயனும் உண்டாக வில்லை. தவிர, தற்சமயம் முக்கிய பிரச்சினையாய் இருக்கும் சுவாமிக்காகத் தமிழ்ப் பெண்களை பொட்டுக்கட்டி விபச்சாரத்திற்கு அனுகூலமாக்கினதை ஒழிக்கச் செய்யும் பிரயத்தனத்தையும், பக்குவமறியாக் குழந்தைகளை பெண் ஜாதி புருஷர்களாக ஆக்கிக் குரங்குக் குட்டிகள் போல பிள்ளைகள் பெற்று மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண்டிருக்கும் நிலையைத் தவிர்க்கச் செய்யும் பிரயத்தனங்களையும் அடக்க பார்ப்பனர்கள் செய்யும் இடையூறுகள் ஒன்றல்ல, பல. கொஞ்ச காலமாக சுதேசமித்திரன் முதலிய தினசரி பத்திரிகைகளில் இதே விஷயங்கள் வெளியாகின்றன. சங்கராச்சாரியார்களும், பண்டிதர்களும், சாஸ்திரிகளும், வைதீகர்களும் தினம் ஒவ்வொரு இடத்தில் மீட்டிங்குகள் நடந்ததாக பேர் செய்து இவ்விரு காரியங்களையும் மறுத்து கண்டித்து தீர்மானங்கள் செய்ததாக எழுதி வருவதும், பொதுமக்கள் ஏமாறும்படி கடவுள் சொன்னதாகவும், தேவர்கள் சொன்னதாகவும், ரிஷிகள் சொன்னதாகவும், அசரீரி சொன்னதாகவும் அநேக விஷயங்களை எழுதுவதுமாய் இருக்கின்றார்களே! இதை யாராவது கவனிக்கின்றார்களா? என்று கேட்கின்றோம்.
இது தவிர, பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாட புத்தங்கள் என்று அநேக பார்ப்பனர்களும் சுயமரி யாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதார்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்த புராணம், பெரிய புராணம், அருணாசலப் புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறு சிறு கதைப் புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்குப் பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும் சகிக்கக் கூடியதாயில்லை.
எந்த புத்தகத்தைப் பார்த்தாலும் ஆரியர் மேலோர் என்பதும், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதும், தென்னாட்டில் ஒரு முரட்டு ஜாதியார் காட்டு மிராண்டிகளாய் இருந்தார்கள். அவர்களைத் தான் வானரங்கள் என்று சொல்லப்படுவது என்றெழுதுவதும், ஆரியர் தென்னாட்டிற்கு வந்த பிறகே தமிழ் மக்கள் மனிதத் தன்மையை அடைந்தார்கள் என்று எழுதியதுமான புத்தகங்களைப் படிக்கச் செய்வதே இப்போது தேசியப் படிப்பாக மாறி வருவதும் நினைக்க நினைக்க வயிறெல்லாம் பற்றி எரிகின்றது. இன்னும் பல வழிகயில் தமிழர்களை இழிவுப்படுத்தியிருக்கிறார்கள். அவைகளையெல்லாம் இதில் எழுத மனம் வெட்கப்படுகின்றது. இதற்கு என்ன வழி என்று யார் சிந்திக்கிறார்கள்.
பார்ப்பனர்களுடைய முகக்கோணலை பொறுத்துக் கொள்ள தமிழ் மக்களில் ஆட்கள் இல்லையென்றால், அந்தச் சமூகம் வாழுவதால் பயன் என்ன என்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்களில் வயிற்றுக்கில்லாத கூலிகளின் செய்கைகளைப் பற்றி நாம் பிரமாதமாய் இதில் எழுத வரவில்லை.
வயிற்றுக்குத் தாராளமாய் கிடைக்கத் தக்கள் தொழிலையும் தனி சம்பாத்தியத்தையும் சொத் துக்களையும் நிலையையும் வைத்துக் கொண்டிருக்கும் ஆசாமிகள் பார்ப்பனப்பிரச்சாரங்கள் செய்யும் முட்டாள்தனத்திற்கு நாம் என்ன சமாதானம் செய்து கொள்ளக்கூடும். பார்ப்பன ரல்லாத அரசர்களில் பெரும் பகுதியார் பார்ப்பனர்களுக்குப் பிள்ளையாய் பிறக்கக் கருதுகி றார்களேயொழிய பார்ப்பன மதக் கொடுமையில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இழிவைப்பற்றி கருதுகிறார்கள் என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதும் இல்லை.
பார்ப்பனரல்லாத ஜமீன்தார்கள், பிரபுக்கள், லேவா தேவிக்காரர்கள், வியாபாரிகள் என் போர்களோ ஏழைகளை வதைத்துப் பட்டினிப் போட்டு ஏமாற்றிக் கொள்ளையடித்து பல லட்சக்கணக்கான சொத்துக்களைச் சேர்த்து குட்டிச் சுவர்களாக விளங்கும் கோவில்களைக் கட்டுவதும், அங்கு பார்ப்பனத் திருவிழா செய்வதும், பார்ப்பன மதப் பிரச்சாரப் பள்ளிக் கூடங்கள் வேத பாடசாலைகள் கட்டுவதும், பார்ப்பனர்கள் சாப்பிட சத்திரங்கள் கட்டுவது மான கொடுமைகளைச் செய்வதற்காகவே தங்கள் பணங்களை உபயோகிக்கின்றார்கள். பார்ப்ப னரல்லாதா உத்தியோகஸ்தர்களோ தங்கள் செல்வாக்கு முழுவதையும் பார்ப்பன நன்மைக்கே உபயோகிக்கிறார்கள். அல்லாவிட்டால், அவர்களுடைய உத்தியோகத்திற்கும், வாழ்வுக்கும் ஆபத்தாய் முடிந்துவிடுகின்றது. பார்ப்பனரல்லதா சன்னியாசிகளின் சங்கதி சொல்லவே வேண்டியதில்லை எனலாம்.
சுருங்கக்கூறினால் இயற்கைக்கு விரோதமான இன்பத்தை அனு பவிப்பதே அவர்களது தபசாகிவிட்டது. இனி, மீதி இருக்கும் பாமர மக்களோ மேல்கண்ட பெரிய ஆசாமிகள் என்பவர்கள் நடப்பதைப் பார்த்து அவர்களைப் பின்பற்றி மேலும் தங்களை உயர்ந்த ஜாதியான் என்றும் பக்திவான் என்றும், சனாதன இந்து என்றும் சொலிக் கொள்வதற்கே ஆசைப் பட்டு விபூதியையும், நாமத்தையும் பூசிக் கொள்வதும் யாத்திரையும், சடங்கும் செய்வதுமான வாழ்க்கையிலேயே தமது சம்பாதனையைக் கூடப் போடுவதுமாய் இருக்கிறார்களேயொழிய அய்யோ பாவம் மனிதத் தன்மை இன்னது என் பதைப்பற்றி ஒரு சிறு கவலையும் இல்லாதவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களின் சுயமரியாதை எங்கே இருக்கின்றது? எப்பொழுது வரும் என்பதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள் நேயர்களே!
உங்கள் மனம் பதறவில்லையா? உங்கள் அறிவு வெட்கப்படவில்லையா? நீங்களும் மக்கள் என்று எண்ணிக்கொள்ள உங்கள் எண்ணம் இடம் கொடுக்கின்றதா? உலகத்தில் மானமற்ற மக்கள், ஈனம் உற்ற மக்கள், சுயமரியாதை இன்னதென்று உணராத மக்கள் என்பவர்கள் எங்கிருக்கின்றார்கள்? அவர்கள் யார்? என்பதைச் சற்று நிதானமாய் தேடிப் பார்த்தால் உங்களைத் தவிர வேறு யாரையாவது கண்டுபிடிப்பீர்களா? போதும் போதும் இனியாவது, உங்கள் முயற்சியை சற்று சுயமரியாதைப் பக்கம் திருப்புங்கள். தேசிய நரகத்தில் அழுந்தாதீர்கள். கடைந்தெடுத்த அயோக்கியர்களுக்கும் துரோகிகளுக்கும், ஈன வயிறு பிழைப்புக் காரருக்கும், அறிவிலிகளுக்கும், அதைவிட்டு விடுங்கள். தமிழ்த்தாயின் மானத் தைக் காப்பாற்ற முன் வாருங்கள்.
சமீப காலத்தில் நடைபெறவேண்டிய சுயமரியாதை சத்தியாகிரகத்திற்கு வரிந்துக்கட்டி முன் நில்லுங்கள். உங்கள் விண்ணப்பங்களில் உங்கள் ரத்தத்தைக் கொண்டு கையெழுத்து செய்து அனுப்புங்கள். உங்கள் சொத்துக்கள் என்பதில் ஒரு பகுதியை இப்போதே ஒதுக்கி வைத்து விடுங்கள். புரட்டுப் பிரச்சாரங்களை வெறுத்துத் தள்ளி பாமர மக்கள் உண்மை இன்னது, போலி இன்னது சத்தியம் இன்னது, பொய் இன்னது என்று உணரும்படி செய்யுங்கள்; சுயமரியாதைக்கு உழைக்கும் உண்மைப் பத்திரிகைகள் எல்லாத் தமிழ் மக்களும் படிக்கும்படி செய்யுங்கள். இனி உறங்காதீர்கள். பார்ப்பனர்களின் மதத்தின் மூலமாகவாவது, அரசியல் பார்ப்பனரல்லாதார்கள் மூலமாகவாவது தமிழ் மக்கள் தலையெடுக்கக்கூடும் என்று நினைப்பதை அடியோடு மறந்துவிடுங்கள், மறந்துவிடுங்கள்.
-----------------19.2.1928 "குடிஅரசு" இதழில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
//பள்ளிக்கூட டெக்ஸ்ட் பாட புத்தங்கள் என்று அநேக பார்ப்பனர்களும் சுயமரி யாதையும் அறிவும் இல்லாத சில பார்ப்பனரல்லாதார்களும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்த புராணம், பெரிய புராணம், அருணாசலப் புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய குப்பை கூளங்களின் பேரால் சிறு சிறு கதைப் புத்தகமும் எழுதி சிறு குழந்தைகளுக்குப் பார்ப்பன விஷத்தை ஊட்டுவதும் சகிக்கக் கூடியதாயில்லை.//
இதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு புதிய பாடத்திட்டங்களை கலைஞர் ஆரசு செய்ய வேண்டும். இப்போதைய அரசு செய்யவில்லை என்றால் எப்போதும் செய்ய முடியாது என்பதால் உடனடியாக பாடத்திட்டங்களில் பகுத்தறிவுக் கருக்களை கொண்டு தயாரிக்கப்பட்டு பயிற்றுவிக்க வேண்டும் .
Post a Comment