Search This Blog

21.6.09

ஆரிய முன்னேற்றக் கழகம் அதிகமாக ஆசைப்படலாமா?


ஆரிய முன்னேற்றக் கழகமாம்

விரைவில் ஒரு புதிய கட்சி வரப் போகிறதாம். அகில இந்தியக் கட்சியாம். தமிழ்நாட்டில் தொடங்கப்படுமாம். அஇஅதிமுக போல, அகில இந்தியக் கட்சியோ? பெயர், அஇஆமுக என்பதாம். விரிவு என்னவென்றால் அகில இந்திய ஆரிய முன்னேற்றக் கழகமாம். அனைத்திந்திய என்றுகூட இருக்கலாம். தமிழில் எப்படி அழைக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

ஆரியர்களுக்கு என்ன ஆயிற்று, இப்போது? அவர்களை முன்னேற்றுவதற்கு என்றால் ஆரியர்கள் யார்? அதெல்லாம் பிரிட்டிஷ்காரனின் கற்பனை, பிரித்தாளும் சூழ்ச்சி என்றெல்லாம் சிலர் பேசுகிறார்களே அதற்கு இவர்களின் பதில் என்ன?


பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்கிறார் புதிய கட்சியின் அமைப்பாளர். பார்ப்பனர் எனப் பொதுவாகச் சொன்னால் எந்தப் பார்ப்பனர் எனக் கேள்வி வருமல்லவா? அய்யரா, அய்யங்காரா, ராயரா என்பதோடு சவண்டியா, ஒத்தையா, கிரேக்யமா என்ற கேள்விகள் கூட எழும்பு மல்லவா? அவாள் தான் 1886 உள்ஜாதிகளாகப் பிரிந்து, ஒருவர்க்கொருவர் சம்பந்தம் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களே! அதனால் ஆரியர் எனச் சொல்லிவிட்டார் போலும்!


சரி, ஆரியர்கள் நாடோடிகள் தானே! ஆளப்பிறந்த இனம் - ஆரிய இனம் எனக் கொக்கரித்து அழிந்து போன ஜெர்மனி ஆரியன் இட்லர்கூட நாடோடியாகத் திரிந்து ஜெர்மனியில் அடைக்கலம் தேடிய இனத்துக்காரன்தானே! ஜெர்மனியில் ஆதியில் இருந்த செல்ட் ((Celt இனத்திற்குப் பிறகு வந்துசேர்ந்த ஜிப்சிகள் தானே ஜெர்மனியர்கள். அப்படி இருக்கும்போதே உயர் ஆரிய இனம் என்றான் இட்லர். அதையொட்டி பாரதியும் பாடி வைத்தான். எல்லோரும் தாய் நாடு எனும் போது இட்லரும் பாரதியும் தந்தையர் நாடு என்றவர்கள்.

அதேபோல, சிந்து நதிக் கரைக்கு ஓடி வந்தவர்கள் ஆரியர்கள்! இம்மண்ணின் பூர்வகுடிகளை மயக்கி, மருட்டி, மங்கச் செய்து ஒழித்தவர்கள் ஆரியர்கள்! அவர்களும் பழம் பெருமை பேச நினைக்கின்றனர். முட்டாள் குப்பையான வேதம் தவிர வேறு ஒன்றும் நினைவுச் சின்னமாகக் காட்ட இயலாத நிலையில் திராவிடர் நாகரிகத்திற்குச் சொந்தம் கொண்டாடப் பார்த்தனர், வெளிநாட்டுக்கு ஓடிப் போன பார்ப்பனர்கள்! வேகவில்லை என்று புரிந்து கொண்டு இப்போது பொத்திக் கிடக்கிறார்கள்.

வரலாறு இப்படியிருக்க என்ன ஆரிய முன்னேற்றம்? என்ன ஏழு விழுக்காடு இடஒதுக்கீடு! வரலாறு திரும்பும் என்பார்கள். திராவிடர்கள் இடஒதுக்கீடு கேட்டபோது, வகுப்புவாதம் என்றார்கள். இப்போது இவர்கள் இடஒதுக்கீடு கேட்கிறார்கள். தந்தை பெரியார் கூறியபடி கேட்கிறோம் என்று வேறு பேசுகிறார்கள். வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்றார் பெரியார். பார்ப்பனர்களின் தொகை தமிழ்நாட்டில் எவ்வளவு? மூன்றரை என்கிறது புள்ளி விவரங்கள். நான்கு என வைத்துக் கொண்டாலும் ஏழு எப்படி ஞாயம்? அதிகமாயிற்றே, ஆசைப்படலாமா? அடுத்தவர் வாய்ப்பில் மண்ணைப் போடலாமா? ஒட்டுண்ணிப் புத்தி இன்னமும் போக மாட்டேன் என்கிறதே!

கட்சி தொடங்குபவர் மேலும் விவரங்களோடு வரும்போது, நாமும் சந்திப்போம்!


------------------செங்கோ அவர்கள் 20-6-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

5 comments:

Gokul said...

அய்யா,

//பார்ப்பனர்களின் தொகை தமிழ்நாட்டில் எவ்வளவு? மூன்றரை என்கிறது புள்ளி விவரங்கள்.ஏழு எப்படி ஞாயம்? அதிகமாயிற்றே, ஆசைப்படலாமா? //

சரியான கேள்வி, ஆனால் மூன்றரை என்று சொல்லும் புள்ளி விவரங்கள் எங்கே இருந்து எடுத்தீர்கள்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

evilatheist said...

3.5 enbathu thanthai periyaar kalathu kanakku...ulagathileye 69% ida othukkidu ulla orey maanilam thamizhagam thaan...ithai ethirthu vazhakku thaakkal seythaal avar mithu adiyaal evuvathu..enne periyaar kolgai annan mi.Ki.Veeramanikku.Pavam ivarukku aatchi maarinaal veeram poi money gnabagam vandhu vidum...

Unknown said...

Mr Oviya,

Who is the son of a bitch in the photohraph who looks like a taliban terrorist and a bearded swine with flu at the same time?Is he a typical dravidian tamil?

Unknown said...

ஆரியப் பார்ப்பனர்கள் அன்றிலிருந்து இன்று வரை ஒரு குறையும் இல்லாமல் அடுத்தவர்களின் இடத்தையும் சேர்த்து அனுபவித்துக் கொண்டு முன்னேறித்தானே உள்ளார்கள்.இன்னும் முன்னேறனுமா? இது அதிக ஆசையல்ல. கொடுமையிலும் கொடுமை

நம்பி said...

//Blogger Gokul said...

அய்யா,

//பார்ப்பனர்களின் தொகை தமிழ்நாட்டில் எவ்வளவு? மூன்றரை என்கிறது புள்ளி விவரங்கள்.ஏழு எப்படி ஞாயம்? அதிகமாயிற்றே, ஆசைப்படலாமா? //

சரியான கேள்வி, ஆனால் மூன்றரை என்று சொல்லும் புள்ளி விவரங்கள் எங்கே இருந்து எடுத்தீர்கள்? கொஞ்சம் சொல்ல முடியுமா?

June 21, 2009 7:52 PM//
இந்திய அரசு தளங்களில் அனைத்து விவரங்களும் இருக்கிறது...விக்கிப்பீடியா தளங்களில் இருக்கிறது...அங்குள்ள தகவல்களின் ஆதார மேற்கோள்களில் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற வலைத்தள தகவல்களும் இருக்கின்றன...காணலாம்.

இந்திய புள்ளியல் துறை சம்பந்தப்பட்டைவகளிலும்...