
இந்த நாட்டில் மூட நம்பிக்கையின் பெயரால் காட்டமிராண்டிகளாக ஆக்கப்பட்டிருக்கும் மனிதர்களை அறிவுடையவர்களாக ஆக்கவே நாங்கள் இரவு பகல் பாராது உங்களிடையே தொண்டாற்றி வருகிறோம்.
எங்களுடைய இலட்சியம் இவ்வளவு நாட்கள் ஆகியும் கைகூடவில்லையென்றால் அது மக்களால்தான். மக்களிடையே பேசும் மற்றக் கட்சிக்காரர்களையும், எங்களையும் ஒன்றாகப் பாவித்து விடுகிறார்கள். மற்றவர்கள் யார் வந்து உங்களிடையே பேசினாலும் அது உங்களிடத்திலேயிருக்கின்ற ஓட்டுக்களை வாங்கிக் கொண்டு போகத்தான். எல்லா கட்சிகளும் நகராண்மைக் கழகங்கள். சட்டசபை, பார்லிமெண்ட் (நாடாளுமன்றம்) முதலியவைகளில் பதவிகள் வகிக்கும். ஆனால் திராவிடர் கழகம் ஒன்றுதான் பதவி கூடாது பதவி வேண்டாம் என்று கூறுகிறது.
பதவி வேண்டும் என்று சொல்பவர்களைத் திருட்டுப்பசங்கள் என்று சொல்பவன் நான். திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும் மக்களுக்காகத் தொண்டாற்ற வந்தவர்களேயல்லாது பதவியைப் பிடிக்க அல்ல. இன்னும் கொஞ்சம் பெருமையாகக்கூட சொல்லுவேன். திராவிடர் கழகத்தில் அனைவரும் அவரவர் சுய சம்பாத்தியத்தில் சாப்பிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் கழகவேலை செய்து வருகிறவர்கள்! பிறருடைய காசினால் வயிறு வளர்ப்பவர்களும் அல்ல. அதே சமயத்தில் பிறருக்கு அடங்கி நடப்பவர்களுமல்ல.
--------------------"விடுதலை" 22-1-1959
2 comments:
//திராவிடர் கழகத்தில் அனைவரும் அவரவர் சுய சம்பாத்தியத்தில் சாப்பிட்டுவிட்டு ஓய்வு நேரத்தில் கழகவேலை செய்து வருகிறவர்கள்! பிறருடைய காசினால் வயிறு வளர்ப்பவர்களும் அல்ல. அதே சமயத்தில் பிறருக்கு அடங்கி நடப்பவர்களுமல்ல.//
நான் பலரைப் பார்த்துள்ள்ளேன் உண்மைதான்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment