இவர்களுக்கு என்ன தண்டனை?
அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதால் கெட்டவை நடக்கும் என்று கருநாடக மூடநம்பிக்கையாளர்கள் ஹரி-ஹேமா எனும் இணையர் எழுதி இருக்கிறார்களாம்.
ஜூலை 7 இல் சந்திர கிரகணம், 22 இல் சூரிய கிரகணம், ஆகஸ்ட் 6 இல் சந்திர கிரகணம் ஏற்படவிருக்கின்றன.
புராணகாலத்தில் இதே மாதிரி ஏற்பட்ட போது, பாரதப் போர் ஏற்பட்டதாம்; துவாரகை கடலில் மூழ்கியதாம்; முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப் போரும் ஏற்பட்டனவாம்.
ஆகவே உலகில் தீய விளைவுகள் ஏற்படும் என்று இவர்கள் உளறியதை தினமலர் ஏடு எடுத்து வெளியிட்டுள்ளது.
ஒளிதரும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நேர்க்கோட்டில் சந்திரன் வரும் போது சூரியன் மறைவதும், அதே போலவே சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி வரும் போது நிலவு மறைந்து காணப்படுவதும் இயல்பு. இதற்கும் பூமிக்கும் பூமியில் வாழும் மக்களுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதைத் தமிழ்நாடு அறிவியல் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர்.
அறிவியல் செய்தியைப் போடாத ஏடு, மூடநம்பிக்கைச் செய்தியை மட்டும் எழுதி மூட நம்பிக்கையை வளர்க்கிறது.
உலகம் மூழ்கப் போகிறது என நாள் குறித்துக் கூறிவிட்டு ஆல்ப்ஸ் மலையில் ஏறிக்கொண்ட முட்டாள்களையும் பார்த்தோம்.
உலகம் அழியப்போகிறது என்று கூறி அபாய அறிவிப்புச் செய்த அறிவிலிகளையும் பார்த்தோம்.
சில கோள்கள் நேர்கோட்டில் வரும் நிகழ்வினால் உலகம் உடையப் போகிறது எனக்கூறி கோளறு பதிகம் பாடிய பக்த மண்டுகளையும் பார்த்தோம்.
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது அடிப்படைக் கடமை. அதைச் செய்யாமல், அதற்கு எதிராகச் செயல்படும் இவர்களுக்கு என்ன தண்டனை?
-------------------"விடுதலை" 24-6-2009
2 comments:
காலில் மிதிச்சா சாணி;கையிலெ பிடிச்சு வைச்சா பிள்ளையார்.
மூடர்கள் என்றுதான் திருந்துவார்களோ
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment