Search This Blog

11.6.09

தூத்துக்குடி மாநாட்டில் (1948) பெரியார் பேசியதிலிருந்து ஒரு பகுதி ....




இலட்சியம் மாறாதது - திட்டங்கள் மாறக்கூடியவை
நடத்துகிறவன் ஒருவன்தான் இருக்க முடியுமே தவிர
எல்லோரும் தலைவராகச் செயல்பட முடியாது!

தந்தை பெரியாரின் தூத்துக்குடி மாநாட்டு (1948) உரையை எடுத்துக்காட்டி
தமிழர் தலைவர் உரை




நடத்துபவன் யாராவது ஒருவனாகத்தான் இருக்க முடியுமே தவிர எல்லோரும் தலைவர் களாக இருக்க முடியாது; மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள் ஆவார்கள் என்று நீடாமங்கலத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை எடுத்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உரையாற்றினார்.

சென்னை பெரியார் திடலில் 6 மாவட்டங்களின் கலந்துறவாடல் கூட்டத்திற்கு தலை மையேற்று திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:-


நம்மால் முடியாதது வேறு எவராலும் முடியாது; வேறு எவராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்.

மத்தியில் மதவெறி ஆட்சி அமைந்துவிடக் கூடாது. அமைந்தால் நம் இனத்தையே அழித் துவிடும் தேர்தலில் மூட நம்பிக்கை கொண்ட கட்சி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு எப்பொழுதும் கொள்கைப் பார்வைதான் உண்டு.

நமக்கு கொள்கை இலட்சியம் என்பது அடிப்படையானது; இது மாறாதது.
அதேநேரத்திலே அவைகளை நடைமுறைப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற் போல வேலைத் திட்டங்கள் மாறும். ஆனாலும் நம் கொள்கை இலட்சியத்தை அடை வதுதான் நமது ஒரே இலக்கு.

சலிப்பு ஏற்பட்டால்...

சில நேரங்களில் எனக்குக்கூட கொஞ்சம் சலிப்பு ஏற்படுவதுண்டு. என்ன இந்த மக்களுக்காக இவ்வளவு பாடுபட்டும் இப்படி நடக்கிறார்களே - இப்படி இருக்கிறார்களே என்று நினைப்பது உண்டு.

அப்பொழுதெல்லாம் தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம் பவங்களை படிப்பதுண்டு. நான் இன்னமும் பெரியாருடைய மாணவன்தான்.

இயக்கத்தில் துரோகம் தலையெடுத்த பொழுதெல்லாம் அய்யா அவர்களே சொல்லியிருக்கின்ற தகவலை குறிப்பாகச் சொன்னாலே, நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்.

அய்யா அவர்கள் 1948 இல் தூத்துக்குடி மாநாட்டில் பேசிய தலைமை உரையை உங்களுக்குப் படித்துக் காட்டினாலே போதும்.


"பா.வே. மாணிக்க நாயக்கர்

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்க நாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினியராக இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார்.

மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக் கூடிய புது மாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார்.

நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தருக்குக் கூறினேன்.

அப்போது மாணிக்க நாயக்கர் சொன்னார், கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக் காரத்தனப் போட்டி ஏற்பட்டு வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு, அதன்படி வேலை செய்யக்கூடிய ஒருபடிமானமுள்ள சொன்னபடி நடக்கக் கூடிய, இரண்டு சம்மட்டியும், சுத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர் கள் முட்டாள் களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்துவிடலாம் என்று கூறினார்.

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின்போதே (தந்தை பெரியார் முன்னிலையில் அந்த மாநாட்டிலேயே பேசியவர் சிறு வயது வீரமணி) மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். என்னைப் பின்பற்று கிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான்.

தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன்.

நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் சொல்கிறேன். நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ள வரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்து விட வேண்டியதுதான். கழகத்தில் சேரும் முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்.

மனசாட்சிக்குக்கூட இடமில்லை


ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும், பகுத்தறிவும் இடங்கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ, அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின் பற்றி நடக்கவேண்டியதுதான் முறை.

ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா என்று கூறி னால், என் மனச்சாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே என்று கூறினால், அது முறையாகுமா?

ஒரு டிஸ்ட்ரிக் சூப் ரண்டெண்டெண்ட் சுடு! என்று போலீஸ் காரனுக்கு உத்தரவு போட, அவன் என் மனச்சாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லையே என்று கூறினால், அந்த சூப் ரண்டெண்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக் கடையில் வேலை பார்க்க ஒப்புக்கொண்டவன், அந்த ஆட்டை வெட்டுடா, என்று எஜமான் உத்தரவிடும் போது, அய்யோ! என் மனச்சாட்சி மாட்டேன் என்கிறதே; நான் என்ன செய்யட்டும்? என்று கூறினால், ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங் கேயடா போயிருந்தது? என்று கேட்பானா, இல்லையா, அவனை?
ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வதுதான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது விஷமத்தனமே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்


என்று தமிழர் தலைவர் பேசி, மேலும் நீண்ட விளக்கவுரையாற்றினார்.

************************************


கட்டுப்பாடு மிக முக்கியம்

இயக்கத்தில் கட்டுப்பாடு என்பதுதான் மிக முக்கியமானது. சிந்திப்பது தலைமையினுடைய வேலை. செயலாற்றுவது தோழர்களுடைய வேலை.

அய்யா அவர்கள் தூத்துக்குடி மாநாட்டில் பேசியதை இங்கு படித்துக் காட்ட விரும்புகிறேன். இதைத் தெரிந்துகொண்டாலே மற்ற எல்லா செய்திகளையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
இயக்கத்துக்கு யார் தேவை?

என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள்தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

- தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார்(1948)






-------------------"விடுதலை" 11-6-2009

1 comments:

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்