
ஆரிய (மிலேச்ச)ரைப்பற்றி வ.உ. சிதம்பரனார்
பிராமணரல்லாதார்களாகிய தமிழர்களின் முன்னோர்கள் பிராமணர்களின் முன்னோர்களாகிய ஆரியர்களை மிலேச்சர் என்றும் யாகத்தின் பெயரால் கண்டவற்றையெல்லாம் தின்பவர்களென்றும், நினைத்தவற்றையெல்லாம் செய்பவர்களென்றும், சொல்லியும், நிகண்டு முதலிய நூல்களில் எழுதி வைத்தும், அவர்களைத் தொடாமலும், அவர்கள் தொட்ட பொருள்களைக் கொள்ளாமலும், அவர்களைத் தொட நேர்ந்த போது குளித்தும் அவர்களை இழிவுபடுத்தி வந்தார்கள். அவ்விழிவை ஒழிப் பதற்கு வழி என்ன என்று அவ்வாரியர்கள் ஆலோசனை செய்தார்கள். உடனே தங்களைப் பிராமணர்கள் என்றும், மற்றைத் தமிழர்க ளெல்லாம் சூத்திரர்கள் என்றும், சொல்லவும் எழுதவும் தலைப்பட்டார்கள். அவ்வாறு தாங்கள் மேலான ஜாதி யார் என்றும் தமிழர்களெல்லாம் கீழான ஜாதியார் என்றும் நடத்தையிலும் காட்டினார்கள். அந்த மருந்தையே தமிழர்கள் கைக்கொள்ளின் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நோய் நீங்கிப்போம். அதாவது, பிராமணரல்லாத ஜாதியார்களில் ஒவ்வொருவரும் தாம் பிராமண ருக்கு மேற்பட்ட ஜாதியாரென்று கருதிப் பிராமணர் மற்றை ஜாதியார்களை நடத்து கிறது போல் பிராமணர்களை நடத்தி வருவாராயின் தம் ஆரோப இழிவு நோய் போய்விடும். இந்நோய் முதலைப் போக்குவதற்கு வேறு மருந்து தேட வேண்டியதில்லை.
(ஆரோபம் - ஏறுதல்)
-------------5.11.1927-ல் நடந்த சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட் டுக்குத் தலைமை தாங்கும்போது திரு. வ.உ.சி. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து எடுக்கப்பட்டது.
--------------------------------------------------------------------------------
பிராமணன் தொழில் சிரைப்பதே!
இருக்கு வேதம் VIII 4, யசுர் வேதம் III 63, அதர்வண வேதம் VIII 2 - 17 இல் காணப்படும் பாடல்களில் காணப்படுவன:
ஓ குருவே! நீர் முதன்முறை குடுமி வைத்து உபநயனஞ் செய்யும்போதும், தலையைச் சிரைத்துப் பின்னாடியும், முகத்தையும் சிரைக்கும்போதும் பழகியதும், பளப்பளப்புள்ளதுமாகிய கத்தியைக் கொண்டு சவரஞ் செய்து, அவன் முகத்தை அழகும், பிரசாரமும் அடையச் செய்வதோடு, அவன் ஆயுள் குறையாமல் வளரும்படி செய்வீராக!
ஓ பிராமணோத்தமர்களே! முன்னர் அறிவிற் சிறந்த பிராமணராகிய சோமன், வருணன் முதலியவர்களுக்கு சவரம் செய்து அவனுக்குப் பசுக்களும், குதிரைகளும் அளித்துக் குடும்பம் விருத்தியாகும்படி செய்வீராக என அதர்வண வேதத்தின் பாடல் 63-8 கூறுகிறது.
(அதனால்தான் சவரம் செய்யும் சகோதரர்களை அம்பட்டர் என்று அழைக்கிறார்களோ, என்னவோ!)
----------------------------நன்றி :-"13-6-2009 "விடுதலை" ஞாயிறுமலR
2 comments:
இன்றும் படித்ததாகவும்,பட்டங்கள் வாங்கியதாகவும்,பதவிகளில் பெருமையடைபவர்களாகவும் உள்ள உடன் பிறப்புக்கள் சிந்திப்பார்களாக.
புரியாத மந்திரத்தைச் சொல்லும் படிக்காத பார்ப்பான் உயர்ந்தவன் என்று அழைத்து மரியாதை செய்து பணம்,பரிசுகள் கொடுத்து ஏமாறுகிறீர்களே,கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.
உங்களுக்கும்,கடவுளுக்கும் நடுவே இந்த மாமா வேண்டுமா?
நீங்கள் வேண்டிக்கொண்டால் கடவுளுக்குக் கேட்காதா?
கடவுளுக்கு யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்,யார் மூலம் நம்மை வேண்டிக் கொள்கிறார்கள் என்பதைக் கவனிப்பதுதான் வேலையா?
பார்ப்பானை மரியாதை செய்து கடவுளையே அவமானப் படுத்துகிறீர்களே அது ஏன் புரிய வில்லை.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா
Post a Comment