Search This Blog
4.6.09
பெரியாரை விமர்சிக்கும்போது ஆதாரத்துடன் நேர்மையாக விமர்சிக்க வேண்டும் - 5
தான் மட்டும் வாழ்ந்தால் போதாது தான் பிறந்த சமுதாயமே தன்னைபோல் முன்னேற்றமடைந்து மானமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்குப் பெரியார்(நாடகம்) பாடமாய், வரலாறாகத் தெரியும். ஆனால் தான் பிறந்த சமுதாயத்தையே சவக்குழிக்கு அனுப்ப நினைப்பவர்களுக்கு பெரியார் நாடகம் காமெடியாகத் தான் தெரியும் ஏனெனில் இவர்கள் பார்க்கும் பார்வையே வேறு. நண்பர்களை எதிரியாகவும், எதிரிகளை நண்பர்களாகவும் பார்க்கும் அவர்களின் பார்வையில் கோளாறு உள்ளது. தாழ்த்தப்படட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரி பார்ப்பனர்கள் தான் என்பதை அம்பேத்கரும், பெரியாரும் தெளிவாகக் கூறியுள்ளனர். ஆனால் இவர்கள் பார்வையே தலித்பார்வையல்ல, பார்ப்பனர்களுக்குச் செல்லப்பிள்ளையாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பார்வையாக மட்டுமே உள்ளது.
எப்போதையும் விட இப்போது இந்துத்துவா தலைவிரித்தாடுகிறது. அதை ஒடுக்க இந்துத்துவாவின் இடுப்பெலும்பை முறித்து நம்மிடையே இருக்கும் சரியான தத்துவம் பெரியார் என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொண்டு அவர்கள் பாணியில் பிரச்சாரயுக்தியாக இந்நாடகத்தை நடத்தி வருகிறன்றனர்.
இந்நாடகம் நடப்பதை அறிந்து, மக்கள் தெளிவு பெற்று வருவதைக் கண்டு பார்ப்பனர்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் இதன் மூலம் தனது மேலாண்மை போய்விடுமே என்ற பயத்தில். ஆனால் முனிமா குழுவினர் இதைக்கண்டு பதறுகிறார்கள். இதை ஏன் மெனக்கெட்டு பார்க்கவேண்டும் என்று தடை போடுகிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியார் நாடகத்தை பார்த்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து கொண்டால் எங்கே தன் வாழ்வு பறிபோய்விடுமோ, தமது பேச்சை கேட்க ஆளில்லாமல் போய்விடுமோ, எங்கே பார்ப்பன பார்வை பறி போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. அந்த மூன்று எழுத்துக்கு கிடைக்கும் மரியாதையையும், செல்வாக்கையும் ‘முனிமா’ என்ற மூன்றெழுத்திற்கு கிடைத்ததாக நினைத்து கொள்வதைப் பாசாங்கு என்று சொல்லாமல் வேறு என்ன வென்று சொல்வது. அந்த மூன்றெழுத்துக்கு அடிகோலியவர்கள் கூட பெரியாரும், பெரியார் உருவாக்கிய காட்டுமிராண்டிகளும் தான் முனிமா புரிந்து கொள்வார் என நம்புவோம்.
பழனி தமிழ் ஓவியா பெரியாரை விமர்சிக்கவே கூடாது என்ற சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார் மா. வேலுசாமி.
நியாயமான ஆரோக்யமான , நேர்மையான, உண்மையான விருப்பு வெறுப்பின்றி வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் பெரியாரும் பெரியார் தொண்டர்களும் வரவேற்றுள்ளனர் அந்த வகையில் தமிழ் ஓவியாவும் உச்சிமோந்து வரவேற்கிறார். இதில் ஒன்றும் உங்களுக்கு அய்யம் வேண்டாம். தான் பேசும் கூட்டங்களில் தன்னை விமர்சித்து கேள்வி கேட்பவர்களுக்கு உடன் அங்கேயே பதில் சொல்வதுதான் பெரியாரின் வழமை. ஒரு பொதுக்ககூட்டத்தில் பெரியாரை விமர்சித்து தொடர்ந்து கேள்விகளை கேட்டுக் கொண்டே வந்தார் ஒருவர். பெரியாரும் அதற்கு தக்க பதில் சொல்லிக் கொண்டே வந்தார். அடுத்த கேள்வியை கேட்பதற்காக எழுதிக் கொண்டிருந்து அந்த விமர்சகரின் பேனாவில் மை தீர்ந்து விட்டதைக் கவனித்து தனது பேனாவை கொடுத்து, கேள்வி கேட்கச் சொன்ன பெருந்தகையாளார் பெரியார். இப்படிப்பட்ட பெரியாரை விமர்சிக்கும்போது ஆதாரத்துடன் நேர்மையாக விமர்சிக்க வேண்டும் என்பதுதான் தமிழ் ஓவியாவின் வேண்டுகோள். இதில் சர்வாதிகாரப்போக்கு எங்கிருந்து வந்தது? ஆனால் நீங்கள் வைக்கும் விமர்சனம் நேர்மையானதா? உண்மையானதா? ஆதாரத்துடன் கூடியதா? நடுநிலையுடன் சிந்தியுங்கள்.
----------------------------------------தொடரும் -நன்றி:-"களத்துமேடு" ஜூன் 15 - 2004 பக்கம்:11-12
Labels:
பெரியார்-தலித்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
// பெரியாரை விமர்சிக்கும்போது ஆதாரத்துடன் நேர்மையாக விமர்சிக்க வேண்டும்//
உங்கள் கருத்தை வரவேற்று வழிமொழிகிறேன்
அவரை ஒருவரும் விமர்சிக்க மாட்டார்கள். அவரினைக் காட்டி வியாபரம் பண்ணுறவர்களை தான் திட்டுவார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பெரியாரைப் பார்ப்பனர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.மற்றவர்கள் தான் புரிந்து கொள்ளாமல் தடு மாறுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கூடப் பெரியாரை மற்ற மனித நேயக் கொள்கைகளில் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்.அவர் கடவுள் இல்லை யென்று சொன்னதே மனித நேய எதிர்ப்புக் கொள்கைகளான ஜாதி,பெண்ணடிமை,லஞசம் எல்லாமே கடவுளில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன் என்பதால் தான்.
உங்கள் மகள் ஒரு நல்ல பையனைக் காதலித்து வாழ்க்கை நடத்த விரும்பும் போது ஜாதி குறுக்கே நிற்கலாமா?ஜாதகக் கல்யாணங்களின் கதைகள் பல எப்படி முடிகின்றன?இன்னும் ஜாதகம் பார்க்கும் படித்த பகுத்தறிவில்லாதவர்கள் பெரியாரை விமர்சிக்கலாமா?
தாழ்த்தப் பட்டவர்களும்,பிற் படுத்தப் பட்டவர்களும் பெரியாரில் இணையும் போதுதான் ஜாதி ஒழிய முடியும்.
பெரியார் "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற" என்று வாழ்ந்தவர்.
அவரை விமர்சிப்போர் நீர பிறவாக இருப்பது தான் உண்மை.
Post a Comment