Search This Blog
3.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை-போஸ்னியா - ஹெர்சகோவினா (யூகோஸ்லோவியா)-போட்ஸ்வானா-புருனே
போஸ்னியா - ஹெர்சகோவினா (யூகோஸ்லோவியா)
பொது ஆண்டுக் கணக்குக்கு முந்தைய நூற்றாண்டில் இன்றை போஸ்னியா ஹெர்ச கோவினா நாடுகள் உள்ள பகுதிகள் ரோமப் பேரரசைச் சார்ந்து இருந்தன. ஸ்லாவ் இன மக்கள் 7ஆம் நூற் றாண்டு வாக்கில் இங்கு குடியேறினர். 1463 இல் ஒட்டாமான் துருக்கி யர்கள் போஸ்னியாவை வென்று கைப்பற்றினர். 1877-78 இல் நடந்த பெர்லின் மாநாடு, இந்நாட்டை ஆளும் உரிமையை ஆஸ்திரியாவுக்கும் ஹங் கேரிக்கும் வழங்கியது.
28-6-1914இல் போஸ் னியாவின் செர்ப் இன மாணவன் காவிலோ பிரின்சிப் ஆஸ்திரிய அரசப் பிரதிநிதி பிரான்சு பெர்டினான்ட் என் பாரை சராஜிவோ நக ரில் கொன்றுவிட்டான். முதல் உலகப் போருக்கு இது காரணமாக அமைந்துவிட்டது. உலகப் போரின் முடிவில் ஆஸ் திரிய ஹங்கேரி அரசு உடைந்து, போஸ்னியா ஹெர்சகோவினா நாடுகள் செர்ப் இன சாம்ராஜ்யத்தின் குரோட்ஸ் மற்றும் சுலோவின்ஸ்சின் பகுதிகளாக 1918இல் ஆகின. பின்னர் இந்நாடு யூகோஸ்லாவியா எனப் பெயர் மாற்றம் பெற்றது 1929 இல்!
1990இல் உலகெங்கும் கம்யூனிஸ்ட் நாடுகள் கலைந்துபோன போது, போஸ்னியாவும் ஹெர்சகோ வினாவும் 1992 இல் யூகோஸ்லேவியாவிடமிருந்து விடுதலை பெற்றுவிட்ட தாகப் பிரகடனப்படுத்திக் கொண்டன. ஆனாலும் பெரிய பிரச்சினைகள் தலை எடுத்தன. அந் நாட்டிலிருந்த மூன்று பெரும் இனக் குழுக்களும் தனித்தனியாகப் போக விரும்பின. முசுலிம் இனத்தவர் தனி போஸ்னியாவை விரும்பினர். குரோட் இனத்தவர் குரோஷியா நாடு ஆக இருக்க வேண்டும் என விரும்பினர். செர்ப் இனத்தவர் யூகோஸ்லேவியா வாகவே நீடிக்க விரும்பினர்.
1992இல் நடைபெற்ற பொதுமக்கள் வாக்கெடுப்பின் போது, குரோட்களும் முசுலிம்களும் சேர்ந்து கொண்டு செர்ப்களை விட அதிக வாக்குகள் பெற்றனர். செர்ப்கள் ஆத்திர மடைந்தனர். உள்நாட்டுப் போர் மூண்டது. பாதி நாட்டின் மீது போஸ்னிய செர்ப் இனத்தவர் கட்டுப்பாடு செலுத்தினர். 1992 ஆகஸ்ட் மாதத்தில் இது நடந்தது.
1995 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செர்ப் மக்களின் மீது நாட்டோ படைகள் வான் தாக்குதலில் இறங்கின. செர்ப் இனத் தவரிடமிருந்து கணிசமான பகுதிகளை குரோட்களும் முசுலிம்களும் பிடித்துக் கொண்டனர். டேடேன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இரு நாடுகள் உருவாக்கப் பட்டன. முசுலிம் குரோட்கள் கூட்டமைப்பு என்றும் செர்ப் நாடு என்றும் இரண்டாக உருவாகின.
51 ஆயிரத்து 129 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டில் 45 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 40 விழுக்காடு இசுலாமியர், 31 விழுக்காடு பழமைவாதக் கிறித்துவர், 15 விழுக்காடு ரோமன் கத் தோலிக்கர் வாழ்கின்றனர்.
அதிபர் பதவி சுழற்சி முறையில் செர்ப், முசுலிம், குரோட் இன மக்களிடையே வகிக்கப் படுகிறது. ஒவ்வொரு வரும் 8 மாதங்கள் பதவியில் இருப்பர். பிரமர் பதவி உண்டு.
போட்ஸ்வானா
ஆப்ரிக்காவின் தென் பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டை 1885 இல் பிரிட்டன் பாது காக்கத் தொடங்கியது. பெச்சுவானாலாண்டு எனப் பெயர் கொண்ட அந்நாட்டின் எல்லையை 1890 இல் பெருக்கியது பிரிட்டன். 1966 இல் முழுச் சுதந்திரத்தை அந்நாட்டுக்கு அளித்தது. போட்ஸ்வானா குடியரசு மலர்ந்தது.
6 லட்சத்து 370 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டில் 17 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். வைரம், செம்பு, நிக்கல், உப்பு, நிலக்கரி போன்றவை அதிகஅளவில் கிடைக் கும் நாடு. 72 விழுக்காட் டினர் கிறித்துவர்கள். மற்றையோர் ஆப்ரிக்க இனக்குழு மதநம்பிக்கை உள்ளவர்கள்.
கெட்ஸ்வானா மொழி பேசுவோர் 78 விழுக்காட்டுக்கு மேல் உள்ள இந்நாட்டின் ஆட்சி மொழி இங்கிலீஷ். இதைப் பேசுவோர் 2 விழுக்காடு மட்டுமே!
2000 இல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி எய்ட்ஸ் நோய்ப் பாதிப்பு மிக அதிகம். எய்ட்ஸ் தடுப்பு மருந்து இலவசமாகவே கிடைக்கும் என்றுஅதிபர் அறிவித்தார்.
பிரேசில்
பொது ஆண்டுக் கணக்குக்கு 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரேசில் நாட்டில் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்குத் தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன. அய்ரோப்பியர்கள் அந்தப் பகுதிக்கு வந்த காலத்தில் அங்கு வாழ்ந்த மக்கள் தொகை 20 லட்சத்திலிருந்து 60 லட்சம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அவ்வளவுப் பழமையான பெரும் நாடு.
இந்தியாவைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று புறப்பட்டு வந்த போர்த்துகீசியரான பெட்ரோ ஆல்வாரிஸ் கப்ரால் என்பவர் 1500இல் இங்கு வந்தார். வெரா குருஸ் என்ற இப்பகுதிக்கு அவர் பெயரிட்டு அழைத் தார். அந்நாட்டில் ஏராளமாக விளைந்திருந்த பிரேசில் மரங்களைப் பார்த்து, அந்த நாட்டை பிரேசில் என்ற பெயரிட்டனர். போர்த்துகலுக்குத் தேவையான சர்க் கரையை இந்நாடு உற்பத்தி செய்து அளித்தது.
1789இல் டைரடென்டஸ் என அழைக்கப்பட்ட ஜோஸ் ஜோக்கிம் டிசில்வா சேவியர் என்பவர் போர்த்துகீசியர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டத்தை நசுக்கி டைரடென்டஸைக் கொன்றனர் போர்த்துகீசிய அரசினர். 1807இல் போர்த்துகல் நாட்டை நெப் போலியன் தாக்கிய போது உயிர் தப்பிக்க போர்த்துகல் இளவரசன் டாம் ஜோவோ பிரேசிலுக்கு ஓடிவந்து தங்கினார். 16-12-1815இல் போர்த்துகீசிய குடியேற்ற நாட்டுப் பகுதி களை போர்த்துகல் அய்க்கிய அரசு எனப் பெயர் சூட்டினார். இதில் பிரேசிலும் அல்கார்வ் பகுதிகளும் அடங்கும். இதன் மூலம் போர்த்துகல் நாட்டுக்குச் சமமான தகுதியை பிரேசில் பெற்றது.
1822இல் டாம் ஜோவேவின் மகன் டாம் பெட்ரோ பிரேசிலுக்கு விடுதலை வழங்கினார். அந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் நாள் பிரேசிலின் முடிசூடிய சக்ரவர்த்தி ஆனார். 1889 இல் முடி யாட்சி தூக்கி எறியப் பட்டு குடியரசு ஆட்சி உருவானது.
1930இல் புரட்சி ஏற் பட்டு கெடுல்லோவர் காஸ் என்பவர் தற்காலி கப் புரட்சி அரசின் தலைவரானார். 1937இல் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக அவரே சர்வாதிகாரியாகி ஆளத் தொடங்கினார்.
மக்கள் நல ஆட்சி நடைபெறத் தொடங்கியது. 1960 இல் நாட்டின் தலைநகர் பிராசிலியா நகருக்கு மாற்றப்பட்டது. 1980 முதல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு பணவீக்கத்தால் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.
85 லட்சத்து 11 ஆயி ரத்து 965 சதுர கி.மீ. பரப்புள்ள இந்த நாட் டில் 19 கோடிப்பேர் வாழ்கின்றனர். 74 விழுக்காடு ரோமன் கத்தோலிக்கர் களும் 15 விழுக்காடு புரொடஸ்டன்ட்களும் உள்ளனர். போர்த்துகீசிய மொழிதான் ஆட்சி மொழி. ஆனாலும் ஸ்பானிஷ், இங்கிலீஷ், பிரெஞ்சு மொழி ஆகியவையும் பேசப்படு கின்றன.
அதிபர் ஆட்சி முறை. 86 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.
புருனே
பொது ஆண்டுக் கணக்குக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவுடன் வணிகம் செய்து உறவு கொண்டிருந்த நாடு புருனே. ஜாவாவை ஆண்ட பஜயாகித் அரசு வமிசத் தொடர்பால் இந்து மதத்தின் தாக்கம் ஏற்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில், உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பங் களினால் நாடு மிகவும் பாதிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டு வரை இந்த நிலை நீடித்தது.
1841ஆம் ஆண்டில் சாரவாக் நாடு பிரிட்டிஷ்காரர்களின் கைக்குப் போனது. தொடர்ந்து லபுவான் தீவு (தற்போது மலேசியாவில் உள்ள) சபா ஆகிய பகுதிகளும் புருனே நாட்டை விட்டுப் போய் விட்டன. 1888இல் புருனே பிரிட்டிஷ் நாட்டின் பாதுகாப்பில் வந்தது. இரண் டாம் உலகப் போரில் புருனே நாடு ஜப்பானியர்களின் பிடியில் சிக்கியது. 1941 முதல் 1945 வரை ஜப்பான் நாட்டின் கீழ் இருந்த நாட்டை போர் முடிந்த பிறகு பிரிட்டிஷார் மீண்டும் கைப் பற்றினர்.
முசுலிம் சுல்தான் ஆளும் நாடு இது.1-1-1984 இல் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது. ஆட்சித் தலைமையை சுல்தான்தான் பிரதமராகவும் இருந்து வகித்து வருகிறார். நாடாளுமன்றத்தை 1984இல் கலைத்துவிட்ட சுல்தான் மீண்டும் 2004இல் புதுப்பித்தார்.
5 ஆயிரத்து 770 சதுர கி.மீ. பரப்புள்ள நாட் டில் 4 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். 67 விழுக் காடு முசுலிம், 13 விழுக்காடு புத்தம், 10 விழுக்காடு கிறித்துவம் என்ற வகையில் மக்கள் உள்ளனர். மலாய் மொழி தான் ஆட்சி மொழி. இங்கிலீசும் சீனமும் பேச்சு மொழிகளாக உள்ளன.94 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள்
--------------"விடுதலை" 3-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment