Search This Blog
5.6.09
உலக நாடுகள் -தூரப்பார்வை-கம்போடியா- கனடா
கம்போடியா
சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வரும் வணிகர்களும் ஊர்சுற்றிகளும் தங்கிச் செல்கிற இடமாக இருந்தது இன்றைய கம்போடியாவின் கடற்கரை. சீன யாத்ரிகர்கள் எழுதி வைத்த குறிப்புகளில் குறிக்கப்பட்டிருக்கிற ஃபுனான் நாடுதான் கம்போடியா. பொது ஆண்டுக் கணக்குக்கு 100 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை இது.
600 ஆம் ஆண்டுகளில் இந்நாடு இந்துக்களின் கமர் வமிசத்தின் ஆட்சியில் இருந்தது. அந்தக் காலத்தில்தான் அங்கோர்வாட், அங்கோர்தோம் என்ற கோயில்கள் கட்டி முடிக்கப்பட்டன. 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரை நீடித்த கமர் ஆட்சி கம்போடியாவின் பொற்காலமாகும்.
1863 இல் பிரான்சு நாடு கம்போடியாவைத் தனது குடியேற்ற நாடாக ஆக்கிக்கொண்டது. லாவோஸ், வியட்நாம் நாடுகளையும் இத்துடன் சேர்த்துக் கொண்டு பிரெஞ்ச் இந்தோ சீனா எனப் பெயரிட்டு விட்டது. கம்போடியாவின் மன்னராக 1941இல் அரச பரம்பரையைச் சேர்ந்த நரோத்தம் சிகனுக் பட்டம் ஏற்றார். 1953 இல் கம்போடியாவுக்கு பிரான்சு விடுதலை தந்தது. 1955 இல் தம் பெற்றோருக்கு மன்னர் பதவியைத் தந்து விட்ட நரோதம் சிகனுக் ஆட்சித் தலைவராக நீடித்தார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் போய் இருந்த நேரம் பார்த்து சிகனுக் கைக் கவிழ்த்துவிட்டு லோன்நோல் எனும் போர்ப்படைத் தளபதி 1970 மார்ச்சில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண் டார். கமர் ரூஜ் படையின் தலைவரான போல்பாட் என்பான் 1975இல் லோன்நோலைக் கவிழ்த்துவிட்டுப் பதவிக்கு வந்தான்.
தற்கால உலக வரலாற்றில் மிகவும் கொடூரமான காலம் தொடங்கியது. வலுக்கட்டாயமாக வேலை வாங்கப்பட்டு பல பத்து லட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டனர். அரசே இந்தக் கொடுமையைச் செய்தது. சர்வாதிகாரி போல்பாட்தான் இந்தக் கொடுமையைச் செய்தவன். நாட்டின் பெயரையும் கம்பூச்சியா என மாற்றினான்.
1979 ஜனவரியில் வியட்நாம் படைகள் அவனைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது. போல் பாட் தன்படையினருடன் கம்போடியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் ஓடி ஒளிந்து கொண்டான். கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு கொண்டிருந்த வியட் நாம் அரசை அகற்ற சிகனுக்கின் படைகளுடன் போல்பாட்டின் படையும் சேர்ந்து கொண்டது.
1993 வரை நீடித்த கொரில்லாப் போரின் முடிவில் ஒப்பந்தம் ஏற்பட்டது. வியட்நாமை ஆதரிக்கும் தலைவர் ஹுன் சென்னுக்கும் நரோத்தம் சிகனுக்கின் மகன்இளவரசன் ரணரித்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இருவருமே கூட்டுப் பிரதமராக ஆகிய ஆட்சி செய் தனர். சர்வாதிகாரி போல்பாட் கொல்லப்பட்டான். அவன் பதுங்கியிருந்த குகையில் பல்லாயிரக்கணக்கான மண்டை ஓடுகள் இருந்தன. அவனால் கொல்லப்பட்ட மக்களின் மண்டை ஓடுகள் அவை.
2003இல் நடந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. என்றாலும் போட்டியிட்ட கட்சி களுக்கிடையே ஒத்த கருத்து ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமைத்திட ஓராண்டுக் காலம் பிடித்தது.
அதன்படி மன்னர் நரோதம் சிகனுக் 2004 நவம்பர் முதல் ஆட்சித் தலைவராக இருக்கிறார். ஹுன் சென் பிரதமராக 30-11-1998 முதல் இருப் பவர் நீடித்து வருகிறார்.
1 லட்சத்து 81 ஆயி ரத்து 40 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் மக்கள் தொகை 1 கோடியே 39 லட்சம் ஆகும். தேரவாத புத்தம் 95 விழுக் காடு மக்கள் பின்பற்று வதாக உள்ளது. கமர் மொழி 95 விழுக்காட்டினர் பேசும் மொழி. இங்கிலீசும் பிரெஞ்சும் உண்டு.
74 விழுக்காட்டினர் மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள்.
கனடா
இந்நாட்டில் வசித்த முதல் குடிகள் இன்யூட் எனும் பச்சை மாமிசம் உண்ணும் எஸ்கிமோக் கள். பத்தாம் நூற்றாண்டில் லீப் எரிக்கன் என்பார் லாப்ரடார் அல்லது நோவா ஸ்கோடியா பகுதிக்கு வந்தவர் எனக் கருதப்படுகிறது.
1534 இல் ஜாக்யுஸ் கார்டியர் என்பவர் பிரான்சு நாட்டுக்குக் கனடா சொந்தம் எனக் கூறினார். புது பிரான்சு என்றே அந்நாடு அழைக்கப்பட்டது. 1670 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் நுழைந்து ஹட்சன் பே கம்பெனி என்ற ஒன்றைக் கனடாவில் தொடங்கினர். முதலில் வணிகம் என்றுதான் பிரிட்டிஷ் மூக்கை நுழைக்கும். மீன்வளமும் ஃபர் தோலும் ஏராளமாகக் கிடைத்த காரணத்தால் கனடா மீது பிரான்சுக் கும் பிரிட்டனுக்கும் நாட்டம்.
இவர்களின் வர்த்தகப் போட்டி வளர்ந்து, 1713 மோதல் உருவாகி அதன் விளைவாக ஹட் சன் வளைகுடாப் பகுதியை பிரான்சு இழந்தது. நோவா ஸ்கோடியா, நியூபவுண்ட் லாண்டு ஆகிய பகுதிகளையும் இழந்துவிட்டது. ஏழு ஆண்டுக்கால மாக 1756 முதல் 1763 வரை நடந்த இரு நாடு களுக்கிடையேயான போரின் முடிவாகப் பல பகுதிகளையும் பிரிட்டன் கைப்பற்றியது. பிரான்சு வட அமெரிக்கப் பகுதியை விட்டு வெளியேற நேரிட்டது.
1849 இல் சுயஆட்சி உரிமை கனடா நாட்டுக்கு உண்டு என்று பிரிட்டன் ஏற்றுக் கொண்டது. பிரிட்டிஷ் வட அமெரிக்கச் சட்டம் 1867 இன்படி கனடா நாட்டரசை பிரிட்டன் உருவாக்கியது. இந்தக் கூட்டு அரசில் கனடா வின் மேல் பகுதி, கீழ்ப் பகுதி, நியு புருன்ஸ்விக் மற்றும் நோவா ஸ்கோடியா பகுதிகள் அடங்கியிருந்தன. 1869 இல் நாட்டின் மேற்குப் பகுதியின் மத்தியில் இருந்த நிலங்களை கனடா விலைக்கு வாங்கியது. இதன்மூலம் 1870 இல் மனிடோபா மாநிலம் 1905 இல் அல் பெர்டா மற்றும் கஸ் கட்சவன் ஆகிய மாநிலங்களும் உருவாயின.
1931 இல் ஏற்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் சட்டத்தின்படி, பிரிட்டனும் கனடாவும் சம உரிமை பெற்ற சமமான நாடுகளாயின. எனவே கனடா நாடு பிரிட்டனின் கூட்டு நாடாகக் கருதப்பட்டது; பிரிட்டனைச் சார்ந்துள்ள துணை நாடாகக் கருதப் படவில்லை. இரண்டுமே அரசுக்கு விசுவாசமான இரண்டு நாடுகள் என்ற நிலை ஏற்பட்டது.
99 லட்சத்து 84 ஆயி ரத்து 670 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 3 கோடி 31 லட்சம் மட்டுமே! கிறித்துவ மதத்தின் பல்வேறு பிரிவுகளைப் பின்பற்றுபவர்களாக மக்கள் உள்ளனர். இங்கிலீசும் பிரெஞ்சும் ஆட்சி மொழிகளாக உள்ளன. அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள்.
இங்கிலாந்தின் அரசிதான் நாட்டின் தலைவர். பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நாடாளுமன்றம் இரண்டு அவைகளாகக் கொண்டது. ஒன்று மேலவை (செனட்) இதன் 105 உறுப்பினர்களைப் பிரதமரின் அறிவுரைப்படி கவர்னர் ஜெனரல் நியமிக்கிறார். இவர்கள் தங்களின் 75 வயது வரை பதவி வகிப்பார்கள்.
மக்களவை 301 இடங்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் மக்களால் வாக்களித்து நடத்தப்படும் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று வருபவர்கள்.
--------------------"விடுதலை" 5-6-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment