Search This Blog
28.7.09
இந்துயிசம் பற்றி உச்சநீதிமன்றம் கூறியது என்ன?
இந்துத்துவாவா?
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் தோல்விக்கு இந்துத்துவா கொள்கை காரணமல்ல. பா.ஜ.க.வை மதவாதக் கட்சி என்று மதச்சார்பற்ற கட்சிகள் கூறினாலும், இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம். இந்துத்துவா கொள்கையில் பா.ஜ.க. உறுதியாக இருக்கும். இந்துத்துவா என்பது மதமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. எனவே, அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கமாட்டோம். என்ன விலை கொடுத்தாகினும் இந்துத்துவா கொள்கையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத்சிங் லக்னோவில் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 15 ஆவது மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழுவில், தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டன. இந்துத்துவாவை முதன்மைப்படுத்தியதால்தான் தோல்வி கண்டோம் என்று கட்சிக்குள்ளேயே பேசினார்கள். மக்கள் பிரச்சினையைப் பேசவேண்டும் என்று கூறியவர்களும் உண்டு. எதிர்க்கட்சிகள் கூறுவது ஒருபுறம் இருக்கட்டும். கட்சிக்குள்ளேயே அந்தப் பிரச்சினை வெடித்துக் கிளம்பியதே அதன் அடிப்படையைப்பற்றி கட்சியின் தலைவர் சிந்திக்கவேண்டாமா?
பொய்யை மட்டும் பேசுவது உண்மையைத் திரித்துக் கூறுவது என்பதிலே பி.ஜே.பி. சங் பரிவார் வட்டாரத்தை வெல்ல உலகத்தில் வேறு யாருமே கிடையாது.
காந்தியாரைப் படுகொலை செய்த, நாதுராம் கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டு, காந்தியாரைக் கொன்றது முசுலிம்தான் என்று மக்களை நம்ப வைக்கவேண்டும் என்று சூழ்ச்சி செய்யவில்லையா?
அதுபோல, இந்துத்துவா பற்றி ஏதோ உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது, சொல்லிவிட்டது என்று ஒரு கரடியை நீண்டகாலமாகவே இந்தக் கூட்டம் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறது.
உண்மை என்னவென்றால், அந்தத் தீர்ப்பைக் கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா இந்துத்துவாபற்றி தான் கூறிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் திரித்து அரசியலாக்கிவிட்டனர் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினாரே!
இந்துயிசம் குறித்து தாம் பொறுப்பில் இருந்தபோது வழங்கிய தீர்ப்பை சில அரசியல்வாதிகள் தவறான அர்த்தத்தில் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். தமது தீர்ப்பின் சாரத்தை அவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாமல் தங்கள் வசதிக்கேற்ப திரித்துக் கூறுகின்றனர்.
இந்து, இந்துயிசம், இந்துத்துவா ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், குறிப்பிட்ட நோக்கத்துக்காக திட்டமிட்டு அந்த வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் தவறு.
விவேகானந்தர் சகிப்புத்தன்மை என்ற பொருளில் இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். அந்த அர்த்தத்தில்தான் தம் தீர்ப்பில் இந்துயிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று கூறியதாகக் கூறினார்.
(தி இந்து, 6.2.2003, பக்கம் 11)
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தமது தீர்ப்பை பி.ஜே.பி. வகையறாக்கள் திரித்துக் கூறுகின்றன. தாம் கூறியதை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்று கூறியதிலிருந்தே காவிக்கூட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பதை தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே! விவேகானந்தர் கூறிய பொருளில்தான் தாம் கூறியதாகச் சொல்லியிருக்கிறாரே தவிர, காவிக்கூட்டம் சொல்லும் சித்தரிக்கும் பொருளில் கூறவில்லை என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
குறிப்பிட்ட ஒரு நோக்கத்துக்காக இந்தச் சொல்லை காவிக் கூட்டம் சொல்லி வருகிறது என்பதையும் முகத்திரையைக் கிழித்தக் காட்டிவிட்டாரா இல்லையா?
காவிக் கூட்டத்தின் அந்தக் குறிப்பிட்ட நோக்கம் எது? இந்துக்கள் அல்லாத முசுலிம்கள், கிறித்துவர்களை அந்நியப்படுத்திக் காட்டவேண்டும் என்பதுதானே அந்தக் குறிப்பிட்ட கூட்டத்துச் சொல்லாடலின் நோக்கம்!
இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் தங்கள் மதத்தையே இந்து மயமாக, இந்திய மயமாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கூறவில்லையா? கிறிஸ்துவைத் தூக்கி எறிந்துவிட்டு கிருஷ்ணனைக் கும்பிடவேண்டும் என்று கூறிடவில்லையா? அல்லாவை மறந்துவிட்டு அவதாரக் கடவுளான ராமனை வழிபடவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசவில்லையா?
அந்த அடிப்படையில்தானே இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்தனர். குஜராத் மாநிலம் டாங்ஸ் மாவட்டத்தில் சர்ச்சுகளை இடித்துத் தள்ளினர். வாடிகன் போப் இந்தியா வந்தபோது, எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததும் அந்த நோக்கத்தில்தானே!
எதைச் செய்கிறார்களோ அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் அவர்களிடத்தில் கிடையாது என்பதற்கும் இது ஓர் எடுத்துக்காட்டுதானே!
-------------------"விடுதலை" தலையங்கம் 28-7-2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Oviya
everyone knows that you and that swine veeramani are dirty despicable balck shirt wearing dravidian tamils.even so should you guys behave like vicious sons of bitches?think oviya think.think rarionally.
ஓவியா
ஒரு சந்தேகம்.
பெரியாரின் எழுத்துக்களை வெளியிடுவது சம்பந்தமாக ஒரு சட்ட போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது போலிருக்கிறதே ?
அதுபற்றி உங்கள் கருத்தென்ன ?
பெரியாரின் எழுத்துக்களை யார் புத்தகமாக, குறுந்தகடாக வெளியிட்டால் என்ன ?
அனைத்தும் மக்களைத்தானே போய் சேருகிறது ?
அதே சமயம், காப்பிரைட் சட்டம் எவ்வளவு காலத்துக்கு செல்லும் ?
உதா> நான் பெரியாரின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுகிறேன் என்றால் நான் சட்டப்படி குற்றமிழைக்கிறேனா ?
விளக்கவும்...
நீங்கள் கேட்ட விளக்கத்திற்கும் கேட்ட கேள்விகளுக்கும் ஏற்கனவே தமிழ் ஓவியா வலைப்பூவில் விடையளித்துள்ளேன். அதற்கான சுட்டிகளை கீழே தந்துள்ளேன். நேரம் இருப்பின் பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.
இந்தப் பதிவுகளில் நீங்கள் கூட பின்னூட்டம் அளித்துள்ளீர்கள்.
http://thamizhoviya.blogspot.com/2008/10/blog-post_06.html
http://thamizhoviya.blogspot.com/2008/10/2.html
http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_29.html
படியுங்கள் உண்மை புரியும்.
மேலும் கீழே ஒரு சுட்டியின் இணைப்பை தந்துள்ளேன்.
http://thoughtsintamil.blogspot.com/2009/07/blog-post_28.html
இதையும் படியுங்கள். மேலும் உண்மை புரியும்.
-----------விவாதிப்போம்..
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பெரியார் கருத்துக்களைப் பரப்பிட இத்துணைத் தொண்டர்கள் ஆர்வமாக உள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சியானது.
உண்மையிலேயே இதில் எத்துனை பேருக்குப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பற்றியோ,அவர்களது பதிப்புக்களைப் பற்றியோ தெரியும்.திராவிடன் புத்தக நிலையம் எவ்வளவு புத்தகங்களை வெளியிட்டுள்ளது,நடமாடும் புத்தக நிலையங்கள் எப்படி செயல் பட்டுள்ளன, ஏதாவது தெரியுமா?
இருட்டடிக்கப் பட்டப் பெரியாருக்கு,
அவரது நன்றி எதிர் பார்க்காத தொண்டர் படைக்குப் பெரியாரால் படித்து,பட்டங்கள் பெற்று பயன் பெற்றுள்ள வாரிசுகளின் வாழ்த்துக்கள் அருமை,அருமை.
இருக்கும் அறக்கட்டளைகளிலேயே பெரியார் அறக்கட்டளை போல வளர்ந்து,கட்டுப்பாட்டுடன் நிர்வாகிக்கப்படும் அறக்கட்டளை இல்லையென்பது பொது கணக்காயர்களின் கணிப்பு.
வரும் ந்ன்கொடை அனைத்தும் விடுதலையில் பட்டியலிடப் படுகிறது.
ஆசிரியர் வீரமணி மேல் கல் வீசும் உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.அவருடன் இரண்டு நாட்கள் கூட இருந்து பயணம் செய்து,தங்கும் இடம்,உண்ணும் உணவு,ஒரு மணித்துளியையும் வீணக்காமல் உழைக்கும் உழைப்பு,உறங்கும் நேரம் இவற்றைப் பாருங்கள்.நான் ஏற்பாடு செய்து தருகிறேன்.அவருக்குக்கிடைக்கும் அன்பளிப்புக்கள்,அவருடைய நூல்களின் வருமானம் அனைத்தும் அறக்கட்டளைக்கு.
கடைசியாக இந்தக் குடியரசு பதிப்பை செய்தவர்கள் அதை எப்படிப் பெற்றார்கள்,எங்கேயிருந்து பெற்றார்கள் அதில் ஈடு பட்டவர்களின் கருத்துக்கள்,குறிக்கோள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு பேசுவதும், எழுதுவதும் நல்லது.
பெரும் பாலோனோருக்குக் கிடைக்கும் செய்திகள் யாரிடமிருந்து கிடைக்கின்றன,நுனிப்புல் மேய்ந்த அறிவாளர்களாகத் திகழாதீர்கள்.
பெரியாரைப் படியுங்கள்,பரப்புங்கள் ஆனால் முறைப்படி செய்யுங்கள்.
எங்கிருந்து எப்படிப் பெற்றோம் என்பதை முறைப்படி வெளியிட்டுப் பதிப்பவர் பதிப்பாளி.திருட்டுத் தனம் செய்பவர்களுக்கு வேறு பெயர் உண்டு.
8:45 AM, July 29, 2009
Post a Comment