Search This Blog
15.7.09
கருப்புச் சட்டைக்காரர்களை மதிக்கும் காமராசர்
பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் அவர்களால் அழைக்கப்பட்ட காமராசர், தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களை கருப்புச் சட்டைக்காரர்களை மதிப்பதிலும் சிறந்த பண்பாளர் ஆக இருந்தார் என்பதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம்.
பெரியகுளத்தில் நடந்த நிகழ்ச்சியை உதாரணமாக கொள்ளலாம். 1962 இல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றபோது பெரியகுளம் நகரில் ஜெயா திரையரங்க வரவேற்பு நிகழ்ச்சி, பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வருகின்றார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்குச் செல்லவேண்டிய நெருக்கடியான நிலையில், காலதாமதமாக பெரியகுளம் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பலர் மனு கொடுக்கிறார்கள், வாங்கி வாங்கி போட்டுக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது திராவிடர் கழகப் பெரியகுளம் நகர தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான சுயமரியாதைச் சுடரொளி ம.பெ. முத்துக்கருப்பையா அவர்கள் கருப்புச் சட்டையுடன் திராவிடர் கழக கோரிக்கை மனுவை கொண்டு செல்கிறார் (சோத்துப்பாறை அணைத் திட்டம் தேவை என்ற கோரிக்கை).
கோரிக்கை மனுவை படித்து காட்டிய பின்பே காமராசர் அவர்களிடம் வழங்குவேன் என கூற, பொறுப்பாளர்கள் நேரம் இல்லை மனுவை படிக்க முடியாது, கொடுத்துட்டுப் போங்கள் என கூற, முத்துக்கருப்பையா அவர்கள் மறுத்து, படித்துதான் கொடுப்ன்; இல்லை என்றால் நான் கோரிக்கை மனுவே கொடுக்கவில்லை என்கிறார்.
(முத்துக்கருப்பையா அவர்கள் மனுவினை படித்துக்காட்ட, காமராசர் அவர்கள் உன்னிப்பாக கேட்கிறார்.)
இதைக் கண்ட கல்வி வள்ளல் காமராசர், கருப்புச் சட்டைக்காரரை கூப்பிடுங்கள். அவர் படித்து காட்டிய பின்பு அந்த மனுவை வாங்கிக் கொள்கிறேன் என்றார். மானமிகு முத்துக்கருப்பையா அவர்களும் படித்துக்காட்டி, நீண்ட கால மக்கள் கோரிக்கை சோத்துப்பாறை அணை நீர்தேக்கம் அவசியத் தேவை, குறித்துப் பேசினார். பொறுமையாக கருப்புச்சட்டைக்காரர் கூறியதை கேட்டு செவிமடுத்து, சென்னை சென்றவுடன் பெரியகுளம் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு முதல் தவணையாக ரூ.50,000 ஒதுக்கீடு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சராக காமராசர் இருந்தபோது பெரியகுளம் நகர் மன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி, சிறப்பாக ஏற்பாடு செய்து தயாராக இருந்தார்கள். முதலமைச்சர் காமராசர் வந்துவிட்டார் நகர் மன்ற நுழைவுவாயில் அருகில் கருப்புச்சட்டைத் தோழர்கள் வரிசையாக நின்று வணக்கம் தெரிவித்தார்கள். கார் மேடை அருகே செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். காவலர்கள் உள்ளே செல்லுங்கள் என பாதை ஏற்படுத்த, வண்டியை நிறுத்தச் சொல்லி முதல்வர் காமராசர் கீழே இறங்கி, கருப்புச்சட்டைக்காரர்களிடம் வந்து ஒவ்வொருவருக்கும் கைகொடுத்து வணக்கம் தெரிவித்ததை என்னால் மறக்க முடியவில்லை என்கிறார் பெரியகுளம் நகர திராவிடர் கழகத் தலைவர் 79 வயது எல். நல்லுச்சாமி.
-------------------தகவல்: மு. அன்புக்கரசன்,- பெரியகுளம் நன்றி:-"விடுதலை" 15-7-2009
Labels:
பெரியார்-காமராசர்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
மிக முக்கிய பகிர்வு...
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் அக்னி
காமராசர் திட்டத்தை அறிவித்து முதலமைச்சர் பதவியைத் துறக்கிரார் என்று கேள்விப் பட்டதும் துடித்து விட்டார் பெரியார்.
உடனே "It is suicidal for Tamilnadu and suicidal for you"
என்று தந்தியடித்து,எதற்காகவும் நிகழ்ச்சிகளை தவிர்க்காத பெரியார் அத்தனை நிகழ்ச்சிகளையும் தவிர்க்கச் சொல்லி விட்டு சென்னைக்கு அலறி அடித்துக்கொண்டு சென்று காமராசரை மாற்றப் பார்த்தார்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழன் அய்யா
Post a Comment