Search This Blog

27.7.09

சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை!


சாகு மகராஜ்

இன்று சாகுமகராஜ் பிறந்த நாள் (1902). மகாராட்டிர மாநிலத்தில் முதன் முறையாக இடஒதுக்கீடுக்கு வித்தூன்றிய பெருமகனார்; மன்னர் சிவாஜியின் வழி வந்தவர்; கோலாப்பூர் பகுதியை ஆண்டவர்.

அவர் செய்த மகத்தான ஒரு புரட்சியுண்டு. தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரைத் தேநீர் கடை திறக்கச் செய்து, நாள்தோறும் நண்பர்களுடன், அதிகாரிகளுடன் அங்கு சென்று தேநீர் அருந்தி வந்தவர்.

நூறு ஆண்டுகளுக்குமுன் இந்தத் துணிவும், முற்போக்கும் அவரைச் சூழ்ந்திருந்தன என்பது சாதாரணமல்ல! அண்ணல் அம்பேத்கர் அவர்களை அடையாளம் கண்டு, பிற்காலத்தில் பெரிய தலைவராக வரக் கூடியவர் என்று தொலைநோக்கோடு கணித்தவர். அம்பேத்கர் அவர்கள் லண்டன் சென்று மேற்பட்டம் பெறுவதற்குத் துணை புரிந்தவர்.

அரசனை அந்தக் காலத்து பார்ப்பனர்கள் எப்படி நடத்தினர்? நாள்தோறும் ஆற்றுக்குச் சென்று குளிப்பார் அரசர் சாகு மகராஜ்; அப்பொழுது அரண்மனைப் புரோகிதப் பார்ப்பனர்கள் மன்னனுக்கு வேத மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.

ஆனால், அந்தப் புரோகிதர்களோ வேத மந்திரங்களை ஓதுவதில்லை; மாறாகப் புராணங்களிலிருந்து ஓதி வந்தனர். காரணம் கேட்டபோது, சூத்திரர்களுக்கு வேதம் ஒதக் கூடாதாம் என்ன கொடுமை!

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், நாள்தோறும் மன்னர் சாகு மகராஜ் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும்போது அரசாங்கப் புரோகிதரை அழைத்து வர அரண்மனையிலிருந்து ஆள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அந்த நேரத்தில் அந்தப் புரோகிதர் எங்கு இருப்பார் தெரியுமா?

தேவடியாள் வீட்டில் இரவு பூராவும் சல்லாபம்! காலையிலோ குளிக்காமல் முழுகாமல் மன்னனுக்கு மந்திரங்களை ஓதுவார்!

இதுதான் பார்ப்பனர்களின் யோக்கியதை அவர்களுக்குள்ள தகுதியும் திறமையும் இதுதான்.

பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி என்ற நிலையைக் கற்பிக்கும் இந்து மதத்தில் ஒழுக்கத்துக்கும், உண்மையான தகுதிக்கும் இடம் எப்படியிருக்க முடியும்?


2002இல் சாகுமகராஜ் அவர்களின் நூற்றாண்டு விழா ஆந்திர மாநிலம் அய்தராபாத்தில் நடைபெற்றது. மறைந்த நீதியரசர் சமூகநீதிப் போராளி பி.எஸ்.ஏ.சாமி விழாவினை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- (மேலும் தகவல்களுக்கு பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் எழுதி, திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள சாகு மகராஜ் நூலைக் காண்க).

----------------- மயிலாடன் அவர்கள் 26-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

4 comments:

Kiss said...

நான் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா) என்ற பெயரில் வலைப்பூ ஒன்று தொடங்கப் பட்டு பெரியாரின் சிந்தனைகளை பதிவு செய்து வருகிறேன். ஏதோ ஒரு நோக்கத்திற்காக பெயர் தெரியாத நபர் ஒருவர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) என்ற பெயரில் வலைப்பூ ஒன்றைத்தொடங்கியுள்ளார் நன்றாக கவனியுங்கள் எனது வலைப் பூவின் பெயர் http://thamizhoviya.blogspot.com/ (தமிழ் ஓவியா). வேறு ஒரு நபரால் தொடங்கப்பட்ட வலைப்பூ வின் பெயர் http://thamizhovia.blogspot.com/ (THAMIZHOVIA) மிக நுணுக்கமான வெறுபாட்டைக் கவனித்தீர்களா? எனது வலைப்பூவில் oviya (தமிழ் ஓவியா) என்று இருக்கும் வேறு ஒரு நபர் தொடங்கிய வலைப்பூவில் ovia (THAMIZHOVIA) என்று இருக்கும் . எனவே தோழர்கள் ஏமாறாமல் இருக்கும்படி கெட்டுக் கொள்கிறேன். அந்த வலைப்பூ விற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தோழர்கள் இதைக் கவனத்தில் கொண்டு தமிழ் ஓவியா வலைப்பூ விற்கு ஒத்துழைக்கும் படி வேண்டுகிறேன். நன்றி


அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.

இப்படிக்கு,
http://thamizhovia.blogspot.com/
http://ayyyyya.blogspot.com/
http://tcwebs.blogspot.com/

தமிழ் ஓவியா said...

//அய்யா இது எனது தனி முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பூ. எனது வலைப்பூவை தவறாக விமர்சனம் செய்யாதீர்கள். உங்களது வலைப்பூ
எமது தளத்தின் பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. இருவரது தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம் இருப்பது தற்போது தாங்கள் கூறி தான் எமக்கு தெரியும். இதற்கு முன்பு தங்களது தளம் இந்த பெயரில் இருப்பது எமக்கு தெரியாது. ஆகையால் தங்களது தளத்தில் தெரிவிக்கும் விமர்சனத்தை நீக்கும்படி கூறுகிறேன்.//

உங்கள் வலைப்பூவில் சிறப்பாக செயல்படுங்கள். இப்போதுதான் நீங்கள்
http://thamizhovia.blogspot.com/ என்று ஆரம்பித்துள்ளீர்கள். நான் 2007 முதல் செயல் பட்டு வருகிறேன். எனவே தாங்கள் அருள்கூர்ந்து வேறு பெயரில் செயல்பட வேண்டுகிரேன்.

தொல்திருமாவளவன் அவர்கள் தாய்மண் என்ற இதழ் நடத்தினார். அதற்கு முன் வேறு ஒருவர் தாய்மண் இதழ் நடத்துகிறேன். பெயரை மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேண்டு கோள் விடுத்தார். அதனடிப்படையில் திருமா அவர்கள் தமிழ் மண் என்று பெயரை மாற்றி இதழ் நடத்துகிறார்.

எனவே அரூள்கூர்ந்து இதில் ஈகோ எதுவும் பார்க்காமல் வேறு பெயரில் செயல் படுமாறு வேண்டுகிறேன்.

இது எனது அன்பான வேண்டுகோள்.

இது குறித்த தங்களின் பதிலை எதிர் பார்க்கிறேன்.
நன்றி

தமிழ் ஓவியா said...
This comment has been removed by the author.
Jawahar said...

அரசர்கள் சூத்திரர்கள் அல்ல. அவர்கள் ஷத்ரியர்கள்.

http://kgjawarlal.wordpress.com