Search This Blog
19.7.09
பார்ப்பனர்களை அடையாளம் காணவேண்டுமா?
கூந்தலும், மொட்டையும்!
பார்ப்பனர்களை அடையாளம் காணவேண்டுமா? அதற்காக கஷாயம் குடிக்கவேண்டாம்; கடப்பாரையை விழுங்க வேண்டாம். ஒரே ஒரு பிரச்சினையில் அவர்களை அப்படியே முழுமையாக நிர்வாணமாக அடையாளம் காணலாம்.
தமிழ் என்ற அந்தக் கண்ணாடியில் அவர்களின் முகபாவங்களை அச்சுப்புள்ளி அடையாளமாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.
கேள்வி: தமிழ் மொழியை செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்....
பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்... ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒருவேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும். தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மறந்து, தம் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பர்; சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர்... இவ்வளவும் நடக்கப்போகிறது பாருங்கள்.
இந்தக் கேள்வியும், பதிலும் இடம்பெற்றிருப்பது தினமலர் என்ற தினவெடுக்கும் உச்சிக்குடுமியின் ஏட்டில் (நாள்: 13.6.2004).
அய்ந்து ஆண்டுகளுக்குப்பின் அதே தினமலர் (17.7.2009) டவுட் தனபாலை விட்டுப் பேச வைத்திருக்கிறது.
தமிழ் செம்மொழி ஆனதால் ஆட்டையாம்பட்டி மாடசாமிக்கு என்ன பலன் கிடைக்கிறது? என்கிற நக்கல்.
தமிழைத் தாய்மொழி என்று நேசிக்கிற எந்தக் கிறுக்கனும் தினமலர்போல பேசமாட்டான்.
தினமலரின் அதே பாணியில் நாம் வினாக்களை தொடுக்க முடியாதா?
பி.ஜே.பி. ஆட்சி யில் ஒரு ஆண்டு முழுவதும் சமஸ்கிருத ஆண்டு என்று கூறி கோடிக்கணக்கான மக்கள் பணத்தைக் கொட்டி அழுதார்களே... அப்பொழுது ஒவ்வொருவர் வீட்டிலும் மட்டன் பிரியாணி கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியதா? ஆட்டை யாம்பட்டி மாடசாமியின் வீட்டில் தறி நில்லாமல் இயங்கியதா?
இராமேசுவரத்திலும், திருச்செந்தூரிலும் குடமுழுக்கு நடந்ததே... குலசேகரன்பட்டினம் குப்பன் வீட்டில் குடம் குடமாகப் பால் வந்து இறங்கியதா?
திருவாரூரில் தேர் ஓடியதே, திருக்காட்டுப் பள்ளி திருஞானத்தின் மோட்டார் பைக் பெட் ரோல் இல்லாமல் ஓடியதா?
கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம்.
தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரம் அதனைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கான உணர்வு ரீதியான, பண்பாட்டு ரீதியான பெருமிதம்! வரலாறு உள்ள ஓர் இனத்துக்கான பீடு!
செத்த மொழிக்கே சிங்காரம் செய்யும் செப்படி வித்தைக்காரர்கள் அவர்கள்! உயிரோட்டம் உள்ள, உலகில் பத்துகோடி மக்கள் பேசக்கூடிய தமிழ் மொழிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைக் கண்டு ஆத்திரப்படுகிறார்கள்.
கூந்தல் உள்ள பெண் அள்ளிமுடிகிறார் மொட்டைப் பார்ப்பனப் பெண் புரண்டு அழுகிறார் அவ்வளவுதான்!
---------------மயிலாடன் அவர்கள் 18-7-2009 "விடுத்லை"யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நீங்கள் சொன்னமாதிரி, கடவுளின் கிருபையால் எந்த அதிசயமும் நிகழவில்லை.
ஆனால், அதேமாதிரி தமிழ் சொம்மொழி ஆனதால் அதிசமும் ஏதும் நிகழவில்லையே!!!
//தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரம் அதனைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கான உணர்வு ரீதியான, பண்பாட்டு ரீதியான பெருமிதம்//
என்னது உணர்வுபூர்வமான விசயமா????
ஆன்மிகவாதிகளும் கடவுளை உணர்வுபூர்வமான விசமெனவே சொல்றாங்களே!!!
என்ன வித்யாசம்???
அய்யா நான் பாப்பான் அடிவருடி இல்லை,
அப்படி சொல்லி அசிங்கப் படுத்திராதிங்க!!!
//என்னது உணர்வுபூர்வமான விசயமா????
ஆன்மிகவாதிகளும் கடவுளை உணர்வுபூர்வமான விசமெனவே சொல்றாங்களே!!!//
ஆமாங்க உண்மைதான்.
//என்ன வித்யாசம்???//
கடவுளை உணர்வு பூர்வமாக மட்டுமே அறிய முடியும். அதவாது கடவுள் உண்டு என்று உணர்ந்தால் உண்டு. கடவுள் இல்லை என்றால் அதற்கு காரண காரியங்களை ஆராய்ந்து இல்லை என்று முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
சிந்திக்காமல் ஏற்றுக்கொள்வது முன்னது. சிந்தித்து அதன் பின் ஒரு முடிவுக்கு வருவது பின்னது.
தமிழ் மொழியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.
மொழி என்பதும் அந்த வகையில் சிந்தித்து ஏற்றுக் கொள்வது.
சொல் ஆராய்ச்சி, வேர் சொல் ஆராய்ச்சி பற்றியெல்லாம் அறிஞர்கள் ஆராய்ந்து நிரூபித்துள்ளனர்.
//அய்யா நான் பாப்பான் அடிவருடி இல்லை,//
மறைந்த காஞ்சி சங்கராச்சாரி பார்ப்பான் தமிழில் பேசினால் தீட்டு என்றும், தமிழ் நீச பாசை என்றும் சொன்ன போது வராத,செம்மொழி ஆன போது அதிசயம் ஏதும் நிகழ வில்லைதான் ஆனால் தமிழுக்கு என்று அங்கீகாரம் கிடைத்தபோது வராத உங்கள் உணர்வு எப்படிப்பட்டது என்பதை படிக்கும் வாசகர்களின் முடிவுக்கே விட்டு விடுவோம்.
தமிழா இன உணர்வு கொள் என்று சொல்வதற்கும், கடவுளை உணர்வு பூர்வமாக உணர்வதற்கும் வித்தியாசம் உண்டு தோழர்.
சான்றாக தொடு உணர்வு நிரூபிக்க கூடியது ,கடவுள் உணர்வு நிரூபிக்க முடியாதது தோழர்.
விருப்பு வெறுப்பின்றி சிந்தியுங்கள் உண்மை புலப்படும்.
----------விவாதிப்போம்
நன்றி.
கடவுள் உணர்வு பற்றி பெரியார் அவர்களின் கருத்து இது. படியுங்கள்!தெளியுங்கள்!!
"தன்னுடைய உடையில் சிறிதளவு சாணி பட்டு விட்டால் உடனே தண்ணீரினால் கழுவியது போதாது என்று சோப்பினால் தேய்த்து அதன் துர்நாற்றம் போகும் வண்ணம் கசக்குகிறான். ஆனால் சிறிதளவு சாணியை உருண்டை செய்து வைத்து, இதுதான் பிள்ளையார், விழுந்துக் கும்பிடு என்று கூறவும், உடனே கன்னத்தில் அடித்துக் கொண்டு குப்புற விழுகிறான்.
தெருவில் போகும்போது யாராவது தாய்மார்கள் குப்பையில் கொட்டும் சாம்பல் காற்றில் பறந்து வந்து மேலே பட்டவுடன், ஆத்திரம் பொங்கிக் கொண்டு, ஒரு பெண் பிள்ளை நம்மேல் குப்பையைக் கொட்டினாள் என்பதற்காக முறைத்துப் பார்த்துப் பேசிவிட்டுச் செல்கிற அதே மனிதன் மேல் அடுத்த வீதியில் காளிதேவியின் உருவம் என்ற பரட்டைத் தலையுடனும், மஞ்சள் துணியுடனும் வேப்பிலைக் கொத்துடனும் ஆடிப்பாடிக் கொண்டிருக்கும் பெண் ஒருவள், ஒருபிடி சாம்பலை எடுத்து முகத்தில் வீசி அடித்தவுடன், "அம்மா தாயே இன்னொரு அடி அடிதாயே; என் பெண் ஜாதி பிள்ளைகளுக்கும் பிரசாதம் கொடு தாயே!" என்று தலையைக் குனிந்து கும்பிடுகிறான்.
இவைகளின் மூலம் அவனுடைய பகுத்தறிவை எடை போட முடிகிறது. தன் பகுத்தறிவையே உபயோகிக்கும் இடத்தில் உண்மை விளங்குகிறது. சாணியாகவும், சாம்பலாகவும் தோன்றி அவைகளின் ஆபாசங்கள் தோன்றுகின்றன. ஆனால் பகுத்தறிவற்ற நேரத்தில் பகுத்தறிவை சரியாக உபயோகிக்காத நேரத்தில் சாணி உருண்டை சாமியாகவும், சாம்பல் கடவுளின் பிரசாதமாவும் தோன்றுகிறது.
சாதாரணமாக ஒரு பெண் கடைக்குச் சென்று சிறிய திருகு அணி போன்ற நகை வாங்கினால் அந்தக் கடைக்காரன் படும்பாடு கொஞ்சமல்ல. எத்தனைப் பவுன் எடை? நீடித்து உழைக்குமா? முன்பு இக்கடைக்காரனிடம் வாங்கியது இப்போது எப்படி இருக்கிறது? பவுன் சரியான மாற்று உடையதா? உறுதியான வேலைப்பாடாக இருக்கிறதா? என்று தான் யோசித்துப் பார்ப்பதுமன்றி, அக்கடைக்காரனைக் குறுக்கிட்டுக் கேட்கும் கேள்விகள் அவனைத் திணற வைத்து விடும்.
அதைப் போன்றே ஒருவன் ஜவுளிக் கடைக்குச் சென்று துணி வாங்கினால், அத்துணியைப் பற்றி என்ன நம்பர் நூலில் செய்யப்பட்டது? கைத்தறியா, மில் துணியா? சாயம் வெளுக்காமல் இருக்குமா? அடுத்தக் கடையைவிட இந்தக் கடையில் கெஜத்துக்கு எவ்வளவு விலை அதிகம்? கெஜத்துக் கோலில் அளவு குறைவாக இருக்கிறதா? என்று இவ்வளவும் பார்த்த பிறகு பீஸ் விலை என்னவென்று கேட்டு மொத்தமாக வாங்கினால் சில்லறையில் வாங்குவதைவிட எவ்வளவு நயமாக இருக்கும் என்று இதையும் கணக்குப் பார்த்து, கையில் உள்ள தொகையையும் எண்ணிப் பார்த்து இறுதியில், "ஒரு கெஜம் துணி கொடு" என்று வாங்கிச் சொல்கிறான்.
இக்காட்சியை சாதாரணமாகக் கடைவீதிகளில் காணலாம். ஆனால் இவ்வளவு கேள்வியும், ஆராய்ச்சியும் அங்கே தான் தென்படுகிறதே தவிர வீட்டிற்கு வந்தவுடன் சாணி உருண்டையின் முன்பாகத்தான் விழுந்து கும்பிடுகிறான். கோயிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் நிமிர்ந்திருக்கும் கற்களெல்லாம் சாமியாகக் கருதுகிறான். ஏனெனில் இங்கே பகுத்தறிவுக்கு அவன் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். சிறிதளவு பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்தாலும் போதும். அத்தனையும் கருக்கல் என்று தென்பட்டுவிடும்.
பாமர மக்கள் தான் இதைப்பற்றி சிந்திப்பதில்லை என்றாலும், படித்தவன், அறிவாளி என்று கூறிக் கொள்பவனும் இதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது."
---- "விடுதலை" 30.8.1955
Post a Comment