சீறீரங்கம் யானைக்கு வடகலை நாமம் போடுவதா? தென்கலை நாமம் போடுவதா என்கிற சண்டை வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் பிரிவு கவுன்சில் வரை சென்றது.
காஞ்சிபுரம் கோயில் யானை விடயத்திலும் இதே கதைதான். சென்னை உயர்நீதிமன்றம் வேடிக்கையான தீர்ப்பு ஒன்றை வழங்கியது. 15 நாள்கள் வடகலை நாமம்; அடுத்த 15 நாள்களுக்குத் தென்கலை நாமம் போடும்படி ஆணை பிறப்பித்தது.
யானைக்கு நாமம் போடுவது ஒருபுறம் இருக்கட்டும்; அது ஒழுங்கா லத்தி போடுகிறதா என்று பாருங்கள் என்றார் ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக்.
தன் பக்தர்களுக்குள் நடக்கும் கோயில் யானை நாமச்சண்டையையே தீர்த்து வைக்க முடியாத கடவுளா பக்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகிறது என்று ஒரே ஒரு கணம் புத்தியைப் பயன்படுத்தினாலே போதும்; பக்தி பஞ்சாய்ப் பறந்து போகும்.
இப்பொழுது சீரங்கம் கோயிலிலே இன்னொரு தமாஷான பிரச்சினை!
சீறீரங்கத்தைச் சேர்ந்த செந்தாமரைக் கண்ணன் பட்டர் (வயது 72) மது ரையில் உள்ள உயர்நீதி மன்ற கிளையில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
பட்டருக்கு அப்படி என்ன அவசரப் பிரச் சினை? கோயிலில் நீண்ட காலமாக அவர் பஞ்சாங்கம் வாசித்து வந்தாராம்; வயது 72 ஆன நிலையில், அந்த வேலையிலிருந்து நீக்கி விட்டார்களாம்; அதற்காகத்தான் இந்த ரிட் மனுவாம் (சீறீரங்கநாதர் கனவில் வந்து மேலதிகாரிகளிடம் சொல்லித் தொலைத்து இருக்கக் கூடாதா?)
பிரபஞ்சத்தையே படைத்து ஆக்கும் கடவுளுக்குக்கூட பஞ்சாங்கத்தைப் படித்துத்தான் சேதி சொல்ல வேண்டுமா? ஒரு பார்ப்பானுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்றால் என்னென்ன உத்தியோகங்களை எல்லாம் உருவாக்கி வைத்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அது என்ன பஞ்சாங்கம்? திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சத்தையும் (அய்ந்தையும்) கூறுவதால் இதன் பெயர் பஞ்சாங்கமாம்!
இப்படிக் கூறும் பஞ்சாங்கத்துக்கும், அறிவியலுக்குள் என்ன சம்பந்தம்?
ஒரு சமயம் தினமணி ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் ஏ.என். சிவராமய் யரே ஒப்புக் கொண்டு (1979) எழுதியதுண்டு.
சூரியனும், கிரகங்களும் பூமியைச் சுற்றுவதாக நம்புவது அய்தீகம்! (என்பது நம்பிக்கை, என்பது அய்தீகம் என்று சில சொற்களைக் கைவசம் வைத்துக் கொண்டு தப்பிக்கப் பார்க்கின்றனர்).
என்பது.. அறிவியல்... என்பது விஞ்ஞானம்... என்று சொல்லிக் கொள்ளும் தைரியம் அவர்களி டத்தில் இருப்பதில்லை - இதற்குப் பெயர் தான் அறிவு நாணயமற்ற தன்மை என்பது.
மேலும் சிவராமன் எழுதுகிறார்: பஞ்சாங்கம் என்பது அதிர்ஷ்டம் பார்ப்பதற்கு உருவானதல்ல. மேலை நாட்டினரின் அறிவியல் தகவலுக்கும், பஞ்சாங்கம் தரும் தகவலுக்கும் வித்தியாசம் இருக்கும் என்று சொல்லி விட்ட பிறகு பஞ்சாங் கத்தைப் பற்றிப் பேசுவது பைத்தியக்காரத்தனம் அல்லவா; மக்களை நம்பச் செய்து ஏமாற்றும் அசல் பித்தலாட்டம் அல்லவா!
அறிவியல்படி சூரியன் என்பது வெறும் நட்சத்திரமே! ஆனால் பஞ்சாங்கம் சூரியனை கிரகத்தின் பட்டியலில் அல்லவா சேர்த்து வைத்துள்ளது.
சூரியன் மகர ராசியில் டிசம்பர் 22இல் பிரவேசிக்கிறது என்பது விஞ்ஞானம். ஆனால் சோதிடமோ சனவரி 13 அல்லது 14இல் மகரராசியில் சூரியன் பிரவேசிப்பதாகச் சொல்லுகிறது. இரண்டுக்கும் இடையில் 22 நாட்கள் இடிக்கின்றன.
உண்மை இவ்வாறு இருக்க, விஞ்ஞான ரீதியாகத் தயாரிக்கப்படும் ஏடுகளிலும், இதழ்களிலும் பஞ்சாங்கத்தின் அடிப் படையில் பலா பலன்களை அள்ளி விடுவது அசல் ஏமாற்று வேலையல்லவா!
எந்த அளவுக்கு இந்தப் பஞ்சாங்கம் மக்களைப் பாழ்படுத்தியிருக்கிறது தெரியுமா?
இந்தியாவில் மன்னர் மான்யம் ஒழிக்கப்பட்ட போது அரசிடம் மன்னர்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா?
ஆண்டு ஒன்றுக்கு 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மான்யமாக அளிக்க வேண்டும் என்பதோடு கூடுதலாக அவர்கள் கேட் டது ஆண்டுடொன்றுக்கு 40 பஞ்சாங்கங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்றால் இவர்கள் மன் னர்களா மண்ணர்களா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது!
கடவுளும், மதமும் இந்தப் பார்ப்பனீயமும் மனிதன் மூளையை எந்த அளவுக்குப் பாழ்படுத்தியிருக்கிறது - பார்த்தீர்களா!
பஞ்சாங்கம் என்பது பார்ப்பனர் புரட்டு என்று சும்மாவா சொன்னார்கள் சுயமரியாதைக்காரர்கள்?
----------------"விடுதலை” 21-8-2011
5 comments:
கிருஷ்ணன் பிறந்த நாளாம் வெட்கம்! மகாவெட்கம்!!
1. கடவுளுக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை என்று கூறிவிட்டு மாதாமாதம், வருஷாவருஷம் பிறக்காத கடவுளுக்குப் பிறந்த நாள் - ஜெயந்தி, கோகுல அஷ்டமி, ராம நவமி, வினாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுவது யாரை ஏமாற்ற? பார்ப்பனச் சுரண்டல் பக்தியின் மூலம் வளரத்தானே?
2. கற்பனையானாலும் இதன் மூலம் பொது அறிவோ பொது ஒழுக்கமோ வளர வாய்ப்பு உள்ளதா?
சின்ன வயதில் வெண்ணெய் திருடி, பெரிய வயதில் பெண்களின் சேலைகளை - அதுவும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் சேலைகளைத் திருடி வைத்து அவர்களை பிறந்தமேனியாகப் பார்க்க ஆசைப்பட்டு, அப்படியே கரையேறி வரும்படி மரத்தில் உட்கார்ந்து லீலைகள் புரிந்த கயமையை - கண்ணனின் லீலைகள் என்றால் இதை யார் ஒப்புக் கொள்வர்?
3. தீராத விளையாட்டுப் பிள்ளை-பின்னலைப் பின்னின்று இழுப்பான் - கோபியர் கொஞ்சும் கோபால கிருஷ்ணன் என்பது கடவுளுக்கான பெருமையா?
பதினாயிரம் கோபிகாஸ்திரிகளிடம் சல்லாபம், உல்லாசம் அனுபவித்து, நாரதரைப் பட்டினி போட்ட மோசக்காரன்தான் கண்ணன் என்ற கடவுள் அவதாரம் என்றால் குமட்டவில்லையா?
4. தீவிரவாதம் தலைதூக்கக்கூடாது என்ற இந்நாளில்,
கொலையை - கீதையில் - நியாயப்படுத்தியவன், தூண்டியவன்தானே இந்தக் கண்ணன்? (மகாபாரதக் கதைப்படி). காந்தியாரை கொலை செய்த கோட்சே, கீதையைப் படித்தேன், இப்படி நடந்தேன் என்று நீதி மன்றத்தில் வாக்கு மூலம் தந்தானே! இதற்குக் கடவுள் கிருஷ்ணன்தானே மூலகாரணம் - புராண கதைப்படி.
எனவே கிருஷ்ணஜெயந்தி என்பதை அறிவும், தெளிவும், மனமும் உள்ளவர்கள் கொண்டாடலாமா?
- மாஜி பக்தன் -"விடுதலை” 21-8-2011
//காந்தியாரை கொலை செய்த கோட்சே, கீதையைப் படித்தேன், இப்படி நடந்தேன் என்று நீதி மன்றத்தில் வாக்கு மூலம் தந்தானே! இதற்குக் கடவுள் கிருஷ்ணன்தானே மூலகாரணம்//
அண்ணே,
அப்துல் கசாப்பை கேட்டு பாருங்கள்
அவனும் சொல்வான் குரான் படித்து விட்டு தான் இதை செய்தேன் ஆதலால் என்னை அல்லா மறுமை நாளில் சொர்க்கம் புக செய்வாரென்று
அதற்காக குரானையும் கண்டிக்கலாமா
ஆமா உங்க உயிர் பயம் உங்களுக்கு
கில்லாடி கிருஷ்ணனுக்கு வாழ்த்து - ஏன்?
தமிழக முதல்வர் ஜெயலலிதா: உயிர் களைக் காத்து உலகா ளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு ஸ்ரீகிருஷ் ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ந்து கொண்டாடும் அனை வருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
டவுட் தனபாலு: அடே யப்பா . . . இதுல எனக்கு ஒரு டவுட்டும் இல்லை. . . ரம்ஜானுக்கும், கிருஸ் துமஸ்சுக்கும் மட்டு மில்லாம, கிருஷ்ண ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்றது கடமைதான்னு நினைக்கிற ஒரு முதல்வர், உங்களுக்குப் பிறகு கிடைக்குமாங்குறது மட்டும்தான் டவுட் . . .!
(தினமலர் 21-8-2011)
ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் எதையெல்லாம் சொல்லி வாந்தி எடுப்பார் களோ, அதையே தின மலர் சொல்லுவது ஆச்சரி யமான ஒன்றல்ல; காரணம் அந்தக் குட்டையில் ஊறி, நாறிப்போன மட்டைதானே தினமலர்?
அதே நேரத்திலே தின மலரோ, தினமணியோ, துக்ளக்கோ, கல்கியோ அண்ணா தி.மு.க. என்று கட்சிக்குப் பெயரை வைத் துக் கொண்டிருக் கிறீர்களே, கட்சியின் கொடியில் அண்ணாவின் படத்தைப் பொறித்துள்ளீர் களே, அப்படிப்பட்ட நீங்கள் அண்ணாவின் கொள்கை களைப் பின்பற்றக் கடமைப் படவில்லையா?
அண்ணா வின் பகுத்தறிவுக் கொள்கைக்கு எதிராக கிருஷ்ண ஜெயந்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து களைச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே - இது சரியானதுதானா? என்று எப்பொழுதாவது கேள்வியைக் கேட்டுள் ளார்களா? (அண்ணா வின் கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு விட்டோம் என்பதற்கு அடையாளமாகத்தானே கொடியில் அண்ணாவின் படத்தைப் பொறித்துக் காற்றில் பறக்கவிட்டுள் ளோம் என்று சொன்னா லும் (சிம்பாலிக்காக) சொல்லக்கூடும்).
அண்ணா இது பற்றி யெல்லாம் என்னதான் சொல்லி இருக்கிறார் என்று தெரியுமா என்பதே முதற்கேள்வி.
இந்துக் கடவுள்களைப் பற்றி அறிஞர் அண்ணா என்னதான் சொல்லியி ருக்கிறார்?
கட்சியின் கடவுள், மதம் பற்றிய கொள்கை, நிலைப் பாடு என்ன என்பது பற்றி அண்ணா அவர்கள் எழுதி யுள்ளார். (திராவிடநாடு - 15-10-1944)
திராவிட மக்கள் சிலரால் வழிபடப்படும் கடவுள் அல்லது கட வுளர், உண்மையாகவே திராவிடரின் கடவு ளராகவும், திராவிட மொழிகளில் ஒன்றை யாவது தெரிந்தவர் களாகவும் இருந்தால், திராவிட மக்களைக் கொண்டே திராவிட மொழிகளிலேயே தங்களுடைய காரியங் களை எல்லாம் நடை பெறும்படி செய்திருப்பர்.
இன்றுங்கூட திராவிட நாட்டிலுள்ள கோவில் களில் நடைபெறும்படி செய்திருப்பர். இன்றுங் கூட திராவிட நாட்டி லுள்ள கோவில்களில் நடைபெறும் வழிபாடு (பூசை)களை எல்லாம் ஆரியப் பார்ப்பனர் களைக் கொண்டே வட மொழியில் நடைபெற்று வருவது கண்கூடு.
ஆகையால் வட மொழித் தேனைப்பருகி, ஆரியக் கொள்கையைக் கற் கண்டெனச் சுவைத்துத் தமிழ் மக்களைச் சூத் திரர்களாக்கித், தமிழ் மொழியைத் தமக்கேற்ற தல்லவாக்கித் தமிழர் கொள்கைக்கு இடமளி யாது நிற்கும் ஒரு கடவுள், அது எத்த கையதாய் இருப்பினும் சரியே. அதனிடம் எத் தனை ஆற்றல் இருப் பினும் சரியே. அதனைத் தன் கடவுள் என்று எந்தத் திராவிடனாவது ஏற்றுக் கொள்வானா?
- என்று அறிஞர் அண்ணா எழுதியுள் ளாரே! அந்த வகையில் பார்த்தால் தமிழர்களைச் சூத்திரர்களாக்கும் ஆரி யக் கடவுளான கிருஷ்ண ஜெயந்திக்கு அல்லவா - அணணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துள்ள முதல் அமைச்சர் வாழ்த் துத் தெரிவித்துள்ளார்?
இந்தச் சிந்தனை எந்த விதத்திலும் அ.தி.மு.க. வுக்கு வந்துவிடக்கூடாது என்பதிலேயே பார்ப்பன ஊடகங்கள் ஆகா எப்படியெல்லாம் பம்மாத் துக் கொட்டம் அடிக் கின்றனர்!
----------"விடுதலை” 22-8-2011
மயில்வாகனன் எங்கே போனான்?
சுப்பிரமணியனின் வாகனமான மயிலுக்கு ஆபத்து! ஆபத்து!!
எங்கே? எங்கே? ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஏர்வாடி பகுதிகளில் மயில் நடமாட்டம் அதிகமாம்.
இந்த மயில்களை வேட்டையாடும் கொடுமை அதிக அளவில் நடக்கிறதாம்! எதற்குத் தெரியுமா?
குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் தேட மயிலின் தலையை அறுத்துக் கொண்டு வரச் சொல்லுகிறார்களாம் ஜோதிடர்கள். அதற்காகத்தான் இந்த மயில் வேட்டையாம்!
இந்தியாவின் தேசியப் பறவைக்கா இந்தநிலை என்பதைவிட மயிலை வாகனமாகக் கொண்ட மயில்வாகனன் (சுப்பிரமணியன்) எங்கே போனான்?
-----"விடுதலை” 23-8-2011
//புதிய கோணங்கி ! said...
//காந்தியாரை கொலை செய்த கோட்சே, கீதையைப் படித்தேன், இப்படி நடந்தேன் என்று நீதி மன்றத்தில் வாக்கு மூலம் தந்தானே! இதற்குக் கடவுள் கிருஷ்ணன்தானே மூலகாரணம்//
அண்ணே,
அப்துல் கசாப்பை கேட்டு பாருங்கள்
அவனும் சொல்வான் குரான் படித்து விட்டு தான் இதை செய்தேன் ஆதலால் என்னை அல்லா மறுமை நாளில் சொர்க்கம் புக செய்வாரென்று
அதற்காக குரானையும் கண்டிக்கலாமா
ஆமா உங்க உயிர் பயம் உங்களுக்கு
August 21, 2011 11:38 PM //
இதிலிருந்து என்ன தெரியுது! காவலித்தனம் பன்றதுக்காகத்தான் இந்த கடவுளை உருவாக்கி வைச்சிருக்கானுங்க!
எல்லா களவாணித்தனமும் பண்ணிட்டு கடவுள் பேர்ல பழியப்போட்டுட்டா தப்பிச்சிடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கடவுளை உருவாக்கி வைச்சிருக்கான்!
"அல்லா" வை கேட்டுத்தான் டிவின் டவர்ல ராக்கெட் விட்டேன்! என்று "பின்லேடன்" சொன்னதும்...
நான் "இயேசு நாதரைக்" கேட்டுட்டுத்தான ஈராக்கைத் தாக்கினேன் என்று "அதிபர் புஷ்" சொன்னதும் இந்த காவாலித்தன லிஸ்ட்டில் வருவது தான். அதாவது கோட்சே லிஸ்ட்....
ஆனா இதிலே கோட்சே செஞ்சது ரொம்ப அநியாயம்! அக்கிரமம்!
அந்த முதியவனை அப்படியே! விட்டிருந்தால் இன்னும் சிறிது நாளிலேயே இறந்து விட்டிருப்பான்! ஆனால் நடந்தது என்ன?
சொந்த நாட்டிலேயே சுதந்திரத்திற்காக பாடுபட்ட வயதான முதியவரை அதுவும் ராமனைப் போற்றியவரை, வேற்று மதத்துக்காரனான ஆங்கிலேயனுக்கு அதிக தொல்லைகள் கொடுத்த காந்தியை, வல்லரசு நாட்டுக்காரனான ஆங்கிலேயனின் அத்தனை பீரங்கிகள் இருந்தும் ஒரு பீரங்கிகள் கூட அந்த முதியவனின் "நெஞ்சை" குறிவைக்கவில்லை! இவன் சொந்த நாட்டிலேயே இருந்து கொண்டு "எங்கெங்கேயோ" குறிவைத்தான், பல நாள் திட்டம் போட்டு குறிவைத்தான்! ஒரு நாள் போட்டுத்தள்ளினான்..அதுவும் திருட்டுத்தனமாக..பின்பு மதவாதிகளின் "தியாகி" ஆகிவிட்டான்.
ஈவு இரக்கமற்ற நிலையில் பூணூலை போட்டுக்கொண்டு, மதவாதம் என்ற போர்வையை போட்டுக்கொண்டு சுட்டானே! கோட்சே என்னும் "பார்ப்பன மனிதாபிமானி!"
அந்த "பார்ப்பன மனிதாபிமான" இழி செயலை எந்த ஒரு மனிதனும் மன்னிக்கமாட்டான். இதற்கு அப்துல் கசாப்பை ஒப்பிட முடியாது. அவனால் கூட இதை செய்திருக்கமுடியாது. அவன் என்ன அந்த நாட்டுக்காக, தீவிரவாத அமைப்புக்காக கண்ணை மூடிக்கொண்டு சுட்டான். அவ்வளவு தான்.
பாகிஸ்தானில் அந்த அமைப்பில் உள்ளவர்களின் பெயர் "போராளி" அவ்வளவு தானே!
பாக்கிஸ்தானிலும் இந்திய ஆள் ஒருத்தன் தூக்கு தண்டனைக்காக ரொம்ப நாள் காத்திருக்கானே!..........என்ன மறந்தாச்சா...!
இங்க செஞ்சா குத்தவாளி! அடுத்த நாட்டில செஞ்சா போராளி! இதானே நம்ம பாலிசி!
காந்தியைக் கொன்ற செயல் சர்வாதிகார நாட்டில் கூட நடைபெறாத ஒன்று! அங்கே எல்லாம் பார்ப்பனன் இல்லை! சப்பைக்கட்டும் இல்லை!
Post a Comment