முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில் ஆங்கிலேயர்கள், ஜமீன்தார்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளி லிருந்து வீரர்களை தேர்ந்தெடுத்து போருக்கு அனுப்பினர்.
அந்த வகையில் ராஜபாளையம் சிவகிரி ஜமீனிலிருந்தும் வீரர்கள் போர்க் களத்துக்கு சென்றனர். இவர்களில் 89 வீரர்கள் போரில் வீர மரணம் அடைந்தனர். இவர்கள் நினைவாக சிவகிரியில் உள்ள சிறு மலை குன்றுமீது 1919ஆம் ஆண்டு ஒரு கல்வெட்டு நடப்பட்டது.
காலப் போக்கில் கல்குவாரிக்காக மலையைக் குடைந்து பாறைகள் உடைத் தெடுக்கப்பட்டதில், இந்தக் கல்வெட்டு சரிந்து விழும் ஆபத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் இந்தகல் வெட்டை மட்டும் தனியாக எடுத்து, பழைய இடத்துக்கு அருகிலேயே பதித்து, மாணவர்கள் நடந்து சென்று பார்வை யிட வசதியாக படிக்கட்டுகளும் அமைத் தனர்.
இன்று முக்கிய நாட்களில் பொதுமக்களும், மாணவர்களும் இந்தக் கல்வெட்டில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
கடவுள்கள் எப்படி தோன்றியிருக்கின்றன என்பதற்கு இந்த ஆதாரம் ஒன்று போதாதா?
மூதாதையர்களுக்குக் கல் நட்டு வைத்து அதனைக் குல தெய்வமாகப் பூஜித்தனர் என்பது தானே உண்மை.
மயிலாடுதுறையில் பேருந்து நிலையத்தில் ஒரு வேப்ப மரத்தின் அடியில் ஒரு பிள்ளையாரைக் கொண்டு வந்து வைத்து வேம்படி விநாயகர் என்று ஒரு புதுப் பெயரைச் சூட்டி, வல்லபை கணபதி, கடன் தீர்க்கும் விநாயகர் என் பதுபோல வேம்படி விநாயகர் என்று ஆக்கி விட் டார்களே! அது பின்னர் உடைத்து நொறுக்கப்பட்டது என் பது வேறு பிரச்சினை!
இப்படி ஒரு சிறு கல் வழிபாடு, பிறகு கோயி லாக்கப்பட்டு, கும்பா பிஷேகம் செய்யப்பட்டு, அர்ச்சகப் பார்ப்பான் உள்ளே நுழைந்து (கோயிலை ஒட்டியே அர்ச்சகப் பார்ப்பானுக்கு வீடு வேறு - செங்கற்பட்டிலும், சென்னை சைதாப்பேட்டையிலும் இந்தக் காட்சியைப் பார்க்கலாம்) அவனுடைய சுரண்டல் சாம்ராஜ்ஜியம் ஓகோ என்று நடக்க ஆரம்பித்து விடும்.
அதற்குப் பிறகு இல்லாததும் பொல்லாதது மாக ஸ்தல புராணங்களை, மகத்துவங்களைக் கற்பித்து ஒரு பெரிய நிறுவனமாக ஆக்கி விடுவார்கள்.
பேராசையும், பயமும் பிச்சித் தின்னும் மக்களோ பக்தி என் னும் நோய்ப் பிடித்து கடவுளாக்கப்பட்ட அந்தக் குழுவிக் கற் களை வாழ்நாள் முழுவதும் கட்டி அழுது காலத்தைத் தொலைப் பார்கள் - இதுதான் கடவுள் கோயில்களின் கதை!
----------------"விடுதலை”11-8-2011
0 comments:
Post a Comment