Search This Blog

11.8.11

பார்ப்பனமயமான கம்யூனிஸ்டுகள்!


மனுதர்ம சாஸ்திர சுலோகத்தை எடுத்துக் காட்டி இந்தியர்களைப்பற்றி காரல் மார்க்ஸ் கூறி இருக் கிறார் (KARLMARX Capital Vol II page 241)

மனுதர்ம சாஸ்திரம் 10ஆவது அத்தியாயம் 62ஆவது சுலோகம் கூறுகிறது. பார்ப்பான், பசு இவர்களைப் புரக்கும் பொருட்டு, கூலி பெறாமலேயே உயிரைத் தியாகம் செய்வதே சூத்திரர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் மார்க்கமாகும் என்று காரல்மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ தமிழ்நாட்டில் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் இராமமூர்த்தி (விக் கிரவாண்டி) அவர்களுக்கு மிக நன்றாகவே பொருந்துகிறது.

இந்து மதத்தில் பசுக்களுக்கு அப்படியொரு இடம்பற்றி சட்டப் பேரவை யில் இந்த உறுப்பினர் பேசியிருக்கிறார்.

தமிழ் நாட்டு மக்கள் கறவை மாடுகளை தெய்வங்களாக கருதுபவர்கள். இவர்களுக்கு அரசு வழங்கப் போகும் கறவை மாடுகளுக்கு லட்சுமி, சரஸ்வதி என்றுதான் பெயர் சூட்டுவார்கள். தங்கள் இல்லங்களுக்குத் தெய்வங்கள் வருகை தந்திட்ட மகிழ்ச்சியில் திளைப்பார்கள். லட்சுமி வந்ததற்கே இப்படி என்றால் லட்சுமியைக் கொடுத்த லட்சுமியை எப்படிப் பார்ப்பார்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை என்று ஓகோ என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டு மக்கள் நினைப்பது ஒருபுறம் இருக்கட்டும்! ஒரு மார்க்ஸிஸ்டு பார்வையிலும் அப்படித்தானோ!

பாமர மக்கள் மத்தியில் ஆயிரம் ஆயிரம் மூடநம்பிக்கைகள் கொழுந்து விட்டு எரிகின்றன என்பதற்காக அவர்களோடு ஜோதி ஆகி விடலாமோ! லட்சுமியைக் கொடுத்த லட்சுமி என்று வருணிக்கிறாரே - இதன் பொருள் என்ன? இந்தியக் கம்யூனிஸ்டுகள் எப்படி பார்ப்பன மயம் ஆகி இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத் துக்காட்டுதான்! கேரளாவில் கோயில் குரங்கு ஒன்று செத்துப்போனதற்கே செங்கொடி போர்த்தி புரட்சி வணக்கம் செய்யக்கூடிய அளவுக்கு முற்போக்கில் முற்றிப் போய் விட்டார்கள். இந்த நாட்டில் இந்து மதம் இருக்கும் வரைக்கும் கம்யூனிசம் பரவி விடும் என்ற பயம் யாருக்கும் வேண்டாம் - என்று சர். சி.பி. ராமசாமி அய்யர்வாள் சும்மாவா சொன்னார்?

அவர் உயிரோடு இருந் திருந்தால் அவர் வாயில் ஒரு கிலோ ஜீனியைத்தான் கொட்ட வேண்டியிருந் திருக்கும்.

----------------- மயிலாடன் அவர்கள் 11-8-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: