இந்த மாதம் ஆடி மாதம். எங்கு பார்த்தாலும் கோயில் திருவிழாக்கள் தடபுடல்! அதே நேரத்தில் ஆடி மாதத்தில் இந்துக்கள் கல்யாணம் போன்ற நல்ல காரி யங்களைச் செய்வ தில்லையே - ஏன்?
இன்னொரு சந்தேகம்: ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது மகா புண்ணியமாம்.
அன்று தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறிகளைப் படைக் கின்றனர். காகங்களுக் கும், ஏழைகளுக்கும் உணவு அளிக்கின்றனர்.
நம் முன்னோர்கள் தங்கி இருக்கும் இடம் பிதிர்லோகம் எனப்படும். அங்கே பிதூர் தேவதைகள் இருக்கின்றனர் - நம் உறவினர் ஒருவர் இப்பொழுது பசுவாகப் பிறந்திருந்தால் நாம் அனுப்பும் பொருள் வைக்கோலாகவும், குதிரையாகப் பிறந்திருந்தால் கொள்ளாகவும், யானை யாகப் பிறந்திருந்தால் கரும்பு, தென்னை ஓலை என ஏதோ ஒரு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டு, நாம் தர்ப்பணம் செய்யும் பொருள் போய் சேர்ந்து விடும்.
இதை சேர்க்கும் வேலையை பிதுர்தேவதைகள் செய்கின்றனர். இதற்காகவே, இவர்களை கடவுள் நியமித்திருக்கிறார் என்று ஆன்மீக இதழ்கள் விவரிக்கின்றன.
நமக்கு ஒரு சந்தேகம்; நமது தகப்பனாரோ. பாட் டனாரோ எவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்? பெரும்பாலும் மீன், கருவாடு, கறி வகையறாக்களைத்தானே! இவை போய்ச் சேர வேண்டும் என்றால் ஆடி அமாவாசையன்று நாம் எதை வைத்துப் படைக்க வேண்டும்? இன்னொன்று ஊரில் அக்கிரகாரத்தில் குடியிருந்த ஆராவமுத அய்யங்கார் போன பிறவியில் சுருட்டுக் குடித்ததால் அடுத்த பிறவியில் பன்றியாகப் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு வேண்டிய சிறப்பு உணவு கிடைக்கப் பெற ஆடி அமாவாசையன்று எதை வைத்துப் படைக்க வேண்டும்?
திதி திவசம் என்று சொல்லி ஒவ்வொரு வருட மும் அய்யரைக் கூப்பிட்டு சடங்குகளை நடத்தச் சொல்லுகிறோமே - அப் பொழுதுகூட நம் தகப் பனார் ஆசையோடு விரும்பி சாப்பிடும் நான் வெஜி டேரியன் அயிட்டத்தையா அய்யருக்குக் கொடுக்கிறோம்? இல்லையே. அய்யருக்கு எது பிடிக்குமோ அவாள் ஆத்தில் இருக்கிறவாளுக்கு எது ப்ரீதியோ அவற்றைத் தானே கொடுக்கிறோம்!
நமது பாட்டனாரும், தகப்பனாரும் புழுங்கல் அரிசி சோறுதானே சாப்பிடுவார்கள். ஆனால் பிதுர்க்கள் மூலமாக அவர்களுக்கு போய்ச் சேருவதாகக் கூறி அய்யருக்குக் கொடுப்பது பச்சரிசியாயிற்றே!
நியாயமாக என்ன செய்ய வேண்டும்? நம் பாட்டனாருக்கு, தகப்பனா ருக்கு விருப்பமான அசைவ அயிட்டங்களைச் சமைத்து அய்யரை உட்கார வைத்து நம் கண்ணுக்கு நேராக சாப்பிட வைக்க வேண்டும் அல்லவா!
அந்த நிபந்தனையோடு கூப்பிட்டுப் பாருங்கள் எந்தப் பார்ப்பான் வருவான்? சொல்லுங்கள் பார்க்கலாம்.
ரத்தக் கண்ணீர் நாட கத்தில் நடிகவேள் எம்.ஆர். இராதா சொல்லுவாரே - நினைவிருக்கிறதா? பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ!
------------------”விடுதலை” 3-8-2011
0 comments:
Post a Comment