Search This Blog

2.8.11

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக்தை


கோவையில் கவிஞர் சிற்பிக்குப் பாராட்டு விழா. மகிழ்ச்சியே!

அவ்விழாவில் கலந்து கொண்ட தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநா தய்யர் அமுத ஊற்றாக சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

கவிஞர்களே, விரசத்தை விலக்கிக் கவிதை எழுதுவீர்!

சபாஷ், அருமையான அறிவுரை! அவருக்கு ஒரு பாராட்டு - கைலாகு கொடுக்க லாம்தான்! அதே நேரத்தில் கம்பர் விழாவில் கலந்து கொண்டு கம்பனின் காமரசப் பாடல்களை பீப்பாய் பீப்பாயாகத் திறந்துவிட்டு ரசித்து ரசித்து, எச்சில் சொட்டச் சொட்ட பேசக் கூடியவர்களா விரசத்தை வெறுத்து வார்த்தைகளைக் கொட்டுவது? இவ்வாண்டு கம்பர் விழா என்று சொல்லி தினமணியில் எவ்வளவு பக்கங்கள் தெரியுமா?


கம்பன் காவியத்தில் நயங்கண்டு சொட்டச்சொட்டப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் விரசத்தைக் கண்டித்துப் பேச யோக்கியதை உடையவர்கள்தானா?

வாராழிகலசக் கொங்கையில் ஆரம்பித்து ஆபாசக்கடலில் குளித்து முத்தெடுக்கக் கூடியவர்கள் விரசத்தை வெறுப்பது போல பாசாங்கு செய்யலாமா?

கடவுள் காவியம் என்று சொல்லி ஆபாசக் காவியங்களை அறிமுகப்படுத்தி யுள்ளவன் கம்ப நாட்டாழ்வான்!

அந்தக் காவியத்தின் யோக்கியதையை டோஸ் 1 டோஸ் 2 என்று கூறி கம்பனைப் பிழிந்தெடுத்து ரசமாக அல்லவா தோலுரித்துக் காட்டினார் அறிஞர் அண்ணா!

வாராழி கலச கொங்கை
வஞ்சி போல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசால் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும் பாந்தமும்
பணி வென்றோங்கும்
ஓராளித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?

என் மனைவி எப்படிப்பட்ட அழகி தெரியுமா? சீதாப் பிராட்டியாரின் கொங்கை எப்படி இருக்கும் தெரியுமா... என்று ஆரம்பித்து ஒவ்வொரு உறுப்பின் அழகையும் அளவையும் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் மகாலட்சுமியின் அவதாரமான சீதையைப்பற்றி பிரம்மச்சாரியாகிய அனுமானிடம் அடையாளமாகச் சொல்லி அனுப்பினான் என்று கவிச்சக்ரவர்த்தி கம்பன் பாடுகிறானே - அதைப் பற்றி விமர்சித்து விட்டல்லவா விரசத்தை வெறுக்கு முன் இந்த ஆபாசக் குப்பைகளை கொளுத்தி விட்டல்லவா - வாயைத் திறக்க வேண்டும் வைத்தியநாதய்யர்கள்!

பெண் பக்தையான ஆண்டாள் விரகதாப வெறி எடுத்து கடவுளிடம் விண்ணப்பம் போட்ட திருப்பாவையைத் தெருவுக்குத் தெரு தீ வைத்துக் கொளுத்தி விட்டல்லவா தினமணி அய்யர் விரசத்தைப் பற்றி வெறுத்துப் பேச வேண்டும்!

கடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக்தை (கசுமாலம்! இதையெல்லாம் எழுதித் தொலைய வேண்டியுள்ளதே!)

முத்தன்ன வெண் முறுவல்
செவ்வாயும் முலையும்
அழகழிந்தேன் நான்
புணர்வதோர் ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்தது . . . . (இத்தியாதி, இத்தியாதி கொக்கோக லீலைகள் - பக்தி எனும் முக மூடியில்) திருக்கடையூரில் உள்ள அபிராமி கடவுளைப் பற்றி பக்தன் அபிராமி பட்டன் பாடிய அபிராமி அந்தாதியை உச்சி மோந்து மெய்மறந்து பாடி உருகும் வைத்திய நாதய்யர்காள்!

வாயை மூடுங்கள்.

விரசத்தையும், விரகதாபத்தைப் பற்றியும் நீங்களா பேசுவது? இந்து மதத்தின் ஒவ் வொரு அசைவும் மேற்கண்ட சமாச்சாரங்கள் தானே! உங்கள் கோயில்களில் இருக்கும் சிற்பங்களும், தேர்களில் தீட்டி வைத்திருக்கும் சமாச்சாரங்களும்,
அய்யய்ய, பேனா பெண்கூட நாணி தலை குனிகிறாளே!

--------------- ”விடுதலை” 2-8-2011

0 comments: